புதிய தமிழகம் கட்சி

(பு.த.க இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புதிய தமிழகம் கட்சி, ஒரு தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். இக்கட்சி பெரும்பாலும் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடிச் செயல்படுகின்றது. இக்கட்சியின் தலைவர் மருத்துவர் க. கிருஷ்ணசாமி ஆவார்.[2]

புதிய தமிழகம் [1]
தலைவர்க. கிருஷ்ணசாமி
தொடக்கம்1997
தலைமையகம்சென்னை
கொள்கைஅம்பேத்கரிஸ்ட்
கூட்டணி
கட்சிக்கொடி
இணையதளம்
இணையதளம்
இந்தியா அரசியல்

போராட்டங்கள்

தொகு

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 23 சூலை 1999 அன்று திருநெல்வேலி மாநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. அப்பொழுது காவல்துறை நடத்திய தடியடி, துப்பாக்கிச்சூடு காரணமாக சிதறி ஓடிய மக்கள், தப்பிக்க தாமிரபரணி நதிக்குள் குதித்தனர். இந்த சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.[3]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_தமிழகம்_கட்சி&oldid=3938038" இலிருந்து மீள்விக்கப்பட்டது