பேச்சு:அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ்

கட்டுரைகளின் தலைப்பு வேறு மொழிகளில் தருவது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வழிமாற்றுகளும் உருவாக்குவதில்லை என்ற நடைமுறையையே நாம் பின்பற்றுகிறோம்.--Kanags \உரையாடுக 21:02, 11 செப்டம்பர் 2013 (UTC)

விக்கிப்பீடியா_பேச்சு:விக்கித்_திட்டம்_உயிரியல்#விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் தாவரங்கள் என்ற முன்மொழிவு பக்கத்திலும் தங்கள் எண்ணங்களை இடக்கோருகிறேன். பொதுவான விதிகள் குறிப்பாக இதுபோன்ற கட்டுரைகளுக்கு விதிகள் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கான தொடுப்பும் தந்திருக்கிறேன். விரைவான வளர்ச்சிக்கு, ஆங்கில விக்கியில் உள்ள தொழில்நுட்பங்களும், விதிகளும் கைகொடுக்கும். இதுபோன்ற கட்டுரைகளை மாதம் நூறு என்னால் உருவாக்க இயலும். விக்கிபத்தாண்டுகள் விழாவினை முன்னிட்டு சில நூறுகட்டுரைகளை உருவாக்க எண்ணியுள்ளேன். வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 02:10, 12 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைகளின் தலைப்பு, வழிமாற்றுகள் வேறு மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வாதங்களையும் எதிர்வாதங்களையும் தோற்றுவித்து, பல கட்டுரைகளும் வழிமாற்றுக்களும் வேறு மொழிகளில் உருவாகி, "தமிழ்" விக்கிப்பீடியா என்பதற்கே அர்த்தம் இல்லாது போய்விடும். --Anton (பேச்சு) 03:53, 12 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 06:49, 12 செப்டம்பர் 2013 (UTC)
👍 விருப்பம்--Natkeeran (பேச்சு) 18:36, 12 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரைக்கான பிறமொழிபெயர்ப்புகளைக் கண்டபோது, சில மொழிகளில், இத்தாரவியல் பெயர்களை, அப்படியே பயன்படுத்தியுள்ளனர். (Acrocarpus_fraxinifolius, Acrocarpus_fraxinifolius) நம்மொழியில் en:w: Wikipedia:WikiProject Plants என்ற பகுதி இதுவரை உருவாக்கப்பட வில்லை என்பதாலேயே இந்த உரையாடலைத் தொடரவிரும்புகிறேன். நாம் இப்பெயரிடல் விதிகளைப் பின்பற்றுவதால் பல நன்மைகள் உள்ளன. அவ்விதிகள், பல வருட உரையாடல்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியே இந்த பெயரிடல் மரபு. இன்னும் பல உள்ளன. அவ்விதிகள் ஆங்கில விக்கிப்பீடியாவின் பல பொதுவிதிகளுக்கு, விதிவிலக்காக உருவாக்கப்பட்டவையே. நாமும் இவைகளை பின்பற்றுவதால், எத்தகைய இடர்களும் உருவாகப்போவதில்லை. மாறாக, இவ்விதிகள் தமிழ்விக்கி்ப்பீடியாவின் வளர்ச்சிக்கு வேகமாக உதவும். --≈ உழவன் ( கூறுக ) 09:07, 12 செப்டம்பர் 2013 (UTC)
தலைப்பை ஆக்ரோகார்ப்புசு ஃபிராக்சினிஃபோலியசு (Acrocarpus fraxinifolius) என்றவாறு தரலாம். அல்லது வேறு பரிந்துரைகளைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 07:32, 12 செப்டம்பர் 2013 (UTC)
எனக்கு இதுபோன்ற ஒலிப்புமாற்றலில் உடன்பாடில்லை. இதுபோன்ற உயிரியல் பெயரிடல் மரபு தோன்றியதன் நோக்கத்தை அது சிதைப்பதாகும். அதற்கு கொடுக்கப்பட்ட தமிழ் பெயர்களில், ஒரு தமிழ் பெயரே வைத்து விடலாம். தமிழில் என்ன சொற்களுக்கா பஞ்சம். மேலும், விரைந்து இக்கட்டுரைகளை மொழிமாற்றம் செய்யும் போது, இதுபோன்ற தலைப்புகளை தமிழ் ஒலிப்பு விதிகளுக்கு ஏற்றவாறு மாற்றுவதில் தான் பல இடர்கள் உள்ளன. அதில் ஒன்று ஏற்கனவே உருவாக்கப்பட்ட இத்தகைய தமிழ் ஒலிப்புப் பெயர்ப்புகளை என்ன செய்வது? மற்றொன்று, தமிழ்விக்கிப்பீடியாவின் தாவரவளத்தை வளர்க்க எண்ணுபவருக்கு, உதவ உகந்த பெயர்மாற்ற நிரலிகள் ஏதேனும் நம் மொழியில் செய்துள்ளனரா? --≈ உழவன் ( கூறுக ) 09:07, 12 செப்டம்பர் 2013 (UTC)
