இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்
இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் (ஆங்கிலம்: Dutch East Indies அல்லது Netherlands East Indies; இந்தோனேசியம்: Hindia Belanda; இடச்சு: Nederlands-Indië) என்பது நவீன இந்தோனேசியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இடச்சு குடியேற்றப் பகுதியாகும். இதற்கு 1945 ஆகத்து 17 அன்று விடுதலை (Proclamation of Indonesian Independence) அறிவிக்கப்பட்டது.
இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் Dutch East Indies Hindia Belanda Hindia Nederlands-Indië | |
---|---|
1800–1949 1942–1945 (நாடு கடந்து) | |
குறிக்கோள்: Je maintiendrai ("I will uphold") | |
நாட்டுப்பண்: Wien Neêrlands Bloed (1815–1932) டச்சு இரத்தம் உள்ளவர்கள் ("Those in whom Dutch blood") Het Wilhelmus (இடச்சு) (1932–1949) ("The Wilhelmus") | |
நிலை | இடச்சு காலனி |
தலைநகரம் | பத்தேவியா; ஜகார்த்தா |
பெரிய நகர் | சுராபாயா[1][2] |
பேசப்படும் மொழிகள் | இடச்சு மொழி; மலாய் மொழி; பழங்குடி மொழிகள் |
சமயம் | இசுலாம்; கிறிஸ்தவம்; இந்து சமயம்; பௌத்தம் கன்பூசியம்; ஆன்மவாதம் |
மக்கள் | இடச்சு கிழக்கிந்தியர் |
அரசாங்கம் | கலப்பு அரசு; நேரடி கால்னிய ஆட்சி; மத்திய ஆளுநரகம்; இடச்சு முடியாட்சி |
தலைவர் | |
• 1800 (முதல்) | அகஸ்திஜன் கெர்கார்ட் பெசியர் |
முடியாட்சி | |
• 1816–1840 | முதலாம் வில்லியம் |
• 1948–1949 | ஜூலியானா |
தலைமை ஆளுநர் | |
• 1800–1801 (first) | பீட்டர் ஜெரார்டஸ் |
• 1949 | தோனி லோவிங்க் |
சட்டமன்றம் | ஓக்சுராட் (Volksraad) (1918–1942) |
வரலாறு | |
1603–1799 | |
• இடச்சு நேரடி ஆட்சி | 31 திசம்பர் 1799 |
• பிரெஞ்சு பிரித்தானியம் | 1806–1816 |
13 ஆகத்து 1814 | |
17 மார்ச் 1824 | |
1873–1904 | |
• பாலியில் டச்சு தலையீடு | ஏப்ரல் 1908 |
1942–1945 | |
17 ஆகத்து 1945 | |
1945–1949 | |
27 திசம்பர் 1949 | |
பரப்பு | |
• மொத்தம் | 1,919,440 km2 (741,100 sq mi) |
மக்கள் தொகை | |
• 1930 | 60,727,233 |
நாணயம் | கில்டர் |
தற்போதைய பகுதிகள் | இந்தோனேசியா, மலேசியா, மலாக்கா, இடச்சு மலாக்கா (1818 - 1825) |
இந்தோனேசியாவின் விடுதலைப் போரைத் (Indonesian National Revolution) தொடர்ந்து, இந்தோனேசியாவும் நெதர்லாந்தும், 1949-இல் ஓர் அமைதி நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டன. 1824-ஆம் ஆண்டின் ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கையின் வழி, இடச்சு அரசாங்கம், மலாக்காவின் ஆளுமையை (Dutch Malacca) பிரித்தானியாவிற்குக் கொடுத்தது. இந்த மலாக்கா மாநகரம், தற்போது நவீன மலேசியாவின் மலாக்கா மாநிலத்தின் தலைநகரமாக உள்ளது.
1800-இல் இடச்சு அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (Dutch East India Company) தேசியமயமாக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில், வணிக நிலையில் இருந்த இடச்சு கிழக்கிந்திய தீவுகள் என்பது இடச்சுப் பேரரசின் (Batavian Republic) குடியேற்றப் பகுதியாக தரம் உயர்த்தப்பட்டது.
