இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசு
இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசு (ஆங்கிலம்: Emergency Government of the Republic of Indonesian அல்லது Indonesian War of Independence; இந்தோனேசியம்: Pemerintahan Darurat Republik Indonesia (PDRI) என்பது 22 திசம்பர் 1948-இல், மத்திய ஜாவாவின் தலைநகரான யோக்யகர்த்தாவை, நெதர்லாந்து ஆக்கிரமித்த பின்னர், இந்தோனேசிய குடியரசுக் கட்சியினரால் (Indonesian Republicans) நிறுவப்பட்ட ஒரு தற்காலிக அரசு ஆகும்.
இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசு Emergency Government of the Republic of Indonesia Pemerintahan Darurat Republik Indonesia PDRI | |
---|---|
1948–1949 | |
கொடி | |
நிலை | நாடு கடந்த அரசு |
தலைநகரம் | நிரந்தர இடம் இல்லை பீடார் ஆலாம் |
பேசப்படும் மொழிகள் | இந்தோனேசியம் |
அரசாங்கம் | நாடு கடந்த அரசாங்கம் |
தலைவர் | |
• 1948–1949 | சஜாபுருதீன் பிரவீரனேகரா |
வரலாற்று சகாப்தம் | இந்தோனேசிய தேசிய புரட்சி |
• கிராய் நடவடிக்கை | 19 திசம்பர் 1948 |
• தொடக்கம் | 22 திசம்பர் 1948 |
• ரோயம்-வான் ரோயிஜன் உடன்படிக்கை (Roem–Van Roijen Agreemen) | 7 மே1949 |
• முடிவு | 13 சூலை 1949 |
தற்போதைய பகுதிகள் | இந்தோனேசியா |
இந்தோனேசிய தேசிய புரட்சியின் போது தற்காலிகக் குடியரசுக் கட்சியின் தலைநகரமாக யோக்யகர்த்தா (Yogyakarta) இருந்தது. இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசு, புக்கிட்திங்கி மாநகரத்தில் சஜாபுருதீன் பிரவீரனேகரா (Sjafruddin Prawiranegara) என்பவரின் தலைமையில் நிறுவப்பட்டது.[1]
பொது
தொகுஇரண்டாம் உலகப் போரின் முடிவில் இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பிற்குப் பின்னர்; இந்தோனேசிய குடியரசின் செயல்திட்டக் குழு (Republic of Indonesia's Strategy Council) உருவாக்கப்பட்டது. சப்பானிய சரணடைவுக்குப் பின்னர் இடச்சுக்காரர்கள் மீண்டும் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளைக் கைப்பற்றுவார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்ட இந்தோனேசிய குடியரசுக் கட்சியினர், இடைக்கால அரசை நிறுவுவதற்குத் தீவிரம் காட்டினர்.
சப்பானியர் இந்தோனேசியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்னரும்; இடச்சுக்காரர்கள் மீண்டும் இந்தோனேசியாவிற்குள் வருவதற்கு முன்னரும்; இந்தோனேசியாவில் சுகார்னோவின் தலைமையில், ஒரு தற்காலைக அரசாங்கத்தை சப்பானியர் அமைத்துக் கொடுத்தனர். அந்தத் தற்காலிக அரசாங்கத்தின் செயல்திட்டக் குழுதான், சுமாத்திரா அல்லது வெளிநாடுகளில் வெளிநாட்டு-அரசாங்கத்தை (Government-in-exile) உருவாக்குவதற்கான ஓர் அவசரத் திட்டத்தைத் தயாரித்தது.
புக்கிட் திங்கியில் தற்காலிக அரசு
தொகுஇந்தோனேசிய குடியரசின் செயல்திட்டக் குழுவின் நலத்துறை அமைச்சர் சஜாபுருதீன் பிரவீரனேகரா, இந்த அவசரத் திட்டத்திற்கான தயாரிப்பில் புக்கிட்திங்கிக்குச் சென்றார். இடச்சுக்காரர்களால் அதிபர் சுகார்னோ கைது செய்யப்படுவதற்கு முன்பு, புக்கிட்திங்கியில் இந்தோனேசியாவின் நாடு கடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான கட்டளையைப் பிறப்பித்து ஒரு தந்திச் செய்தியை சஜாபுருதீன் பிரவீரனேகராவுக்கு அனுப்பினார். ஆனால் அந்தச் செய்தி 1949 வரை பெறப்படவில்லை.
இந்தக் கட்டத்தில், இந்தியாவின் புது தில்லியில் இருந்த இந்தோனேசிய நிதி அமைச்சர் ஏ.ஏ. மராமிஸ் (A.A. Maramis) என்பவருக்கும் இதேபோன்ற தந்தி அனுப்பப்பட்டது. 22 டிசம்பர் 1948-இல் இடச்சு படையெடுப்பு நடந்தது. புக்கிட்திங்கியில் இந்தோனேசியாவின் நாடு கடந்த அரசாங்கத்தை சஜாபுருதீன் பிரவீரனேகரா நிறுவினார்.
தலைவர்களின் மறைவு வாழ்க்கை
தொகுநாடு கடந்த அரசாங்கத்திற்கு, இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசு (Emergency Government of the Republic of Indonesia) (PDRI) என்று பெயர் சூட்டப்பட்டது. சஜாபுருதீன் பிரவீரனேகரா அவசரகால அமைச்சரவையின் தலைவராகப் பணியாற்றினார்.
இடச்சுக்காரர்களால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் முயற்சியில், இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசு தலைவர்கள் மேற்கு சுமாத்திராவின் பல இடங்களில் மறைந்து வாழ்ந்தனர். அதே வேளையில், இடச்சுக்காரர்கள் இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசை அழிப்பதற்கு தீவிரமாக முயற்சிகள் செய்தனர்.
முடிவு
தொகுரோயம்-வான் ரோயிஜன் உடன்படிக்கையின் (Roem–Van Roijen Agreemen) கீழ், 13 சூலை 1949 அன்று இடச்சுப் படைகள் இந்தோனேசியாவில் இருந்து வெளியேறின. அதன் பின்னர், சிறையில் இருந்த இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசுத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தோனேசியாவிற்கு முழுமையான விடுதலை கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதால், இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசு கலைக்கப்பட்டது.
காட்சியகம்
தொகு-
பீடார் ஆலாம் பகுதியில் அவசரகால அரசின் தலைமையகம் (1949)
-
கோத்தா திங்கியில் 1949-ஆம் ஆண்டு தலைமையகம்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Jacques Bertrand (2004). Nationalism and Ethnic Conflict in Indonesia. Cambridge University Press. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-52441-5.
மேலும் படிக்க
தொகு- Surjomiharjo, J. R., Abdurrachman (1990). PDRI, Pemerintah Darurat Republik Indonesia. Masyarakat Sejarawan Indonesia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789798177002.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இந்தோனேசிய குடியரசின் அவசரகால அரசு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.