பெங்குலு, நகரம்
பெங்குலு நகரம், (Bengkulu) இந்தோனேஷியாவில் உள்ள பெங்குலு மாகாணத்தின் தலைநகரம் ஆகும். சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பாடாங் நகரத்திற்குப் பிறகு இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது. முன்னதாக இந்த பகுதி இந்திரபுரா இராச்சியம் மற்றும் பான்டென் சுல்தானகத்தின் செல்வாக்கின் கீழ் இருந்தது. 1939 - 1942 காலகட்டத்தில் சுகர்னோ இங்கு நாடு கடத்தப்பட்டு இந்த நகரத்தில் தங்கவைக்கப்பட்டார். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இது 308,756 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது, சமீபத்திய மதிப்பீடு (2014 ஜனவரியில்) 328,827 ஆகும். இந்த நகரம் பெங்குலு மாகாணத்தின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.
வரலாறு
தொகுபிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி 1685 ஆம் ஆண்டில் பெங்குலுவை ( ஆங்கிலேயர்களால் பென்கூலன் என்று பெயரிடப்பட்டது) இந்த பிராந்தியத்திற்கான புதிய வணிக மையமாக நிறுவியது. 17 ஆம் நூற்றாண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி தெற்கு சுமத்ராவின் லாம்புங் பகுதியில் மசாலா வர்த்தகத்தை அண்டை தீவான ஜாவாவின் வடமேற்கில் உள்ள பான்டனில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து நடத்தி வந்தது. 1682 இல், டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு படை, பான்டனைத் தாக்கியது. உள்ளூர் இளவரசர் டச்சுக்காரர்களிடம் சரணைடந்தார். பின்னர் அவர் சுல்தான் என்று அங்கீகரிக்கப்பட்டார். டச்சுக்காரர்கள் பான்டனில் இருந்த மற்ற ஐரோப்பியர்கள் அனைவரையும் வெளியேற்றினர், மேலும் ஆங்கிலேயர்கள் பெங்குலுவை நிறுவவும் வழிவகுத்தனர். 1714 ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் பெங்குலுவில் மார்ல்பரோ கோட்டையைக் கட்டினர்.
இங்கு மிளகு கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட சிரமம் மற்றும் அதன் தொலைவு காரணமாக, வர்த்தக மையம் அமைக்க, ஒருபோதும் நிதி ரீதியாக சாத்தியமில்லாமல் இருந்தது. இந்த சிரமங்கள் இருந்தபோதிலும், ஆங்கிலேயர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அங்கு இருந்தார்கள், மலாக்காவில் தங்கள் கவனத்தை செலுத்துவதற்காக 1824 ஆம் ஆண்டின் ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக டச்சுக்காரர்களிடம் அதைக் அளித்தனர். தூர கிழக்கிற்கான முதல் அமெரிக்க தூதர் எட்மண்ட் ராபர்ட்ஸ் 1832 இல் பெங்குலுவுக்கு வருகை புரிந்தார்.[1] இன்றைய இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளைப் போலவே, பெங்குலு இரண்டாம் உலகப் போர் வரை டச்சு காலனியாகவே இருந்தது.
சுகர்னோ (பின்னர் இந்தோனேசியாவின் முதல் அதிபர்) டச்சுக்காரர்களால் 1930 களில் பெங்குலுவில் சிறையில் அடைக்கப்பட்டார், இங்கு அவர், ஒரு குறுகிய காலம் வரை இருந்தார். சுகர்னோ தனது வருங்கால மனைவி பத்மாவதியை பெங்குலுவில் இருந்த காலத்தில் சந்தித்தார்.
நிலவியல்
தொகுஇது உயரம் குறைவான பகுதியாகும். மற்றும் சதுப்பு நிலங்களைக் கொண்டுள்ளது . 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், மலேரியா மற்றும் தொடர்புடைய நோய்கள் இங்கு அதிகம் காணப்பட்டன.[2] பெங்குலு சுந்தா நிலத்திற்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் பூகம்பங்கள் மற்றும் சுனாமிகளால் பாதிக்கப்படுகிறது. ஜூன் 2000 எங்கனோ பூகம்பத்தில் குறைந்தது 100 பேர் இறந்தனர். சமீபத்திய அறிக்கை பெங்குலு நகரம் "சுமத்ரா கடற்கரையில் கணிக்கப்பட்ட கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பங்களிலிருந்து அடுத்த சில தசாப்தங்களில் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது" எனக் கூறுகிறது.[3] செப்டம்பர் 2007 இல் தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் பெங்குலுவை தாக்கியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.[4] பெங்குலு நகரத்தின் பரப்பளவு 144.52 கிமீ ²ஆகும். இது, சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் 525 கி.மீ. தூரம் கொண்ட கடற்கரையுடன் அமைந்துள்ளது. இந்த நகரத்தின் பகுதி புக்கிட் பாரிசன் மலைகளுக்கு இணையாகவும், இந்தியப் பெருங்கடலுடன் நேருக்கு நேர் அமைந்துள்ளது.
புள்ளி விவரங்கள்
தொகு1832 ஆம் ஆண்டு நிலவரப்படி, பெங்குலு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்த்து 18,000 பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், இப்பகுதியில் மாறுபட்ட மக்கள் இருந்திருக்கின்றனர்: டச்சு, சீன, ஜாவானீஸ், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினர். சைனா டவுன் நகரத்தின் மையத்தில் அமைந்திருந்தது.[2]
பொருளாதாரம்
தொகுடச்சு ஆட்சியின் கீழ், பெங்குலுவில் பெருந்தோட்டங்கள் இருந்தன . பார்சி மக்கள் சாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி ஆகியவற்றை அறுவடை செய்து பதப்படுத்தினர். சாதிக்காய் மிட்டாய் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும். மிளகு ஒரு பெரிய ஏற்றுமதியாகவும் இருந்தது. சிறிய அளவிலான காபி பயிரிடப்பட்டது, எனினும் மற்றும் அரிசியும் காபியும் பாடாங்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பழம் மற்றும் விலங்கு உற்பத்தியும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.[2]
குறிப்புகள்
தொகு- ↑ Roberts, Edmund (1837). Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat. New York: Harper & Brothers. p. 34.
- ↑ 2.0 2.1 2.2 Roberts, Edmund (1837). Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat. New York: Harper & Brothers. pp. 38–40.
- ↑ Andrew C. Revkin. "Indonesian Cities Lie in Shadow Of Cyclical Tsunami".
- ↑ New York Times