பொது
தொகு19-ஆம் நூற்றாண்டில் இடச்சுக்காரர்கள், கிழக்கிந்திய தீவுகளில் ஏற்கனவே ஆளுமையில் இருந்த பூர்வீக ஆட்சியாளர்களுக்கு எதிராகவும்; மற்றும் பொது மக்களுக்கு எதிராகவும் பல போர்களை நடத்தினர். அந்தப் போர்களில் நூறாயிரக்கணக்கான இறப்புகள் நடந்தன.[3]
20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்கு நியூ கினி, இடச்சுக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அந்த ஆக்கிரமிப்புடன் அப்போதைய இடச்சு ஆட்சி, மிகப்பெரிய பிராந்திய ஆளுமையாக மாறியது.[4] இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள், ஐரோப்பிய ஆளுமையின் கீழ் மிகவும் மதிப்புமிகு குடியேற்றங்களிகளில் ஒன்றாக விளங்கியது.[5]
சுரண்டல் உழைப்பு
தொகுஇருப்பினும், இடச்சு கிழக்கிந்தியத் தீவுகளின் வருமானம், பெரும்பாலும் உள்நாட்டுச் சுதேசி மக்களின் சுரண்டல் உழைப்பையே சார்ந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.[6] 19-ஆம் நூற்றாண்டில் மசாலா எனும் நறுமணப் பொருட்கள்; மற்றும் பணப்பயிர் வேளாண்மை வணிகத்தில், இடச்சுப் பேரரசு பன்னாட்டு அளவில் முதன்மை வகித்தது.
20-ஆம் நூற்றாண்டில் நிலக்கரி மற்றும் எண்ணெய்க் கனிம ஆய்வுகளுக்கும் இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் அளப்பரிய அளவிற்கு பங்களித்து உள்ளன.[6] காலனித்துவ சமூக ஒழுங்கானது (Colonial Social Order) கடுமையான இனவாதத்திற்குள் மூழ்கி இருந்தது. டச்சு உயரடுக்கு அதிகாரத்தினர், பொதுமக்களிடம் இருந்து விலகித் தனித்தனியாக வாழ்ந்தாலும், குடிமக்கள் மீதான அதிகார ஆளுமை முறைப்பாட்டில் மட்டுமே இணைக்கப்பட்டு இருந்தனர்.[7]
உள்ளூர் அறிவாளர்கள்
தொகுஇந்தோனேசியா எனும் சொல், புவியியல் அடிப்படையில், இருப்பிட அமைவிற்கு ஏற்ப, 1880-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் பயன்படுத்தப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், உள்ளூர் அறிவாளர்கள் இந்தோனேசியாவை ஒரு தேசிய நாடாகக் கருதி, விடுதலை இயக்கத்திற்கான களத்தை அமைத்தனர்.[8]
சப்பானின் இரண்டாம் உலகப் போரின் ஆக்கிரமிப்பு (Japanese occupation of the Dutch East Indies); இடச்சு காலனித்துவ அரசையும்; அதன் பொருளாதாரத்தின் பெரும்பகுதியையும் சிதைத்து விட்டது.
இந்தோனேசிய தேசிய புரட்சி
தொகுஆகத்து 15, 1945-இல் சப்பான் சரண் அடைந்ததைத் (Surrender of Japan) தொடர்ந்து, இந்தோனேசிய தேசியவாதத் தலைவர்களான சுகார்னோ மற்றும் முகமது அட்டா ஆகிய இருவரும் இந்தோனேசிய தேசியப் புரட்சியைத் தூண்டும் வகையில் இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பைச் செய்தனர்.
டச்சுக்காரர்கள், கிழக்கிந்தியத் தீவுக்கூட்டத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு,[9] ஏறக்குறைய 220,000 துருப்புக்களைக் களம் இறக்கினர். இந்தோனேசிய தேசியவாதிகளுடன் போர்க்களத்தில் போரிட்டனர்.[10]
இடச்சு-இந்தோனேசிய வட்ட மேசை மாநாடு
தொகுஇந்தோனேசியாவிடம் அதன் இறையாண்மையை மாற்ற ஒப்புக் கொள்ளாவிட்டால், மார்ஷல் திட்டத்தின் கீழ் நெதர்லாந்துக்கான நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அச்சுறுத்தியது.
இதுவே 1949-ஆம் ஆண்டு இடச்சு-இந்தோனேசிய வட்ட மேசை மாநாட்டில் (Dutch–Indonesian Round Table Conference), இடச்சு பேரரசு இந்தோனேசிய இறையாண்மையை அங்கீகரிக்க வழிவகுத்தது.