ஐரோப்பிய மொழிகளில் இலத்தீன் பெயரைப் பயன்படுத்தியுள்ளார்கள். அதில் தவறில்லை. ஆனால் மலையாளக் கட்டுரைக்கு மலையாள மொழிப் பெயர் ஒன்றைத் தலைப்பாகத் தந்திருக்கிறார்கள். சீன மொழியிலும் தங்கள் மொழிப்பெயரையே தந்துள்ளார்கள். எது எப்படியிருப்பினும், ஆங்கிலத் தலைப்புகள், வழிமாற்றல்கள் தமிழ் விக்கியில் வைப்பதில்லை என்பது குறித்து அனைவரும் தெளிவாகவே உள்ளனர்.--Kanags \உரையாடுக 09:55, 12 செப்டம்பர் 2013 (UTC)
இந்த தாவரவியல் பெயரிடல் முறை ஐரோப்பியர்களுக்கு மட்டும் உருவாக்கப்பட வில்லை. எனினும், அவர்கள் மட்டுமே பின்பற்றுகின்றனர். மேற்கூறிய ஐரோப்பியமொழிகளில் உள்ள கட்டுரைகளுக்கு, அவரவர் மொழியில் பெயர்கள் இருந்தும், அவர்கள் இந்த உலகலாளவிய பெயரிடல் முறையை பின்பற்றி, முன்னேறுகின்றனர். அதனால் தான் இத்துறையில் ஐரோப்பியர் மட்டுமே கோலொச்சுகின்றனர். நம்தமிழ் விக்கியில் தாவரவியலுக்கான பகுதியின் அடித்தளம் உருவாக்கப்பட வில்லை. அவ்விதிகளை நான் இங்கு உருவாக்க விரும்பவில்லை. மாறாக முன்னனியில் இருக்கும் பிறமொழி விக்கித்திட்டத்தின் முடிவுகளை, நாம் ஏன் கைவிட வேண்டும் என்றே எண்ணுகிறேன். தமிழ் விக்கிப்பீடியர் பற்றி அறியாதவன் நான். நீங்கள் 'அனைவரும்' என்று யாரையெல்லாம் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளவிரும்புகிறேன். அவர்களை, தயவுசெய்து இங்கு தங்கள் எண்ணங்களை இடக் கோருகிறேன்.
அப்போது, இங்கு முதன்முதலாக உருவாக்கப்பட்ட ஆக்ரோகார்ப்புசு ஃபிராக்சினிஃபோலியசு (Acrocarpus fraxinifolius) என்ற சொல் பற்றியும், ஏற்கனவே பயன்படுத்தப்படும், அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ் என்ற தமிழ்ஒலிபெயர்ப்பு பற்றியும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும். சில நூறு கட்டுரைகளை உருவாக்க எண்ணியுள்ளதால், எனது எண்ணங்களைக் கூறி, இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 17:16, 12 செப்டம்பர் 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா ஆங்கிலம் முற்றிலும் அறியாதார ஒருவரால் பயன்படுத்தக் கூடியவாறு இருக்க வேண்டும். மேலும், சிங்களம், மலாய், பிரெஞ்சு, யேர்மன் என்று பிற மொழிச் சூழல்களில் வாழும் தமிழர்கள் நிறைய உள்ளார்கள். ஆகையால் ஆங்கிலம் மட்டும் என்ற அணுகுமுறை பயன்படாது. --Natkeeran (பேச்சு) 18:40, 12 செப்டம்பர் 2013 (UTC)
நற்கீரன்! இங்குள்ள தலைப்பு ஆங்கிலமே அல்ல. ஒரு தாவரத்திற்கு பல்வேறு தாவரவயில்பெயர்கள் இருக்கின்றன. அவைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு, உலக அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அதுவும் இலத்தீனிய எழுத்துக்களால் மட்டுமே முதன்மையாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்று ஏகமனதாக உறுதிசெய்யப்பட்ட பெயர். அப்பெயரைக் கொண்டு, இணையம் முழுவதும் தேடி, உருவாக்கப் போகும் குறுங்கட்டுரைகளை, விரிவாக்க, வளர்க்க வாய்ப்புண்டு. தமிழ் ஒலிப்பு பெயரைக் கொண்டு தேடினால், ஒன்றும் கிடைக்காது. எக்கட்டுரையையும், வளர்த்தெடுக்க முடியாதே என்றே தயங்குகிறேன். மறுபுறம் எத்தனை தமிழருக்கு, இங்கு நாம் வைக்கும் பெயர் தெரியும். தெரிந்தால் தானே நம் இணையத்தில் தேடுவர் என்ற எண்ணம் மேலோங்குகிறது. தமிழ் ஒலிப்பும், அடைப்புக்குறிக்குள் தாவரவியல் பெயரும் வைக்கலாமா?--≈ உழவன் ( கூறுக ) 19:24, 12 செப்டம்பர் 2013 (UTC)
