டவுட்டன்
டவுட்டன் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில்,[1][2] 13°05′13.9″N 80°15′27.0″E / 13.087194°N 80.257500°E (அதாவது, 13.087200°N, 80.257500°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 32 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். ஐதராபாத் நிசாம் இராணுவப் படையின் சென்னைப் பிரிவில் தளபதியாகப் பணிபுரிந்த ஜான் டவுட்டன் (தோற்றம்: 1797 ; அமரம்: 1853) நினைவாக, டவுட்டன் பகுதிக்கு இப்பெயர் ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள டவுட்டன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிறுவப்பட்டதும் அவரால் தான்.[3] 1915 ஆம் ஆண்டு டவுட்டனில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் கிறித்தவக் கல்லூரிக் கட்டிடத்தின் ஆரம்பப் பெயர் "டவுட்டன் ஹவுஸ்" என்பதாகும்.[4] டவுட்டன் பகுதிக்கு அருகிலேயே எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புரசைவாக்கம் சந்தை அமைந்துள்ளது.[5] டவுட்டன் பகுதியும் வியாபார நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கிறது.
டவுட்டன்
டவ்டன் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°05′13.9″N 80°15′27.0″E / 13.087194°N 80.257500°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஏற்றம் | 32 m (105 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600007 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள பகுதிகள் | புரசைவாக்கம் |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி உறுப்பினர் | தயாநிதி மாறன் |
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் | ஐ. பரந்தாமன் |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
போக்குவரத்து
தொகுடவுட்டன் பகுதியானது, எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புரசைவாக்கம் பகுதிக்கு அண்மையில் உள்ளதால் இப்பகுதியும் மக்கள் நெரிசல் கொண்டதாகவே காணப்படுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலை இதன் அருகிலேயே செல்கிறது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படுகிற பேருந்துகளில் அதிகளவு டவுட்டன் பகுதியை ஒட்டிச் செல்லுகின்றன. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களுக்கு பேருந்து சேவைகள் வழங்குகிற சென்னை புறநகர் பேருந்து நிலையம் என்ற ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய புறநகர்ப் பேருந்து நிலையம், இங்கிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் கோயம்பேட்டில் அமைந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான விரைவு தொடருந்துகளும் வந்து புறப்பட்டுச் செல்லும் சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் இங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது. இந்தியாவின் பல இடங்களுக்கும் இரயில் போக்குவரத்து சேவைகள் அளிக்கும் புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர். மத்திய இரயில் நிலையம், இங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தூரத்திலேயே அமைந்து, 24 மணி நேரமும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அயல்நாடுகளுக்கும் பயணம் செய்து கொள்ள வசதியாக, சுமார் 20 கி.மீ. தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்தின் கீழ் டவுட்டனில் மெட்ரோ இரயில் நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, இரயில் நிலையம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.[6]
கல்வி
தொகுபள்ளி
தொகுஇங்குள்ள முக்கியமான பள்ளியாக டவுட்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி திகழ்கிறது.
அரசியல்
தொகுடவுட்டன் பகுதியானது, எழும்பூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஐ. பரந்தாமன். மேலும் இப்பகுதி, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தயாநிதி மாறன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Doveton, Chennai - Find link". edwardbetts.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
- ↑ Subburaj, V. (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-040-9.
- ↑ "Founder - THE DOVETON BOYS HIGHER SECONDARY SCHOOL". www.dovetongroup.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
- ↑ Seton, Rosemary E. (2013). Western Daughters in Eastern Lands: British Missionary Women in Asia (in ஆங்கிலம்). ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84645-017-4.
- ↑ Dt Next Bureau. "Motorists want faulty signals at Egmore and Doveton repaired". DT next (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.
- ↑ "மீனாட்சி கல்லூரி, டவுட்டன், பட்டினப்பாக்கம் பகுதிகளில் - ரயில் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-29.