பெச்சோரா ஆறு

வடக்கு உருசிய ஆறு

பெச்சோரா ஆறு (Pechora River, உருசியம்: Печо́ра; கோமி மொழி: Печӧра; நெனெத்து மொழி: Санэроˮ яха) என்பது வடமேற்கு ரசியாவில் உள்ள ஒரு ஆறு. இது உரால் மலைகளின் மேற்குப் பகுதியில் அமைந்து வடக்கு நோக்கிச் சென்று ஆர்க்டிக் பெருங்கடலில் பாய்கிறது.[1] பெரும்பாலும் கோமி குடியரசில் உள்ள இந்த ஆற்றின் வடக்கு பகுதி நெனெத்து தன்னாட்சி வட்டாரத்தைக் கடக்கிறது.

பெச்சோரா ஆறு
உருசியம்: Печо́ра; கோமி மொழி: Печӧра; நெனெத்து மொழி: Санэроˮ яха
பெச்சோரா ஆற்றில் படகு
பெச்சோரா ஆற்றின் நீர்ப்பிடிப்புப்பகுதியும் துணையாறுகளும்
அமைவு
நாடுஉருசியா
மாநிலம்கோமி, நெனெத்து தன்னாட்சி வட்டாரம்
நகரங்கள்நர்யான் மார், பெச்சோரா, உஸ்த் சில்மா
சிறப்புக்கூறுகள்
மூலம்உரால் மலைகள்
 ⁃ அமைவுஉருசியா
 ⁃ ஆள்கூறுகள்62°12′N 59°26′E / 62.200°N 59.433°E / 62.200; 59.433
 ⁃ ஏற்றம்630 m (2,070 அடி)
முகத்துவாரம்ஆர்க்டிக் பெருங்கடல், பெச்சோரா கடல் / பேரன்ட்ஸ் கடல்
 ⁃ ஆள்கூறுகள்
68°18′N 54°25′E / 68.300°N 54.417°E / 68.300; 54.417
 ⁃ உயர ஏற்றம்
0 அடி (0 m)
நீளம்1,809 km (1,124 mi)
வடிநில அளவு322,000 km2 (124,000 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஆற்று முகத்துவாரம் (மாதச் சராசரி)
 ⁃ சராசரி4,100 m3/s (140,000 cu ft/s)
 ⁃ குறைந்தபட்சம்643 m3/s (22,700 cu ft/s)
 ⁃ அதிகபட்சம்17,182 m3/s (606,800 cu ft/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுஈழ்மா ஆறு, நெரிஸ்தா ஆறு, பீழ்மா ஆறு, சீல்மா ஆறு, சூலா ஆறு, ஊண்யா ஆறு, வடக்கு மீல்வா ஆறு, வெல்யூ ஆறு, லெம்யூ ஆறு, கோழ்வா ஆறு, லீழா ஆறு
 ⁃ வலதுஇல்யீச் ஆறு, போத்செர்யே ஆறு, ஷுகோர் ஆறு, உசா ஆறு, லாயா ஆறு, எர்ஸா ஆறு, சோஸ்வா ஆறு, ஷாப்கினா ஆறு, கூயா ஆறு

நிலவியல் தொகு

 
பெச்சோரா ஆறு, வெளிர் நிறத்தில் உரால் மலைகள் மற்றும் ஓப் ஆற்றின் ஒரு பகுதி

இது 1,809 கிலோமீட்டர் (1,124 மைல்) நீளம் கொண்டது, ஒப்பீட்டளவில் கொலம்பியா ஆற்றை விடச் சற்று குறைவானது. அதன் படுகை 322,000 சதுர கிலோமீட்டர் (124,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது, இது பின்லாந்தின் நிலப்பரப்புக்கு இணையான அளவு. ஆண்டுச் சராசரி நீர் வெளியேற்றத்தின் அடிப்படையில் இது ஐரோப்பாவில் வோல்கா ஆறு மற்றும் தன்யூபிற்குப் பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளது.[2] அதன் நீர்வெளியேற்றம் டானூபின் வெளியேற்ற அளவில் பாதியாகவும் அதன் இணையாறான வடக்கு டிவினா ஆற்றை விடச் சற்று அதிகவும் உள்ளது.

