புரசைவாக்கம் நெடுஞ்சாலை
புரசைவாக்கம் நெடுஞ்சாலை[1] (ஆங்கில மொழி: Purasawalkam High Road) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புரசைவாக்கம் புறநகர்ப் பகுதியில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[2] சென்னை மாநகரின் முக்கியமான வியாபார மையங்களில் இச்சாலைப் பகுதியும் ஒன்றாகும். சென்னையின் இரண்டாம் கட்ட மூன்றாவது மெற்றோ வழித்தடம் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.[3]
புரசைவாக்கம் நெடுஞ்சாலை | |
---|---|
பராமரிப்பு : | சென்னை மாநகராட்சி |
நீளம்: | 1 mi (2 km) |
ஆள்கூறுகள்: | 13°05′09″N 80°15′06″E / 13.085755°N 80.251755°E |
மேற்கு முனை: | டவுட்டன் சந்திப்பு, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஜெர்மையா சாலை, ரித்தர்டன் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை |
முதன்மை சந்திப்புகள்: | புரசைவாக்கம், டவுட்டன், டாணா சாலை, கங்காதீசுவரர் கோயில் சாலை, வெள்ளாளர் தெரு, மில்லர்ஸ் சாலை, செங்கற்சூளை சாலை, கெல்லீஸ் |
கிழக்கு முனை: | கெல்லீஸ் சந்திப்பு, மேடவாக்கம் குளச் சாலை, பால்ஃபர் சாலை, கெல்லீஸ் சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 57 மீட்டர் உயரத்தில், 13°05′09″N 80°15′06″E / 13.085755°N 80.251755°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு புரசைவாக்கம் நெடுஞ்சாலை அமையப் பெற்றுள்ளது.
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, டவுட்டன், கீழ்ப்பாக்கம், கெல்லீஸ், அண்ணா நகர், அயனாவரம், பெரம்பூர், சூளை, புளியந்தோப்பு, பட்டாளம், ஓட்டேரி, வியாசர்பாடி, கொளத்தூர், வில்லிவாக்கம், அமைந்தக்கரை மற்றும் பாரிமுனை போன்ற முக்கியமான புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் தனிநபர் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இச்சாலை வழியாக அதிகளவில் பயணிக்கின்றன.[4]
இச்சாலையில், முக்கியமான ஜவுளி வியாபார நிறுவனங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள், உணவுக் கூடங்கள், மின்னணு உபகரண கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், திரையரங்க வளாகம், தொலைத்தொடர்பு அரசு அலுவலகம், செல்பேசி சேவை மையங்கள், பூ வியாபாரிகள், பழ விற்பனையாளர்கள் ஆகிய தொழில் சார்ந்தோர் அதிகமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மாலை மலர் (2021-10-19). "புரசைவாக்கம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ "புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்". Dinamalar. 2021-10-10. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ DTNEXT Bureau (2023-07-29). "Commuters risk travelling on narrow, slippery Purasawalkam High Road". www.dtnext.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.
- ↑ "No respect for traffic rules on Purasawalkam High Road". The Hindu (in Indian English). 2014-11-01. பார்க்கப்பட்ட நாள் 2023-08-27.