படாங் (Padang) இந்தோனேசியாவின் மேற்கு சுமாத்திரா மாகாணத்தின் தலைநகரமாகும். சுமாத்திராவின் மேற்குக் கடலோரத்தில் உள்ள மிகப் பெரும் நகரமாக இது உள்ளது. இந்தோனேசியாவின் விடுதலைக்கு முன்னர் படாங் டச்சுக் கிழக்கிந்தியாவின் முதன்மை நகரங்களில் ஒன்றாக விளங்கியது.[1] தற்போது சுமாத்திராவில் மெதான், பதாம், பலெம்பாங் and பெக்கான்பாரு நகரங்களை அடுத்து ஐந்தாவது மிகப்பெரும் நகரமாக உள்ளது. படாங் 695 சதுர கிலோமீட்டர்கள் (268 sq mi) பரப்பளவும் 1,000,096 மக்கள்தொகையும் (2004) உடையது.[2]

படாங்
Other transcription(s)
 • ஜாவிڤادڠ
படாங்கிலுள்ள ஆதித்யவர்மன் அருங்காட்சியகம்
படாங்கிலுள்ள ஆதித்யவர்மன் அருங்காட்சியகம்
அலுவல் சின்னம் படாங்
சின்னம்
மேற்கு சுமாத்திராவில் படாங்கின் அமைவிடம்
மேற்கு சுமாத்திராவில் படாங்கின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
மாகாணம்மேற்கு சுமாத்திரா
நிறுவப்பட்டது7 ஆகத்து 1669
அரசு
 • மேயர்மாயெல்டி அன்சருல்லா
பரப்பளவு
 • மொத்தம்695 km2 (268 sq mi)
ஏற்றம்
0−1,853 m (0−6,079 ft)
மக்கள்தொகை
 (2014)
 • மொத்தம்1.000.096
 • அடர்த்தி0.0014/km2 (0.0037/sq mi)
நேர வலயம்ஒசநே+7 (இந்தோனேசிய நேரம்)
இடக் குறியீடு+62 751
இணையதளம்www.padang.go.id

இந்தோனேசியாவின் மிகத் தூய்மையான பெரிய நகரங்களில் ஒன்றாக படாங் விளங்குகின்றது. 2009 வரை பெரிய நகரங்களில் மிகத் தூய்மையான, பசுமையான நகரத்திற்கு வழங்கப்படும் "ஆதிப்புரா" விருதை 17 முறையும் "ஆதிப்புரா கென்கானா" விருதை 3 முறையும் வென்றுள்ளது.

புவியில் படாங்கிற்கு நேர் எதிர் முனையில் எக்குவடோரின் எசுமெரால்டசு உள்ளது.

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
படாங்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படாங்&oldid=3273533" இலிருந்து மீள்விக்கப்பட்டது