இது நியூ கினியாவிற்கு வெளியே அதன் படுகையில் அணைகள் ஏதுமில்லாத ஆறுகளில் மிகப்பெரியது. ஆற்றின் கீழ்நிலைக்கு மேற்கே திமன் முகடு உள்ளது. உரால் மலைகளின் மேற்குப் பக்கத்திலுள்ள படுகையின் கிழக்கே யுகிட் வா தேசியப் பூங்கா உள்ளது. மேலும் படுகையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய கன்னிக்காடான விர்ஜின் கோமி காடுகள் உள்ளன. உசா ஆற்றின் படுகையின் வடகிழக்கில் பெரிய நிலக்கரி மையமான வோர்குடா உள்ளது.

ஆற்றுவழி தொகு

கோமி குடியரசின் தென்கிழக்கு மூலையில் உள்ள உரால் மலைகளில் இந்த ஆறு தோன்றுகிறது. இந்தப் பகுதி பெச்சோரா-இல்யீச் பாதுகாக்கப்பட்ட இயற்கைப் பகுதி என்று அழைக்கப்படுகிறது. உரால்களின் மறுபுறத்தில் வடக்கு சோஸ்வா ஆற்றின் ஊற்று உள்ளது. இந்த ஆறு முதலில் தெற்கு நோக்கியும், பின்னர் மேற்கு நோக்கியும் பாய்ந்து, சிறிய படகுகளுக்கான முதன்மை வழிசெலுத்துமிடமாக இருக்கும் யக்ஷாவினருகே வடக்கு நோக்கித் திரும்புகிறது. ஒரு சிறிய நீர்வழியிடை நிலவழி தெற்கே காமா ஆற்றுப் படுகைக்குச் செல்கிறது. கிழக்கே வடக்கு டிவினா ஆற்றின் ஒரு கிளையான மேல் விச்செக்தா ஆறு உள்ளது. இந்த ஆறு கம்சமோல்ஸ்க்-நா-பெச்சோரைக் கடந்து உஸ்ட்-இல்யீச் வரை செல்கிறது, அங்கு இல்யீச் ஆறு கிழக்கிலிருந்து இணைகிறது, பின்னர் வடமேற்கு த்ராய்ட்ஸ்கோ-பெச்சோர்ஸ்க் (ஆற்றின் வாயிலிருந்து 1,359 கிலோமீட்டர்), வடக்கே வுக்டில் மற்றும் உஸ்ட்-ஷுகர் வரை ஷுகோர் ஆறு கிழக்கிலிருந்து இணைகிறது. இந்த ஆறு பெச்சோரா நகரத்திற்கு வடக்கே பாய்கிறது, அங்கு வோர்குடா தொடர்வண்டிப் பாதை கடக்கிறது, பின்னர் வடக்கே உஸ்ட்-உசா வரை ஒரு காலத்தில் சைபீரியாவிற்கு ஒரு முக்கியமான ஆற்றுப் பாதையாக இருந்த உசா ஆறு கிழக்கிலிருந்து இணைகிறது. பெச்சோரா பின்னர் வடமேற்கு, மேற்கு மற்றும் மேற்குத்தென்மேற்கில் வளைகிறது. தெற்கிலிருந்து ஈழ்மா ஆறு இணைகிறது. பின்னர் அது மேற்கிலிருந்து உஸ்ட்-சீல்மாவுக்குப் (ஆற்றின் வாயிலிருந்து 425 கிலோமீட்டர்) பாய்கிறது, அங்கு பீழ்மா ஆறு (கோமி குடியரசு) தென்மேற்கில் இருந்து இணைகிறது, மேற்கில் இருந்து சீல்மா ஆறு இணைகிறது. நவீன காலத்திற்கு முன்பு மக்கள் சீல்மா வரை பயணித்து நீர்வழியிடை நிலவழிச் சாலை மூலம் பியோசா ஆற்றைக் கடந்து வெள்ளைக் கடலை அடைவார்கள். பின்னர் பெச்சோரா வடக்கு நோக்கித் திரும்பி ஆர்க்டிக் வட்டம் மற்றும் நெனெத்து தன்னாட்சி வட்டாரத்தின் எல்லையைக் கடக்கிறது; புஸ்தோஸ்யோர்க்ஸ்; நெனெத்து வட்டாரத் தலைநகரம் மற்றும் பெச்சோரா டெல்டாவின் தலைப்பகுதியில் ஒரு துறைமுகமான நரியான்-மார்; பெச்சோரா விரிகுடா; பெச்சோரா கடல்; இறுதியாக பேரன்ட்ஸ் கடல் எனத் தன் பயணத்தை முடிக்கின்றது.

நீரியல் தொகு

ஆற்றின் மாதாந்திர சராசரி நீர்வெளியேற்றம் 1981 மற்றும் 1993 க்கு இடையில் ஆற்றின் வாயிலிருந்து 141 கிமீ (88 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஓக்ஸினோ சிற்றூரில் பதிவு செய்யப்பட்டது. மதிப்புகள் கீழே உள்ள வரைபடத்தில் வழங்கப்படுகின்றன (மெட்ரிக் அலகுகள், கனமீட்டர் வினாடிக்கு).[3]

கால்வாய்த் திட்டம் தொகு

இந்த ஆறு ஒரு காலத்தில் குறிப்பாக வடமேற்குச் சைபீரியாவுக்குப் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கியமான போக்குவரத்துப் பாதையாக இருந்துள்ளது. இன்று ஒரு தொடர்வண்டிப்பாதை தென்மேற்கில் வோர்குடாவிலிருந்து மாஸ்கோவை இணைக்கிறது. பெச்சோராவுக்கு தொடர்வண்டிப் பாதை வருவதற்கு முன்பு, காமா ஆற்றுப் படுகையில் செர்டின் முதல் பெச்சோராவில் உள்ள யக்ஷா வரை ஒரு நீர்வழியிடை நிலவழிச் சாலையே இப்பகுதிக்கான ஒரு முக்கியமான பயண வழியாக இருந்துள்ளது.

பெரிய வடக்கு ஆற்றுப் பயணமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதே பொது வழியில் போக்குவரத்துக்கென இல்லாமல் பெச்சோராவின் ஒருபகுதி நீரை காமா ஆற்றிற்குத் திசை திருப்புவதற்காக பெச்சோரா-காமா கால்வாய்க்கான ஒரு திட்டம் 1960 களில் தொடங்கி 1980 கள் வரை பரவலாக கலந்தாயப்பட்டது. இருப்பினும், 1971 ஆம் ஆண்டில் மூன்று அணு வெடிப்புகள் மூலம் 600 மீட்டர் (2,000 அடி) நீளத்திற்கு ஒரு பள்ளத்தை தோண்டியதைத்தவிர, முன்மொழியப்பட்ட கால்வாயின் பாதையில் எந்த கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இலக்கியக்குறிப்பு தொகு

இந்த ஆற்றின் ரசியப்பெயர் பழைய உள்ளூர் நெனெத்து மொழி வழக்கில், "பெ" மற்றும் "சோரா" என்ற இருசொற்களின் இணைப்பில் உருவானது, இதன் பொருள் "காட்டில் வாழ்பவர்" என்பதாகும்.[4] பெச்சோரா ஆறு பெச்சோரின் என்ற பெயரின் மூலமாகும். இது ரஷ்ய இலக்கியத்தில் நன்கு அறியப்பட்ட படைப்பான மிகயீல் லேர்மந்தவ் 1839 ஆம் ஆண்டு எழுதிய எ ஹீரோ ஆஃப் அவர் டைம் என்ற புனைகதையின் நாயகனின் பெயராகும்.

சான்றுகள் தொகு

  1. Pechora in the Great Soviet Encyclopedia
  2. "Fragmentation and Flow Regulation of the World's Large River Systems" (PDF). Archived from the original (PDF) on 2012-03-30. பார்க்கப்பட்ட நாள் 2019-12-31.
  3. "Pechora River at Oksino". ArcticNet. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31. {{cite web}}: Cite has empty unknown parameter: |month= (help)
  4. "ru:Печора" (in russian). Географическая энциклопедия. பார்க்கப்பட்ட நாள் 2012-03-31.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெச்சோரா_ஆறு&oldid=3564742" இலிருந்து மீள்விக்கப்பட்டது