பேச்சு:அறுதியின்மைக் கொள்கை

தலைப்பு மாற்றப் பரிந்துரை

தொகு

இக் கொள்கை ஐயப்பட்டுக் கொள்கை என்பது சரியாக இல்லை என்று நினைக்கிறேன். ஐயப்பாடு என்பது doubt என்பதுபோல் பொருள் கொள்ளக்கூடும். உறுதிகொள்ளமுடியாத அல்லது அறுதியிடமுடியாத அல்லது துல்லியம் கொள்ள முடியாத தன்மை. இடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடிந்தால், அதன் விரைவை, உந்தத்தைத் துல்லியமாகக் கணிக்க இயலாது. எனவே கீழ்க்காண்டும் ஏதேனும் ஒரு தொடரை ஆளலாம் என்று நினைக்கிறேன்:

  • உறுதிகுறைமைக் கொள்கை
  • அறுதிமயக்கக் கொள்கை
  • அறுதியுறாக் கொள்கை
  • துல்லியம்கொளாக் கொள்கை
  • துல்லியமயக்கக் கொள்கை
  • உறுதிமயக்கக் கொள்கை

Uncertainty என்பது உறுதியில்லாமை, அறுதி கொள்ளமுடியாமை. ஐயப்பாடு என்பது ஏறத்தாழ இப்பொருள் கொள்ளும் என்றாலு, இங்குள்ள சூழலில் பொருத்தம் குறைவாக உள்ளதாக நினைக்கிறேன்.

--செல்வா 01:52, 21 ஜூன் 2008 (UTC)


எனக்கும் ஐயாப்பாடு என்னும் போது doubt என்னும் பொருள் படுவது போல் தான் உள்ளது. என்னிடம் இருக்கும் அறிவியல் அகரமுதலி ஒன்று Uncertainty என்பதற்கு ஐயப்பாடு, சந்தேகம் எனப் பொருள் கொடுத்துள்ளது. அதனால் தான் ஐயப்பாடு என்பதனைப் பயன்படுத்தினேன். நீங்கள் கொடுத்துள்ளதுபோல், துல்லியம்கொளாக் கொள்கை அல்லது அதிலிருந்து வருவிக்ககூடிய துல்லியமின்மைக் கொள்கை கூடிய பொருத்தமாக இருக்கும்போல் தெரிகிறது. உறுதிகுறைமை என்பது unstable என்னும் பொருள் தருவதுபோல் உள்ளது. மயூரநாதன் 05:01, 21 ஜூன் 2008 (UTC)

மயூரநாதன் நல்லதோர் கட்டுரையை ஆரம்பித்து வைத்தமைக்கு முதலில் நன்றிகள். Uncertainty principle இற்கு நிச்சயமற்ற கொள்கை அல்லது நிச்சயமற்ற கோட்பாடு என்று தமிழாக்கம் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றேன். --உமாபதி \பேச்சு 05:23, 21 ஜூன் 2008 (UTC)

Uncertainty என்பது இப்படியும் சொல்லமுடியாது, அப்படியும் சொல்லமுடியாது என்பதைக்குறிக்கிறது. 'நிச்சயம்' என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது கொள்கை நிச்சயமல்ல என்று பொருள் கொடுத்துவிடும். அறுதியாகச் சொல்லமுடியாது என்ற பொருள் கொடுக்கும் சொற்றொடரைக் கண்டுபிடிக்க வேண்டும். "அறுதியுறாக்கொள்கை" தான் சிறந்ததாகப் படுகிறது எனக்கு. நிற்க, Quantum Mechanics ஐப்பற்றி நாம் நிறைய எழுதவேண்டும். ஆனால் சொற்களை கலந்துரையாடித் தேர்ந்தெடுக்க வேண்டும். --Profvk 15:11, 24 மார்ச் 2009 (UTC)


Heisenberg Uncertainity principle, என்பதை அறிவியல் கருத்து சிதையாமல் விளக்கும் ஒரு சொல்லாக, "அறுதியின்மைக் கோட்பாடு" இருப்பதாகக் கருதுகிறேன். 1. "ஐயப்பாட்டு கொள்கை" என்பது தவறானதொரு புரிதலுக்கு இட்டுச்செல்கிறது.

2. "துல்லியம்கொளாக் கொள்கை" மிக நெருங்கிய பொருள் கொண்டிருந்தாலும், அது அறிவியல் ரீதியாக தவறானதொரு புரிதலைக் கொண்டு சேர்க்கும் சாத்தியம் கொண்டிருக்கிறது. எப்படி?? துல்லியம் இல்லாமை, என்பது அளவீடு செய்யும் முறைகளிலோ, அல்லது, அளவீடு செய்யும் கருவிகளினது எல்லையினாலோ தோன்றும் ஒரு விளைவைப் போன்றதொரு தோற்றத்தைக் கொடுக்கிறது.

