பெருங்கடல் கதிரவமீன்

பெருங்கடல் சூரியமீன்
Ocean sunfish
Not Evaluated
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: Tetraodontiformes
குடும்பம்: மோலிடே
பேரினம்: மோலா
இனம்: எம். மோலா
இருசொற் பெயரீடு
மோலா மோலா
(லின்., 1758)

பெருங்கடல் சூரியமீன் (Ocean sunfish) என்பது உலகில் மிக அதிகமாக அறியப்பட்ட ஒருவகை எலும்பு மீனாகும். இதன் அறிவியல் பெயர் மோலா மோலா என்பதாகும். சராசரியாக நன்கு வளர்ச்சியடைந்த எலும்பு மீன் ஏறத்தாழ 247 கிலோ முதல் 1000 கிலோ கிராம் வரை எடையைக் கொண்டுள்ளது. இவ்வினங்கள் உலகம் முழுவதும் வெப்ப வலயம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளை வாழிடமாகக் கொண்டுள்ளன. இம்மீனின் தோற்றம் மற்ற மீன்களைப் போலில்லாமல் வால்பகுதியில் இணைந்துள்ள தலையைப் பெற்றதாக உள்ளது. இல்லாதது போல் இருக்கும் இதன் உடல் பக்கவாட்டில் தட்டையாக இருக்கிறது. சூரிய மீனின் முதுகுத் துடுப்பும் கீழ்த்துடுப்பும் நீட்சியடைந்து உயரமானவைகளாக உள்ளன.

முக்கியமாக சொறிமீன்களை உணவாக உட்கொண்டே இவை வாழ்கின்றன. ஆனால் இவ்வுணவு ஒரு சத்துமிகுந்த உணவாக அவற்றிற்கு இருப்பதில்லை. எனவே அதிகமான அளவில் சொறிமீன்களை இவை உட்கொண்டால்தான் இதனுடைய பெரிய உருவத்தை காப்பாற்றிக் கொள்ளவும் அபிவிருத்தி செய்து கொள்ளவும் முடிகிறது. முதுகெலும்பிகளில் மிக அதிகமான முட்டையிடும் மீன் சூரிய மீனாகும் சுமார் முப்பது கோடி வரையிலான எண்ணிக்கையில் பெண் சூரிய மீன் ஒரே நேரத்தில் முட்டைகளிடுகிறது[1]. சூரியமீனின் குட்டிகள் பெரிய மார்புத் துடுப்புகள் , ஒரு வால் துடுப்பு மற்றும் முதுகுத் தண்டுடன் கூடிய நுண்ணோவிய கோளமீன்கள் போல முதிர்ச்சியடைந்த சூரியமீனுடன் தொடர்பற்றவை போலக் காணப்படுகின்றன.

முதிர்ச்சியடைந்த சூரிய மீன்கள் சிலவகையான இயற்கை விலங்குகளால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் கடல் சிங்கங்கள், கொலையாளி திமிங்கிலங்கள், மற்றும் சுறாக்கள் அவற்றை உட்கொள்கின்றன. ஜப்பான், கொரியா, தைவான் உட்பட உலகின் சில பகுதிகளில் சூரியமீன் உணவு அருஞ்சுவை உணவாகக் கருதப்படுகிறது. மோலிடே குடும்பத்தைச் சேர்ந்த மீன்களையும் மீன்வகைப் பொருட்களையும் விற்பனை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது[2]. பெரும்பாலும் இவ்வகை மீன்கள் வலை விச்சுகளில் அகப்பட்டுக் கொள்கின்றன.

அக்டினோட்டெரிகீயை என்னும் முதுகுநாணி மீன்கள் வகையில் கோள மீன்கள், முள்ளம்பன்றி மீன்கள், சொறி மீன்கள் ஆகிய மீன்வகைகளும் அடங்கும். பெருங்கடல் சூரியமீன் இவற்றின் பெரும்பாலான பண்புகளுடன் ஒத்திருக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Freedman, J. A., & Noakes, D. L. G. (2002) Why are there no really big bony fishes? A point-of-view on maximum body size in teleosts and elasmobranchs. Reviews in Fish Biology and Fisheries. 12(4): 403-416.
  2. "Regulation (EC) No 853/2004 of the European Parliament and of the Council of 29 April 2004 laying down specific hygiene rules for food of animal origin". Eur-lex.europa.eu. பார்க்கப்பட்ட நாள் 2010-11-16.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mola mola
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

ஆய்வுகள் தொகு

படக்காட்சியகம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருங்கடல்_கதிரவமீன்&oldid=3222568" இலிருந்து மீள்விக்கப்பட்டது