பெனிக்னோ அக்கீனோ III

பெனிக்னோ அக்கீனோ III (Benigno Simeon Cojuangco Aquino III[1][2]; பெப்ரவரி 8, 1960 – சூன் 24, 2021) என்பவர் ஒரு பிலிப்பீனிய அரசியல்வாதி ஆவார். இவர் பிலிப்பீன்சின் 15-வது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[3][4] அக்கீனோ குடும்பத்தின் 4-வது தலைமுறை அரசியல்வாதியான பெனிக்னோ, முன்னாள் அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவின் மகன் ஆவார். இவர் 1998 முதல் 2010 வரை நாடாளுமன்றம், மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

பெனிக்னோ அக்கீனோ III
Benigno Aquino III
2015 இல் அக்கீனோ
15-வது பிலிப்பீனிய அரசுத்தலைவர்
பதவியில்
சூன் 30, 2010 – சூன் 30, 2016
துணை அதிபர்செசோமார் பினை
முன்னையவர்குளோரியா மகபகல்-அர்ரொயோ
பின்னவர்ரொட்ரிகோ துதெர்த்தே
உள்ளாட்சி அரசின் செயலாளர்
பதவியில்
சூன் 30, 2010 – சூலை 9, 2010
முன்னையவர்ரொனால்டோ பூனோ
பின்னவர்யெசி ரொப்ரெடோ
பிலிப்பீன்சின் மேலைவை உறுப்பினர்
பதவியில்
சூன் 30, 2007 – சூன் 30, 2010
பிலிப்பீனிய நாடாளுமன்ற துணை சபாநாயகர்
பதவியில்
நவம்பர் 8, 2004 – பெப்ரவரி 21, 2006
தார்லாக்கின் 2-ஆம் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
சூன் 30, 1998 – சூன் 30, 2007
முன்னையவர்ஒசே யாப்
பின்னவர்ஒசே யாப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பெனிக்னோ சிமியோன் கொயுவான்கோ அக்கீனோ III

(1960-02-08)பெப்ரவரி 8, 1960
மணிலா, பிலிப்பீன்சு
இறப்புசூன் 24, 2021(2021-06-24) (அகவை 61)
குவிசோன் நகரம், பிலிப்பீன்சு
அரசியல் கட்சிதாராண்மைவாதக் கட்சி
பெற்றோர்பெனிக்னோ அக்கீனோ இளை.
கொரசோன் அக்கினோ
முன்னாள் கல்லூரிஅத்தேனியோ டி மணிலா பல்கலைக்கழகம்
கையெழுத்து

2009 செப்டம்பர் 9 இல் தனது தாயார் கொரசோன் அக்கினோவின் இறப்பை அடுத்து, 2010 இல் நடந்த அரசுத்தேர்தல் தேர்தலில், பெனிக்னோ அகீனோ போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 2016 சூன் 30 இல், இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இவரது பதவிக்காலத்தில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையை எட்டியது. பிலிப்பீன்சு அக்காலத்தில் "ஆசியாவின் உயரும் புலி"[6] என்று அழைக்கப்பட்டது; எனினும், சிறப்பு நிர்வாகப் படையின் 44 உறுப்பினர்களைக் கொன்ற இராணுவ நடவடிக்கை போன்ற சில பிரச்சினைகள் குறித்து அவரது நிர்வாகம் விமர்சனங்களை சந்தித்தது.[7] தென்சீனக் கடலில் சீனாவின் உரிமைகோரல்களை செல்லாததாக்கவும், இப்பகுதியில் தனது சொந்த நாட்டின் உரிமைகோரல்களை வலியுறுத்தியும் இவரது நிர்வாகம் நிர்ந்தர நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில், பிலிப்பீன்சுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்து.[8]

2013 இல், டைம் இதழ் பெனிக்னோ அக்கீனோவை உலகில் மிகவும் தாக்கமேற்படுத்திய 100 நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருந்தது.[9]

பெனிக்னோ அக்கீனோ 2021 சூன் 24 இல் தனது 61-வது அகவையில் காலமானார்.[10] இவரது இறப்புக்கான காரணம் சிறுநீரக நோய், இரண்டாம் நிலை நீரிழிவு நோய் எனக் கூறப்பட்டது.[11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Senator Benigno S. Aquino III". Senate of the Philippines. Archived from the original on February 9, 2010.
  2. Quezon, Manuel L.. (June 19, 2010) Trivia on Aquino and Binay. ABS-CBN News. Retrieved on January 23, 2012.
  3. "Aquino promises justice as Philippines president – Yahoo! News". 2010-06-09. Archived from the original on 2010-06-15.
  4. "Congress final tallies". INQUIRER.net. 2010-06-08. Archived from the original on 2010-08-22.
  5. Noynoy Aquino to take oath at the Luneta grandstand | GMA News Online. Gmanetwork.com (June 15, 2010). Retrieved on January 23, 2012.
  6. "PNoy ushered Philippine economy to investment grade rating: PSE". ABS-CBN News. பார்க்கப்பட்ட நாள் June 24, 2021.
  7. "Ex-Philippine President Benigno Aquino dies at 61". Yahoo. June 24, 2021.
  8. Solomon, Feliz (24 June 2021). "Benigno Aquino III, Former Philippine President Who Resisted China, Dies at 61". Wall Street Journal. https://www.wsj.com/articles/benigno-aquino-iii-former-philippine-president-who-resisted-china-dies-at-61-11624523548. 
  9. "The 100 Most influential people in the world". Time. April 18, 2013. http://time100.time.com/2013/04/18/time-100/slide/noynoy-aquino/. 
  10. "Former Philippines President Benigno 'Noynoy' Aquino dies at 61". Japan Today. June 24, 2021 இம் மூலத்தில் இருந்து June 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210624072941/https://japantoday.com/category/world/philippines'-ex-president-'noynoy'-aquino-dies1?comment-order=oldest. 
  11. Morales, Neil; Lema, Karen (June 24, 2021). "Ex-Philippine President Benigno Aquino dies of renal failure at 61". Reuters. https://www.reuters.com/world/asia-pacific/former-philippine-president-benigno-aquino-dies-hospital-sources-2021-06-24/. 
  12. Aguilar, Krissy (June 24, 2021). "Ex-president Noynoy Aquino died 'peacefully in his sleep' – family". Philippine Daily Inquirer இம் மூலத்தில் இருந்து June 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210624081009/https://newsinfo.inquirer.net/1450643/ex-president-noynoy-aquino-died-peacefully-in-his-sleep-family. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனிக்னோ_அக்கீனோ_III&oldid=3179006" இலிருந்து மீள்விக்கப்பட்டது