புலி மூக்கு கடற்குதிரை
புலி மூக்கு கடற்குதிரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சின்கனிதிபார்மிசு
|
குடும்பம்: | சின்கனிதிடே
|
பேரினம்: | |
இனம்: | கி. சப்பெலோங்காடசு
|
இருசொற் பெயரீடு | |
கிப்போகாம்பசு சப்பெலோங்காடசு கேசெடெல்நால், 1873 | |
வேறு பெயர்கள் | |
கிப்போகாம்பசு அங்கசுடசு குந்தர், 1870 |
புலி மூக்கு கடற்குதிரை (Tiger snout seahorse; கிப்போகாம்பசு சப்பெலோங்காடசு) என்பது மேற்கு ஆத்திரேலிய கடல் குதிரை என்றும் அழைக்கப்படுகிறது. இது சிங்னாதிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் சிற்றினமாகும். இது தென்மேற்கு ஆத்திரேலியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இது அப்ரோல்கோசு தீவுகளிலிருந்து இராக்கிங்காம் வரை காணப்படுகிறது. பாறைகளின் விளிம்புகள், சேற்று அடிப்பகுதி மற்றும் அதிக வண்டல் படிவு காரணமாக ஏற்படும் அடர் நீர் உள்ள பகுதிகள், படகு குழாம் குழாய்கள் மற்றும் பிணைப்பு மிதவையினைச் சுற்றி இதன் இயற்கையான வாழ்விடங்கள் அமைந்துள்ளன. இது பெரும்பாலும் பஞ்சுயிரி அல்லது கடற்பீச்சுகளுடன் தொடர்புடையது. இவை மனிதனால் நீரில் உருவாக்கப்பட்ட அமைப்புகளுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. குளிர்காலத்தில் இவை ஆழமான தண்ணீர்ப் பகுதிக்குள் செல்கின்றன.[3]
இனச்சேர்க்கை
கிப்போகாம்பசு சப்பெலோங்கடசு ஒரு மண உறவினை மேற்கொள்கிறது. ஆண் பெண் கடல் குதிரைகளின் எண்ணிக்கை ஓரளவு சமமாக இருப்பினும், இனச்சேர்க்கை மேற்கொண்ட பெண்களைவிட இனச்சேர்க்கை மேற்கொள்ளாத பெண் கடற்குதிரைகள் குறைவாகவே காணப்படுகிறது. இது பெண்களின் பாலியல் துணைத் தேர்வின் நேரடி விளைவாகும். ஆண் கடற்குதிரைகள் இனச்சேர்க்கை செய்யும் போது தன்னை விடப் பெரிய பெண் கடற்குதிரைகளை விரும்புகின்றன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pollom, R. (2017). "Hippocampus subelongatus". IUCN Red List of Threatened Species 2017: e.T40773A54906710. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T40773A54906710.en. https://www.iucnredlist.org/species/40773/54906710. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2018). "Hippocampus elongatus" in FishBase. February 2018 version.
- ↑ Kvarnemo, Charlotta; Moore, Glenn I; Jones, Adam G (2007-02-22). "Sexually selected females in the monogamous Western Australian seahorse" (in en). Proceedings of the Royal Society B: Biological Sciences 274 (1609): 521–525. doi:10.1098/rspb.2006.3753. பன்னாட்டுத் தர தொடர் எண்:0962-8452. பப்மெட்:17476772.