பெருக்கச் செவ்விய எண்
கணிதத்தில், பெருக்கச் செவ்விய எண் அல்லது பெருக்க நிறைவெண் (multiply perfect number, multiperfect number, pluperfect number) என்பது ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட செவ்விய எண்ணாகும்.
k ஒரு இயல் எண் எனில், n என்ற நேர்ம முழுவெண்ணின் அனைத்து நேர்ம வகுஎண்களின் கூட்டுத்தொகை (வகுஎண் சார்பு) σ(n) = kn ஆக இருந்தால் n ஆனது k-செவ்விய அல்லது k-மடி செவ்விய எண் என அழைக்கப்படும். k இன் குறிப்பிட்ட மதிப்பிற்கு k-செவ்விய எண்ணாகவுள்ள எண்கள் "பெருக்கச் செவ்விய எண்கள்" என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகின்றன.. 2014 வரையிலான கணக்கீட்டின்படி, k = 11 வரையுள்ள ஒவ்வொரு மதிப்பிற்குமான k-செவ்விய எண்கள் கண்டறியப்பட்டுள்ளன.[1].
ஓர் எண் n, செவ்விய எண்ணாக இருக்கத் தேவையான கட்டுப்பாடு σ(n) = 2n என்பதால், n ஆனது 2-செவ்வியதாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" அது ஓர் செவ்விய எண்ணாகும்.
k = 1 தவிர்த்தப் பிற ஒற்றையெண்களுக்கான பெருக்கச் செவ்விய உள்ளனவா என்பது கண்டறியப்படவில்லை.
சில துவக்க பெருக்கச் செவ்விய எண்கள்:
- 1, 6, 28, 120, 496, 672, 8128, 30240, 32760, 523776, 2178540, 23569920, 33550336, 45532800, 142990848, 459818240, ... (OEIS-இல் வரிசை A007691)
.
எடுத்துக்காட்டு
தொகு120, ஒரு 3-செவ்விய எண்ணாகும்.
- 120 இன் வகுஎண்களின் கூட்டுத்தொகை:
- σ(120) = 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 8 + 10 + 12 + 15 + 20 + 24 + 30 + 40 + 60 + 120 = 360 = 3 x 120.
கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய k-செவ்விய எண்கள்
தொகுகீழுள்ள அட்டவணை k ≤ 11 மதிப்புகளுக்கான கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய k-செவ்விய எண்களைத் தருகிறது (OEIS-இல் வரிசை A007539)
k | கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய k-செவ்விய எண்கள் | பகாக் காரணிகள் | கண்டுபிடித்தவர் |
---|---|---|---|
1 | 1 | பண்டைக்காலத்தில் | |
2 | 6 | 2 × 3 | பண்டைக்காலத்தில் |
3 | 120 | 23 × 3 × 5 | பண்டைக்காலத்தில் |
4 | 30240 | 25 × 33 × 5 × 7 | ரெனே டேக்கார்ட், 1638 |
5 | 14182439040 | 27 × 34 × 5 × 7 × 112 × 17 × 19 | ரெனே டேக்கார்ட் circa 1638 |
6 | 154345556085770649600 (21 இலக்கங்கள்) | 215 × 35 × 52 × 72 × 11 × 13 × 17 × 19 × 31 × 43 × 257 | இராபர்ட்டு டேனியல் கார்மிக்கல், 1907 |
7 | 141310897947438348259849402738485523264343544818565120000 (57 இலக்கங்கள்) | 232 × 311 × 54 × 75 × 112 × 132 × 17 × 193 × 23 × 31 × 37 × 43 × 61 × 71 × 73 × 89 × 181 × 2141 × 599479 | டிஈ மேசன், 1911 |
8 | 826809968707776137289924...057256213348352000000000 (133 இலக்கங்கள்) | 262 × 315 × 59 × 77 × 113 × 133 × 172 × 19 × 23 × 29 × ... × 487 × 5212 × 601 × 1201 × 1279 × 2557 × 3169 × 5113 × 92737 × 649657 (38 வெவ்வேறான பகாக் காரணிகள்) | இசுடீபன் ஃப். கிரேட்டன், 1990[1] |