தகவலுழவன், //ஏற்கனவே பயன்படுத்தப்படும், அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ் என்ற தமிழ்ஒலிபெயர்ப்பு பற்றியும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்// ஏற்கனவே பயன்படுத்தப்படும் ஒலிப்பெயர்ப்பு இருக்கும் போது எதற்காக இலத்தீன் தலைப்பு? அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ் என்ற தலைப்புடன், கட்டுரையின் முதல் வரியில் இலத்தீன் சொல்லையும் சேர்த்தால் பிரச்சினை தீர்வு. ஐரோப்பிய மொழிக் குடும்பங்கள் இலத்தீன் சொல்லைப் பயன்படுத்தினால் நாமும் அதனைப் பின்பற்ற வேண்டியதில்லை. நூறு கட்டுரைகள் எழுதுவதற்கு உங்களுக்கு வசதியாக இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த சலுகையைக் கேட்கிறீர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.--Kanags \உரையாடுக 20:59, 12 செப்டம்பர் 2013 (UTC)
த.உ உங்கள் வாதத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு தாவரத்துக்குப் பொது தமிழ் பெயர் இருக்குமானால் அப் பெயரைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிடின் ஒலிப்பெயர்ப்பு அறிவியல் பெயரைப் பயன்படுத்தலாம். ஆனால் அதை உரோமன் எழுத்துக்களில் எழுத முடியாது. ஏன் என்றால் இன்னும் பெரும்பான்மைத் தமிழர்களுக்கு உரோமன் எழுத்தை வாசிக்கத் தெரியாது. அப்படி வாசிக்கத் தெரிந்தாலும் அதை இங்கு வழக்கம் ஆக்கல் முறையன்று. ஆங்கில விக்கியில் எதாவது ஒரு இந்திய மொழியில் தலைப்பு இட்டுப் பாருங்கள். அவர்கள் ஏற்றால், அதன் பின் உரையாடலாம். --Natkeeran (பேச்சு) 21:21, 12 செப்டம்பர் 2013 (UTC)
கனக்ஸ், நற்கீரன் கருத்துகளுடன் இணைகிறேன். பிற மொழிச் சொற்களிலான ஒலிபெயர்ப்பு அல்லது தமிழ் எழுத்துப் பெயர்ப்புத் (transliteration or romanised) தலைப்புகளாக இருந்தால் கூட பரவாயில்லை. பிற மொழியிலான (ஆங்கிலம் அல்லது இலத்தீன் மொழியிலான) தலைப்புகளை இங்கு உள்ளீடு செய்வது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இக்கட்டுரையைப் போல் இடம் பெற்றுள்ள பிற மொழியிலான தாவரவியல் பெயர்களைக் கொண்ட அனைத்துத் தலைப்புகளையும் உடனடியாக நீக்கலாம். இதற்கு என் முழுமையான ஆதரவு.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 01:43, 13 செப்டம்பர் 2013 (UTC)

முடிவுரை: Acrocarpus fraxinifolius என்று பெயரிட்டாலும், தேடுபொறியில் அது தமிழ்விக்கிப்பீடியா பக்கம் வரவில்லை. ஆக்ரோகார்ப்புசு ஃபிராக்சினிஃபோலியசு (Acrocarpus fraxinifolius) என மாற்றினால், கூகுள் போன்ற தேடுபொறிகளுக்கு தெரியுமா? தேடுபொறிகள் மூலம், தமிழ்விக்கிப்பீடியா பக்கம் வர என்ன செய்ய வேண்டும்? கொடுக்கப்பட்ட ஏதேனும் ஒரு தமிழ் பெயரை வைக்கலாமா? இங்கு மலைக்கொன்றை என்ற பெயர் பலநூல்களில் தாவரவியல் பெயரில்லாது பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், ஒரு கட்டுரையை உருவாக்க ஏறத்தாழ மூன்றுமணிநேரம் படிக்க வேண்டியுள்ளது. நமது நேரம் காக்க முடிவுகளை இடுக எனக் கோருகிறேன். அடிக்கடி மின்தடைவருவதால், எண்ணியபடி செயல்பட இயலவில்லை என்பது மற்றொரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.--≈ உழவன் ( கூறுக ) 02:09, 13 செப்டம்பர் 2013 (UTC)

த.உழவனின் கேள்வி மிக முக்கியமானது. தாவரவியல் மற்றும் விலங்கியல் பெயரீடு அறிவியல் முறையில் பன்னாட்டு ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அது இலத்தின் ஆக்கப்பட்ட ஆங்கிலத்தில் அமைவதும் விதி. ஆகவே தமிழ் சூழலிலும் அப்படிப் பயன்படுத்துவதே முறை. ஆயினும் விக்கியின் நறைமுறைப்படி பார்த்தால் மலைக் கொன்றை என்பது தான் முடியும். இது குறித்து உறுதியான தீர்மானங்களை எடுக்க வேண்டுகின்றேன். மாணவர்கள் தேடிப்பெறுவதும் நமக்கு முக்கியமானது. பொது விதியை மீறுவதும் முறையல்ல. மற்றைய விக்கி நடைமுறைகளையும் பார்க்கலாம். அல்லது வேறு நுட்ப அணுகுமுறைகளையும் முயலலாம். தமிழில் தலைப்புகள் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதி பேணப்பட வேண்டும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 07:48, 13 செப்டம்பர் 2013 (UTC)
