புவி முனையப் பகுதிகள்
புவியின் குளிர் மண்டலங்கள் அல்லது நிலமுனை மண்டலங்கள் என்றும் அழைக்கப்படும் நிலமுனையப் பகுதிகள் புவியின் முனையப் பனிக்கட்டிகள், அதன் புவியியல் முனைகளைச் சுற்றியுள்ள கோளின் பகுதிகள் ( வட, தென் முனைகள் ), முனைய வட்டங்களுக்குள் உள்ளன. இந்த உயர் அகலாங்குகள் வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மிதக்கும் கடல் பனியால் நிரம்பியுள்ளன. மேலும் அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ள அண்டார்டிக் பனிக்கட்டியாலும், தெற்கில் தெற்கு பெருங்கடலாலும் நிரம்பியுள்ளன .
வரையறைகள்
தொகுஆர்க்டிக் பல்வேறு வரையறைகளைக் கொண்டுள்ளது, ஆர்க்டிக் வட்டத்திற்கு வடக்கே உள்ள பகுதி (தற்போது காலத்தில் 2010 இல் 66°33'44" வ) எனவும், அல்லது 60° வடக்கு அகலாங்குக்கு வடக்கே உள்ள பகுதி அல்லது வட முனையிலிருந்து தெற்கே மரக்கோடு வரையிலான பகுதி எனவும் வரையருக்கப்படுகிறது . அண்டார்டிக் பொதுவாக 60° தெற்கு அகலாங்குக்குத் தெற்கே அல்லது அண்டார்க்க்டிகா கண்டம் என வரையறுக்கப்படுகிறது. 1959 அண்டார்டிக் ஒப்பந்தம் முந்தைய வரையறையைப் பயன்படுத்துகிறது.
இரண்டு முனையப் பகுதிகளும் புவியின் மற்ற இரண்டு காலநிலை, உயிரளவியல் பட்டைகள், நிலநடுவரைக்கு அருகிலுள்ள வெப்ப மண்டலப் பட்டை, வெப்பமண்டலத்துக்கும் முனையப் பகுதிகளுக்கும் இடையில் அமைந்துள்ள இரண்டு நடுத்தர அகலாங்குப் பகுதிகளிலிருந்து வேறுபடுகின்றன.
காலநிலை
தொகுமுனையப் பகுதிகள் புவியின் மற்ற பகுதிகளை விட குறைவான சூரிய கதிர்வீச்சையே பெறுகின்றன, ஏனெனில் சூரியனின் ஆற்றல் ஒரு சாய்ந்த கோணத்தில் வந்து, ஒரு பெரும்பகுதியில் பரவுகிறது. அதானால், குறைவாகவே செறிவூட்டப்படுகிறது. மேலும், புவியின் வளிமண்டலத்தின் வழியாக நீண்ட தொலைவு பயணிக்கிறது. வெப்பமண்டலப் பகுதிகளைத் தவிர, மற்ற ஆண்டுப் பகுதிகளைக் காட்டிலும், குளிர்காலம் குளிர்ச்சியாக இருப்பதற்கு இதுவே காரணமாகும்.
புவியின் அச்சு சாய்வு அதன் அகலாங்கு காரணமாக முனையப் பகுதிகளின் தட்பவெப்பநிலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், முனையப் பகுதிகள் நிலநடுவரையில் இருந்து மிகத் தொலைவில் இருப்பதால், அவை வலுவிழந்த சூரியக் கதிர்வீச்சையே பெறுகின்றன, எனவே புவியின் அச்சு சாய்வான 23.5° கோணம், சூரியனுக்குப் போதுமான அளவு நண்பகல் சரிவை உருவாக்க போதுமானதாக இல்லாததால், பொதுவாக ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். முனைய வட்டங்களுக்கு அருகிலுள்ள புறப் பகுதிகளில் ஒப்பீட்டளவில் குறுகிய காலங்களைத் தவிர, கோடையில் கூட உயர் அகலாங்குக்கான கதிர்கள் கூட வலுவிழந்தே அமைகின்றன. இது குளிருக்கு பங்களிக்கிறது. முனையப் பகுதிகள் மிகவும் குளிர்ந்த வெப்பநிலை, நிலையான பனியை உருவாக்கப் போதுமான மழைப்பொழிவு உள்ள இடங்களில் கடுமையான பனிப்பாறைகள், குறுகிய, குளிர்ந்த கோடைகள், பகல் நேரங்களில் பேரளவு மாறுபாடுகள், கோடையில் இருபத்தி நான்கு மணிநேரமும் பகல், மாரி நடுப்பகுதியில் முழு இருள் ஆகியவற்றுக்கு ஆட்படுகின்றன.
