இந்தோனேசிய தேசிய புரட்சி

இந்தோனேசிய குடியரசுக்கும் இடச்சுப் பேரரசுக்கும் இடையிலான ஆயுத மோதல்

இந்தோனேசிய தேசிய புரட்சி அல்லது இந்தோனேசிய விடுதலைப் போர் (ஆங்கிலம்: Indonesian National Revolution அல்லது Indonesian War of Independence; இந்தோனேசியம்: Revolusi Nasional Indonesia அல்லது Perang Kemerdekaan Indonesia; இடச்சு: Indonesische Onafhankelijkheidsoorlog) என்பது இந்தோனேசிய குடியரசுக்கும் (Republic of Indonesia) இடச்சுப் பேரரசுக்கும் இடையிலான ஆயுத மோதல்; அரசுமுறைப் போராட்டம் (Diplomatic Struggle); மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இடச்சு குடியேற்றவாத இந்தோனேசியாவின் (Post Colonial Dutch East Indies) உள் சமூகப் புரட்சியைக் (Social Revolution) குறிப்பிடுவதாகும்.

இந்தோனேசிய தேசிய புரட்சி
Indonesian National Revolution
Revolusi Nasional Indonesia
இரண்டாம் உலகப் போரின் பகுதி
நாள் 17 ஆகத்து 1945 - 27 திசம்பர் 1949
இடம் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள், இந்தோனேசியா
நிலப்பகுதி
மாற்றங்கள்
நெதர்லாந்து, இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள், இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள்
பிரிவினர்
இந்தோனேசியா இந்தோனேசியா

* இந்திய அரசு[1]


உள் மோதல்:
தாருல் இசுலாம்
மக்கள் முன்னணி

 நெதர்லாந்து

* இடச்சு கிழக்கிந்தியா * இடச்சு இராணுவம்


ஜப்பான்

தளபதிகள், தலைவர்கள்
சுகார்னோ
முகமது அட்டா
சுடீர்மான்
சோமோ
அமெங்கு IX
சோப்ரோடோ
நசுத்தியோன்

கார்டோ
அமீர் பதா
முசோ  மரணதண்டணை
சஜாரிபுதீன்  மரணதண்டணை
அயிடிட்

லூயிஸ் பீல்
வில்லெம் திரீஸ்
உபர்டஸ் வான் மூக்
டோனி லோவிங்க்
விட்சோஜோட்
ரேமண்ட் வெசுடர்லிங்
கான்ராட் எல்பிரிச்
மவுண்ட்பேட்டன் பிரபு
A.W.S மல்லபி  
ராபர்ட் மான்செர்க்
பலம்
  • குடியரசு இராணுவம்: 150,000[2]
  • இளைஞர் தொண்டர்கள்: 100,000[3]
  • ஜப்பானிய ஆர்வலர்கள்: 903
  • இந்தியர்கள்: 600[4]
  • நெதர்லாந்து: 220,000[5]
  • ஐக்கிய இராச்சியம்: 45,000[6]
  • ஜப்பான்: 35,000[7]
இழப்புகள்
  • இந்தோனேசியா: (பொதுமக்கள்; போராளிகள்): 97,421 (கொல்லப்பட்டனர்)[8][9]
    100,000 இறப்பு
  • ஜப்பானிய ஆர்வலர்கள்: 531 இறப்பு[10]
நெதர்லாந்து: 4,585 இறப்பு[11]

ஐக்கிய இராச்சியம்: 980 இறப்பு[12]

ஜப்பான்: 1,293 இறப்பு

• 5,500–20,000 இந்தோ மக்கள்; ஐரோப்பியர் கொல்லப்பட்டனர்; 2,500 பேர் காணவில்லை[15][16][17][18]

இந்தப் புரட்சி, 1945-இல், இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பிற்கும்; 1949-ஆம் ஆண்டின் இறுதியில் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் மீதான நெதர்லாந்தின் இறையாண்மையை, இந்தோனேசியாவின் ஐக்கிய நாடுகளின் குடியரசிற்கு மாற்றுவதற்கும் இடையில் நடந்தது.[19]

நான்காண்டு காலப் போராட்டத்தில், ஆங்காங்கே இரத்தக்களரிகள்; ஆயுத மோதல்கள்; இந்தோனேசிய உள் அரசியல் கொந்தளிப்புகள்; மற்றும் வகுப்புவாத எழுச்சிகள் நடந்தன. மேலும், அந்தப் போராட்டப் புரட்சியில், இரு முக்கிய பன்னாட்டு அரசுமுறை தலையீடுகளும் இடம் பெற்றன.

