புரோமோ அசிட்டோன்

கரிம புரோமின் சேர்மம்

புரோமோ அசிட்டோன் (Bromoacetone) என்பது C3H5BrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம புரோமின் சேர்மமான இது கண்ணீர் வரவழைக்கும் முகவராக நீர்ம நிலையில் காணப்படுகிறது. பல கரிமச் சேர்மங்களை தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.

புரோமோ அசிட்டோன்[1]
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-Bromopropan-2-one
வேறு பெயர்கள்
புரோமோ அசிட்டோன்
1-புரோமோ-2-புரோப்பனோன்
α- புரோமோ அசிட்டோன்
அசிட்டோனைல் புரோமைடு
அசிட்டைல் மெத்தில் புரோமைடு
புரோமோமெத்தில் மெத்தில் கீட்டோன்
மோனோபுரோமோ அசிட்டோன்
மார்ட்டோனைட்டு
பி.ஏ
யு.என்1569
இனங்காட்டிகள்
598-31-2 Y
ChEBI CHEBI:51845 Y
ChEMBL ChEMBL1085947 Y
ChemSpider 11223 Y
InChI
  • InChI=1S/C3H5BrO/c1-3(5)2-4/h2H2,1H3 Y
    Key: VQFAIAKCILWQPZ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C3H5BrO/c1-3(5)2-4/h2H2,1H3
    Key: VQFAIAKCILWQPZ-UHFFFAOYAC
IUPHAR/BPS
6293
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11715
வே.ந.வி.ப எண் UC0525000
  • BrCC(=O)C
பண்புகள்
C3H5BrO
வாய்ப்பாட்டு எடை 136.98 g·mol−1
தோற்றம் நிறமற்றது.
அடர்த்தி 1.634 கி/செ.மீ3
உருகுநிலை −36.5 °C (−33.7 °F; 236.7 K)
கொதிநிலை 137 °C (279 °F; 410 K)
ஆவியமுக்கம் 1.1 கிலோபாசுக்கல் (20 °செல்சியசில்)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் MSDS at ILO
தீப்பற்றும் வெப்பநிலை 51.1 °C (124.0 °F; 324.2 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

தோற்றம்

தொகு

அவாய் தீவுகளின் அருகே இருக்கும் அசுபாரகோப்சிசு டாக்சிபார்மிசு என்ற கடற்பாசியின் எண்ணெயில் புரோமோ அசிட்டோன் இயற்கையாகவே 1% க்கும் குறைவாக உள்ளது[2].

தயாரிப்பு

தொகு

புரோமோ அசிட்டோன் வர்த்தக முறையாகவும் கிடைக்கிறது. சில சமயங்களில் மக்னீசியம் ஆக்சைடுடன் சேர்த்து நிலைப்படுத்தப்படுகிறது. என் சோகோகோவ்சுகியால் 19 ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக விவரிக்கப்பட்டது [3].

 
அசிட்டோன் மற்றும் புரோமின் சேர்ந்து புரோமோ அசிட்டோன் உருவாதல்

புரோமின் மற்றும் அசிட்டோன் ஆகியவற்றை ஒரு வினையூக்கி அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் புரோமோ அசிட்டோன் தயாரிக்கப்படுகிறது. அனைத்து கீட்டோன்கள் போலவே அமிலங்கள் அல்லது காரங்களின் முன்னிலையில் இந்த அசிட்டோனும் ஈனாலேற்றம் அடைகிறது. பின்னர் ஆல்ஃபா கார்பன் புரோமினுடன் எலக்ட்ரான்கவர் பதிலீட்டு வினை புரிகிறது. இந்த தயாரிப்பு முறையின் முக்கியமான சிரமம் என்பது அதிக-புரோமினேற்றம் அடைவது ஆகும். இதன் விளைவாக டை மற்றும் டிரை புரோமினேற்றம் அடைந்த விளைபொருட்கள் உருவாகின்றன. வினையில் ஒரு காரம் இருக்குமேயானால் அதற்குப்பதிலாக ஆலோபார்ம் வினையின் வழியாக புரோமோபார்ம் பெறப்படுகிறது.

பயன்பாடு

தொகு

இது முதலாம் உலகப் போரில் வேதியியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பி.ஏ என்ற பெயரால் ஆங்கிலேயர்களும் பி-சிடாப் (வெஞ்சிலுவை) என்று பெயரால் செருமானியர்களாலும் அழைக்கப்பட்டது. இதன் நச்சுத்தன்மை காரணமாக ஒரு கலகக் கட்டுப்பாட்டு முகவராகப் பயன்படுத்தப்பட்டு தற்போது வழக்கற்றுப் போய்விட்டது, கரிமத் தொகுப்பு வினைகளில் பன்முக வினையாக்கியாக புரோமோ அசிட்டோன் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக ஐதராக்சி அசிட்டோன் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இதைப் பயன்படுத்துகிறார்கள் [4].

மேற்கோள்கள்

தொகு
  1. Merck Index, 11th Edition, 1389
  2. Burreson, B. J.; Moore, R. E.; Roller, P. P. (1976). "Volatile halogen compounds in the alga Asparagopsis taxiformis (Rhodophyta)". Journal of Agricultural and Food Chemistry 24 (4): 856–861. doi:10.1021/jf60206a040. 
  3. Wagner, G. (1876). "Sitzung der russischen chemischen Gesellschaft am 7./19. October 1876". Berichte der Deutschen Chemischen Gesellschaft 9 (2): 1687–1688. doi:10.1002/cber.187600902196. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k906830/f657.image.langEN. 
  4. Levene, P. A.; Walti, A. (1930). "Acetol". Organic Syntheses 10: 1. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0005. ; Collective Volume, vol. 2, p. 5
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோ_அசிட்டோன்&oldid=2749847" இலிருந்து மீள்விக்கப்பட்டது