புள்ளி மரங்கொத்தி

புள்ளி மரங்கொத்தி (Speckled Piculet) என்பது மரங்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்த சிறிய உடலைக்கொண்ட ஒரு பறவையாகும். இது 1836 இல் பர்ட்டனால் வரையறுக்கப்பட்டது.[2]

புள்ளி மரங்கொத்தி
சிக்கிம் மாநிலக்காடுகளில் எடுக்கப்பட்ட படம்.
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பிசிடே
பேரினம்:
இனம்:
P. innominatus
இருசொற் பெயரீடு
Picumnus innominatus
Burton, 1836

விளக்கம்

தொகு

புள்ளி மரங்கொத்திகளில் ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும். இவற்றின் முதுகு ஆலிவ்-பச்சை நிறத்தில் இருக்கும். ஆண் பறவையின் உச்சியின் முன்புறத்தில் ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறங்கள் இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி மஞ்சள் கலந்த வெண்மையாக பெரிய கறுப்புக் கறைகளுடன் காணப்படும். கண்களுக்கு அருகில் அடர் பச்சை நிற பட்டை உள்ளது. இவற்றின் கண்கள் வழியாகக் அடர் பச்சை நிற பட்டை இருக்கும். அதன் மேலும் கீழும் வெள்ளைக் கறைகள் அழகுற அமைந்திருக்கும்.[3]

பரவலும் வாழிடமும்

தொகு

இப்பறவை பொதுவாக ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் மியான்மார் ,தென் சீனா, தாய்லாந்து, கம்போடியா,சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, புரூணை, இந்தியா, இலங்கை, நேபாளம்,மற்றும் பூட்டான், போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்களாக தைகா காடுகள், துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலை காடுகள். இந்தியாவில், இது இமயமலை அடிவாரத்தில், சுமார் 2500 மீட்டர் உயரம் வரை காணப்படுகிறது. மூங்கில் காடுகளில் இதைக் காணலாம்.[3]

நடத்தை

தொகு

இவை பொதுவாக இணையாக, மெல்லிய கிளைகளில் அமர்ந்திருக்கும். சில சமயங்களில் கிளையிலிருந்து தலைகீழாக தொங்கும். இவற்றின் நடத்தை மரங்கொத்திகளைப் போலவே இருக்கும்.[3]

உணவு

தொகு

இவை காய்ந்த மரத்தில் துளையிட்டு அதிலிருக்கும் பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது. [3]

துணையினங்கள்

தொகு

இதில் மூன்று துணையினங்கள் உள்ளன:

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Picumnus innominatus". IUCN Red List of Threatened Species 2018: e.T22680694A1300276662. https://www.iucnredlist.org/species/22680694/1300276662. பார்த்த நாள்: 7 November 2021. 
  2. 2.0 2.1 "ITIS - Report: Picumnus innominatus". www.itis.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-03-19.
  3. 3.0 3.1 3.2 3.3 Grewal, Bikram (2000). Birds of the Indian Subcontinent. India: Local Colour Limited. p. 14.
  4. Gorman, Gerard (2014). Woodpeckers of the World (in ஆங்கிலம்). Firefly Books. pp. 42.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளி_மரங்கொத்தி&oldid=3794349" இலிருந்து மீள்விக்கப்பட்டது