ரொட்ரிகோ துதெர்த்தே

ரொட்ரிகோ ரோடி ரோவா துதெர்த்தே (Rodrigo "Rody" Roa Duterte[2], பிறப்பு மார்ச் 28, 1945), விளிப்பெயர் டிகொங், ஒரு பிலிப்பீனிய வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் பிலிப்பைன்ஸின் 16 வது ஜனாதிபதி ஆவார். அவர் பிலிப்பைன்ஸின் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய மாநகரத்தலைவர்களில் ஒருவர். அவர் 22 வருடங்களுக்கும் மேலாக 1,449,296 மக்கள்தொகை கொண்ட மிண்டானாவோ மாகாணத்தின் டவாவோ நகரத்தின் மாநகரத்தலைவராக பணியாற்றினார். அவர் முன்பு துணை மாநகரத்தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

ரொட்ரிகோ துதெர்த்தே
2019 இல் துதெர்த்தெ
பிலிப்பீன்சின் 16 வது ஜனாதிபதி
பதவியில்
ஜூன் 30, 2016 – ஜூன் 30, 2022
துணை அதிபர்லெனி ராப்ரெடோ
முன்னையவர்பெனிக்னோ அக்கீனோ III
பின்னவர்பொங்பொங் மார்க்கோசு
டவாவோ நகரத்தின் மாநகரத்தலைவர்
பதவியில்
ஜூன் 30, 2013 – ஜூன் 30, 2016
முன்னையவர்சாரா துதெர்த்தெ
பின்னவர்சாரா துதெர்த்தெ
பதவியில்
ஜூன் 30, 2001 – ஜூன் 30, 2010
முன்னையவர்பெஞ்சமின் டி குஸ்மான்
பின்னவர்சாரா துதெர்த்தெ
பதவியில்
பிப்ரவரி 2, 1988 – ஜூன் 30, 1998
முன்னையவர்ஜெசிண்டோ ரூபில்லர்
பின்னவர்பெஞ்சமின் டி குஸ்மான்
டவாவோ நகரத்தின் துணை மாநகரத்தலைவர்
பதவியில்
ஜூன் 30, 2010 – ஜூன் 30, 2013
முன்னையவர்சாரா துதெர்த்தெ
பின்னவர்பாலோ துதெர்த்தெ
பதவியில்
மே 2, 1986 – நவம்பர் 27, 1987
பொறுப்பில் உள்ள அதிகாரி
முன்னையவர்கார்னெலியோ மஸ்காரினோ
பின்னவர்கில்பர்ட் அபெல்லெரா
டவாவோ நகரத்தின் 1 வது மாவட்டத்தைச் சேர்ந்த பிலிப்பைன்ஸ் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்
பதவியில்
ஜூன் 30, 1998 – ஜூன் 30, 2001
முன்னையவர்ப்ரோஸ்பெரோ நோக்ராலெஸ்
பின்னவர்ப்ரோஸ்பெரோ நோக்ராலெஸ்
பிடிபி–லாபன் கட்சியின் தேசிய தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
பிப்ரவரி 7, 2016
முன்னையவர்இஸ்மாயில் சுவெனோ
டவாவோ நகரத்தின் பிலிப்பைன்ஸ் லிபரல் கட்சியின் தலைவர்
பதவியில்
2009 – பிப்ரவரி 21, 2015
தலைவர்பெனிக்னோ அக்வினோ III
முன்னையவர்பீட்டர் டி. லவினா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ரொட்ரிகோ ரோவா துதெர்த்தே

மார்ச்சு 28, 1945 (1945-03-28) (அகவை 79)
மாசின், பிலிப்பீன்சு
அரசியல் கட்சிபிடிபி–லபான் (தேசிய)
அக்பாங் ச டவோங் லுங்சோட் (உள்ளூர்)
துணைவர்எலிசபெத் சிம்மர்மேன் (1973–1998)
துணைசியெலடோ "ஹனிலெட்" அவான்செனா[1]
பிள்ளைகள்பவலோ
சாரா
செபாஸ்டியன்
வெரொனிகா
முன்னாள் கல்லூரிபிலிப்பீன்சு பல்கலைக்கழக லைசியம்
சான் பெடா சட்டக் கல்லூரி
இணையத்தளம்பரப்புரை வலைத்தளம்

குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்காக (சூன்ய சகிப்பு) உள்ளூரில் இவர் பெரிதும் புகழ் பெற்றுள்ளார். டைம் இதழ் இவரை "தண்டிப்பவர்" என பெயரிட்டுள்ளது. துதெர்த்தெயுடன் தொடர்புள்ள காப்புக்குழுக்கள் போதை மருந்து கையாளுபவர்கள், குற்றவாளிகள், கும்பல் உறுப்பினர்களு மற்றும் பிற சட்டவிரோத குழுக்களை தண்டனைக் கொலை செய்ததாக கருதப்படுகின்றது. இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் துதெர்த்தெ டவாவோ நகரத்தை "பிலிப்பீன்சின் கொலைத் தலைநகரம்" என்பதிலிருந்து “தென்கிழக்காசியாவின் மிகவும் அமைதியான நகரமாக” மாற்றியுள்ளார்.[3][4][5]

பிலிப்பீன்சு ஜனாதிபதியாகப் போட்டியிட பலமுறை வேண்டுகோள் விடப்பட்டும் [6] 2015 வரை தவறான அரசமைப்பு எனக் கூறியும் குடும்ப எதிர்ப்பு காரணமாகவும் துதெர்த்தெ செவிமடுக்கவில்லை.[7] இருப்பினும், நவம்பர் 21, 2015இல் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.[8] அவர் ஜனாதிபதி தேர்தலில் 39.01% வாக்குகளுடன் வெற்றி பெற்றார் [9], அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெறவில்லை, எனவே லிபரல் கட்சியின் லெனி ராப்ரெடோ துணை ஜனாதிபதியானார்.

அக்டோபர் 2021 இல், ரோட்ரிகோ டுடெர்டே 2022 இல் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை என்றும் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.[10]

மேற்சான்றுகள்

தொகு
  1. Duterte’s common-law wife joins him in Manila events – Rappler.
  2. Personal Data from i-site.ph. URL last accessed 2006-10-14.
  3. "The Punisher". TIME.com. 19 July 2002. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
  4. "The Punisher: 'I am 100 per cent terrorist'". NewsComAu. 30 June 2014. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016.
  5. "The Punisher - Eye For an Eye". Archived from the original on 30 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 15 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. [1]
  7. [2]
  8. Oliver Holmes. "Philippines election: 'Punisher' Rodrigo Duterte in lead as polls close". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 9 May 2016.
  9. https://2016halalanresults.abs-cbn.com/. பார்க்கப்பட்ட நாள் 10 October 2021. {{cite web}}: Missing or empty |title= (help)
  10. "Philippines: le président Rodrigo Duterte annonce son retrait prochain de la vie politique". Radio France International. பார்க்கப்பட்ட நாள் 2 October 2021.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொட்ரிகோ_துதெர்த்தே&oldid=3569994" இலிருந்து மீள்விக்கப்பட்டது