புளோரோவசிட்டோன்
புளோரோவசிட்டோன் (Fluoroacetone) C3H5FO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம புளோரின் சேர்மமாகும்.[1][2] முப்புளோரோவசிட்டோனில் மூன்று புளோரின் அணுக்கள் இருக்கின்றன ஆனால் இச்சேர்மத்தில் ஒரே புளோரின் அணு மட்டுமே உள்ளது. சாதாரண நிலைகளில் புளோரோவசிட்டோன் நிறமற்ற நீர்மமாகும். எளிதில் தீப்பற்றுவதும் உயர் நச்சுத்தன்மை கொண்டிருப்பதும் இதன் இயல்புகளாகும்.[3] இச்சேர்மத்தின் புகை காற்றுடன் கலக்கும் போது வெடிக்க நேரிடும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1-புளோரோபுரோபேன்-2-ஒன்
| |
வேறு பெயர்கள்
புளோரோ அசிட்டோன்; 1-புளோரோ-2-புரோப்பனோன்
| |
இனங்காட்டிகள் | |
430-51-3 | |
ChemSpider | 21171516 |
EC number | 207-064-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9889 |
| |
பண்புகள் | |
C3H5FO | |
வாய்ப்பாட்டு எடை | 76.07 g·mol−1 |
தோற்றம் | colorless liquid |
அடர்த்தி | 1.054 கி/மி.லி |
கொதிநிலை | 75 °C (167 °F; 348 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H300, H310, H330 | |
P210, P233, P240, P241, P242, P243, P260, P262, P264, P270, P271, P280, P284, P301+310 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 7 °C (45 °F; 280 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமூவெத்திலமீன் மூவைதரோபுளோரைடுடன் புரோமோவசிட்டோனைச் சேர்த்து வினைபுரியச் செய்து புளோரோவசிட்டோனைத் தயாரிக்கிறார்கள்.
பயன்பாடுகள்
தொகுஉயர் புளோரோகீட்டோன்களைத் தயாரிக்க புளோரோவசிட்டோன் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது. பெராக்சிமோனோகந்தக அமிலத்தின் கீட்டோன்-வினையூக்கிய சிதைவு வினையின் இயக்கவியலை ஆய்வதற்கு புளோரோவசிட்டோன் ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[4] புரோமோவசிட்டோன் அல்லது குளோரோவசிட்டோன் போன்ற பிற ஆலசனேற்றம் செய்யப்பட்ட அசிட்டோன் வழிப்பெறுதிகளுக்கு மாறாக புளோரோவசிட்டோன் ஒரு கண்ணீர் வரவழைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
இவற்ரையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Fluoroacetone Basic information". chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
- ↑ Newallis, Peter E.; Lombardo, Pasquale (1965). "Fluoro Ketones. III. Preparation and Thermal Decomposition of Fluoroacetone Hemiketal Esters" (in English). J. Org. Chem. 30 (11): 3834–3837. doi:10.1021/jo01022a055.
- ↑ "Substance information". echa.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
- ↑ "Fluoroacetone". Sigma Aldrich. sigmaaldrich.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.