புழுதிப் புயல்

(புழுதிப்புயல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புழுதிப் புயல் (dust storm) அல்லது மணற்புயல் (sandstorm) எனப்படுவது வறண்ட அல்லது பகுதி-வறண்ட பகுதிகளில் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது காற்று மண்டலத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை விட அதிகரிக்கும் போது மணல் மற்றும் தூசிகளை வறண்ட நிலங்களில் இருந்து அகற்றி தன்னுடன் எடுத்துச் செல்வதால் ஏற்படுகிறது. இந்நிகழ்வின் போது மணல் துணிக்கைகள் ஓரிடத்தில் இருந்து அகற்றப்பட்டு வேறோர் இடத்தில் குவிக்கப்படுகின்றன. அராபியத் தீபகற்பத்தை அண்டியுள்ள சகாரா மற்றும் பாலைவனங்கள் புழுதிப்புயலை உருவாக்கும் முக்கிய பகுதிகளாகும். இவற்றைவிட அரபிக்கடலை அண்டியுள்ள ஈரான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளின் பகுதிகளிலும், மற்றும் சீனாவிலும் குறைந்த அளவில் புழுதிப்புயல் ஏற்படுகின்றன. இவ்வாறான புழுதிப் புயல் ஏற்பட்டால் நிலம் தரிசாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன[1]. அண்மைய ஆய்வுகளின்படி, தரிசு நிலங்கள் முறையாகப் பாதுகாக்கப்படாமை போன்ற பூமியின் வறண்ட பகுதிகளின் மேலாண்மைக் குறைபாடுகளே, புழுதிப்புயல் ஏற்படக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது[2].

துருக்மெனிஸ்தானில் புழுதிப் புயல்
2005, ஏப்ரல் 27 இல் ஈராக்கில் அல அசாட் நகரை அண்மிக்கும் புழுதிப்புயல்

குறிப்பிடத்தக்க புழுதிப்புயல்கள்

தொகு
 
1935 இல் டெக்சாசில் ஏற்பட்ட புழுதிப்புயல்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dust storm
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=புழுதிப்_புயல்&oldid=3886297" இலிருந்து மீள்விக்கப்பட்டது