இடச்சு இராணுவப் படைகளினால் (சிறிது காலத்திற்கு, இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்) (World War II Allies) ஜாவா மற்றும் சுமாத்திராவின் மையப் பகுதிகளில் இருந்த முக்கிய நகரங்கள், தொழில்துறை சொத்துடைமைகளைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், கிராமப்புறங்களை இடச்சு இராணுவப் படைகளினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பொது

தொகு

1949-ஆம் ஆன்டு வாக்கில், நெதர்லாந்து மீதான பன்னாடுகளின் அழுத்தங்கள், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நெதர்லாந்தின் மறுகட்டமைப்புகளுக்கான பொருளாதார உதவிகளை (Marshall Plan) நிறுத்துவதாக அமெரிக்க ஐக்கிய நாடுகள் தொடுத்த அச்சுறுத்தல்; மற்றும் பகுதி அளவிலான இராணுவ முட்டுக்கட்டை (Partial Military Stalemate) போன்ற அழுத்தங்களினால் நெதர்லாந்து தடுமாற்றம் அடைந்தது.

இந்த நெருக்கடிகளின் காரணமாக, இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் மீதான நெதர்லாந்தின் இறையாண்மையை இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் நிர்வாகத்தின் கீழ் மாற்றியது.[20] இந்தப் புரட்சி, நியூ கினியைத் (Dutch New Guinea) தவிர, மற்ற இடச்சு கிழக்கு இந்தியத் தீவுகளில், நெதர்லாந்தின் குடியேற்றவாத நிர்வாகத்தை (Colonial Administration) ஒரு முடிவிற்குக் கொண்டு வந்தது.

இந்தப் புரட்சி, இந்தோனேசியாவின் இனச் சாதியங்களைக் (Ethnic Castes) கணிசமான அளவிற்கு மாற்றி அமைத்தது. அத்துடன், பல உள்ளூர் ஆட்சியாளர்களின், பிரபுத்துவ அதிகாரங்களையும் பெரிய அலவில் குறைத்தது. இந்தோனேசியர்கள் சிலர் வணிகத் துறையில் பெரும் பங்கைப் பெற முடிந்தாலும், பெரும்பான்மை மக்களின் பொருளாதாரம் அல்லது அரசியல் நிலைப்பாடுகள்; கணிசமாக அளவிற்கு மாற்றங்களைக் காணவில்லை.[21]

பின்னணி

தொகு

இந்தோனேசிய விடுதலை இயக்கம் (Indonesian independence Movement) மே 1908-இல் தொடங்கியது, இதுதேசிய விழிப்புணர்வு நாள (ஆங்கிலம்: Indonesian National Awakening; இந்தோனேசியம்: Hari Kebangkitan Nasional) என நினைவுகூரப்படுகிறது.

20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், பூடி உத்தோமோ (Budi Utomo), இந்தோனேசிய தேசியக் கட்சி (Indonesian National Party) (PNI), சரிகாட் இசுலாம் (Sarekat Islam), இந்தோனேசிய பொதுவுடைமைக் கட்சி (Indonesian Communist Party) (PKI) போன்ற இந்தோனேசிய தேசியவாத இயக்கங்கள் துரிதமாக வளர்ந்தன. அவை இடச்சு குடியேற்றவாதத்தில் இருந்து விடுதலை பெறுவதையே முதன்மை இலக்காகக் கொண்டு இருந்தன.

தன்னாட்சி உரிமை

தொகு
 
பாண்டுங் பகுதியில் அழிக்கப்பட்ட சீனர் குடியிருப்பு

பூடி உத்தோமோ, சரிகாட் இசுலாம் மற்றும் சில இயக்கங்கள; இந்தோனேசியாவிற்கு தன்னாட்சி உரிமை வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், இடச்சு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓக்சுராட் (Volksraad) சட்டப் பேரவையுடன் இணைந்து தத்தம் ஒத்துழைப்பை வழங்கின.[22]

மற்ற இயக்கங்களும் அவற்றின் தலைவர்களும், இடச்சு கிழக்கிந்திய நிர்வாகத்தில் இருந்து தன்னாட்சி விடுதலை பெறுவதில் குடியியற் சட்டமறுப்பு எனும் ஒத்துழையாமை உத்தியைத் தேர்ந்தெடுத்தனர்.[23]

அந்தத் தலைவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் சுகார்னோ, முகமது அட்டா (Mohammad Hatta) எனும் தேசியவாதத் தலைவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் இடச்சு கல்விச் சீர்திருத்தங்களால் (Dutch Ethical Policy) பயனடைந்தவர்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின் விளைவுகள்