9 | 561308081837371589999987...415685343739904000000000 (287 இலக்கங்கள்) | 2104 × 343 × 59 × 712 × 116 × 134 × 17 × 194 × 232 × 29 × ... × 17351 × 29191 × 30941 × 45319 × 106681 × 110563 × 122921 × 152041 × 570461 × 16148168401 (66 வெவ்வேறான பகாக் காரணிகள்) | பிரெடு ஹீலியன்சு, 1995[1] |
10 | 448565429898310924320164...000000000000000000000000 (639 இலக்கங்கள்) | 2175 × 369 × 529 × 718 × 1119 × 138 × 179 × 197 × 239 × 293 × ... × 583367 × 1609669 × 3500201 × 119782433 × 212601841 × 2664097031 × 2931542417 × 43872038849 × 374857981681 × 4534166740403 (115 வெவ்வேறான பகாக் காரணிகள்) | ஜார்ஜ் வோல்ட்மேன், 2013[1] |
11 | 251850413483992918774837...000000000000000000000000 (1907 இலக்கங்கள்) | 2468 × 3140 × 566 × 749 × 1140 × 1331 × 1711 × 1912 × 239 × 297 × ... × 25922273669242462300441182317 × 15428152323948966909689390436420781 × 420391294797275951862132367930818883361 × 23735410086474640244277823338130677687887 × 628683935022908831926019116410056880219316806841500141982334538232031397827230330241 (246 வெவ்வேறான பகாக் காரணிகள்) | ஜார்ஜ் வோல்ட்மேன், 2001[1] |
பண்புகள்
தொகுகீழுள்ள பண்புகளை நிறுவக் கூடியனவாகும்:
- pஒரு பகா எண்; n, ஒரு p-செவ்விய எண் மற்றும் p ஆனது n இன் வகுஎண் அல்ல எனில், pn ஒரு (p + 1)-செவ்விய எண்ணாக இருக்கும். n/2 ஆனது ஒற்றைச் செவ்விய எண்ணாக "இருந்தால், இருந்தால் மட்டுமே", முழுவெண் n ஆனது 2 ஆல் வகுபடக்கூடிய, ஆனால் 4 ஆல் வகுக்கமுடியாத 3-செவ்விய என்ணாக இருக்கும். ஆனால் அத்தகைய எண்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
- 3n ஒரு 4k-செவ்விய எண்ணாகவும், 3 ஆனது n இன் வகுஎண்ணாக இல்லாமலும் இருந்தால், n, ஒரு is 3k-செவ்விய எண்ணாக அமையும்.
ஒற்றைப் பெருக்கச் செவ்விய எண்கள்
தொகு1 ஐத் தவிர வேறு ஒற்றைப் பெருக்கச் செவ்விய எண்கள் உள்ளனவா என்பது அறியப்படாததாகவே உள்ளது. இருப்பினும் ஒற்றை k-செவ்விய (k > 2) எண்ணாக n இருந்தால், அது பின்வரும் கட்டுப்பாடுகளை நிறைவு செய்ய வேண்டும்:[2]
- மிகப்பெரிய பகாக் காரணி ≥ 100129
- இரண்டாவது மிகப்பெரிய பகாக் காரணி ≥ 1009
- மூன்றாவது மிகப்பெரிய பகாக் காரணி ≥ 101
k இன்சில குறிப்பிட்ட மதிப்புகள்
தொகுசெவ்விய எண்கள்
தொகு- k = 2
- σ(n) = 2n எனில் n ஆனது ஒரு செவ்விய எண்ணாகும்.
முச்செவ்விய எண்கள்
தொகு- k = 3
- σ(n) = 3n எனில் n ஆனது ஒரு முச்செவ்விய எண்ணாகும். ஆறு முச்செவ்விய எண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:
m என்ற ஒற்றைச் செவ்விய எண் இருக்குமானால் (தீர்வு காணப்படாத கூற்று) 2m ஆனது 3-செவ்விய எண்.
- σ(2m) = σ(2) σ(m) = 3×2m.
ஒற்றை முச்செவ்விய எண் இருந்தால், அது 1070 ஐ விடப் பெரிய வர்க்க எண்ணாக இருக்கும்; மேலும் அதற்குக் குறைந்தபட்சமாக 12 வெவ்வேறான பகாக் காரணிகள் இருக்கும்; அப்பகாக்காரணிகளுள் மிகப்பெரியது 105 ஐ விடப் பெரியதாகவும் இருக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Flammenkamp, Achim. "The Multiply Perfect Numbers Page". பார்க்கப்பட்ட நாள் 22 January 2014.
