குறிப்புகள் தொகு

தலைப்பு மற்றும் பிற சொற்களின் தொகு

இசுலாத்தில் நெடுங்காலமாக தமிழ் மரபு வழங்கி வந்துள்ளபடியால் இங்கும் அதைப்பின்பற்றலாமே. கூடிய வரை கிரந்தம் தவிர்த்து, நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி எழுதலாம். தேவையான இடங்களில் அடைப்புக்குறிகளுக்கிடையே அரபு மொழி அல்லது ஒலிப்புக் குறிப்புகளைத் தரலாம். -- சுந்தர் \பேச்சு 16:37, 27 பெப்ரவரி 2009 (UTC)

ஆதார பூர்வமான தகவல்களுடன் தொகுக்கப்படும். தொகு

மிக மோசமான ஆதாரமற்ற தகவல்கள் இக்கட்டுரையில் நிறைந்து காணப்படுகின்றன. தகுந்த ஆதாரத்துடன் அவைகள் திருத்தப்படும் .

அதைத்தொடர்ந்து;

முகம்மது நபி(ஸல்) அவர்களின் |இறுதிப் பேருரையின் போது அருளப்பட்ட இறைவசனம்


"இன்றைய தினம் "உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்"(திருக்குர்ஆன்-5:3)


என தெளிவாக இஸ்லாத்தின் வரவிலக்கணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாலும்,

இஸ்லாம் என்ற தலைப்பின் கீழ் இன்னும் பல விடயங்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளதாலும்,

பிற்பட்ட வரலாறுகளை இஸ்லாமிய வரலாறு என்ற தலைப்பின் கீழ் தொகுக்கப்படும்.

எனவும் அறியத்தருகிறேன்.


மாற்று கருத்துள்ளவர்கள் ஆலோசனைக்காக தேவைப்படுகின்றனர்.

நன்றி --Mohamed S. Nisardeen 18:08, 7 மார்ச் 2009 (UTC)

இக்கட்டுரை நன்றாக உள்ளதாகவே கருதுகிறோம். ஒரு இசுலாமியப் பயனரே எழுதினார். பயனர்:Arafath.riyath.
உங்கள் மேற்கோள்கள் (quotes) விக்கி மேற்கோள்களில் சேக்கப்பட்டுள்ளன.
மேலதிக விடயங்களை இதர ஏற்ற தலைப்புகளில் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்றவாறு எழுதல் வேண்டும்.


--Natkeeran 18:20, 7 மார்ச் 2009 (UTC)


நண்பர் அறிய இங்கு இஸ்லாமிய பயனர் என்பதோ அல்லது மாற்று நம்பிக்கை கொண்டவர்களா என்பதோ முக்கியமற்றதொன்று. தகவல்களில் 95%வைகள் பிழையானவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். அதை மறு சீரமைப்பது எனது கடமை. விக்கிப்பீடியாவின் தர்மமும் அதுவே. மேற்கோள்களை நான் முன்னிலைப்படுத்தும் எண்ணத்துடன் கூறவில்லை அதனை இக்கட்டுரையிலிருந்து நான் திரும்ப பெறுகிறேன். --Mohamed S. Nisardeen 18:39, 7 மார்ச் 2009 (UTC)


உங்கள் கருத்துடன் மாறு படுகிறேன். ஒரு முழுமை அடைந்த கட்டுரையை முற்றிலும் மாற்றி அமைப்பதற்கு மிக விரிவான ஆணித்தரமான காரணங்கள் இருக்க வேண்டும். எங்கு மாறு படுகிறீர்கள் என்று பந்திக்கு பந்தி பேச்சு பக்கத்தில் மாற்றி எழுதவும். ஒப்பிட்டு மதிப்பீடு செய்யலாம். --Natkeeran 19:06, 7 மார்ச் 2009 (UTC)

நன்றி

ஒவ்வொரு பந்திகளும் ஆதார பூர்வமாக தொகுக்கப்படும்.

முதலில் இஸ்லாத்தின் வரைவிலக்கணம் கொடுக்கப் பட வேண்டும்.

--Mohamed S. Nisardeen 19:17, 7 மார்ச் 2009 (UTC)

இக்கட்டுரையில் நிறையப் பிழைகள் தென்படுகின்றன. இஸ்லாமியக் கட்டுரைகளில் வடமொழி எழுத்துக்கள் பயன்படுத்தப்படாதவிடத்து அரபிமொழிச் சொற்களின் பொருளில் பெரும் பிழைகள் நிகழ்கின்றன. --MIMF 09:58, 4 ஏப்ரல் 2011 (UTC)

பொதுவாக வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எழுதும் போது தமிழ் முறைப்படியே எழுதல் வேண்டும். தமிழ் இலக்கண விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அது ஆங்கில மொழியானால் என்ன, வடமொழியானால் என்ன அல்லது அரபி மொழியானால் என்ன. நீங்கள் எந்தச் சொற்களைக் குறிப்பிடுகிறீர்கள் எனப் பட்டியல் தந்தால் அவற்றைப் பரிசீலிக்கலாம்.--Kanags \உரையாடுக 10:16, 4 ஏப்ரல் 2011 (UTC)

உரை திருத்தம் + எழுத்துப் பெயர்ப்பு சீர்மை தொகு

உரை திருத்தம் (எழுத்துப்பிழைகள்) + சீரான எழுத்துப் பெயர்ப்பு செய்துள்ளேன். கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து எழுதும் பொழுது சில ஒலித்திரிபுகள் நிகழ்வது இயல்பு. அராபிய மொழியிலும், பிற ஐரோப்பிய மொழிகளிலும் இப்படி பல ஒலித்திரிபுகள் நிகழ்வது தவிர்க்க இயலாதது. --செல்வா 20:18, 7 மார்ச் 2009 (UTC)

நிச்சயமாக விக்கிபீடியாவின் சட்ட திட்டங்களுக்கு கட்டுபடுவேன்.

நன்றி. --Mohamed S. Nisardeen 20:23, 7 மார்ச் 2009 (UTC)

மாற்றை முதலில் பேச்சுப் பக்கத்தில் தரவும்....கலந்துரையாடி கட்டுரையில் சேக்கலாம் தொகு

--Natkeeran 20:57, 7 மார்ச் 2009 (UTC)


திருத்தங்கள். தொகு

இட வசதி கருதியும், இஸ்லாத்தின் வரவிலக்கணப்படியும்

"இன்றைய தினம் (1400 ஆண்டுகளுக்கு முன்) உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்"(திருக்குர்ஆன்-5:3)

இக்கட்டுரையிலுள்ள "இஸ்லாமிய வரலாறு" எந்த மாற்றமும் செய்யப்படாது தனிப்பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது; பின்னர் இக்கட்டுரையிலிருந்து நீக்கப்படும். --Mohamed S. Nisardeen 21:39, 7 மார்ச் 2009 (UTC)


முதல் பந்தியில் மாற்றப்பட வேண்டிய தெளிவான ஆதாரங்கள். தொகு

////என்பது ஏழாம் நூற்றாண்டில் சவுதி அரேபியா நாட்டில் தொடங்கிய ஒரு மதமாகும். ஆபிரகாமிய மதப்பிரிவை சேர்ந்த இந்த மதம் முகம்மது நபி என்பவரால் பரப்பப்பட்டது.////

அரேபிய நாட்டில் வம்ச பரம்பரையில் பிறந்த முகம்மது நபி என்பவரது (நாற்பதாவது வயதில்) கி.பி.672 ல் அறிமுகபடுத்தப்பட்டது. --Mohamed S. Nisardeen 23:36, 7 மார்ச் 2009 (UTC)
மேல் உள்ள வசனத்துக்கு குறை என்ன? சவூதி அரேபியா என்பதே முழுப் பெயர். ஏழாம் நூற்றாண்டு என்பது அறிமுகப் பந்தியியில் நன்றே. முகம்மது நபி பற்றிய விபரங்களை அந்த நபர் பற்றிய கட்டுரையில் தரலாம். natkeeran
ஏழாம் நூற்றாண்டில் உங்களது விருப்பப்படியே விடுகிறேன்.

"ஆபிரகாமிய வம்ச பரம்பரையில்" மிக முக்கியமானது அல்லது அவ்வரியை நீக்கி விடலாம்--Mohamed S. Nisardeen 23:40, 7 மார்ச் 2009 (UTC).

/// இசுலாம் என்ற அராபிய சொல்லுக்கு அடிபணிதல் அல்லது சரணடைதல் என்பது பொருளாகும்.///

அடிபணிதல் (அல்லது சரணடைதல்) மற்றும் அமைதி என்பன அகராதியின் நேரடி கருத்துகளாகும். --Mohamed S. Nisardeen 23:36, 7 மார்ச் 2009 (UTC)
மேற்கோள் தேவை.natkeeran

[1] எந்தவொரு அரபிய அகராதியும் பொருள் தரும். (சலாம், அஸ்ஸலாமு, இஸ்லாம் அனைத்தும் ஒரே அடிக்கருத்தையும் ஒரே எழுத்துகளையும் கொண்டவைகளே.)--Mohamed S. Nisardeen 23:36, 7 மார்ச் 2009 (UTC)


////இசுலாமியர்கள் இறைவன் முகம்மது நபிக்கு மலக்குகள் (தேவதைகள்) தலைவன் சிப்ரயீல் மூலம் குரானை (இசுலாமியர்களின் புனித நூல்) /////

ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டு எடுக்கப்பட்ட, நாகரிகமற்ற, ஆதாரமற்ற வார்த்தைகள்
அன்றியும், அர்ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?(திருக்குர்ஆன்.-43:19)--Mohamed S. Nisardeen 23:36, 7 மார்ச் 2009 (UTC)
மலக்கு என்ற சொல்லைப் பற்றியா கூறுகிறீர்கள்? அது வழக்கில் இருக்கிறதா...இல்லையா? தேவைதை என்பது பொருந்துமா? natkeeran


/////////////மேலும் உலக ஆரம்பம் முதலே இவ்வாறு இறைவன் இப்ராகிம் (ஆபிரகாம்) மூசா (மோசசு) ஈசா (இயேசு) போன்ற நபிகளை அனுப்பினான் என்றும், அவர்களின் மறைவுக்குப்பின்பு அவர்களை பின்பற்றியவர்கள் கடவுளை மறந்து அந்த நபிகளையே கடவுளாக வணங்க தொடங்கிவிட்டனர் என்றும் நம்புகின்றனர்.