3. ஒரு துகளின் அருதியின்மை, என்பது ஒரு அடிப்படைப் பண்பைப் போன்றது, நிறை, மின்மம், போன்ற உள்ளார்ந்த பண்புகளுக்கு இணையானது அருதியின்மைப் பண்பு. இதனாலேயே மொத்த குவாந்தம்கொள்கையும் இவ்வறுதியின்மைக் கோட்பாட்டின் மேல் கட்டப்பட்டிருக்கிறது. குறிப்பாக, நேர்கோட்டு உந்தம்- வெளி, ஆற்றல் - காலம், கோண உந்தம் - கோணம் ஆகிய எதிர்வுகளைக் கொண்ட ஒரு வெளியினைக் கற்பனை செய்தால், அவ்வெளியினில் ஒரு துகள் அக்கிரமிக்கக் கூடிய பரப்பளவு அல்லது கண அளவே ப்ளான்க்கின் மாறிலி கொண்டு வரையறுக்கப்படுகிறது. ஆக இது ஒரு துகளின் அடிப்படைப்பண்பாகக் கொள்ள வேண்டிய ஒரு அளவு. இதனால் அறுதியின்மைக் கோட்பாடு என்பது மொழி, மற்றும் அறிவியல் விளக்கம் இரண்டினையும் சிதைக்காமல் இருக்கிறது என்று கருதுகிறேன். --இரஞ்சித்

  • மேலே இரஞ்சித்துக் கூறியது போல அறுதியின்மைக் கொள்கை என்பது சரியான சொல். சிறிதே மாற்றி அறுதியிலிக் கொள்கை என மாற்றலாம் என நினைக்கின்றேன். ஐயப்பாட்டுக்கொள்கை என்பது பொருந்தாத சொல். அறுதியின்மை, அறுதியிலி, அறுதியுறா ஆகியவை பொருந்தும். யாரும் தக்கக் காரணம் கூறி மறுக்கவிலலி எனில் இரண்டொரு நாளில் தலைப்பை அறுதியிலிக் கொள்கை என்றோ அறுதியின்மைக் கொள்கை என்றோ அறுதியுறாக் கொள்கை என்றோ மாற்றிவிடுகின்றேன். அறுதியுறாக் கொள்கை என்பது சற்று கூடிய பொருத்தம் உடையது. அறுதியில்லாமை என்பதை விட அறுதியுறாமை அல்லது அறுதி எய்ய முடியாமை என்பது இங்கு கருத்து. கடந்த 5 ஆண்டுகளாக இது தவறான தலைப்புடன் உள்ளது!--செல்வா (பேச்சு) 16:57, 14 சூன் 2013 (UTC)Reply
அறுதியிலிக் கொள்கை, அறுதிமயக்கக் கொள்கை, அறுதியின்மைக் கொள்கை ஆகியன நன்றாகவுள்ளன. அறுதியுறா எனும்போது கூடுதல் பொருத்தம் இருந்தாலும் ஏதோ இந்தக் கொள்கைதான் இன்னும் அறுதியுறாதது என்று குழப்ப வாய்ப்புள்ளது. அறுதியுறாமைக் கொள்கை என்றால் சரியாக இருக்குமோ? -- சுந்தர் \பேச்சு 14:27, 18 சூன் 2013 (UTC)Reply
ஆம் சுந்தர அறுதியுறாமைக் கொள்கை என்பது பொருத்தம். இதே போல அறுதியிலி என்பதைவிட முதலில் இரஞ்சித்து சொன்னமாதிரியே அறுதியின்மைக் கொள்கை என்று குறிப்பதே சிறாந்ததாகத் தெரிகின்றது. அறுதியுறாமைக் கொள்கை என்பதில் ஒரு சிறு நுணுக்கமான கருத்து உள்ளது அறுதியை எட்டாத, எட்ட முடியாத என்னும் கருத்து உள்ளது. அறுதியின்மை என்பதில் அறுதி இல்லை என்று குறிக்கப் பெறுமே அன்றி அறுதிகொள்ளவிடாது (இரண்டையும், அதாவது இடத்தையும் உந்தத்தையும், ஒருசேர அறுதியிடுதல் எட்ட முடியாதது) என்னும் கருத்து வெளியாகாது. அறுதியுறாமை, அறுதியின்மை ஆகிய இரண்டும் எனக்கு ஏற்பே. --செல்வா (பேச்சு) 17:57, 20 சூன் 2013 (UTC)Reply
உங்கள் விளக்கத்தின்படி அறுதியுறாமைக் கொள்கை என்பதை முதன்மையாக்கலாமென நினைக்கிறேன். அறுதியின்மைக் கொள்கை போன்றவற்றை மாற்றுப் பயன்பாடாகத் தரலாம் அல்லது மாற்றுவழி ஏற்படுத்தலாம். -- சுந்தர் \பேச்சு 03:28, 21 சூன் 2013 (UTC)Reply
தக்க மாற்றுவழிகளுடன் தலைப்பை மாற்றியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 07:22, 30 சூன் 2013 (UTC)Reply
பெயர் தொடர்பாக

நிலையில்லாக் கோட்பாடு என்பது பொருத்தமாக இருக்குமா? என் பாடநூல்களில் அவ்வாறுதான் படித்தேன். அது குறித்து விபரங்கள் தரவும். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 10:06, 30 அக்டோபர் 2013 (UTC)Reply

குவாண்டம்

தொகு

குவாண்டம் என்பதற்கு சத்திச்சொட்டு என்று தமிழாக்கம் தருகிறது தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி இது தகுந்ததா? --கார்த்திக் 17:19, 24 மார்ச் 2009 (UTC)

Return to "அறுதியின்மைக் கொள்கை" page.