நியூயார்க் உடன்படிக்கை
தொகுஇரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, காலனித்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட (Decolonisation of Asia) ஆசிய முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா மாறியது. இந்தோனேசிய புரட்சியின் போதும்; மற்றும் இந்தோனேசிய விடுதலைக்குப் பிறகும், இந்தோனேசியாவில் வசித்த இடச்சு குடிமக்கள் பெரும்பாலோர் நெதர்லாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
1962-இல் இடச்சுக்காரர்கள், தென்கிழக்கு ஆசியாவில் அவர்களின் கடைசி உடைமையாக இருந்த இடச்சு நியூ கினியை (Western New Guinea), நியூயார்க் உடன்படிக்கை (New York Agreement) விதிகளின்படி இந்தோனேசியாவிற்கு மாற்றிக் கொடுத்தனர். அதன் பின்னர், இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள் எனும் இடச்சு பேரரசின் கிழக்கிந்தியக் குடியேற்றம் (காலனி), புவியியல் அமைப்பில் இருந்து மறைந்து போனது.[11]
இடச்சு கிழக்கிந்திய நிறுவனம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dick, Howard W. (2002). Surabaya City Of Work: A Socioeconomic History, 1900–2000 (Ohio RIS Southeast Asia Series). Ohio University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0896802216.
- ↑ "Page:The New International Encyclopædia 1st ed. v. 18.djvu/816 - Wikisource, the free online library". en.wikisource.org. Archived from the original on 24 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2018.
- ↑ Ricklefs, M. C. (2008). A history of modern Indonesia since c. 1200 (4th ed.). Stanford, Calif: Stanford University Press. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-6130-7.
- ↑ Ricklefs, M. C. (2008). A history of modern Indonesia since c. 1200 (4th ed.). Stanford, Calif: Stanford University Press. pp. 168–169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-6130-7.
- ↑ Hart, Jonathan (26 பெப்பிரவரி 2008). Empires and Colonies. Polity. p. 200. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780745626130. Archived from the original on 18 மார்ச்சு 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
- ↑ 6.0 6.1 Booth, Anne, et al. Indonesian Economic History in the Dutch Colonial Era (1990), Ch 8
- ↑ R.B. Cribb and A. Kahin, p. 118
- ↑ Robert Elson, The idea of Indonesia: A history (2008) pp 1–12
- ↑ Ricklefs, M. C. (2008). A history of modern Indonesia since c. 1200 (4th ed.). Stanford, Calif: Stanford University Press. pp. 248–249. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-6130-7.
- ↑ "How studying 1945-1949 wars can benefit Indonesia - The Jakarta Post". Histori Bersama (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 September 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-21.
- ↑ Ricklefs, M C (1991). A History of Modern Indonesian since c.1300 (Second ed.). Houndmills, Baingstoke, Hampshire and London: The Macmillan Press Limited. pp. 271, 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-57690-X.
சான்றுகள்
தொகு- Cribb, R.B., Kahin, A. Historical dictionary of Indonesia (Scarecrow Press, 2004)
- Dick, Howard, et al. The Emergence of a National Economy: An Economic History of Indonesia, 1800–2000 (U. of Hawaii Press, 2002) online edition
- Friend, T. (2003). Indonesian Destinies. Harvard University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-674-01137-6.
- Kahin, George McTurnan (1952). Nationalism and Revolution in Indonesia. Ithaca, NY: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8014-9108-8.
- Heider, Karl G (1991). Indonesian Cinema: National Culture on Screen. Honolulu: University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-1367-3.
- Reid, Anthony (1974). The Indonesian National Revolution 1945–1950. Melbourne: Longman Pty Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-582-71046-4.
- Nieuwenhuys, Rob Mirror of the Indies: A History of Dutch Colonial Literature - translated from Dutch by E. M. Beekman (Publisher: Periplus, 1999) Google Books
- Ricklefs, M.C. (1991). A Modern History of Indonesia, 2nd edition. MacMillan. chapters 10–15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-57690-X.
- Taylor, Jean Gelman (2003). Indonesia: Peoples and Histories. New Haven and London: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-300-10518-5.
- Vickers, Adrian (2005). A History of Modern Indonesia. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-54262-6.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Dutch East Indies தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- 11 Dutch Indies objects in 'The European Library Harvest'
- Cribb, Robert, Digital Atlas of Indonesian History Chapter 4: The Netherlands Indies, 1800–1942 | Digital Atlas of Indonesian History – By Robert Cribb
- Historical Documents of the Dutch Parliament 1814–1995[தொடர்பிழந்த இணைப்பு] பரணிடப்பட்டது 4 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம்[தொடர்பிழந்த இணைப்பு]
- Parallel and Divergent Aspects of British Rule in the Raj, French Rule in Indochina, Dutch Rule in the Netherlands East Indies (Indonesia), and American Rule in the Philippines
- Yasuo Uemura, "The Sugar Estates in Besuki and the Depression" Hiroshima Interdisciplinary Studies in the Humanities, Vol.4 page.30-78
- Yasuo Uemura, "The Depression and the Sugar Industry in Surabaya" Hiroshima Interdisciplinary Studies in the Humanities, Vol.3 page.1-54
- "Surabaya". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).
- "Surabaya or Soerabaya. The largest city in Java". New International Encyclopedia. (1905).