பலகுறிப்புகளை சேமித்துக் கொண்டிருக்கும் போதே, பக்கப்பெயரை மாற்றியதால் எனது முயற்சி வீணாகியது. இனி அனைத்து விக்கியிலும் பின்பற்றுவது போல, உரையாடற்பக்கத்தில் கூறி விட்டு மாற்றவும். உரையாடல் முடிந்தது என கூறிவிட்டு மாற்றுதல் நல்ல நடைமுறை. பல கட்டுரைகளுக்கு, இப்பெயரிடல் அடிப்படையானது என்பதால் பலரின் எண்ணங்களை அறிந்த பிறகே மாற்றவும். எனக்கும், சஞ்சீவிக்கும் மலைக்கொன்றை என்பதில் விருப்பம் உண்டு. அதுபோல பிறருக்கும் வேறு பெயர்களில் ஈடுபாடு இருக்கலாம். அதற்காக முடிவு செய்யாமல் மாற்றியது எனக்கு மனஅயர்வை தருகிறது. எனவே, முந்தைய நிலைக்கு மாற்றுக. வணக்கம். --≈ உழவன் ( கூறுக ) 09:03, 13 செப்டம்பர் 2013 (UTC)
நீங்கள் முடிவுரை எனத் தெரிவித்த பின்பே மாற்றினேன். ஆங்கிலத் தலைப்பை மாற்றுவதே எனது முதல் குறிக்கோளாக இருந்தது. இனி நீங்களே பொருத்தமான தமிழ்த் தலைப்பிற்கு மாற்றலாம்.--Kanags \உரையாடுக 13:10, 13 செப்டம்பர் 2013 (UTC)
தகவலுழவன், தாங்கள் உருவாக்கிய ஆங்கிலத் தலைப்பிற்கு இணையான தமிழ்த் தலைப்பைத் தாங்களே கூட மாற்றலாம். இந்த உரையாடல் முடிவுக்குப் பின்பு தலைப்பை மாற்றலாம் என்கிற தங்களின் கருத்தை ஏற்கலாம். இதுபோல், தாங்கள் உரையாடல் முடிவு எட்டப்படும் வரை ஆங்கில மொழித்தலைப்பில் புதிய பக்கங்களைத் தொடங்கிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:35, 13 செப்டம்பர் 2013 (UTC)
தலைப்பு தமிழிலேயே வைக்கலாம், அதற்கான இணையான ஆங்கில சொல் அல்லது பொதுவான பெயருக்கு வழிமாற்று வைக்கலாம். கூகிள் போன்ற தேடுபொறியில் கிடைப்பதற்கு வழிமாற்று இருந்தாலே போதும். (எ.கா. தினேஷ் என்ற தலைப்பில் ஷ் என்பது தமிழ் எழுத்தல்ல, கட்டுரையின் தலைப்பை தினேசு என தமிழாக்கம் செய்துவிட்டு உள்ளே தினேஷ் என பெரிதுபடுத்தி காட்டலாம்.) தேடுபொறியானது இப்பெயரையும் மீட்டெடுக்கும். அதேபோல் தலைப்புடைய பெயர் மாற்றம் செய்ய கட்டுரையை ஆரம்பித்தவருக்கு சில மணித்துளிகளோ அல்லது சில நாட்களோ கொடுக்கலாம். அவ்வாறு அவர் மாற்றாத அல்லது மாற்றுக்கருத்து இல்லாத நேரங்களில் வேறு நபர் மாற்றங்களை செய்யலாம். புதிதாக கட்டுரை தொடங்குவதை தலைப்புக் காரணமாக நிறுத்துவது முறையன்று; மாற்றுக்கருத்து உண்டெனில், விக்கி நண்பர்களின் கருத்துகளை கேட்டறிந்து அதன்பின் முறையான கொள்கையை உருவாக்கலாம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:41, 14 செப்டம்பர் 2013 (UTC)
கட்டுரை ஆரம்பித்து சில நாட்களுக்குப் பின்னர், உரையாடல்களின் பின்னரே தலைப்பு மாற்றப்பட்டது. தலைப்பு மாற்றத்தில் (கட்டுரையாளர் தவிர) எவரும் எதிர்க்கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனாலும், அவர் எழுதிக் கொண்டிருந்த போது தலைப்பை மாற்றியது எனது தவறு தான் என்றாலும், விக்கி போன்ற அனைவரும் ஒரே நேரத்தில் பங்குபற்றும் ஒரு திட்டத்தில் இவ்வாறான முரண்பாடுகள் எழுவது வழக்கமே. மேலும், வேற்று மொழிப் பெயர்களில் வழிமாற்றுகள் ஏற்படுத்துவதும் இங்கு நடைமுறையில் இல்லை.--Kanags \உரையாடுக 23:18, 14 செப்டம்பர் 2013 (UTC)
தினேஷ்குமார் பொன்னுசாமி, //புதிதாக கட்டுரை தொடங்குவதை தலைப்புக் காரணமாக நிறுத்துவது முறையன்று// இங்கு புதிய கட்டுரைகள் தொடங்க வேண்டாமென்று யாரும் கூறவில்லை. நிறுத்தவுமில்லை. ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு ஆங்கில மொழித் தலைப்பில் புதிய கட்டுரைகளைத் தொடங்க வேண்டாமென்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அவர் ஆங்கில மொழியில் இருக்கும் தலைப்பை அப்படியே தமிழ் எழுத்துப் பெயர்ப்பு செய்து தமிழில் தலைப்பாக வைக்கட்டுமே... வேண்டுமெனில் பின்னர் சரியான தலைப்புக்கு நகர்த்திக் கொள்ள முடியும். ஆங்கிலத் தலைப்பு வைத்துவிட்டுப் பின்னர் ஒவ்வொருவரும் அவரவருக்குத் தெரிந்த மொழிகளில் தலைப்பை வைக்கத் தொடங்கிவிட்டால், இதை முன்னுதாரணமாகக் காட்டிவிடுவார்கள். தலைப்பு ஆங்கிலத்தில், உள்ளடக்கம் தமிழில் வேண்டாமென்றுதான் கூறப்பட்டுள்ளது. கட்டுரையின் உள்ளடக்கப்பகுதியில் ஆங்கிலப் பெயரை அடைப்புக் குறிக்குள் குறித்துக் கொள்ளலாமே... ஏன் தலைப்பு ஆங்கிலத்தில் இருக்க வேண்டும்? கூகுள் தேடுதலிலோ அல்லது வேறு தேடுபொறிகளிலோ வர வேண்டுமென்பதற்காக என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்டுரையின் உள்ளடக்கப் பகுதியில் இருப்பதும் தேடுபொறிகளில் வரும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 07:51, 15 செப்டம்பர் 2013 (UTC)
  • தலைப்பை குறித்தே உரையாடல் போய் கொண்டிருக்கிறது. இதன் தொடக்கம் அதற்கு மட்டுமல்ல என்பதனை தெரிவிக்க கீழ் கண்டவற்றை, மறுபடியும், ஒருமுறை சுருக்கமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஒருமாதத்திற்கு(9,ஆக,2013) முன்னமேயே உயிரியல் திட்டம் என்பதில் (மேலேயே இப்பக்கத்திற்கான தொடுப்பு தந்துள்ளேன்.) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டேன். அத்திட்டத்தில் உள்ளவரோ, அல்லது பிறரோ யாரும் எதுவும் கூறவில்லை/வழிகாட்டவில்லை. அடுத்து இம்மாதம் கட்டுரையை உருவாக்கி, மாதிரிக் கட்டுரை என அறிவித்து விட்டே, கருத்திட கேட்டுக்கொண்டேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கருத்திட்டது எனது திட்ட எண்ணங்களை மேம்படுத்தியுள்ளன. நான் மேற்குறிப்பிட்ட ஆங்கில விக்கிப்பீடியாத் தொடுப்புகளுக்கு இணையானவை இங்கு இல்லை. அதனால் மாதிரிக்கட்டுரையை வைத்துக் கொண்டு, ஒவ்வொரு ஆணித்தரமான விதிகளை, பல்வேறு உரையாடல்களுடன், உருவாக்கலாமென்று எண்ணியே செயல்படுகிறேன். மாற்றிக் கொண்டே இருந்தால், எனக்கு என்னென்ன செய்யவேண்டும் என்பது மறந்துவிடுகிறது. பெயர் மாற்றல் குறித்த வார்ப்புருவுக்கு, ஏதேனும் பயன்பாட்டு விதிகள் உள்ளனவா? இல்லாவிட்டால் உருவாக்கலாமா? அவ்விதம் செய்தால், பலவித உரையாடல்கள் நிகழவே நிகழாது. இம்மாதிரிக்கட்டுரையை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தால், எந்த அடிப்படைகளை வைத்துக் கொண்டு, நான் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது? அதனால் தலைப்பை மாற்றவே கூடாது என்று நான் சொல்வதாக எண்ணவேண்டாம். அறிவிப்பை இட்டு, அனைவருக்குமான கால எல்லையை அறிவித்து விட்டு, கட்டுரையாளர் நோக்கத்தையும் அறிந்து கொண்டு மாற்றுங்கள். அந்நடைமுறை, பலரை இங்கேயே தங்க வைக்கும். யாரும் இங்கு தேர்வுக்காக கட்டுரையை எழுதவில்லை. தமிழுக்காக சில முயற்சிகளை எடுக்க வருகிறார்கள். அவர்களுக்கு கைகொடுத்தால், தமிழ் சிறக்க அதன் வேர்களாக இருப்பார்கள். அவ்வேர்களில் ஒருவன் நான். வேறாக இருப்பவர்களில் ஒருவன் அல்ல நான்.
இம்மாதிரி கட்டுரைக்கான தொடர்ச்சி: மலைக்கொன்றை என்ற பெயர் இலக்கியங்களில் இல்லை. பிற தமிழ் பெயர்களையும் தேடிவிட்டு தெரிவிக்கிறேன். கொன்றை என்ற பெயர் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில், பல்வேறு தமிழ் இலக்கியங்களில் வருகிறது. அது முல்லை திணையிலேயே அதிகம் வருகிறது. இது குறிஞ்சித்திணை (மலைவாழ்) தாவரம் என்பதை, அதன் தாவரவியல் பெயரிலிருந்து வேறுபடுத்த முடிகிறது.--≈ உழவன் ( கூறுக ) 12:19, 15 செப்டம்பர் 2013 (UTC)
தகவலுழவன், கட்டுரைகளுக்குத் தமிழ்ப் பெயரைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு. உதவிக்கு இத்துறை சார்ந்த வல்லுனர்களை அணுகுங்கள். தமிழ்ப் பெயரைத் தேர்தெடுக்காமல் கட்டுரை ஒன்றைத் தொடங்காதீர்கள். அல்லது தற்போதுள்ள தலைப்புப் போன்று ஒலிப்பெயர்ப்பைத் தலைப்பாக வைத்து ஆரம்பியுங்கள். பின்னர் தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 12:36, 15 செப்டம்பர் 2013 (UTC)