தொகு

இந்தப் புரட்சியில், இந்தோனேசியர்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதற்குச் சரியான கணக்கு விவரங்கள் இல்லை; என்றாலும், அவர்கள் ஐரோப்பியர்களை விட அதிகமான எண்ணிக்கையில் இறந்து இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இந்தப் புரட்சிப் போரில், இந்தோனேசியரின் இறப்புகள் 97,421 முதல் 100,000 வரை இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது.[24]

1945-ஆம் ஆண்டு தொடங்கி 1946-ஆம் ஆண்டு வரையில் ஜாவா மற்றும் சுமாத்திராவில் மொத்தம் 980 பிரித்தானிய வீரர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர். அவர்களில் பெரும்பாலோர் இந்திய வீரர்கள்.[25] அண்மைய தகவல்களின்படி, 1945 - 1949-ஆம் ஆண்டுகளில் 4,000 இடச்சு வீரர்கள் இந்தோனேசியாவில் தங்கள் உயிர்களை இழந்தனர் என தெரிய வருகிறது.

ஜப்பானியர்கள் பலரும் இறந்தனர்; எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்களில் பாதி பேர் மட்டுமே உண்மையான போரில் இறந்தனர். எஞ்சியவர்கள் இந்தோனேசியர்களின் வெறித் தனங்களால் கொல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது. இந்தப் புரட்சியின் விளைவாக, ஜாவா மற்றும் சுமாத்திராவில் ஏழு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்.[26]

காட்சியகம்

தொகு

இந்தோனேசிய தேசிய புரட்சியின் காட்சிப் படங்கள்: (1945 - 1949)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Suryanarayan, V. (1981). "Presidential Address: India and the Indonesian Revolution". Proceedings of the Indian History Congress 42: 549–562. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44141175. 
  2. Ricklefs, M.C. (2008), A history of modern Indonesia since c. 1200, New York: Palgrave Macmilan, p. 291, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0230546868
  3. "Indonesian Heritage".
  4. Khan, AG (12 May 2012). "Indian Muslim soldiers: heroic role in Indonesia's liberation". The Milli Gazette. பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  5. "How studying 1945–1949 wars can benefit Indonesia". 1 February 2018.
  6. "Pasukan Inggris di Indonesia: 1945–1946". 13 November 2020.
  7. Salim, Emil (2000), Kembali ke Jalan Lurus: Esai-esai 1966–99, Jakarta: AlvaBet, p. 286, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 979-95821-6-4
  8. "Wie telt de Indonesische doden?". 26 July 2017.
  9. Harinck, Christiaan; van Horn, Nico; Luttikhuis, Bart (14 August 2017). "Do the Indonesians count? Calculating the number of Indonesian victims during the Dutch-Indonesian decolonization war, 1945–1949". பார்க்கப்பட்ட நாள் 2023-02-14.
  10. Prastiwi, Arie Mega (15 August 2016). "Kisah Rahmat Shigeru Ono, Tentara Jepang yang 'Membelot' ke NKRI" (in id). liputan6.com. https://www.liputan6.com/global/read/2577201/kisah-rahmat-shigeru-ono-tentara-jepang-yang-membelot-ke-nkri. 
  11. "Indonesian War of Independence (in numbers)". NIOD Institute for War, Holocaust and Genocide Studies. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
  12. Kirby 1969, ப. 544.
  13. Piccigallo 1979.
  14. Borch 2017, ப. 36.
  15. "Indonesian War of Independence (in numbers)". NIOD Institute for War, Holocaust and Genocide Studies. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
  16. Kemperman, Jeroen (16 May 2014). "De slachtoffers van de Bersiap" [The Victims of the Bersiap]. Niodbibliotheek.blogspot.com (in டச்சு). பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
  17. "The Dark Side of the Revolution of Independence: A Period of Unscrupulous Preparedness".
  18. Borch, Fred L. (2017). "Setting the Stage: The Dutch in the East Indies from 1595 to 1942". Military Trials of War Criminals in the Netherlands East Indies 1946-1949. Oxford University Press. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/oso/9780198777168.003.0002. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-877716-8.
  19. van der Kroef, Justus M. (1951). Ranneft, J. W. Meyer; van Mook, H. J.. eds. "The Indonesian Revolution in Retrospect". World Politics 3 (3): 369–398. doi:10.2307/2009120. பன்னாட்டுத் தர தொடர் எண்:0043-8871. https://www.jstor.org/stable/2009120. 
  20. Friend 2003, ப. 35.
  21. Reid 1974, ப. 170–171.
  22. Vandenbosch 1931, ப. 1051–106.
  23. Kahin 1980, ப. 113–120.
  24. Friend 1988, ப. 228 and 237.
  25. Kirby 1969, ப. 258.
  26. Vickers 2005, ப. 100.

சான்றுகள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு