ஆல்ப்ஸ் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

தலைப்பு

தொகு

தமிழிலக்கணப்படி லகர மெய்யை அடுத்து, பகர மெய்யெழுத்து வர முடியாது. எனவே, இதன் தலைப்பைப் பொருத்தமானவாறு மாற்றியமைக்க வேண்டும். அற்புசு என்பது எனது பரிந்துரை.--பாஹிம் (பேச்சு) 16:34, 3 பெப்ரவரி 2013 (UTC)

வணக்கம் பாஹிம்...தமிழிலக்கணப்படி பெயரை மாற்றுகிறேன் எனச் சிறிதும் புழக்கத்தில் இல்லாத ஒரு சொல்லை பரிந்துரை செய்துள்ளீர்கள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:18, 8 மே 2013 (UTC)+1--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 14:26, 8 மே 2013 (UTC)Reply

அதற்காக, மூன்று மெய்யெழுத்துக்கள் அடுத்தடுத்து வருவது தகுமா? அத்துடன், விக்கிப்பீடியாவில் பரிந்துரைக்கப்படும் சொற்களெல்லாம் ஏற்கனவே புழக்கத்தில் உள்ளவைதாமா? ஒலிபெயர்ப்பிற்கு அப்படி ஏதும் விதி இருக்கிறதா?--பாஹிம் (பேச்சு) 15:07, 8 மே 2013 (UTC)Reply

இதன் தலைப்பை ஆல்ப்சு என்று வைக்கலாம்.--குறும்பன் (பேச்சு) 18:03, 8 மே 2013 (UTC).   விருப்பம்.--Kanags \உரையாடுக 21:08, 8 மே 2013 (UTC)Reply

தமிழ் விக்கிபீடியாவை பெரும்பாலும் சிறுவர்,சிறுமியர் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தேடும் பொழுது அல்ப்ஸ் மலை என்று இருந்தால் அவர்களுக்கு சுலபமாக இருக்கும். நாம் அதை மாற்றினோமேஆனால் அவர்களுக்கு குழப்பம் ஏற்படும். அதுமடுமல்லாது அது ஜெர்மன் மொழி ஆகும். உள்ளதை உள்ள்படி அழைப்பதே நலம்.நந்தினிகந்தசாமி (பேச்சு

  விருப்பம் , எனக்கு அல்ப்ஸ் என தேடிய அனுபவம் உண்டு :) -- நி ♣ ஆதவன் ♦   (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 11:44, 8 ஆகத்து 2013 (UTC)Reply
அல்ப்ஸ் என்பது இலங்கை வழக்கு, ஆல்ப்ஸ் பரவலான தமிழக வழக்கு. அல்ப்ஸ், அல்ப்ஸ் மலை என்பதற்கு வழிமாற்றுகள் ஏற்படுத்தி விடலாம்.--Kanags \உரையாடுக 12:02, 8 ஆகத்து 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆல்ப்ஸ்&oldid=2290605" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஆல்ப்ஸ்" page.