இசுலாம் மதம் அடிப்படையாக ஐந்து கொள்கைகளை கொண்டது. இவை இசுலாமின் ஐந்து தூண்கள் என அழைக்கப்படுகின்றது. 'இறைவன் ஒருவனே. அவனே அல்லாஃக். முகம்மது அவனது நபி' என்பதே இசுலாமின் முதல் கொள்கை ஆகும். இதை மனதார நம்பும் ஒருவனே இசுலாமியான் ஆவான். -இசுலாம் தனது மக்களுக்கு பல சட்டத்திட்டங்களை விதித்துள்ளது. இது சரியத் சட்டம் என அழைக்கப்படுகின்றது. மேலும் இசுலாம் தனக்கென தனியாக வழிபாட்டுமுறைகள், சட்டங்கள் மற்றும் காலச்சாரங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இசுலாம் மதம் பொதுவாக இரண்டு பிரிவாக உள்ளது. இவர்களில் சன்னி இசுலாம் பிரிவினர் பெரும்பான்மையாக, மொத்த மக்கள் தொகையில் 85% உள்ளனர். மற்றொரு பிரிவினராண சியா இசுலாம் பிரிவினர் 15% உள்ளனர்.மேலும் உலக அளவில் 20% முசுலிம்கள் அராபிய நாடுகளிலும், 30% முசுலிம்கள் இந்திய துணைகண்டத்திலும் 15.6% முசுலிம்கள் இந்தோனேசியாவிலும் வசிக்கின்றனர். மக்கள்தொகை எண்ணிக்கை அளவில் இந்தோனேசியா, அதிக முசுலிம்கள் வாழும் நாடு என்ற பெருமையைப் பெறுகின்றது.///////////

இஸ்லாம் மதத்தை பின்பற்றுவோர் இரு பெரும் பிரிவுகளாக உள்ளனர்.01.சன்னி;02.சியா.

குறிப்பிடப்பட வேண்டியவைகளாகும் மற்றவைகள் நம்பிக்கைகள், கடமைகள் என்ற உள்ளடக்கங்களுக்குள் இடப்பட்டுள்ள கருத்துகள்.

இக் கூற்று சரி என்று படுகிறது. --Natkeeran 22:38, 7 மார்ச் 2009 (UTC)
நற்கீரன், மற்றும் நிசாருதீன், உங்கள் உரையாடல்களில் தயவு செய்து உங்கள் கையொப்பத்தையும் இட மறக்க வேண்டாம். யார் என்ன கூறுகிறீர்கள், யார் மறுக்கிறீர்கள் என ஒன்றுமே தெளிவில்லாமல் இருக்கிறது.--Kanags \பேச்சு 23:20, 7 மார்ச் 2009 (UTC)


முதல் பந்தி திருத்தங்களை செய்யவும் தொகு

இசுலாம் அல்லது இஸ்லாம் Sound الإسلام (அரபு: الإسلام; al-'islām, Islam)என்ற மதமானது சவுதி அரேபியா நாட்டில் ஆபிரகாமிய வம்ச பரம்பரையில் ஏழாம் நூற்றாண்டில் பிறந்த முகம்மது நபி என்பவரால் அறிமுகமான மார்க்கமாக பொதுவாக அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இசுலாத்தின் மூலமான திருக்குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் தொடக்கம் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. உலகம் முழுவதும் ஏறக்குறைய இரண்டு பில்லியன் மக்களால் பின்பற்றப்படும் உலகின் இரண்டாவது பெரிய மதமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இம் மதத்தை பின்பற்றுவோர் 01.சன்னி; 02.சியா இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். --Mohamed S. Nisardeen 23:36, 7 மார்ச் 2009 (UTC)

  • முதலாவது பந்தியில் 40 வயது கதை ஏன் தேவை?
  • ஆபிரகாமிய சமயம், ஆபிரகாமிய வம்சம் இல்லை ??? ...முகம்மது en:Banu Hashim குலத்தைச் சேர்தவர்.
  • கடைசி நபி என்பது போதுமான தகவல். ஆதாம் முதல் மனிதர் என்பது ஒரு தொன்மம். அந்த தொன்மம் இங்கு தேவை அற்றது. தகவலை தருவதே முதன்மையனதாக இருக்க வேண்டும்.
  • ஆங்கிலக் கட்டுரையில் "இசுலாம் என்ற அராபிய சொல்லுக்கு அடிபணிதல் அல்லது சரணடைதல் என்பது பொருளாகும். என்பது ஆங்கில விக்கியிலும் தரப்பட்டிருக்கும் விளக்கமாகும்.

--Natkeeran 23:47, 7 மார்ச் 2009 (UTC)

இஸ்லாத்தின் பார்வையும் பொதுவான பார்வையும் தெளிவாக பிரித்து கூற வேண்டியது முக்கியமானது. (ஆப்ரகாம் என்பதை குறிப்பிட முனையும் போது தொன்மங்கள் தேவையே.) ஆப்ரகாமிய வம்சத்தில் பிறந்தவரே முஹம்மத்(ஸல்) அவர்களும், அவர்களின் தந்தையின் பாட்டனாருமான hasim அவர்களுமாகும். விளக்கத்துடன் ஆதாரம் தரப்பட்டுள்ளது. அகராதிக்கும் ஆங்கில விக்கிக்கும் உள்ள வித்தியாசம் தெளிவானது உங்களுக்கு புரிந்திருக்கும்.--Mohamed S. Nisardeen 06:16, 8 மார்ச் 2009 (UTC)

இங்கு பொது பார்வையே முக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ளவும். தகவலை நோக்கில் கட்டுரை எழுதப் பட வேண்டும். நம்பிக்கை நோக்கில் இல்லை. இல்லை என்றால் சோதிடம் ஒரு அறிவியல் என்று எழுதிவிட்டுப் போகலாம். அவரவரின் நோக்கில். --Natkeeran 14:41, 8 மார்ச் 2009 (UTC)

[[2]]முன்னைய ஆலோசனைப்படி "இஸ்லாமிய வரலாறு" வழிமாற்ப்பட்டுள்ளது.--Mohamed S. Nisardeen 07:22, 8 மார்ச் 2009 (UTC)

காரணம் கூறப்படாது கடந்த வாரம் நீக்கப்பட்ட உள்ளடக்கம். தொகு

"இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்" இணைக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் தொகுக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணான கருத்துகள். தொகு

--Mohamed S. Nisardeen 10:37, 8 மார்ச் 2009 (UTC)

ஆதாரங்கள் தரப்படாத, இரண்டு பில்லியன் மக்களது நம்பிக்கைகளுக்கு முரணான கருத்துகள் நீக்கப்படுகிறது ஆதாரம் முன்வைத்து மீண்டும் தொகுக்கலாம்.

முகம்மது நபி (சல்) அவர்கள், தங்கள் எடுத்துரைத்த இசுலாமின் வேரை ஆதியில் உலகம் தோன்றியதில் இருந்து தேடினார்கள்.


"(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்."(12:3)


"இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் அதிபதியிடமிருந்து (ரப்பிடமிருந்து) என்பதில் சந்தேகமேயில்லை."(10:37)

"(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பதையில் வழி காண்பிக்கின்றீர்." (42:52)

மேலுள்ள இறைவசனங்கள் வரலாற்று பிழை எனின்; முதலில் கடுமையான எதிர்ப்பைக்காட்டியவர்கள் பின்னர் எந்நம்பிக்கையில் இருபது வருடங்களுக்குள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பின் இலட்சக்கணக்கில் ஒன்று திரண்டனர்?

அல்லது வேறு எந்த முறையிலுமாவது "தேடினார்கள்" என்பதை நிரூபித்த பின் இவ்வசனத்தை கட்டுரையில் சேர்க்கவும் --Mohamed S. Nisardeen 10:35, 8 மார்ச் 2009 (UTC)


மாற்றங்கள் ஏற்புடையவை அல்ல தொகு

இக் கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றன்ங்கள் ஏறுபுடையவை அல்ல. முதலில் எழுதிய பயனருக்கும் சற்றும் மதிப்பு தரமாமல், பேச்சுப் பக்கத்தில் கேட்டுக் கொண்டதற்தையும் செவி மடிக்காமல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு பொதுக் கட்டுரையை நிறைய திருகுர்ஆன் வாசகங்கள் தந்து, பொதுப் பயனர்களுக்கு ஏற்பற்றாதாகவும், பக்க சார்பு மிக்கதாகவும் ஆக்கி உள்ளார். வரலாறு பக்கதை சுக்க வேண்டிய அவசியமும் இல்லை. --Natkeeran 14:39, 8 மார்ச் 2009 (UTC)

முன்னிலைப் படுத்தப்பட்டு சில ஒரு சில நாட்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். இணக்க முடிவு இல்லாமல், எழுதிய மற்றப் பயனர் கருத்து தர முதலே முற்றிலும் மாற்றியமைப்பது விக்கி பண்பல்ல. --Natkeeran 14:43, 8 மார்ச் 2009 (UTC)


கருத்து தொகு

/////முன்னிலைப் படுத்தப்பட்டு சில ஒரு சில நாட்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம். இணக்க முடிவு இல்லாமல், எழுதிய மற்றப் பயனர் கருத்து தர முதலே முற்றிலும் மாற்றியமைப்பது விக்கி பண்பல்ல. /////


இரண்டு மாதங்களுக்கு முன் கருத்துப்பரிமாற்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் ("இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகள்") காரணம் எதுவும் முன்வைக்கப்படாது கடந்த வாரம் நீக்கப்பட்டிருந்தன.[[3]]என்பதை அறிய வேண்டும்.

திருத்தியமைக்கப்பட்ட உள்ளடக்கங்கள் அதை விட தரம் வாய்ந்ததாக அமைக்கப்படாமல் இஸ்லாத்தின் அடிப்படைகளுடன் முரண்படுகிறன, அவைகள்.

01.இறைவன்-இறைவன் என்பவன் ஒரு மாபெரும் ஒளி வடிவம்.

02.மலக்குகள்-தேவதை போன்றவர்கள்//இவர்களை இறைவன் இரும்பினால் படைத்தான்.

03.நபிகள்-இவர்களுக்கு மலக்குகளை விடவும் குறைந்த அளவு சக்தியே கொடுக்கப்பட்டது. (இறைவனது செய்திகளை அறிவிப்பதும் அதன்படி முன்மாதிரியாக வாழ்வதும் தவிர இவர்கள் மனிதர்களே. )

04.இறுதிநாள்-இறுதிநாள் அல்லது புனித தீர்ப்பு நாள் என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது ஆகும். உலகில் பிறந்த அனைத்து மனிதர்களும் இந்த நாளில் இறைவன் முன்பு நிறுத்தப்படுவார்கள்.

//புனித// //இறைவன் முன்பு.//

(இது தவறான பிரயோகம்; விளங்குவதற்கு மேலதிகமாக விரிவாக்கப்பட வேண்டும்.)


இன்னும் இரண்டு விடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

01.முன்னர் வாழ்ந்த இறைதூதர்களுக்கு வேதங்கள் கொடுக்கப்பட்ட உண்மை.

02.பிரபஞ்சத்தின் அனைத்தும் இறைவன் வகுத்த விதி.

இவ்விடயங்களை உறுதிபடுத்துவதற்கே திருக்குர்ஆனிய கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



/////முன்னிலைப் படுத்தப்பட்டு சில ஒரு சில நாட்கள் பேச்சுப் பக்கத்தில் உரையாடலாம்./////


•ஆதாரமான விடயத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய தகவல்களுக்கு காலதாமதம் விக்கி பண்பல்ல. உதாரணமாக ஒருவர் அமெரிக்காவின் தலைநகர் "கொழும்பு" என்று பதிந்து விட்டு செல்லும் போது அவர் மீண்டும் வரும்வரையும் ஆலோசனைக்காக பொறுத்திருப்பது விக்கி பண்பாகுமா? (இந்நிலை ஏற்படின் தங்களது கருத்துகளை புதுப்புது தலைப்புகளில் சில தினங்களுக்கு காட்சிப்படுத்தும் தளமாக விக்கிப்பீடியா செயற்பட தொடங்கிவிடும்.) இறைவன் வேதம் என்று குறிப்பிடுவது திருக்குர்ஆனையே என்பதால் ஆதாரங்களை வெளிக்கொண்டுவர திருக்குர்ஆனிய வசனங்களை சுட்டிக்காட்ட முனைகிறேன்.


///இக் கட்டுரையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றன்ங்கள் ஏறுபுடையவை அல்ல. ///

///பக்க சார்பு மிக்கதாகவும் ஆக்கி உள்ளார். ///

குறித்த வசனங்களை சுட்டிகாட்டுங்கள் கலந்தாலோசிக்கலாம். நிச்சயமாக நடுநிலையுடன் கலந்தாலோசிப்பேன். எனது எழுத்துகளிலிருந்து விளங்கியிருப்பீர்கள். திருக்குர்ஆனிய வசனங்கள் நீக்கப்படவேண்டிய அவசியம் இல்லை. காரணம் இஸ்லாமும் திருக்குரானும் வெவேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இரண்டும் ஒன்றே. இருந்தும் சுமூக நிலை ஏற்பட அவைகளை நீக்கவும் தயார். பிற்காலங்களில் மற்ற பயனர்களுக்கு எனது கருத்தை மேற்கோளிட முயற்சித்தீர்களானால் ஆமோதிக்க மாட்டார்கள்.

--Mohamed S. Nisardeen 18:42, 8 மார்ச் 2009 (UTC)

நிசாருதீன், உங்கள் கூற்றுகளும் கேள்விகளும் மிகவும் அறநேர்மை உடையதாகவே எனக்குப் படுகின்றது. நற்கீரனோ, மற்ற பயனர்களோ, ஊன்றிக் கேட்டு வளர்முகமாக திருத்தங்கள் செய்ய வேண்டுகிறேன். இசுலாமியர் அல்லாதவர் நடுநிலை நின்று திறந்த மனத்துடன் படித்தால், அனைத்தும் ஏற்றுக்கொள்ளகூடியதாக இருக்குமாறு, நல்ல நடையில் கருத்துக்களை, தகவல்களைத் தரும் கட்டுரையாக இது இருக்க வேண்டும் என்பது என்னுடைய அவா மட்டுமல்ல, எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கும். நிசாருதீன் அவர்க்ளுக்கு என் பாராட்டுகள். --செல்வா 18:55, 8 மார்ச் 2009 (UTC)

நன்றி ஐயா

இங்கு எனது எழுத்துக்கள்தான் பதியப்பட வேண்டும் என்று நான் அடம் பிடிக்கவுமில்லை. ஆதாரமற்ற விடயங்களை சுட்டிக்காட்டுகிறேன் நீங்களே விருப்பமிருந்தால் நீங்களே திருத்தி விடலாம். அல்லது என் மீது நம்பிக்கை கொண்டு சுதந்திரமாக விடுங்கள் குறையிருந்தால் சுட்டிகாட்டும் போது மாற்று கருத்தில்லாமல் உடனே ஏறுக்கொள்வேன். ஆங்கிலத்தில் மிக நுணுக்கமாக இக்கட்டுரை அதிகாரிகளால் பாதுகாக்க படுகிறது. தாங்கள் அனைவரும் செய்வீர்கள் என எதிர் பார்க்கிறேன். நன்றி--Mohamed S. Nisardeen 19:32, 8 மார்ச் 2009 (UTC)

ஆங்கிலக் கட்டுரையில் வரலாறு நீளமானதே தொகு

இங்கிருந்து வரலாறு ஏன் நீக்கப்பட்டது. ஆங்கிலக் கட்டுரையில் அதே நீளமுடையதே. --Natkeeran 14:43, 8 மார்ச் 2009 (UTC)

இஸ்லாமிய வரலாறு பதினைந்து நூற்றாண்டுகளை கடந்து செல்லும் நீண்ட வரலாறு ஆங்கில விக்கியில் தனிப்பகுப்பாகவே கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தனிக் கட்டுரையினுளையே நிறைய விடயங்களை தொகுக்க வேண்யுள்ளது. நீக்கப்பட்டதற்கான இன்னும் காரணங்களை முன் வைக்கிறேன். சேர்க்கப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களை நீங்கள் தரலாம்.

  • 80 கிலோ பைட்ஸ் அளவையும் தாண்டியிருப்பது பயனர்களுக்கு உகந்ததல்ல என wikki engine எமக்கு கூறுகிறது. இப்பாரிய இடத்தில் கூறத்தக்களவு இஸ்லாத்தின் தகவல்கள் இல்லை இன்னும் தொகுக்கப்பட வேண்டியுள்ளது.
  • [[4]]இஸ்லாம் "அதனை ஏற்றுகொண்டவர்கள் கடந்து வந்த வரலாறுகளை சட்டங்களாகவோ வணக்கங்களாகவோ ஏற்காது மிகத்தெளிவாக கோடிட்டு பிரித்துள்ளதை ஆதார பூர்வமாக தந்துள்ளேன். ஆக இத்தலைப்பிலிருந்து பிரிக்கப்பட வேண்டிய முதலாவது பகுதி இதுவே.
  • தமிழ் ஒருங்குறியின் அளவுக்கும் ஆங்கில ஒருங்குறியின் அளவுக்கும் வித்தியாசம் அறிவீர்கள். தகவல்களும் நகல் பண்ணுவதை எதிர்பார்த்தீர்களானால் அறபு மொழியிலிருந்தும் ஒரே மேற்கோளுடன் அனைத்தையும் நகல் பண்ணலாம். அது பிற்போக்கு தனமான வாதம் என்றே கருதுகிறேன். முடிந்த மட்டும் சிறப்பாக ஆதார பூர்வமாக அமைப்பதே கலைக் களஞ்சியத்துக்கு மதிப்பு.

--Mohamed S. Nisardeen 19:25, 8 மார்ச் 2009 (UTC)


95 % தகவல் பிழை தொகு

ஒரு இசுலாமியப் பயனர் இசுலாம் பற்றி எழுதிய கட்டுரை 95% தகவல் பிழை என்று கோருவது என்ன சந்தேகிக்க வைக்கிறது. அந்தப் பயனர் பதிலுரை தருவதற்கு சந்தர்ப்பம் தந்திருக்கலாம். இரண்டுமாதங்களுக்கு பின்னர் ஒரு புதுப் பயனர் மேன்படுத்திய கட்டுரை. இயன்றவரை கட்டுரை பந்தி முறையில் எழுதுவது நன்று. பொதுப் பயனர்களை மனதில் நிறுத்தி, தகவல் நோக்கில், முக்கியமான மேற்கோள்கள் மட்டும் தருவதும் நன்று. உள்ளடக்கம் பெரிதும் மாற்றாமல் நடையில் சில மாறுதல்கள் செய்துள்ளேன். --Natkeeran 20:19, 8 மார்ச் 2009 (UTC)



பந்தி முறையில் எழுவது குறித்த ஆலோசனைகள் எனக்கு தரப்படவில்லை. முன்வந்து திருத்தியமைக்காக நன்றி.

அடுத்து விக்கிப்பீடியாவின் அதிகாரபூர்வ நிர்வாகம் பயனர்களின் தரத்தையோ நம்பகத்தன்மையையோ எதிர்பார்க்காது தகவல்களின் தரம் மட்டுமே உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது. இதுவே விக்கிப்பீடியாவின் எழுச்சிக்கு காரணம் என்பதை அறிவீர்கள். அதனால் பயனர்களை விமர்சிப்பதையும் மேற்கோள் காட்டுவதையும் நான் விரும்பவில்லை. அது போலவே மற்ற பெரும்பாலானவர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடைய கட்டுரைகளை இதைபோல் அமைக்குமாறு வற்புறுத்தும் இரண்டாந்தரமான செயல்களையும் நிச்சயமாக நான் செய்யமாட்டேன்.

அடுத்து

உங்களுடைய திருத்தத்துடன் முரண்படவேண்டிய சந்தர்ப்பமேற்பட்டுள்ள முதன்மையான விடயம். தொகு

////////இச்சமயம் முகம்மது நபி என்பவரால் பரப்பப்பட்டது. ////////

"பரப்பப்பட்டது" என்ற பிரயோகம் தகுந்ததல்ல.

காரணம் முஹம்மத் நபி (ஸல்) முதன்முறையாக தனது குடும்பத்தினரை அழைத்து "நபித்துவத்தை" அறிவித்ததை தவிர

  • இவர்கள் பகிரங்கமாக சொற்பொலிவு பிரச்சாரம் செய்த வரலாறும் இல்லை,.
  • மேடை போட்டு பேசிய வரலாறும் இல்லை.
  • ஆர்ப்பாட்டங்களோ, சத்தியாகிரகங்களோ இவர்கள் செய்த்ததற்கான துளியளவு ஆதாரமும் இல்லை.

இவர்கள் செய்தது எந்நேரமும் தன்னை சூழ்ந்திருந்த தோழர்களுக்கு அறிவுரைகள் கூறியது மட்டுமே. "பரப்பினார்கள்" என்பது எங்கிருந்து எடுக்கப்பட்டது. உண்மையிலேயே இன்றைய தலைவர்கள் ஒலி பெருக்கி துணைகொண்டு செய்யும் பிரச்சாரங்களையும் "அறிவித்தார்கள்" என்று கூறுவதே வழக்கம் அதுவே தமிழ் மொழிநடையின் பண்பாடு, நாகரிகம் என்பதை அறியத்தருகிறேன்.

யுத்தம் என்ற கருப்பொருளிலிருந்து எடுத்தீர்களானால் அதையும் விளக்க வேண்டியது கடமையாகிறது. தனது அரசின் பாதுகாப்பிலிருந்த முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்களையும்(அதாரம் தரமுடியும்) அந்நிய படைஎடுப்பில் இருந்து பாதுகாப்பதற்காக பலம் பொருந்திய படையணிகளை பலம் குன்றிய நிலையில் எதிர்த்து நின்றுள்ளார்கள். "யுத்தங்கள்" பரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்தால் தனது ஆட்சிக்குள் எவ்வாறு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இடமளித்திருக்க முடியும். யுத்தங்கள் மூலம் இஸ்லாத்தை ஏற்றவர்கள் வரலாற்றில் யார்?

தமிழ் மொழியின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் பேணுமாறு வலியுறுத்துகிறேன். --Mohamed S. Nisardeen 11:08, 9 மார்ச் 2009 (UTC)

இரண்டாவது விடயம். தொகு

////இது கிறித்தவம், யூதம் போன்று /////

உலக சமயங்கள் என்ற முதன்மையான கட்டுரை இருக்கையில் ஒரு உப தலைப்பின் கீழ் ஏனைய உபதலைப்புகளையிட்டு விளக்க வேண்டிய அவசியம் என்ன? உலக பெரும் சமயங்களில் ஒன்று என்ற தெளிவு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தலைப்பின் கீழ் சென்றே தெளிவற்ற பயனர்கள் சமயத்துக்கான விளக்கம் பெற வேண்டும். உதாரணம் "ஐக்கிய அமெரிக்கா" என்ற தலைப்பின் கீழ் விளக்கும் போது "இலங்கையைப் போன்ற ஒரு நாடு" என்று விளக்கம் கொடுக்க முடியாது. ஐக்கிய அமெரிக்காவின் வரலாறு குறுகிய ஐந்நூறு வருடங்களைக்கொண்டிருந்தாலும் கூட அதன் தனித்தன்மை வேறு. இல்லை இந்த பார்வையை காட்டவே வேண்டும் என்ற நிலையிருந்தால்;

(இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம்;. இன்னும் (வேறு) தூதர்கள் (பலரையும் நாம் அனுப்பினோம்;. ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் -4:164)

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (திருக்குர்ஆன் -4:164)

என்ற இஸ்லாமிய பார்வையையும் மிக சுருக்கமாக நிச்சயம் காட்டவே வேண்டும். (தொடுப்பு கொடுப்பதுதான் உங்களது நோக்கம் என்றால் மதிப்பு தருகிறேன்; ஆறாம் வசனத்தில் கொடுக்கலாம்.) --Mohamed S. Nisardeen 16:34, 10 மார்ச் 2009 (UTC)

மூன்றாவது விடயம். தொகு

////ஒரு ஆபிரகாமிய சமயம் ஆகும்.//// இரண்டு பார்வைகளும் காட்டப்பட வேண்டும் என்பதே நடுநிலை என்பதால் இதற்கான இஸ்லாமிய பார்வை;

///இசுலாமின் மூலமான திருக்குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் தொடக்கம் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. ////

என்ற வசனம் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. --Mohamed S. Nisardeen 16:34, 10 மார்ச் 2009 (UTC)

முதன்மை பந்தியின் உள்ளடக்கம். தொகு

  • 01.இசுலாம் அல்லது இஸ்லாம் என்பது ஏழாம் நூற்றாண்டில் சவுதி அரேபியாவில் தோன்றிய சமயமாகும்.
  • 02.இது கிறித்தவம், யூதம் போன்று ஒரு ஆபிரகாமிய சமயம் ஆகும்.
  • 03.இச் சமயம் முகம்மது நபி என்பவரால் பரப்பப்பட்டது.
  • 04.சுலாமின் மூலமான திருக்குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் தொடக்கம் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
  • 05.உலகம் முழுவதும் 1 இருந்து 1.8 மில்லியன் வரையான மக்கள் இச் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள்.
  • 06.இசுலாம் கிறித்தவத்துக்கு அடித்தபடியாக உலகில் இரண்டாவது பெரிய சமயமாகும்.
  • 07.இசுலாமில் சன்னி, சியா என இரு பெரும் பிரிவுகள் உள்ளன.


நீக்குவதற்கு நிசார்தீன் பரிந்துரைப்பது. தொகு

இரண்டாம் மூன்றாம் வசனங்கள் காரணங்கள் விரிவாக தரப்பட்டுள்ளது [[5]]

தோற்றிப் பரப்பினார் என்பதே நான் புரிந்து கொண்டிருப்பது. பரப்பினார் என்பது அவர் அம் மதம் வளர வழி வகுத்தார், உதவினார் என்று பொருள் தருவதுதானே. தன் உடனாளிகளுக்கு அறிவுரை வழங்கினாலும் அதுவும் தன் "அறிவை", "தான் உணர்ந்ததை", "தனக்கு உணர்வித்ததை" பகிர்ந்தார், என்றாலும் பரப்பினார் என்றுதானே பொருள்படும்? --செல்வா 16:51, 10 மார்ச் 2009 (UTC)

இங்கு ஒரு வரியில் நான் சுட்டி காட்ட வேண்டிய மிக சாதாரண நாகரிகமான திருத்தத்தையே நண்பர் நற்கீரனுக்காக ஆதார பூர்வமாக சுட்டிக்காட்ட முனைந்தேன். "பரப்பினார்" என்பதை சகல மதிப்பிற்குரியவர்களுக்கும் கூறுவதும், எழுதுவதும் தமிழ் வழக்கில் இருந்தால் நான் முரண்படப்போவதில்லை. "அறிமுகப்படுத்தினார்" என்பதே அழகானது. யார் மூலமாக அறிமுகமானது என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும். பயமுறுத்தி செய்வித்ததையே தமிழ் வழக்கில் தற்காலத்தில் "பரப்பினார்" என்றாளப்படுகிறது அவ்வாறல்ல என்பதை தெளிவு படுத்தும் சின்ன வரியை மேலதிகமாக நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன். (உளப்பூர்வமாக.) --Mohamed S. Nisardeen 17:38, 10 மார்ச் 2009 (UTC)

நிசாருதீன், உங்கள் கருத்து விளங்குகின்றது. பரப்பினார் என்பது ஏதோ குறைவுடையதாகவே படுகின்றது. தோற்றுவித்துப் பரவ வழி கோலினார் என்று கூறலாமா? எப்படி எழுதினால், குறைவில்லாமல், சரியாக, சான்றடிப்படையாக இருக்குமோ அப்படியே நீங்கள் எழுதி இடுங்களேன். நற்கீரனுக்கோ வேறு யாருக்குமோ மறுப்பு இருந்தால் தெரிவிக்கட்டும். --செல்வா 18:18, 10 மார்ச் 2009 (UTC)

இந்த கருத்தை இப்போதே வாசித்தேன் நன்றி. அனைவரும் ஒருமித்து முடிவெடுங்கள் அப்படியே விட்டாலும் உடன் படுவதை தவிர வேறு நாகரிகம் எனக்கு தெரிய வில்லை. நன்றி. --Mohamed S. Nisardeen 18:35, 10 மார்ச் 2009 (UTC)

////இச்சமயம் முகம்மது நபி (சல்)அவர்களால் அறிமுகமாகி பரவியது. ////என்பதை பரிசீலிக்கலாம். --Mohamed S. Nisardeen 19:38, 10 மார்ச் 2009 (UTC)

இப்பந்தியில் ஒவ்வொரு சொற்களையும் பேச்சுப்பக்கத்தில் உரையாடி திருத்துவது சிறந்தது. --Mohamed S. Nisardeen 16:34, 10 மார்ச் 2009 (UTC)

"இசுலாமிய நம்பிக்கை" முன்னைய இறைத்தூதர்கள் என்பதன் கீழ் கொண்டு வரப்பட வேண்டியவைகள் பொருத்தமான தலைப்புகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்வீர்கள் என கருதுகிறேன். --Mohamed S. Nisardeen 18:29, 10 மார்ச் 2009 (UTC)



[[6]]மேற்கோளில் தவறிருந்தால் மன்னித்து நீக்கலாம்.

நன்றாகச் சொன்னீர்கள்!! சில ஆண்டுகள் கழித்து வந்து கேட்டால் மறுமொழி தரலாம் :) பொதுவாக விக்கியில் சான்றுகோள் தரும்பொழுது மேற்கோளில் உள்ள குறிப்பிட்ட வரியை அல்லது சொற்கோவையை (phrase) தருவது உதவும் என்பர். மேலே நீங்கள் சான்றுகோளாக தந்துள்ள பல நூல்களில்/கட்டுரைகளில் உறுதிபயக்கும் வரிகளையும், உறுதிபயக்கா வரிகளையும் தேடிக் கருத்து சொல்வது மிகக்கடினம் (இயலாததல்ல). --செல்வா 18:24, 10 மார்ச் 2009 (UTC)

கருத்து பரிமாற்றங்கள். தொகு

செல்வாவின் கூற்றை மீண்டும் விளக்க முடியுமா? விளங்குதில்லை ஐயா.--Mohamed S. Nisardeen 18:32, 10 மார்ச் 2009 (UTC)

நீங்கள் தொடுப்பு கொடுத்துள்ள இடத்தில் ஏராளமான நூல்கள்/கட்டுரைகள் உள்ளன. நீங்கள் விடுத்த மேற்கோளில் தவறிருந்தால் மன்னித்து நீக்கலாம் எப்படி எதிர்கொள்வது? ஒரு நூலில் ஒரு வரி, அல்லது ஒரு சொற்கோவை சான்றாக அமையும் என்றால் அதனைக் குறிப்பிடலாம். ஒரு பத்தி அல்லது ஒரு சில பக்கங்களில் உள்ள கூற்றுகள் வலுவூட்டும் சான்றுகோளாக இருந்தால் அப்பக்கங்களைச் சுட்டலாம். பொதுப்பட நூல்களை மொத்தமாக சுட்டுவது பலநேரங்களில் சரியான சான்றுகோளாக அமையாது. எனவே உங்கள் கூற்றாகிய மேற்கோளில் தவறிருந்தால் மன்னித்து நீக்கலாம் என்பனை செயலாக்க பல ஆண்டுகள் ஆகலாம் என நன்னோக்க வேடிக்கையாகச் சொன்னேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள், அருள்கூர்ந்து. --செல்வா 19:04, 10 மார்ச் 2009 (UTC)

நன்றி மேற்கோள்கள்[[7]] என்ற தலைப்பில் 2வது வருவதையே நான் சுட்டினேன். கூகிள் மொழிமாற்றுக்கான இணைப்பை முயற்சித்ததில் சின்ன தோல்வி அதனாலேயே அவ்வாறு கூறினேன். அரபு மொழியில் "லாஇலாஃக இல்லல்லாஃ முஹம்மதுர் ரசூலுல்லாஃ" என்று எழுதப்பட்டுள்ள எழுத்துகளே அவை; நூல் அல்ல. உசாத்துணைகள்[[8]] என்ற தலைப்பின் கீழ் வருபவைகள் நான் தொகுத்ததல்ல அவைகள் மற்ற பயனரால் இஸ்லாமிய வரலாறுக்காக இடப்பட்டவைகள். அப்பக்கத்திலும் இதே உசாத்துணைகள் கொடுக்கப்பட்டுள்ளன பின்னர் தேவையற்றவைகளை நீக்கி விடலாம். சில வேலைகளில் கோபம் உச்சம் அடைவதும் பின்னர் சுதாகரித்துக் கொள்வதும் நான் உட்பட மனிதர்களின் பண்பு என்பதை நான் அறிவேன். தவறாக நிச்சயம் கொள்ள மாட்டேன் அதிலும் மதிப்பிற்குரியவராகவே உங்களை நோக்குகிறேன். நன்றி --Mohamed S. Nisardeen 19:23, 10 மார்ச் 2009 (UTC)

ஓ, நீங்கள் 2 ஆவது மேற்கோளைச் சுட்டினீர்களா? நான் தவறாகப் புரிந்து கொண்டேன். நான் உசாத்துணை நூல்களின் பட்டியலைப் பார்த்து மலைத்துப் போனேன் :) அரபு மொழி வாசகத்தின் பொருள் ""There is no god but Allah and that Muhammad is the Messenger of God" என்று கூகுள் மொழிபெயர்ப்பி கூறுகின்றது. அத்தொடர் (லாஇலாஃக இல்லல்லாஃ முஹம்மதுர் ரசூலுல்லாஃ) எங்கு எழுதப்பட்டுள்ளது? அக் குறிப்பும் பயனுடையதாக இருக்கும் அல்லவா? நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்று அறிந்து மகிழ்கிறேன். உங்கள் மதிப்புக்கும் நன்றி. நானும் உங்களை அப்படித்தான் நோக்குகின்றேன். --செல்வா 19:39, 10 மார்ச் 2009 (UTC)

பகிர்ந்து கொண்டமைக்காக நன்றி. [[9]]கூகிள் மொழி மாற்றி இவ்விடத்தில் பயன் பாட்டிற்கு உகந்ததா?

இருக்கும் உள்ளடக்கங்களுக்கான "உசாத்துணைகளை" ஒவ்வொரு வரிகளாக கொடுக்க முயற்சிக்கிறேன். ஏற்கனவே இருந்தவைகள் பெரும்பாலும் இசுலாமிய வரலாறுக்கானவைகள் என்பதாலும், அங்கு இணைக்கப்பட்டுள்ளதாலும்- [[10]] இடவசதி கருதி நீக்கியுள்ளேன்.--Mohamed S. Nisardeen 19:51, 10 மார்ச் 2009 (UTC)

//கூகிள் மொழி மாற்றி இவ்விடத்தில் பயன் பாட்டிற்கு உகந்ததா? // இரண்டு மொழியும் நன்றாக அறிந்தவர்கள் மட்டுமே இதற்கு மறுமொழி கூறமுடியும். எனக்கு அராபிய மொழி தெரியாது. ஆகவே நான் ஏதும் கூற இயலாது. தெரிந்துகொள்ள ஆர்வம் உண்டு. இந்தி-ஆங்கிலம் மொழிபெயர்ப்புகள் அவ்வளவு நன்றாக இல்லை. 'டாய்ட்சு (செருமன்)-ஆங்கிலமும் சில இடங்களில் சரியாக இல்லை. ஆனால் இவை பெருமளவிற்கும் (பொதுவாக) உதவியாக உள்ளன. --செல்வா 23:58, 10 மார்ச் 2009 (UTC)

சுருக்கமான கருத்து தொகு

  • அறிமுகப்படுத்தினார் என்ற சொல்லாக்கம் எனக்கு உடன்பாடனதே.
  • கிறித்தவ, யூதம் என்று சுட்டிக்காட்டியது இசுலாமிக்கும் அந்த சமயங்களுக்கும் இருக்கும் தொடர்பை கோடிட்டு காட்டுவதற்கேன். ஆபிராகமிய சயங்கள் என்று ஒரு கட்டுரை இருந்தால் அந்த தகவல் அவசிமற்றது.
  • இதர வசனங்கள் பற்றி நீங்கள் விமர்சனங்களை முன்வைக்கவில்லை என்று கருதலாமா...!? (முதல் பந்தியில்)--Natkeeran 23:35, 10 மார்ச் 2009 (UTC)
இசுலாம் ஆபிரகாமிய சமயம் என்பதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. யூத , கிறித்தவ சமயங்களின் பல நபர்களையும், கோட்பாடுகளையும் வரலாற்று பின்னணியையும் இசுலாம் கொண்டிருக்கிறது என்பதால இதையும் ஆபிரகாமிய சமயங்களில் ஒன்றாக கருதுகின்றனர். இதில் ஒன்றும் தவறு இருப்பதாக தெரியவில்லை. --Daniel pandian 23:57, 10 மார்ச் 2009 (UTC)


"இது கிறித்தவம், யூதம் போன்று ஒரு ஆபிரகாமிய சமயம் ஆகும்." என்ற வசத்தை "இசுலாம் ஒரு ஆபிரகாமிய சமயம்" என்று மட்டும் கூறுவது போதும் என்று கூறுகிறார். ஆபிரகாமிய சமயம் என்று ஓரு கட்டுரை இருந்தால், அவரது கூற்றை ஏற்றுக் கொள்வதில் எனக்கு சிக்கல் இல்லை. தமிழ் விக்கிப்பீடியா வாசகர்கள் ஆபிரகாமிய சமயங்கள் என்பதை சுருக்கமா சுட்டி, அவற்றுக் கிடையேன உறவை விளக்கவே அவ்வாறு குறித்தேன். அதைப் பற்றி பந்தி பந்தியாக விவாதிக்க ஆற்றல் இல்லை. --Natkeeran 00:15, 11 மார்ச் 2009 (UTC)

கருத்து பரிமாற்றங்களைக் கண்டத்தில் மகிழ்ச்சி. உங்களது கருதுகோள் போல இதர வசனங்களை முக்கியமானதாகவே கருதுகிறேன். --Mohamed S. Nisardeen 08:02, 12 மார்ச் 2009 (UTC)

இசுலாம் வார்ப்புரு தொகு

நிசாருதீன், இசுலாம் தொடர்பான வார்ப்புருவைத் தனியான வார்ப்புருவாக உருவாக்கி கட்டுரையில் இணைத்துள்ளேன். சரி பார்க்கவும். மேலும் தாஜ்மகால் படிமம் இங்கு தேவையில்லை எனக் கருதி நீக்கியிருக்கிறேன். அதுவும் கட்டுரையின் முற்பக்கத்தில் தேவையில்லை. அது இங்கு இருக்க வேண்டுமானால் ஒரு காரணத்தைத் தெரிவித்து மீண்டும் இணைத்து விடுங்கள்.--Kanags \பேச்சு 12:08, 14 மார்ச் 2009 (UTC)

உள்ளடக்கங்களை சீர்திருத்திய பின் வார்ப்புருக்கள் தொடர்பாக கருத்து பரிமாறும் எண்ணம் இருந்தது. அதற்கேற்றாற் போல் நேர்த்தியாக வடிவமைத்தமைக்கு நன்றிகள். அடுத்து தாஜ் மஹால் இக்கட்டுரைக்கு தேவையற்ற ஒன்று என்பதாலேயே இஸ்லாமிய வரலாறு பகுதிக்கு நகர்த்தியிருந்தேன். நிச்சயமாக அது இந்திய இஸ்லாமிய வரலாற்றுக்குள் கொண்டு வரப்பட வேண்டிய கட்டிடமாகவே கருதுகிறேன் உங்களது பங்களிப்பு மகிழ்ச்சி தரக்கூடியதே. --Mohamed S. Nisardeen 17:44, 16 மார்ச் 2009 (UTC)

மலக்குகள் என்பது என்ன? மலக்கு என்றால் தமிழில்- கல்க்கமடையச் செய், குழப்பு என்று வருகின்றது இவ்விடத்தில் என்ன பொருள் தருகின்றது. கட்டுரை நன்றாக உள்ளது பல சந்தேகங்களுக்கு தெளிவு கிடைத்த்து. இருப்பினும் பல வார்த்தைகள் உருது சொல்லின் பிரதிபலிப்பாக இருக்கின்றது. ஒரு இடத்தில் மட்டும் உருது சொல்லின் ஒலி வார்த்தையை குறிப்பிட்டு ஏனைய இடங்களில் தமிழ் எளிய வார்த்தைகளேயே பயன்படுத்தலாமே? பல இடங்களில் நாயன் ஏக என்று வார்த்தைகளில் சில எழுத்துக்கள் தவறியனவாக வருகின்றன அவைகள் உண்மையில் வரும் வாக்கியங்களா? வார்த்தைகளா? அல்லது எழுத்துப் பிழைகளா? வசனங்களாக குறிப்பிடுவதை விட பொருள் குறித்து வாக்கியங்கள் அமைவது சிறந்தது. அனைவரும் பயன் பெற இயலும். இல்லையேல் பிரச்சாரம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்பது என் கருத்து. இசுலாம் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளத் தேவையான கட்டுரை என்பதில் சந்தேகமில்லை. தமிழ் மிக குறைவாக உள்ளது என்பதை தவிர. பல இடங்களில் பொருள் புரிந்து கொள்ள சற்று கடினமாக உள்ளது. உருவாக்கிய நண்பருக்கு நன்றி--செல்வம் தமிழ் 03:43, 2 ஜூன் 2009 (UTC)


முரண்பாடுகள் தொகு

கட்டுரையில் பெரும்பாலன இடங்களில் வன்முறைக்கு, ஏதேச்சதிகாரத்துக்கு ஆதரவாகவே உள்ளன. இவைகள் உண்மையில் இசுலாமில் உள்ளவைதான?

உன்னிலும் என்னிலும் இருக்கும் இயற்கை (இறைவன்) ஈ எரும்பிலும் இருக்கின்றான்

என்ற கோட்பாடு சமத்துவத்தை நிலைநாட்டுகின்றது. கொல்லாமையை வலியுறுத்துகின்றது. இங்கு அவ்வாறு எவ்விடத்திலும் வலியுறுத்தவில்லை. மாற்றாக இறைவன் என கருதப்படுகின்றவரான முகம்மது நபி பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக் கூடாது என்றத் திருத்தங்கள் கொண்டு வந்தார் என்பதும் உண்மைதானா? அப்படியானால் இதற்கு முன் ஏன் கடைப்பிடிக்கவில்லை அதற்கு முன் நிறையபேர் கொல்லப்பட்டிருப்பார்கள்.

உலகில் பல மதங்கள் தோன்றியுள்ளன. பல மகான்களின் பெயர்களில் மக்களே மதங்களைத் தோற்றுவித்து அது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றது. அனைத்தும் அல்லது பெரும்பாலான மதங்கள் தியாகங்களின் அடிப்படையிலேயே தோன்றியுள்ளன. அம்மகான்கள் மக்களுக்காக தங்கள் உயிரை ஈந்திருக்கிறார்கள் அவர்களை போற்றுங்கால் அவர்களை மக்கள் இன்றளவும் கடவுளாக போற்றுகின்றனர். இதில் இந்துக்கள் இயற்கையைத் தெய்வங்களாக (பிறரும் இருக்கலாம்) பாவித்து பின் உருவ வழிபாட்டுக்கு மாறியவர்கள். (ஆனால் அதுவும் மகான்களால் தோற்றுவிக்கப்பட்ட மதம் அல்ல-மக்களால் பின்பற்றபட்ட ஒன்று). இயற்கையை வழிவபடுதும் ஒரு உயரிய நோக்கம்தான்.

ஆனால் இசுலாம் மட்டும் முகம்மது நபி என்ற மகானால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுங்கால் அவரே இந்த வன்முறையை கோட்பாடாக வலியுறுத்துவது மனிதத்துவத்துக்கு எதிரானது என்பது தெரியவில்லையா? பெண்கள்,குழந்தைகளைத் தவிர மற்றவர்களை கொல் என்பது போன்ற வாசகங்கள் (பெண்கள் குழந்தைகளுக்கான விலக்கு கூட உள் நோக்கம் கொண்டவை) அகிம்சை முறைக்கு நேர் எதிரானது, மனித நேயமற்றது இதை எந்த வகையிலும் நியாப்படுத்தமுடியாது.

பெண்களின் ஏற்றத்தாழ்வுகளை, உரிமைகளை, சலுகைகளை வகுப்பதற்குகூட ஆண்மகன் தானா? அதைக்கூட பெண் தீர்மானிக்க முடியாதா? அவர்கள் சுதந்திரம் அவர்களிடமே உள்ளது. பெண்கள் முகமூடி அணிவது போன்ற அடிமைத்தனங்களை வகுப்பவர் கடவுளாக இருக்க முடியுமா. அவர்கள் தாயும் பெண்தானே கடவுளாயிருந்தாலும் அவரை ஈன்றவர் பெண்தானே.

வன்முறையில் மதத்தை வளர்த்து சாதிக்க நினைப்பது என்ன என்பதை முகம்மது நபி விளக்கவில்லை. மதத்தை உருவாக்க மெக்கா-மதினா போரில் பல்லாயிர கணக்கானவரை வெட்டி சாய்த்துள்ளார் என்பது வரலாறு. இந்த கோட்பாடுகளே இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகின்றதா? இதை கடைப்பிடித்துதான் ஆகவேண்டுமா? அப்படியானால் முகம்மது நபி அன்றைய மத புரட்சியாளர்.

கடவுளின் முன் அனைவரும் சமம் எனப்படும் பொழுது அவர்களை கடவுளின் சந்நிதானத்துக்குள் அனுமதிக்க மறுப்பது ஏன்? தலாக் ஏன் பின்பற்றப்படுகின்றது? பெண்கல்வியை மறுப்பது ஏன்? பொதுச்சட்டத்தை ஏற்க மறுப்புது ஏன்? என்ற பல கேள்விகளுக்கு இக்கட்டுரை ஆதாரத்துடன் விளக்க மறுக்கின்றது. இக்கட்டுரையின் பகுதியில் முரண்பாடுகளாக இவற்றை சுட்டி காட்ட வேண்டும். ஆங்கில கட்டுரையிலும் சுட்டி காட்ட வேண்டும்.

இன்றளவும் பல இசுலாமியர் மதத்தின் பெயராலேயே அரசியலில் நுழைகின்றனர். மதத்தின் பெயராலேயே அரசியல் கட்சிகளின் பெயரை வைக்கின்றனர் இது அனைவரிடமிருந்து இவர்களை அந்நியப்படுத்துகின்றன அல்லது இவர்களே அந்நியப்படுத்திக் கொள்கின்றனர். இது மதவாதத்தையே காட்டுகின்றது. இதை உறுதி செய்வது போல் இவற்றில் பல வாசகங்கள் உள்ளன. இவற்றை திறந்த மனத்துடன் நடுநிலை நோக்குடன் அலச வேண்டும். இது ஏதோ தவறான நோக்கத்துடன் விசமிகள் இக்கோட்பாடுகளை வகுத்துள்ளனர். --செல்வம் தமிழ் 07:11, 2 ஜூன் 2009 (UTC)

செல்வம், இங்கு நாம் கட்டுரையையும் அதன் உள்ளடக்கத்தையும் மட்டும் பற்றி உரையாடலாம். ஒரு சமயத்தில் முரண்பாடுகள் உள்ளனவா இல்லையா போன்ற சொந்த கருத்துக்களை இங்கு இட வேண்டாம். கட்டுரைகளில் உள்ள கூற்றுகள் தவறு என்றால் தகுந்த சான்றுகளுடன் மாற்றியமைக்கலாம். மற்றபடி தனி நபர்களோ சமயங்களோ பின்பற்றும் கோட்பாடுகளை விமர்சிப்பதற்கான களம் இதுவல்ல. அது பற்றாளர்களைப் புண்படுத்தவும் கூடும். -- சுந்தர் \பேச்சு 10:45, 4 ஜூன் 2009 (UTC)
நாம் இங்கு செய்வது ஒரு விடயத்தை பற்றிய செய்தியை சேகரித்து நடுநிலையுடன் இடுவது மட்டும் அந்த விடயத்தின் நல்லது அல்லது கெட்டதை பற்றி நாம் இங்கு பேசக்கூடாது செல்வம். --கார்த்திக் 13:26, 4 ஜூன் 2009 (UTC)

சில விடயங்களே வன்முறைக்கான செயல்களைத் தூண்டுவதாக அமைதல் கூடாது. கடவுள் சொல்லிவிட்டார் ஆகையால் நாம் செய்யலாம் என்று ஆகிவிடும். எந்த சமயமாக இருந்தாலும் சரி. கூறப்படுகின்றது இவ்வாறு சொல்லப்படுகின்றது என்று கூறவேண்டும் ஸ்டேட்மென்டாக கூறக்கூடாது. அப்படியானால் முரண்பாடுகளில் அவைகளையும் இடலாம். இதில் ஆதாரம் என்று என்னால் எதையும் கூறமுடியாது. இவையனைத்தும் உருது. மாகாத்மா காந்தி கூறியுள்ள வாசகத்தையும் உள்ளிட்டுள்ளார். அதே மாதிரியான கருத்து தான் என் கருத்தும்(பார்க்க முகம்மது நபி). கூடுதலாக இனைறைய நடப்பை கூறியிருப்பேன். மேலும் கட்டுரை குறித்த என் பாரட்டை முதலிலியே தெரிவித்துவிட்டேன். இது கட்டுரையாளரை குறிப்பதல்ல. அதில் உள்ள கருத்தை குறிப்பதாகும். அது தவறல்ல. நீங்கள் தான் இதை பெரிதாக்கும் பொழுதுதான் பெரிதாக்கப்படுகின்றது. அவரே முரண்பாடுகளைச் சுட்டி காட்டியிருக்கின்றார். நான் கூறிய கருத்தை நீங்கள் வேறுமாதிரியாக ஆக்கவேண்டாம். இன்று நடக்கும் வன்முறைக்கு இன்னும் உரமாக கட்டுரைகள் அமைதல் கூடாது. அதனால் இழக்கப்படும் உயிரிழப்புகளுக்கு கட்டுரை ஒரு காரணமாக அமைதல் கூடாது, நாம் இதுவரை பல கட்டுரைகளில் அம்மாதிரி நடைமுறைகளையே பின்பற்றி வந்துள்ளோம்.சில நேரங்களில் உண்மை என்றாலும் தவர்த்திருக்கின்றோம். அல்லது முரண்பாடுகளில் தெரிவித்திருக்கின்றோம். இது குரானில் உள்ள வாசகம். அவர் என்ன செய்வார். இந்த வாசகம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் கவனிக்கத் தவறுதல் கூடாது--செல்வம் தமிழ் 07:24, 6 ஜூன் 2009 (UTC)


திரு செல்வம் அவர்களுக்கு,
நீங்கள் நினைப்பது போல் இசுலாம் வன்முறையை ஆதரிப்பது இல்லை. இந்த கட்டுரையும் அங்கே. இந்த கட்டுரையை எழுதியவன் என்கிற முறையிலும், ஒரு இசுலாமிய நடுநிலையாலன் என்கிற முறையிலும் உங்கள் பதிப்புக்கு எனது பதில் இங்கே..

  • முதலில் நீங்கள் குறிப்பிட்டது போல முகம்மது கடவுள் இல்லை. அப்படி நான் இந்த கட்டுரையின் எந்த பகுதியிலும் குறிப்பிடவில்லை. அவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே.
  • பெண்கள் குழந்தைகளை கொல்லக் கூடாது என்று கூறி மற்ற ஆண்களை கொல்லலாம் என்று மறைமுகமாக முகம்மது கூறுவதாக குற்றம் சாட்டியுள்ளீர்கள். கட்டுரையை நன்றாக படிக்கவும். முகம்மது கூறியது எதிரிகளுடன் போரிடும் சமயம்களில் இடையில் சிக்கும் பெண்களையும், குழந்தைகளையும் கொல்லக்கூடாது (அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட வந்தபொழுதும் கூட) என்பதே ஆகும். கால அர்த்தத்தை உணரவும்.
  • பெண்களின் உரிமைகளை ஒரு ஆண் வகுப்பதா? என்று கேட்டிருக்கிறீர்கள். மறுபடியும் உங்கள் கவனத்துக்கு, முகம்மது கடவுள் அல்ல. கடவுளின் தூதர் அவ்வளவே. இசுலாம் பெண்களுக்கு வகுத்த சட்டங்கள், இறைவனால் வகுக்கப்பட்டது. முகம்மதால் அல்ல. இசுலாமில் இறைவன் ஆணோ, பெண்ணோ அல்ல என்பதையும் அறியவும். (அதெல்லாம் சரி, உங்கள் வாதத்தின்படி பார்த்தால் அம்பேத்கார் என்ற ஆண் வகுத்த பெண்கள் தொடர்பான உரிமைகளை என்ன செய்வது?)
  • முகம்மது வன்முறையில் மதத்தை வளர்க்க முனைந்ததாகவும், அதர்க்கான மெக்கா - மதீனா போரில் பலரை வெட்டி சாய்த்ததாகவும் குற்றம் சாட்டி யுள்ளீர்கள். உண்மை அதுவல்ல. முகம்மது தனது வாழ்நாளில் கலந்துகொண்டது மூன்றே மூன்று போர்களில் மட்டுமே. அதுவும் எதிரிகள் வழிய வந்து முற்றுகையிட்ட நிலையில் வேறு வழியில்லாமல் கலந்து கொண்டது. அதுவும் மூன்றுமே ஒரே ஒரு நாள் மட்டுமே நடந்த போர்கள். இதிலும் போரில் இறந்தவர்களை தவிர்த்து மற்ற போர் கைதிகளை அவர் கொல்லவில்லை. இதுதான் வரலாறு. நீங்கள் கூறுவது அல்ல. மேலும் போரில் ஈடுபடுபவர் இறைத்ததன்மை பெற முடியாது என்று கருதினால், இந்து மதத்தில் இன்று இருக்கும் கடவுள்கள் யாவரும் இறைதன்மையை இழந்துவிடுவர். ராமர், கிருட்டினர் உட்பட.
  • பெண்களை பள்ளிவாசள்களில் அனுமதிக்க முகம்மது (அல்லது இசுலாம்) மறுப்பது ஏன்? என கேட்டிருக்கின்றீர்கள். இது ஒரு தவறான புரிதல். நடைமுறையில் சற்று அரிதாக இருந்த போதிலும், பெண்கள் பள்ளி வாசல்களில் நுழைய, பிரார்த்தனை செய்ய இசுலாம் அனுமதிக்கவே செய்கிறது (ஆதாரம் முஸ்லிம் புக் 4, நஂபர் 891, புகாரி வால்யூம் 2, புக் 13, நஂபர் 22). உலகின் பல பகுதிகளிலும் இது மிக சாதாரண விசயம். இந்தியாவில் மட்டுமே கொஞ்சம் அரிது. இங்கேயும் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது. அவர்களை தடுப்பவர்கள் யாரும் இல்லை. தடுக்கவும் முடியாது.
  • தலாக் ஏன் பின்பற்றப்படுகின்றது? என்று கேட்டுள்ளீர்கள். தலாக் என்றால் விவாகரத்து. விவாகரத்து இல்லாத ஒரு இனம் அல்லது ஒரு நாட்டை உங்களால் கூறமுடியுமா? உங்கள் கேள்வி புரியவில்லை.
  • பெண்கல்வியை மறுப்பது ஏன்? என்று கேட்டிருக்கின்றீர்கள். நீங்கள் எந்த காலத்தில் இருக்கின்றீர் சகோதரரே?? இன்றைய சூழலில் ஒரு இசுலாமிய பெண் கல்வி பெறவில்லையென்றால் அதர்க்கு வறுமை மற்றும் வேறு பிற காரணங்களே இருக்குமே அன்றி இசுலாம் ஒரு தடையாக இருக்காது. உண்மையில் இசுலாம் பெண்கல்வியை மறுப்பது இல்லை. இன்றும் இந்தியற்களை பாம்பாட்டிகல் என்றே நினைக்கும் மேலை நாட்டவரின் மனப்பான்மையே, உங்களுக்கும் இசுலாமியர் விசயத்தில் உள்ளது. சற்று ஜன்னலை திறக்கவும்.
  • பொதுசட்டத்தை ஏற்க்க மறுப்பது ஏன்? என கேட்டிருக்கின்றீர்கள். இன்று இந்தியாவில் இருக்கும் அனைத்து இசுலாமியர்களும் பொதுசட்தத்திர்க்கு உட்பட்டே நடக்கின்றனர். நானும் அவ்வாறே. ஏதோ சிலர் அவற்றை எதிப்பதை வைத்து ஒரு முழு சமுதாயத்தையும் குறை கூறுவது சரியல்ல.
  • மேற்க்கூரிய விசயங்களை ஏன் விளக்கவில்லை என்று கேட்டிருக்கின்றீர்கள். அவை யாவிலும் உண்மை இல்லாத பொழுது எதற்க்கு விளக்க வேண்டும்?? எதை விளக்க வேண்டும்??
  • ஏன் இசுலாமியர் மதத்தின் பெயராலேயே அரசியலில் நுழைகின்றனர்? என கேட்டிருக்கின்றீர்கள். இது தவறான புரிதல். இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி அனைத்து கட்சிகளிலும் இசுலாமியர்கள் சரிவிகித அளவில் இருக்கின்றனர். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதை தவித்து இருக்கும் இசுலாமிய கட்சிகளும் மற்ற மத, சாதி, இன கட்சிகளை போல சாதாரணமானாதே. இவை உலகம் முழுவதும் உள்ளதே. இசுலாமை மட்டும் குறை கூறுவது சரியல்ல.
  • மத வாதத்தை வளர்ப்பது போல பல வாசகங்கள் இந்த கட்டுரையில் உள்ளதாக கூறியுள்ளீர்கள். தயவு செய்து அப்படியான வாசகங்களை இங்கே குறிப்பிட்டு காட்டவும். முடிந்தால்.
  • இந்த கட்டுரை விசமிகள் வேலை என கூறியிருக்கின்றீர்கள். விசமம் எனது கட்டுரையில் இல்லை. உங்கள் புறிதுணர்வில் தான் உள்ளது.