கனகு!ஏற்கனவே நண்பர்களில் உதவியால் நிரல் மாற்றம் செய்து கொண்டு உள்ளேன். கிரந்த எழுத்துள்ளதை உடனே நீக்குங்கள் தாவரவியல் பெயரை மாற்றியதற்கான அனைத்து விதிகளும் அதற்கும் பொருந்தும். அனைவருக்குமான பெயர்மாற்ற வார்ப்புருவிற்கான காலஎல்லையை எத்தனை நாட்கள் வைத்துக் கொள்ளலாம்? இது மாதிரி பெயர்மாற்ற அறிவிப்பு நடைமுறைகள் இருந்திருந்தால், பலதொந்தரவுகளைத் தவிர்த்திருக்கலாம். (எ.கா) ஜீன்(சூன்), ஜீலை(சூலை).....செப்டம்பர்-->செப்டெம்பர். பெயர்மாற்றியதால் வந்த தொந்தரவு இன்னும் விக்சனரியின் தினம் ஒரு சொல் திட்டத்தில் உள்ளது. இன்றைய விக்சனரி முதற்பக்கத்தினைப் பார்க்கவும்.--≈ உழவன் ( கூறுக ) 14:36, 15 செப்டம்பர் 2013 (UTC)
தமிழில் பெயரிடப்பட்டு பெயர்மாற்ற அறிவித்தல் விடுத்தால், முடிவு எட்டப்படும் வரை மாற்றாமல் இருக்கலாம். ஆனால், வேற்று மொழிகளில் பெயரிடப்பட்டால், அவை பெயர் மாற்ற அறிவிப்பில்லாமலேயே உடனடியாக மாற்றப்படலாம். அதுவே நடைமுறை. மாதங்களின் பெயர்களை மீடியாவிக்கியில் விக்கிப்பயனர் அல்லாதோரும் தமது போக்கிற்கு மாற்றுகிறார்கள். இதுவே அங்குள்ள சிக்கல். இதனை எவ்வாறு தவிர்க்கலாம்? (ஜீன், ஜீலை அல்ல --> ஜூன், ஜூலை).--Kanags \உரையாடுக 21:02, 15 செப்டம்பர் 2013 (UTC)
கனகு!ஒரே நேரத்தில் இரண்டு முடிவுகளை, பிறருக்கு தெரிவிக்க உரையாடுகிறோம். 1) தற்போதுள்ள பெயர் மாற்ற நடைமுறை, 2) மீடியாவிக்கி மாற்றம்
  1. வேற்றுமொழிகளில் பெயரிட்டால், அப்பெயர் அறிவிப்பு இல்லாமலேயே மாற்றப்படும் என்பது சீரிய அணுகுமுறையே அல்ல. ஏனென்றால், புதியவருக்கு விக்கியரின் கொள்கை முக்கியத்துவம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அவருக்கு ஒருகுறிப்பிட்ட துறைசார்ந்த அனுபவம் நிறைய இருக்க வாய்ப்புண்டு. வளர்முக நிலையில் இருக்கும் நமக்கு பலர் தேவைப்படுகிறார்கள். பொறுமையுடன் நமது நடைமுறையை அறிமுகப்படுத்தினால் / செயற்படுத்தினால், அவர் நம்மிடம் நிலைப்பர். இல்லையெனில், இந்நிலை விட்டு விலகுவர். பலரிடம் உரையாடிவிட்டே, இக்கருத்தை எழுதுகிறேன். வலைப்பூ பக்கங்களில், பல அருமையான, தமிழ் படைப்புகள் உள்ளன. அவைகளை இங்கு கொணர பேசியபோது தான், இந்த பெயர்மாற்றல் நடைமுறையை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதை உணர முடிந்தது. கூகுள் கட்டுரைகளை ஒரு பகுப்பின் மூலம் வைத்துள்ளோம் அல்லவா? தலைப்பில் மட்டும் தமிழ் இருந்தால் போதுமா? அக்கட்டுரைகள் உள்ளே இருப்பது தமிழா? அதுபோல, விக்கிகொள்கைகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய கட்டுரைகள் என்று ஒரு பகுப்பின் மூலம் கோர்த்து வைக்கலாம். அல்லது மேலே விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியன என அறிவிப்பு இடலாம். பொதுவகத்திலோ, ஆங்கில விக்கியிலோ, முழுமையாக நீக்குவதாக இருந்தால் கூட அறிவிக்கப்படுகிறது. தலைப்பை மட்டுமே மாற்றும் ஆர்வாளர்களின் நிலையும், போக்கும் மாறும். எனவே, கால எல்லையை தமிழ் அல்லாத தலைப்புகளுக்கும் குறிப்பிட வேண்டும். எச்சூழ்நிலையிலும் இருந்து செயல்படுவர்களாக இருந்தாலும், ஒருமாத அறிவிப்பு காலம் போதும். அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. பிறரின் ஆதரவு இருந்தால் தான், நமது தரவு மேம்படும்/விரைவாக வளரும்.
    இங்குள்ள தலைப்பு மாற்றம் குறித்து இறுதியாக ஒன்று. நீங்கள் இங்கு ஆக்ரோகார்ப்புசு ஃபிராக்சினிஃபோலியசு (Acrocarpus fraxinifolius) என்று முன்மொழிந்தீர்கள். அதனை விட்டு, தற்போதுள்ள பெயருக்கு ஏன் மாற்றினீர்கள். கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தல்லவே? நீங்கள் மாற்றியதை நீங்கள் தான் சீர்மை செய்ய வேண்டும்.
