பென்கூலன்

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு நிலப்பகுதி

பென்கூலன் அல்லது பிரித்தானிய பென்கூலன் (ஆங்கிலம்: Bencoolen Residency அல்லது Bencoolen; இந்தோனேசியம்: Bengkulu அல்லது Bengkulu Britania) என்பது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு (British East India Company) (EIC) சொந்தமான ஒரு நிலப்பகுதியாகும்.[1]

பென்கூலன்
Bencoolen Residency
Bengkulu Britania
பிரித்தானிய பென்கூலன்
பிரித்தானிய இந்தியா

 

1685–1824

Flag of Residency of British India

கொடி

Location of Residency of British India
Location of Residency of British India
1797-இல் பென்கூலன் வரைபடம்
தலைநகரம் மார்ல்பரோ கோட்டை
வரலாறு
 •  நிறுவப்பட்டது 1685
 •  இலண்டன் உடன்படிக்கை, 1824 2 சூன் 1824
தற்காலத்தில் அங்கம் இந்தோனேசியா

இந்த நிலப்பகுதி இந்தோனேசியா, சுமாத்திராவின் தென்மேற்கு கடற்கரையில் 500 மைல்கள் (800 கிமீ) நீளம் கொண்டது; மற்றும் தற்போதைய பெங்கூலு மாநகரத்தின் (Bengkulu City) பகுதியில் மையமாகக் கொண்டது. 1685-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் முதன்முதலாக அங்கு ஒரு குடியிருப்பை நிறுவியது.[2]

1714-ஆம் ஆண்டில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் அங்கு ஒரு கோட்டையை கட்டியது. அதன் பெயர் மார்ல்பரோ கோட்டை (Fort Marlborough).[3][4]

பொது

தொகு
 
பிரித்தானிய பென்கூலன்
 
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பாய்மரக் கப்பல்கள்
 
1910-இல் தென் சுமாத்திராவில் பென்கூலன் அமைவிடம்

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், 140 ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திய பகுதிகள், தென்மேற்கு சுமாத்திராவில் மிளகு விளையும் மாவட்டங்கள் ஆகும். அந்தப் பகுதிகள், இந்தியப் பெருங்கடலுக்கும், பாரிசான் மலைத்தொடர்களுக்கு (Barisan Mountains) இடையிலும், குறுகிய கடலோரச் சமவெளியில் பரவி இருந்தன.

அந்த கடலோரச் சமவெளிப் பகுதியின் ஆற்றுப் பள்ளத்தாக்குகளில் சிறு விவசாயிகளால் மிளகு பயிரிடப்பட்டது. பென்கூலன்-சில்பார் (Bencoolen-Silebar) பகுதி நீண்ட காலமாக தென்மேற்கு சுமாத்திராவின் முக்கிய மிளகு விற்பனை நிலையமாக இருந்தது.

ஆனால், அதன் ஆண்டு கொள்முதல் அளவு போதுமானதாக இல்லை. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் அதன் பிறகு துணைத் தொழிற்சாலைகளை அமைக்கத் தொடங்கியது.

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்

தொகு

இந்தத் தொழிற்சாலைகள், அப்போது குடியிருப்புகள் (Settlements) என்று அழைக்கப்பட்டன. அந்தக் குடியிருப்புகள் பென்கூலனின் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையில் 500 கிமீ தொலைவில் இருந்தன.

உள்ளூர் மிளகு விவசாயிகள் தங்கள் பொருட்களை அருகிலுள்ள பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் குடியேற்றப் பகுதிகளுக்கு கொண்டு வந்து விற்பார்கள்.

பிரித்தானிய இந்தியா

தொகு

அந்த மிளகுப் பொருட்கள், பென்கூலனுக்கு கிழக்கிந்திய நிறுவனத்தின் பாய்மரக் கப்பல்கள் மூலமாக அனுப்பப்பட்டன. இந்தப் போக்குவரத்து அமைப்பைப் பராமரிக்க அதிக செலவு பிடித்தது. பிரித்தானிய பென்கூலன், வருமானப் பற்றாக்குறையை எதிர்நோக்கியதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.[5][6]

முதலில் பிரித்தானிய பென்கூலன்; பிரித்தானிய இந்தியாவில் ஒரு ஆட்சிப் பகுதியாக (Presidency) இருந்தது. 1785-இல், அதே பிரித்தானிய பென்கூலன்; பென்கூலன் குறுமாநிலம் (Bencoolen Residency) என்று தரமிறக்கப்பட்டது; மற்றும் வங்காள மாநில நிர்வாகத்தின் (Bengal Presidency) கீழ் வைக்கப்பட்டது.[7]

இசுடாம்போர்டு இராபிள்சு

தொகு

அக்டோபர் 1817-இல், இசுடாம்போர்டு இராஃபிள்சு பென்கூலனின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் துணை ஆளுநராக இருந்த காலத்தில், "நான் இதுவரை கண்டிராத மிகவும் கேவலமான இடம்" என்று அறிவித்தார்.[8] அவர் துணை ஆளுநராகப் பொறுப்பு ஏற்ற பின்னர், பென்கூலன் பகுதியில் வழக்கத்தில் இருந்த அடிமைத்தனத்தை அழித்தார். அதன் பின்னர் சிங்கப்பூரை நிறுவினார்.

1823-ஆம் ஆண்டில், பென்கூலன் கட்டுப்பாட்டில் இருந்து சிங்கப்பூர் அகற்றப்பட்டது.[9] 1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தத்தில் பிரித்தானியர் பென்கூலனை நெதர்லாந்திற்கு விட்டுக்கொடுத்தனர்.[10]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. John Keay, The Honourable Company - A History of the English East India Company, Macmillan Publishing Company, New York, 1994 (1991) p. 248.
  2. Olson JS, Shadle R, editors. Historical Dictionary of the British Empire, Volume 2. page 1074 (at entry for Sumatra). Greenwood Publishing Group, 1996. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313293672
  3. R. J. Wilkinson, "Bencoolen", Journal of the Malayan Branch of the Royal Asiatic Society, Vol. 16, No. 1 (July, 1938), pp. 127–128.
  4. J. Kathirithamby-Wells, "A Survey of the Effects of British Influence on Indigenous Authority in Southwest Sumatra (1685–1824)", Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde, Deel 129,(1973), p. 240.
  5. D. K. Bassett, "British Trade and Policy in Indonesia 1760–1772", Bijdragen tot de Taal-, Land- en Volkenkunde, Deel 120, 2de Afl. (1964), p. 199.
  6. F. C. Danvers, "The English Connection with Sumatra", in The Asiatic Quarterly Review, vol I, January–April 1886, p. 421-424.
  7. Bencoolen (Benkulen)
  8. John Keay, p. 447.
  9. Kevin YL Tan. The Singapore Legal System.
  10. Roberts, Edmund (1837). Embassy to the Eastern Courts of Cochin-China, Siam, and Muscat. New York: Harper & Brothers. p. 34.

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்கூலன்&oldid=4185144" இலிருந்து மீள்விக்கப்பட்டது