- ↑ Sándor, Mitrinović & Crstici 2006, ப. 105
- ↑ Sándor, Mitrinović & Crstici 2006, ப. 108–109
ஆதாரங்கள்
தொகு- Broughan, Kevin A.; Zhou, Qizhi (2008). "Odd multiperfect numbers of abundancy 4". Journal of Number Theory 126 (6): 1566–1575. doi:10.1016/j.jnt.2007.02.001. https://researchcommons.waikato.ac.nz/bitstream/10289/1796/1/Odd%20multiperfect%20numbers%20of%20abundancy%204.pdf.
- Guy, Richard K. (2004). Unsolved problems in number theory (3rd ed.). இசுபிரிங்கர் பதிப்பகம். B2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-20860-2. Zbl 1058.11001.
- Haukkanen, Pentti; Sitaramaiah, V. (2020a). "Bi-unitary multiperfect numbers, I". Notes on Number Theory and Discrete Mathematics 26 (1): 93–171. doi:10.7546/nntdm.2020.26.1.93-171. http://nntdm.net/papers/nntdm-26/NNTDM-26-1-093-171.pdf.
- Haukkanen, Pentti; Sitaramaiah, V. (2020b). "Bi-unitary multiperfect numbers, II". Notes on Number Theory and Discrete Mathematics 26 (2): 1–26. doi:10.7546/nntdm.2020.26.2.1-26. http://nntdm.net/papers/nntdm-26/NNTDM-26-2-001-026.pdf.
- Haukkanen, Pentti; Sitaramaiah, V. (2020c). "Bi-unitary multiperfect numbers, III". Notes on Number Theory and Discrete Mathematics 26 (3): 33–67. doi:10.7546/nntdm.2020.26.3.33-67. http://nntdm.net/papers/nntdm-26/NNTDM-26-3-033-067.pdf.
- Haukkanen, Pentti; Sitaramaiah, V. (2020d). "Bi-unitary multiperfect numbers, IV(a)". Notes on Number Theory and Discrete Mathematics 26 (4): 2–32. doi:10.7546/nntdm.2020.26.4.2-32. https://nntdm.net/papers/nntdm-26/NNTDM-26-4-002-032.pdf.
- Haukkanen, Pentti; Sitaramaiah, V. (2021a). "Bi-unitary multiperfect numbers, IV(b)". Notes on Number Theory and Discrete Mathematics 27 (1): 45–69. doi:10.7546/nntdm.2021.27.1.45-69. https://nntdm.net/papers/nntdm-27/NNTDM-27-1-045-069.pdf.
- Haukkanen, Pentti; Sitaramaiah, V. (2021b). "Bi-unitary multiperfect numbers, V". Notes on Number Theory and Discrete Mathematics 27 (2): 20–40. doi:10.7546/nntdm.2021.27.2.20-40. https://nntdm.net/papers/nntdm-27/NNTDM-27-2-020-040.pdf.
- Kishore, Masao (1987). "Odd triperfect numbers are divisible by twelve distinct prime factors". Journal of the Australian Mathematical Society, Series A 42 (2): 173–182. doi:10.1017/s1446788700028184. பன்னாட்டுத் தர தொடர் எண்:0263-6115.
- Laatsch, Richard (1986). "Measuring the abundancy of integers". Mathematics Magazine 59 (2): 84–92. doi:10.2307/2690424. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-570X. https://archive.org/details/sim_mathematics-magazine_1986-04_59_2/page/84.
- Merickel, James G. (1999). "Divisors of Sums of Divisors: 10617". The American Mathematical Monthly 106 (7): 693. doi:10.2307/2589515.
- Ryan, Richard F. (2003). "A simpler dense proof regarding the abundancy index". Mathematics Magazine 76 (4): 299–301. doi:10.1080/0025570X.2003.11953197. https://archive.org/details/sim_mathematics-magazine_2003-10_76_4/page/299.
- Sándor, Jozsef; Crstici, Borislav, eds. (2004). Handbook of number theory II. Dordrecht: Kluwer Academic. pp. 32–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-2546-7. Zbl 1079.11001.
- Sándor, József; Mitrinović, Dragoslav S.; Crstici, Borislav, eds. (2006). Handbook of number theory I. Dordrecht: இசுபிரிங்கர் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4020-4215-9. Zbl 1151.11300.
- Sorli, Ronald M. (2003). Algorithms in the study of multiperfect and odd perfect numbers (PhD thesis). Sydney: University of Technology. hdl:10453/20034.
- Weiner, Paul A. (2000). "The abundancy ratio, a measure of perfection". Mathematics Magazine 73 (4): 307–310. doi:10.1080/0025570x.2000.11996860. https://archive.org/details/sim_mathematics-magazine_2000-10_73_4/page/307.