  2. மீடியாவிக்கியில் விக்கிப்பயனர் மாற்றினால், அவர் அறிவிப்பு நடைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும். விக்கிஅல்லாதபயனர் என்றால், அவரிடம் பலர் நிலைமையை எடுத்துக்கூறலாம். அத்தகைய சூழ்நிலை வரின் அழைக்கவும். உடன் வருகிறேன். நாம் இருவர் தான் அதனால் மிகவும் பாதிக்கப்பட்டோம். எனவே, நாம்தான் பிறருக்கு ஏற்படும் விளைவுகளைத் தெரியபடுத்த வேண்டும்.
  3. இறுதியாக எத்தகைய சொல் பற்றிய முடிவுகளும், விக்சனரியிலும் பதிவு செய்யும் நடைமுறை நாம் பின்பற்றினால், அதன் போக்கும் மாறும் / மேன்மையுறும். ஏனென்றால், விக்சனரியின் நோக்கமே சொற்களை மேலாண்மை/மேன்மையுற செய்வதற்கு அன்றோ.--≈ உழவன் ( கூறுக ) 02:57, 16 செப்டம்பர் 2013 (UTC)
//இங்கு ஆக்ரோகார்ப்புசு ஃபிராக்சினிஃபோலியசு (Acrocarpus fraxinifolius) என்று முன்மொழிந்தீர்கள். அதனை விட்டு, தற்போதுள்ள பெயருக்கு ஏன் மாற்றினீர்கள்//. நான் இதனைப் பரிந்துரைத்தது உணமை. ஆனால் நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்படும் ஒரு பெயரை விடுத்து ஏன் இப்பெயர் என்றீர்கள்? அதனால் தற்போதுள்ள பெயருக்கு மாற்றினேன். //ஏற்கனவே பயன்படுத்தப்படும், அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ் என்ற தமிழ்ஒலிபெயர்ப்பு//. எனவே, தலைப்பு உங்கள் பரிந்துரைப்படியே மாற்றப்பட்டது.
வேற்று மொழித் தலைப்புகள் உடனடியாகவே தமிழ்த் தலைப்புகு மாற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளார்கள் என்றே நினைக்கிறேன். ஒரு நாள் அவகாசமே அதிகம். இவ்வாறு கட்டுரைகள் எழுதும் புதியவர்களுக்கு அவர்களது உரையாடல் பக்கங்களில் விளக்கம் தரப்படுகிறது. இது தமிழ் விக்கிப்பீடியா. தமிழில் மட்டும் தான் எழுதலாம். இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை:) தமிழ் விக்சனரி மாதிரி அல்ல. விக்சனரி ஒரு பன்மொழி அகரமுதலி. உலகின் அனைத்து மொழிகளிலும் தலைப்புகளை உருவாக்கலாம்.
//வலைப்பூ பக்கங்களில், பல அருமையான, தமிழ் படைப்புகள் உள்ளன. அவைகளை இங்கு கொணர பேசியபோது தான், இந்த பெயர்மாற்றல் நடைமுறையை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதை உணர முடிந்தது.// விக்கிப்பீடியா ஒரு வலைப்பூ என்ற எண்ணத்தில் பல புதியவர்கள் இங்கு வந்து வலைப்பூக்களில் எழுதுவது போன்று தமது விமரிசனங்களையும் சேர்த்து கட்டுரைகள் எழுதுகிறார்கள். இது உங்களுக்குத் தெரியாததல்ல. விக்கிப்பீடியாவை வலைப்பூ ஆக்க முடியாது.--Kanags \உரையாடுக 08:21, 16 செப்டம்பர் 2013 (UTC)
இப்பொழுதுள்ள கிரந்தத்தலைப்பை, நான் முன்மொழியவில்லை. இத்துறையியல் வல்லுனர் பயன்படுத்தும் இலத்தீனியப் பெயரையே வைக்க வேண்டும் என்றே, முதலில் முன்மொழிந்தேன். எனது பேராசிரியருடனும், இங்குள்ள நண்பர்களின் நோக்கினையும் புரிந்து கொண்ட போது, ஒரு பொது ஊடகத்தில், அப்பெயரை முன்னிலை படுத்த வேண்டாம் என்று, எனது எண்ணங்களை மாற்றிக் கொண்டேன். அதனால் தான், //எனக்கு இதுபோன்ற ஒலிப்புமாற்றலில் உடன்பாடில்லை. இதுபோன்ற உயிரியல் பெயரிடல் மரபு தோன்றியதன் நோக்கத்தை அது சிதைப்பதாகும். அதற்கு கொடுக்கப்பட்ட தமிழ் பெயர்களில், ஒரு தமிழ் பெயரே வைத்து விடலாம். தமிழில் என்ன சொற்களுக்கா பஞ்சம்.// என்றே எனது அடுத்த முன்மொழிவைக்கூறினேன். கொடுக்கப்பட்ட தமிழ் பெயர்களை நமது இலக்கியங்களில் உண்டா என்று வினவியபோதும், என் நண்பர் உருவாக்கிய, கணினி நிரல் தேடலிலும், இங்கும் கட்டுரையில் உள்ள எப்பெயரும் கிடைக்கவில்லை. பெயரொன்று கிடைக்காத போது,மலையாள விக்கிப்பீடியாவில், நீங்கள் முன்மொழிந்தது போல, ஆக்ரோகார்ப்புசு ஃபிராக்சினிஃபோலியசு (Acrocarpus fraxinifolius) என வேறு சில தாவரங்களுக்குப் பெயர் வைத்திருந்தினர். அதாவது ஒலிப்பு, அதற்கு அடுத்து தாவரவியல் பெயர். அதனால் தான், உங்களிடம் மாற்றக் கோரியிருந்தேன். நான் ஏற்கனவே சொல்லியபடி, இது குறிஞ்சித்திணைத் தாவரம். மலையாள நாடு அத்திணை நிறைந்த தல்லவா? அதனால், அவர்களுக்கு இலத்தீனியப் பெயர் தேவைப்படவில்லை. --≈ உழவன் ( கூறுக ) 17:46, 16 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரை விரிவிற்கான தரவுக் குறிப்புகள்

தொகு
  • இதன் இற்றைப்படுத்தப்பட்ட, தற்போதைய வகைப்பாடு, முதலில் இலத்தீனியமொழியிலும், பின்னர் விளக்கப்படும் போது, அவரவர் மொழிகளிலும் குறிப்பிடப்பட வேண்டும் என்பது அனைத்துலக அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, 2009 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் தாவரவியலாளர்களால் பின்பற்றப்படுகிறது..
