பூக்கும் சீன இலைக்கோசு

பூக்கும் சீன இலைக்கோசு (Choy sum அல்லது choi sum, choi sam, கண்டோனீயம்; cai xin, caixin, yu choy, மாண்டரின்: 油菜, Chinese flowering cabbage.[1]) என்பது இலைக்காய்கறி ஆகும். இது பெரும்பான்மையான சீனச் சமையலில் பயன்படுகிறது. இத்தாவரத்தின் பேரினம் பிராசிகா, குடும்பம் பிராசிகேசியே ஆகும். பிராசிகா இராபா என்ற இனத்தில் வகைகள் பல உள்ளன. அவற்றில் ஒருவகை parachinensis அல்லது போக் சொய் var. parachinensis ஆகும். கண்டோனீயம் (சீனம்: 菜心) மொழியில் இதன் பொருள், "காய்கறிகளின் இதயம்" என்பதாகும். இந்த இனத்தில் தனித்துவமான மஞ்சள் நிற மலர்கள் பூக்கின்றன. ஒவ்வொரு பூவிலும் நான்கு மஞ்சள் முட்டை வடிவ பூவிதழ்கள், ஆறு ஆண் உறுப்புகள், அடர் பச்சை நிறமுள்ள சினையகமும் உள்ளன. ஒவ்வொரு விதையுறையிலும் 4 முதல் 46 விதைகள் உள்ளன. இதன் வேர்த்தொகுதி 10 முதல் 40 cm (4 முதல் 16 அங்) வரை உள்ளது. ஏழு முதல் எட்டு இலைகள் உள்ள போது பூக்கள் பூக்கின்றன. 12 cm (4+12 அங்) ஆழம் வரை வேர்கள் உள்ளன.[2][3] இது ஆண்டுத் தாவரம் ஆகும்.

Choy sum (Cantonese)
Cai xin (Mandarin)
பண்ணையில் விளைந்த இந்த இலைக்கோசு
இனம் Brassica rapa var. parachinensis
பயிரிடும்வகைப் பிரிவுChinensis, Pekinensis groups
தோற்றம்15 ஆம் நூற்றாண்டுக்கு முன் சீனா
பயிரின வகை உறுப்பினர்கள்பல, கட்டுரையில் காண்க
Choy sum (cai xin)
சீனம் 菜心
Hanyu Pinyin càixīn
காந்தோநீசிய மொழி Jyutping coi3sam1

காட்சியகம்

தொகு

இவற்றையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "CHOY SUM | South Pacific Seeds". Archived from the original on 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
  2. Resources, Department of Economic Development, Jobs, Transport and (2017-05-22). "Agriculture". www.dpi.vic.gov.au.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. "CQUniversity Australia - Chinese Flowering Cabbage". Archived from the original on 2013-02-26. பார்க்கப்பட்ட நாள் 2013-02-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூக்கும்_சீன_இலைக்கோசு&oldid=3919752" இலிருந்து மீள்விக்கப்பட்டது