புத்தமித்திரா

புத்தமித்திரா (Buddhamitrā) (பிறப்பு: c. 60) இந்தியாவின் குசான் பேரரசில் வாழ்ந்த பௌத்த பிக்குணி ஆவார்.இவர் சர்வாஸ்திவாத பௌத்த தத்துவப்பள்ளியைச் சேர்ந்தவர்.[1]

புத்தமித்திரா
சுய தரவுகள்
பிறப்புகிபி 60
சமயம்பௌத்தம்
தேசியம்இந்தியா
பாடசாலைசர்வாஸ்திவாத பௌத்தம்
Occupationபிக்குணி
பதவிகள்
Teacherபாலர்

வட இந்தியாவில் கங்கை ஆறு பாயும் மூன்று நகரங்களில் உள்ள கௌதம புத்தர் மற்றும் போதிசத்துவர் சிற்பங்களில், புத்தமித்திராவைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

இவர் பண்டைய சர்வாஸ்திவாத பௌத்த தத்துவத்தை பரப்ப நிதியுதவி வழங்கியதாக அறியப்படுகிறார்.

வாழ்க்கையும், பணிகளும்

தொகு

புத்தமித்திரா குசான் பேரரசில் கிபி 60ல் மதுரா நகரத்தில் செல்வச் செழிப்பான பௌத்தக் குடும்பத்தில் பிறந்தவர். புத்தமித்திரா பௌத்த சங்கத்தில் சேர்ந்து பிக்குணியாக மாறியவர்.

இவரது குரு பாலர் பண்டைய சர்வாஸ்திவாத பௌத்த தத்துவப்பள்ளியைச் சேர்ந்தவர். புத்தமித்திரா, குரு பாலாவிடம் திரிபிடகத்தை கற்றவர். [2]

கிபி 117ல் புத்தமித்திராவும், அவரது குரு பாலரும் இணைந்து, புஷ்யவுத்தி எனும் பிக்குவின் துணையுடன் பண்டைய சிராவஸ்தி மற்றும் சாரநாத்தில் கௌதம புத்தருக்கு நினைவுச் சின்னம் அமைத்தனர்.

குசான் பேரரசின் ஆளுநர்களுடன் உதவியுடன், புத்தமித்திரா, அடுத்த ஆறு ஆண்டுகளில் கௌசாம்பி நகரத்தில் கௌதம புத்தருக்கு பல நினைவுச் சின்னங்கள் எழுப்பினர். இவர் நிறுவிய கௌதம புத்தர் நின்ற நிலையில் உள்ள சிற்பம் தற்போது அலகாபாத் அருங்காட்சியகத்தில் உள்ளது.

கிபி முதல் நூற்றாண்டில் சர்வாஸ்திவாத பௌத்தர்கள், காஷ்மீரத்தில் கூட்டிய நான்காம் பௌத்த சங்கத்திற்கு அரசியல் ஆதரவு, நிதியுதவிக்கு முயற்சி எடுத்தவர்.[3][4]

மேலும் படிக்க

தொகு
  • Bracey, Robert. "Buddhamitra". Archived from the original on 2013-09-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-16. and "Women and Religion (Bibliography)". A Rough Guide to Kushan History (kushan.org). Archived from the original on மார்ச் 7, 2012. பார்க்கப்பட்ட நாள் August 2, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Buddhamitra". Archived from the original on 2013-09-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-16.
  2. Skilling, Peter (2001). "Nuns, Laywomen, Donors, Goddesses: Female Roles in Early Indian Buddhism" (PDF). Journal of the International Association of Buddhist Studies (Open Journal System: University of Heidelberg) 24 (2): 14 (135 or 235). http://archiv.ub.uni-heidelberg.de/ojs/index.php/jiabs/article/download/8921/2814. பார்த்த நாள்: July 31, 2013. 
  3. "No women are mentioned in the sources. Yet the importance of women in inscriptions implies that some were probably involved." in "The Fourth Buddhist Council". A Rough Guide to Kushan History (kushan.org). பார்க்கப்பட்ட நாள் August 1, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "The Fourth Buddhist Council". Archived from the original on 2017-12-03. பார்க்கப்பட்ட நாள் 2018-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தமித்திரா&oldid=3590266" இலிருந்து மீள்விக்கப்பட்டது