நன்றி!!--arafat 13:45, 6 ஜூன் 2009 (UTC)


தங்கள் கேளவிக்கான பதில்கள் தொகு

  • அம்பத்கார் ஆண் அவர் வகுத்த சட்டத்தை ஏன் ஏற்க வேண்டும்? அம்பேத்கர் எழுதியதை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் மட்டும் சட்டக் குழுக்களுடன் சேர்ந்து பாரளுமன்றத்தில் வைத்த பின் ஏற்றுக்கொள்ளபட்டது. அதிலும் அவ்வப்பொழுது திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றது. ஆனால் அதில் எந்த இடத்திலும் பெண்களை தாழ்த்தி கூறப்படவில்லை. ஆனால் இங்கே விபச்சாரம் செய்யும் பெண்ணை கல்லால் அடித்து கொல்லவேண்டும் அந்த விபச்சாரத்துக்கு காரணமாக இருக்கும் ஆணை என்ன செய்ய வேண்டும் இது என்ன ஆணாதிக்கமா? இல்லை பெண்ண்டிமைத்தனமா? தாங்கள் தான் கூறவேண்டும்.
  • மகான் என்பவர் கத்தியைத்தூக்குவதில்லை. இதுவரை எந்த மகானும் கத்தியைத் தூக்கவில்லை. வன்முறையை ஆதரிப்பவர் மனிதநேயத்தை எப்படி விரும்புவார். மாறாக பல மாகான்கள் மக்களுக்காக அவர் மக்களுக்காக காட்டி கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். இன்னொரு மகான் மக்களுக்காக தியானம் இருந்து உலகில் உள்ள துன்பத்திற்கு காரணம் எது என்பதை காட்டினர். இவர்கள் எல்லாம் மக்களாலால் மகான்களால் ஏற்றுக்கொள்ளப்ப்டு பின் மதங்களாக மக்களால் பின்பற்றப்பட்டது. அவர்கள் மதத்தை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று வன்முறை புரியவில்லை வற்புறுத்தவில்லை. மதம் என்பதை உருவாக்கவில்லை. அகிம்சையை போதித்தனர்.
  • காந்தி எனும் மகான் அகிம்சையை போதித்து அதன் மூலம் சுதந்திரத்தையே வாங்கி காட்டினார். அவரின் கருத்து முகமது நபி என்ற கட்டுரையில் இடப்பட்டுள்ளது. அதை தாங்கள் பார்க்கவும். (வாளால் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்)
  • எந்த சமயமாக இருந்தாலும் அது வன்முறையில் தொடங்கப்படக்கூடாது. நீங்கள் அந்த நிலையில் இருந்து வெளியில் வரவில்லை என்பது நீங்கள் குறிப்பிட்ட வாசகத்தில் இருந்தே தெரிகின்றது. முதலில் நாம் சாரந்துள்ள, பிறந்துள்ள சமயத்தில் இருந்து வெளியில் வந்து உற்று நோக்குங்கள். நான் பிறந்த சமயமானாலும் தவறு தான். (நான் சமயச் சார்பற்றவன்).
  • இந்த சர்ச்சைகளை பிற சமயக் கட்டுரைகளில் இம்மாதிரி கருத்துகள் இருந்தால் வெளிப்படுத்தலாம். இங்கு குறிப்பிட்டுள்ள கட்டுரையில் வாசகத்திற்கு நீங்கள் வேறு ஒரு கட்டுரையை இல்லாத ஒன்றை சமயச் சண்டையாக பொருள் கொள்வது தவறு. நான் இதுவரைக் கூறிய வர்களுள் யாருடைய அல்லது மகானின் பெயரையாவது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கேனா? காந்தியைத் தவிர (பொதுவானவர் என்பதால்-கட்டுரையில் அவரைபற்றி குறிப்பிட்டுள்ளீர்கள்) ஏனென்றால் மற்றவர்கள் குறிப்பிட்ட சமயமக்களால் பின்பற்றபடுபவர்கள். இந்தக் கட்டுரைக்கு சம்பந்தமில்லை அவர்களை உயர்வாக எண்ணுவதற்கு இடம் கொடுத்துவிடும். ஒரு வேளை அவர்களும் இது மாதிரி கூறியிருந்தால் விமரசிக்கலாம் கட்டுரைகளில்.
  • இன்னும் பல மாகான்கள் இருக்கின்றனர் எவரும் வன்முறையை போதித்த்தில்லை. மாறாக ம்ககளுக்கு இன்னுயிர் ஈந்தனர். இங்கு பகிரங்காமக பெண்ணை ஆணுக்கு அடக்கமானவன் என்று இறுதிப்பேருரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். பெண் தவறு செய்தால் ஆண் லேசாக அடிக்கலாம் ஆண் தவறு செய்தால் பெண் அடிக்கலாமா? இங்கு சமயமே வரவில்லை விவாதமே வன்முறைத் தேவையா? பெண்ண்டிமைத்தனம் தேவையா? இச்சமயம் சார்ந்தவர்கள் கேட்கின்றக் கேள்வி.
  • இன்றைய காலக்கட்டத்தில் முற்போக்கு எண்ணம் கொண்ட யாருக்கும் இது மாதிரி வாசகத்தை ஏற்றுக்கொள்வதில்லை. பிற உயிர்களிடத்து அன்பு செலுத்துவது விராதியாருந்தாலும் அன்பு பாரட்டுவது எந்த சமயத்தினராயிருந்தாலும் சமயசார்பற்று நட்பு பாரட்டுவது. பெண், ஆண் இருவரும் சமம் என்ற அடிப்படையில் வாழ்வது. இதை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்வர். அம்மாதிரி எங்காவது இருந்தால் குறிப்பிட்டு காட்டவும் ஒரு இடம் விடாமல் இடம் பெற்றிருக்கின்றதா?
  • முகம்முது நபி கூறிய வாசகங்களில் சில முரண்பாட்டை சுட்டிகாட்டுவது எப்படித் தவறாகும். அவர் வாழ்ந்த காலம் வேறு. நீங்கள் எழுதியுள்ள கட்டுரையில் பல இடங்களில் புரியவில்லை அங்குத் தமிழா இருக்கின்றது. நம்பத்தகுந்த ஹதி நம்ப முடியாத ஹதி என்கிறீர்கள் இவையெல்லாம் தமிழ் அல்ல (அரபுத் தமிழ் தான் உள்ளது). அரபு 1400 வருடங்களுக்கு முன்னாள் எழுதப்பட்டதாக கூறப்படும் இவற்றில் எத்தனையோ இடைச்சொறுகல்கள் இருக்கும். தாங்கள் என்ன நேரடியாக நபி எழுதிய மூலத்தை தாங்களும் பார்த்திருக்க, படித்திருக்க முடியாது. நீங்களே பார்க்க முடியாது என்றபொழுது நாங்கள் எப்படி உண்மையா பொய்யா என்று அறிய முடியும் அது தேவையும் இல்லை. அந்த வாசகங்கள் உண்மையில் தமிழில் இந்த பொருள் கொண்டதா என்று. இது பற்றி விவாதித்தால் இன்னும் போகும். இத்துடன் முடிக்கின்றேன். இதை சமயப் பற்றுடன் பார்க்காமால் பொது நோக்குடன் பார்க்கவும்.--செல்வம் தமிழ் 16:00, 6 ஜூன் 2009 (UTC)

என்ன பதில்கள் தொகு

  • ஆண் பெண் தண்டனை குறித்து ஆய இங்கு போகலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#.E0.AE.87.E0.AE.B8.E0.AF.8D.E0.AE.B2.E0.AE.BE.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D_.E0.AE.95.E0.AF.82.E0.AE.B1.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AF.81.E0.AE.B3.E0.AF.8D.E0.AE.B3_.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AA.E0.AE.9A.E0.AF.8D.E0.AE.9A.E0.AE.BE.E0.AE.B0.E0.AE.A4.E0.AF.8D.E0.AE.A4.E0.AF.81.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.BE.E0.AE.A9_.E0.AE.A4.E0.AE.A3.E0.AF.8D.E0.AE.9F.E0.AE.A9.E0.AF.88.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D

  • முஹம்மது நபி மகான் அல்லவே, ஏழாம் நூற்றாண்டின் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக கூட நீங்கள் பார்க்கலாமே! அரசியல் எவ்வாறு செய்வது என்பதை தனது சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தவர் என்றவாறு மதசாற்பற்றவரான நீங்கள் விளங்கினாலே போதுமானது. காந்தியும் கூட அகிம்சையால் சுதந்திரம் வாங்கியிருக்கலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருந்தால் சீனாவினதும் பாகிஸ்தானினதும் படையெடுப்பின் போது அகிம்சையாயிருந்து நாட்டை தாரை வார்திருப்பாரோ? அவ்வாறு செய்திருந்தால் அவரை உன்னத தலைவரென்று உங்களால் புகழத்தான் முடியுமோ?

