புரிசை
புரிசை (Purisai) தமிழ்நாடு மாநிலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[2][3][4]
புரிசை
புரிசை கிராமம் | |
---|---|
கிராமம் | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மக்கள்தொகை (2011[1]) | |
• மொத்தம் | 2,460 |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
பின்கோடு | 604401 |
Telephone code | 91-4182 |
வாகனப் பதிவு | TN25 |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
மாநில சட்டமன்றத் தொகுதி | செய்யார் |
அமைவிடம்
தொகுதிருவண்ணாமலையில் இருந்து புரிசை 79 கி. மீ கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 105 கி. மீ யில் அமைந்துள்ளது. தெற்கே வந்தவாசி வட்டமும், வடக்கே செய்யாறு வட்டமும், மேற்கே பெரணமல்லூர் வட்டமும், கிழக்கே உத்திரமேரூர் வட்டமும்ம் அமைந்துள்ளது. செய்யார் தொகுதியில் உள்ள 219 கிராமங்களில் புரிசையும் ஒன்றாகும். புரிசை அருகிலுள்ள நகரங்கள் வந்தவாசி, திருவத்திபுரம், உத்திரமேரூர், காஞ்சிபுரம் போன்றவை ஆகும். புரிசையில் வேளாண் வங்கி, அரசு மேல்நிலைப்பள்ளி,[5] ஆரம்ப பள்ளி மற்றும் தனியார் சி. பி. எஸ். இ பள்ளி. ஆகியவை உள்ளன. புரிசையில் வேளாண்மை முக்கிய தொழிலாக உள்ளது. இந்த கிராமம் 2 முக்கிய ஏரிகள் மூலம் பாசன வசதி பெறுகிறது.[6] இக்கிராமம் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் செய்யாறு சர்க்கரை ஆலை, செய்யாறு பல்தொழில்நுட்டபக் கல்லூரி, செய்யாறு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.
போக்குவரத்து
தொகுபுரிசையில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் 72 கி. மீ அருகில் அமைந்துள்ளது. எனினும், மத்திய அரசு ஏற்கனவே புரிசை வழியாக ரயில் கடந்து செல்ல புதிய பாதைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.[சான்று தேவை] புரிசையில் இருந்து பஸ்கள் அடிக்கடி செய்யாறு மற்றும் வந்தவாசிக்கு உள்ளன. மேலும் நேரடி பேருந்துகள் ஆரணி, பெங்களூர், சென்னை, காஞ்சிபுரம், மேல்மருவத்தூர், புதுச்சேரி, திண்டிவனம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களுக்கு செல்கின்றன.
கோயில்கள்
தொகுபுரிசையில் வரலாற்று சிறப்பு பெற்ற அகஸ்தீஸ்வர் ஆலயம்,[7] பெருமாள், விநாயகர் மற்றும் எல்லை அம்மன், திரொபதி அம்மன் கோவில்கள் உள்ளன.
இந்த அகஸ்தீஸ்வர் கோவில் 6-9 ஆம் நூற்றாண்டு மத்தியில் இக்கண்டத்தில் உள்ள மிக பெரிய சிவன் கோயில் ஆகும். சுந்தரர் தனது திருமுறையில் (7-12-6) இக்கோவிலைப் பற்றி கூறியுள்ளார்.
""தென்னூர் கைம்மைத் திருச்சுழி யல்திருக் கானப்பேர் பன்னூர் புக்குறை யும்பர மர்க்கிடம் பாய்நலம் என்னூர் எங்கள் பிரான்உறை யுந்திருத் தேவனூர் பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே."" [8]
விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை
தொகுஅகஸ்தீஸ்வர் கோயிலில் 12 நாட்கள் பங்குனி விழாவும், எல்லை அம்மன் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் வெள்ளி கிழமைகளில் நடைபெறும் திருவிழா மற்றும் முழு நிலவு நாள் கொண்டாட்டம் ஆகியன புரிசை கிராமத்திற்கு பெருமை சேர்க்கிறது. இங்கு நடைபெறும் தெருக்கூத்து விழா அனைத்து மதங்களும் ஒன்று சேர்க்கும் விழாவாக கருதப்படுகிறது. இக் கிராமங்களில் தெருக்கூத்தில் கலைமாமணி விருது வென்றவர்களும் உள்ளனர். இவ்வூரில் சிறப்பு தெருக்கூத்து பள்ளி அமைந்துள்ளது .[9][10]
குறிப்புகள்
தொகு- ↑ "Population of Purisai Village, Cheyyar, Tamil Nadu". populationofindia.co.in. பார்க்கப்பட்ட நாள் 16 July 2014.
- ↑ http://www.chennaiiq.com/taluks/?id=174&name=Cheyyar
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
- ↑ http://www.tnrd.gov.in/databases/Villages.pdf
- ↑ https://kalvisolai.files.wordpress.com/2012/10/high-school-hm-panel-2012-17-10-2012.pdf
- ↑ "Purisai- Anakkavur – Tiruvannamalai". indiabyroad.in. பார்க்கப்பட்ட நாள் 16 July 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-08. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-09. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/purisai-school-offers-a-15week-course-in-therukoothu/article5619243.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-25. பார்க்கப்பட்ட நாள் 2017-07-18.