வகைப்பாட்டியல் முறைமை: APG III (இறங்குமுகமான அமைப்பு)
இலத்தீனிய வகைப்பாடு தமிழில் அவ்வகைப்பாடு பயன்பாட்டுக் குறிப்புகள்
Regnum: Plantae பொருள்: உயிரி திணை/இராச்சியம்(இலங்கை)உலகம்(தமிழ்நாட்டுப்பாடநூல்)
Cladus: Angiosperms பொருள்: உயிரிக்கிளை
Cladus: Eudicots
Cladus: Core eudicots
Cladus: Rosids
Cladus: Eurosids I
Ordo: Fabales வரிசை:
Familia: Fabaceae குடும்பம்:
Subfamilia: Caesalpinioideae துணைக்குடும்பம்:
Tribus(): Caesalpinieae
Genus: Acrocarpus பேரினம்:
Species: Acrocarpus fraxinifolius இனம்: இனம் (இலங்கை) சிற்றினம்(தமிழ்நாட்டுப்பாடநூல்)
  • தாவரவியலாளர்: George Arnott Walker Arnott (6.II.1799 - 17.IV.1868) இசுக்கொட்லாந்து நாட்டு தாவரவியல் அறிஞர். அவரைக்குறிக்கும், அனைத்துலக குறுக்கப்பெயர்: Arn.

--≈ உழவன் ( கூறுக ) 03:23, 17 செப்டம்பர் 2013 (UTC)

அப்படங்களுக்கு, எவ்வுரிமத்தைத் தர வேண்டும்.

தொகு

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிமூலம், இத்திட்டம், இந்தியாவில் (மேற்குத்தொடர்ச்சி மலைத்தாவரங்களில்...சனவரி 2006 முதல் திசம்2008) முடிக்கப்பட்டுள்ளது. அத்திட்ட மேலாளர்களுடன், சிலமாதங்களுக்கு முன் தொடர்பு கொண்ட போது, அவர்கள் முனைவர் அய்யப்பனை தொடர்பு கொள்ள சொல்லியிருந்தார்கள். அத்திட்டத்தில் களத்திலும் இறங்கி, ஆய்வுகளைச் செய்தவர் முனைவர். அய்யப்பன் ஆவார். அதன் படி, அவர் சோதனைப் பதிவிற்காக, இத்தாவரம் பற்றிய குறிப்புகளையும், படங்களையும் எனக்கு கொடுத்தளித்தார். அவர் அனுப்பிய குறிப்புகளும், படங்களும் அந்த இணையத்திலும் உள்ளன. பொதுவகத்தின் மேன்மைகளையும், எல்லைகளையும், படப்புள்ளிகள் இருக்கவேண்டிய அளவுகளையும் அவர்களுக்குக் தெரிவித்துள்ளேன். எனினும், பொதுவகத்தில் பதிவேற்றும் வரை, இங்கு சோதனைக்காக எத்தகைய உரிமங்களைக் கொண்டு, அப்படங்களை பதிவேற்றிட வேண்டும். அவரின் பெயரும், அத்தளமும் இருக்க வேண்டும் என்பதையும் நினைவிற்கொள்க. எடுத்துக்காட்டு தருக. ஆவலுடன்.. வணக்கம்.--≈ உழவன் ( கூறுக ) 09:26, 19 செப்டம்பர் 2013 (UTC)

குறிப்பிட்ட கட்டுரையில் மட்டும் பயன்படுத்தக்கூடியவாறு நியாயப் பயன்பாட்டுக் காரணம் கொடுத்து இணைக்கலாம் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 12:08, 19 செப்டம்பர் 2013 (UTC)
இங்கு இதுவரை படமொன்றை பதிவேற்றியதில்லை என்பதால் அந்த //நியாயப் பயன்பாட்டுக் காரணம் // கொண்ட படமொன்றினைக் காட்டுக.--≈ உழவன் ( கூறுக ) 12:29, 19 செப்டம்பர் 2013 (UTC)
Return to "அக்ரோகார்பஸ் ஃபெராக்சினிபோலியஸ்" page.