பெரிய கோட்டான்
பெரிய கோட்டான் ஒரு கரையோரப்பறவையாகும். இது ஸ்கோலோபாசிடே குடும்பத்தை சார்ந்த கோட்டான்.
பெரிய கோட்டான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே
|
பேரினம்: | |
இனம்: | N. arquata
|
இருசொற் பெயரீடு | |
Numenius arquata (Linnaeus, 1758) | |
Range of N. arquata Year-Round Range Summer Range Winter Range | |
வேறு பெயர்கள் | |
|
பெயர்கள்
தொகுதமிழில் :பெரிய கோட்டான் ஆங்கிலப்பெயர் :Eurasian Curlew அறிவியல் பெயர் : Numenius arquata [2]
உடலமைப்பு
தொகு58 செ.மீ. - மணல் பழுப்பு நிறம் கொண்ட உடலில் ஒரே சீரான செம்மஞ்சள் கோடுகளைக் கொண்டது. இதன் மார்பும் வயிறும் வெண்மையாகக் கருப்புக் கோடுகளைக் கொண்டது. ஒட்டு மொத்த தோற்றத்தில் முன்னதை ஒத்த இது உருவில் பெரியது. இதன் தலையில் உள்ள வெண்பட்டைகளைக் கொண்டும் கரும் பழுப்பாக இல்லாமல் மணல் பழுப்பான உடலின் நிறம் கொண்டும் இதனை எளிதில் வேறுபடுத்தி அறியலாம்.
காணப்படும் பகுதிகள், உணவு
தொகுகுளிர்காலத்தில் வலசை வரும் இதனை கடற்கரை நெடுகிலும் உள்நாட்டில் நீர் நிலைகளிலும் ஆங்காங்கே காணலாம். வேடந்தாங்கலில் காணப்பட்ட குறிப்பு உள்ளது. பழக்கவழக்கங்கள் கோட்டானை ஒத்தவை. எனினும் அதனைப் போலப் பெருங்குழுவாகத் திரிவதில்லை. தனித்தும் ஆறு வரையான சிறு குழுவாகவும் காணலாம். நெருங்கிப் பார்க்க இயலாதபடி அச்சங்கொண்டு பறந்து செல்லும் இயல்பினது. பறக்கும் போது கர்லூ கர்லூ எனக் குரல் கொடுக்கும். [3]
படங்கள்
தொகு-
முட்டைகள்
-
ஜெர்மனி அருங்காட்சியகம்
-
பறக்கும் பெரிய கோட்டான்
-
எலும்புகூடு
மேற்கோள்கள்
தொகு- ↑ "Numenius arquata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "பெரிய கோட்டான்". பார்க்கப்பட்ட நாள் 31 அக்டோபர் 2017.
- ↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:46
வெளி இணைப்புகள்
தொகு- Conserving breeding curlews in Southern England
- (Eurasian) curlew species text in The Atlas of Southern African Birds
- Video of a Curlew Probing the Mud in the Thames Estuary
- {{{2}}} on Avibase
- பெரிய கோட்டான் videos, photos, and sounds at the Internet Bird Collection
- பெரிய கோட்டான் photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Numenius arquata at IUCN Red List maps
- Audio recordings of Eurasian curlew on Xeno-canto.