வட்ட ஆர்க்டிக் பகுதி
தொகுபுவியின் வட முனையப் பகுதியில் பல குடியிருப்புகள் உள்ளன. ஆர்க்டிக் பகுதிகளுக்கு உரிமை கோரும் நாடுகள்: அமெரிக்கா ( அலாசுக்கா ), கனடா ( யூகோன், வடமேற்கு பிரதேசங்கள், நுனாவுட் ), டென்மார்க் ( கிரீன்லாந்து ), நார்வே, பின்லாந்து, சுவீடன், ஐஸ்லாந்து, உருசியா . ஆர்க்டிக் அட்டப் பகுதி மக்கள், சிறியதாக இருந்தாலும், தங்கள் தேசிய எல்லைகளுக்குள் உள்ள பிற மக்களைக் காட்டிலும் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் பொதுவானதாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். அதுபோல, வட முனையப் பகுதி மனிதக் குடியேற்றங்களிலும் பண்பாடுகளிலும் வேறுபட்டது.
அண்டார்டிகாவும் தென்கடலும்
தொகுதென் முனையப் பகுதியில் தற்போது நிலையான மனித வாழ்விடம் இல்லை. [1] மெக்முர்தோ நிலையம் என்பது அமெரிக்காவால் நடத்தப்படும் அண்டார்க்டிகாவில் உள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி நிலையமாகும். மற்ற குறிப்பிடத்தக்க நிலையங்களில் பால்மர் நிலையம் அமுண்ட்சென்-சுகாட்டுத் தென் முனைய நிலையம் (அமெரிக்கா), எசுபரான்சா தளம் மற்றும் மராம்பியோ தளம் ( அர்ஜென்டினா ), சுகாட்டுத் தளம் ( நியூசிலாந்து ) வோத்தாக்கு நிலையம் ( உருசியா) ஆகியவை அடங்கும்.
தொல்பழம் மனிதப் பண்பாடுகள் இல்லை என்றாலும், ஒரு சிக்கலான சுற்றுச்சூழல் உள்ளது, குறிப்பாக அண்டார்டிகாவின் கடலோர மண்டலங்களில். கரையோர மேம்பாடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது, இது க்ரில் எனும், கடல் ஓட்டுடலி வகைக்கு உணவளிக்கிறது, இது பெங்குவின் முதல் நீல திமிங்கலங்கள் வரையிலான உயிரினங்களுக்குச் சிக்கலான உணவளிக்கிறது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Matthew Teller (20 June 2014). "Why do so many nations want a piece of Antarctica?" (in ஆங்கிலம்). BBC. பார்க்கப்பட்ட நாள் 22 March 2019.
மேலும் படிக்க
தொகு- Victor, Paul-Émile. Man and the Conquest of the Poles, trans. by Scott Sullivan. New York: Simon & Schuster, 1963.வார்ப்புரு:ISBN?
வெளி இணைப்புகள்
தொகு- Polar regions குர்லியில்
- The Polar Regions
- International Polar Foundation
- Arctic Environmental Atlas (UNDP)
- Earth's Polar Regions on Windows to the Universe
- Arctic Studies Center, Smithsonian Institution
- Scott Polar Research Institute, University of Cambridge
- WWF:The Polar Regions
- World Environment Day 2007 "Melting Ice" image gallery at The Guardian
- Polar Discovery