அதுபோலத்தான் முகமது நபியும் கூட ஆரம்ப 13 வருடங்களில் தான் அனுபவித்த சித்திரவதைகளுக்கு மௌனத்தைதானே பதிலடியாக கொடுத்தவர். . பின் 10 வருடங்கள் மதீனாவில் அரசியல் தலைவராக தனது மக்களை காக்க வேண்டிய கடமையுடன் மிகக் குறைந்த பலத்துடன் போரிட்டார். நீங்கள் கேட்கலாம் மதவாதிக்கு ஏன் அரசியல் என்று. நீங்கள் இஸ்லாத்தை மதமாக ஏற்க வேண்டியதில்லை. மனித வாழ்வுக்கான வழிகாட்டலாக மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள். மனித வாழ்வுக்கு அரசியலும் தேவை என்பதை அறிவீர்கள். நாங்கள் அதனை மனித வாழ்வுக்கான இறை வழிகாட்டலாக மொழி பெயர்த்துக் கொள்கிறோம். பிரச்சனை தீரட்டும்.

நீக்கப்பட்டவற்றை மீள்கொணர்தல் தொகு

பயனர் அரபாத் ரியாத் அவர்கள் இக்கட்டுரையில் சில தொகுப்புக்களை நீக்கியுள்ளார். இவை அவருடைய பங்களிப்பு மட்டுமல்ல, பலரது பங்களிப்புகள் உள்ளன. இதனை மீள்கொணர்தல் வேண்டும். அத்துடன் அநாமதேயப் பயனர் 92.39.200.17 "இஸ்லாம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்கள்" என்ற தலைப்பில் ஏதேதோவெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதியுள்ளார். அவற்றை நீக்கவும் பரிந்துரைக்கிறேன்.--Kanags \பேச்சு 09:05, 13 ஜூன் 2009 (UTC)

மீள்கொணர்தல் வேண்டும். இஸ்லாம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்கள் என்பது இக்கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாதது. வேண்டுமெனில் இஸ்லாம் பற்றிய அறிஞர்களின் கூற்றுக்கள் என்ற தலைப்பில் புதிய கட்டுரை ஒன்றை துவங்கலாம்--கார்த்திக் 10:45, 13 ஜூன் 2009 (UTC)


கனக்ஸ், ”ஏதேதோவெல்லாம் ஆதாரமில்லாமல் எழுதியுள்ளார்” என்பது தவறு. ஆங்கில விக்கியில் இசுலாம் மீது விமர்சனங்கள் (http://en.wikipedia.org/wiki/Criticism_of_Islam) என ஒரு கட்டுரை உள்ளது அங்கு சென்று இதைப் படிக்கவும். Winston Churchill, the British Prime Minister through most of World War 2, was a strong critic of the effects Islam had on its believers. He stated in his 1899 book The River War:[25]

“ How dreadful are the curses which Mohammedanism lays on its votaries! Besides the fanatical frenzy, which is as dangerous in a man as hydrophobia in a dog, there is this fearful fatalistic apathy. The effects are apparent in many countries. Improvident habits, slovenly systems of agriculture, sluggish methods of commerce, and insecurity of property exist wherever the followers of the Prophet rule or live. A degraded sensualism deprives this life of its grace and refinement; the next of its dignity and sanctity. The fact that in Mohammedan law every woman must belong to some man as his absolute property, either as a child, a wife, or a concubine, must delay the final extinction of slavery until the faith of Islam has ceased to be a great power among men. Thousands become the brave and loyal soldiers of the Queen: all know how to die but the influence of the religion paralyses the social development of those who follow it. No stronger retrograde force exists in the world. Far from being moribund, Mohammedanism is a militant and proselytizing faith. It has already spread throughout Central Africa, raising fearless warriors at every step; and were it not that Christianity is sheltered in the strong arms of science, the science against which it had vainly struggled, the civilisation of modern Europe might fall, as fell the civilisation of ancient Rome.


அறிஞர்களின் இசுலாம் மீது கூற்று என்றால், எல்லா கூற்றும் இசுலாத்திற்கு சாதகம் என் பொருள் அல்ல. இப்பவாவது, நான் எழுதியது ஆதாரம் உள்ளது என ஒத்துக் கொள்கிறீர்களா?--92.39.200.17 11:07, 13 ஜூன் 2009 (UTC)

சரி, இசுலாம் மீதான விமரிசனம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றைத் தொடங்கி எழுதுங்கள். கட்டுரை நடுநிலையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இசுலாம் கட்டுரையில் உள்தொடுப்புக் கொடுக்கலாம்.--Kanags \பேச்சு 12:24, 13 ஜூன் 2009 (UTC)
நான் எழுதியது தலைப்பின் அறிஞர்களின் கூற்று கீழ் வருவது சரி. வேண்டுமென்றால், அந்த மொத்த தலைப்பையே அகற்றி, மறு கட்டுரையாக்க வேண்டும்.--92.39.200.17 12:29, 13 ஜூன் 2009 (UTC)

விமரிசன பகுதி தொகு

இதை தனி பக்கத்திற்கு மாற்ற வேண்டும். மேலும் இப்பகுதியில் எழுதப் பட்டவை, தனி அபிப்பிராயங்களே தவிற, ஆதாரங்களுடன் முக்கிய விமர்சனகர்த்தாக்கள் இல்லை--92.39.200.17 13:27, 13 ஜூன் 2009 (UTC)


இந்த கட்டுரையை பூட்டி என்ன பயன்? எனக்கு ஒரு பத்தியை ஏற்ற வேண்டும். கட்டுரையை பூட்டுவது அறிவு வளர்சியை பூட்டுவது ஆகும்.--92.39.200.17 16:56, 13 ஜூன் 2009 (UTC)

அநாமதேயப் பயனரே, நீங்கள் இப்போது அடிக்கடிக் கருத்துத் தெரிவிக்கும் பயனர்களில் ஒருவராக உள்ளீர்கள். ஏதாவது ஒரு புனைபெயரிலாவது ஒரு கணக்கைத் தொடங்கி உங்கள் பங்களிப்பைச் செலுத்துமாறு தயவுகூர்ந்து வேண்டுகிறேன்.--Kanags \பேச்சு 22:36, 13 ஜூன் 2009 (UTC)
அதுதான், பங்களிப்பா ஒரு பத்தி ஏத்தலாம்ன, கட்டுரையை பூட்டி விட்டார்களே? --Ginger 22:43, 13 ஜூன் 2009 (UTC)
அப்படியில்லையே, அநாமதேயர்களுக்குத் தான் பூட்டப்பட்டுள்ளது. மீண்டும் முயற்சி செய்யுங்கள்.--Kanags \பேச்சு 22:48, 13 ஜூன் 2009 (UTC)
பூட்டு திரக்கவில்லை. அதனால் புதிய பக்கம்.--Ginger 10:38, 14 ஜூன் 2009 (UTC)
உங்களுக்கு ஏன் அப்பக்கம் திறக்கவில்லை எனத் தெரியவில்லை. எனினும் இப்போது முழுமையாக அனைவருக்குமாகத் திறந்து விட்டிருக்கிறேன். சொல் பற்றிய கட்டுரையை இசுலாம் கட்டுரையில் சேர்ப்பது நல்லது. உங்கள் புதிய கட்டுரையைப் பின்னர் நான் நீக்கி விடுகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 10:50, 14 ஜூன் 2009 (UTC)
நன்றி--Ginger 10:52, 14 ஜூன் 2009 (UTC)
இந்த பத்தியை நீக்க வேண்டுகிறேன். 100 கோடி மக்களால் பின்பற்றப்படுகிற மார்க்கத்தை பற்றிய அறிமுக பக்கத்தில் நெகடிவ் பத்திகளை முன்வைக்கிற நோக்கம் தான் என்ன? தமிழ் விக்கபீடியாவில் எந்த மதத்தின் பக்கத்திலும் விமர்சனங்கள் என்கிற பத்தி இடம் பெறவில்லை. உதாரணமாக இந்து சமயம். Can they prove other religions doesn't support terrorism? Who are all naxals in india? Are they muslims?

This is totally a biased page. Tamil muslims will never support Tamil wikipedia. they will never give their knowledge to tamil wikipedia. I request admin to remove this page. - muslim brother 18:55, 22 நவம்பர் 2009 (UTC)

இந்து மதத்தில் மட்டுமல்ல எல்லா மதத்திற்கும் விமர்சன பகுதி தேவை. இல்லையென்றால் வெறும் புகழ் பரப்பும் நோக்கத்துடனேயே கட்டுரைகள் கட்டமைக்கப்பட்டும். இதனை நடுநிலை என்று பெரும்பான்மையான இறைநம்பிக்கையாளர்கள் கருதலாம். ஆனால் இறைமறுப்பாளர்கள் படிக்கும் போது நிச்சயம் நடுநிலையை பற்றிய சந்தேகத்தினை தெரிவிப்பார்கள். விமர்சனங்களை வைக்க எப்படி பட்ட ஆதாரம் வேண்டுமென கூறுங்கள். நான் தேடிக் கொடுக்கிறேன்.

அதை விடுத்து கூட்டு களவானிகளாக விமர்சனப்பகுதியை எல்லா மதங்களிலிருந்தும் நீக்குவது அர்த்தமற்ற செயலாகும். எனது கண்டனங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

Sivane (பேச்சு) 05:35, 21 செப்டெம்பர் 2012 (UTC)

சில முரன்பாடான அல்லது மயக்கமான கருத்துக்கள் தொகு

இக் கட்டுரையின் முதலாம் பந்தியில் சில திருத்தங்களை மேற்கொண்டால் நன்றாக இருக்கும், ஏனெனில் இஸ்லாத்தின் ஆரம்பம் குறித்து சில மயக்கமான அல்லது பிழையான(தவறானது எனக்கொள்ளலாம்) கருத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆதாரமாக அல்-குர்ஆனையே கொள்ளாலாம், ஏனெனில் அது முஹம்மத் நபியவர்களுக்கு அருளப்பட்ட வேதமும், இறைவனால் அருளப்பட்ட கடைசி வேதமுமாகும், மேலும் நபிக்கு முன்னர் வந்த அனைத்து தூதர்களும் இஸ்லாத்தினையே போதித்தனர். இக்கட்டுரை திருத்துவது குறித்து எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஏதும் இல்லை, மேலும் இது குறித்து விவாதங்கள் சிலவற்றையே வாசிக்கமுடிந்தது, மீண்டும் வாசிக்கும் போது ஏனையவற்றைப் பார்க்க முயற்சிக்கிறேன். இங்கு கவனிக்கவேண்டிய் விடயங்கள் யாதெனில் ஒரே சமயத்தினைப் பின்பற்றுகிறவர்களின் பார்வையிலிருந்துதான் இதுபோன்ற கட்டுரைகளைத் தொகுக்கப்பட வேண்டும் என்பதுடன் தொகுப்பவர் மற்ற சமயங்களுடன் ஒப்பிடக்கூடாது, மேலும் மிகைப்படுத்தியோ அல்லது குறைப்படுத்தியோ இற்றைப்படுத்தக்கூடாது. குறித்த சமயம் ஒன்றின் உள்ளடக்கம் வேறு மத சகோதரர்களுக்கு பிழையான கருத்தினை வழங்கக்கூடாது, ஏனெனில் விக்கிபீடியா மிக சக்திவாந்த ஊடகமாகும். --Shameermbm 11:13, 28 மே 2011 (UTC)Reply

>>இறைவனால் அருளப்பட்ட கடைசி வேதமுமாகும், மேலும் நபிக்கு முன்னர் வந்த அனைத்து தூதர்களும் இஸ்லாத்தினையே போதித்தனர்.
இது நம்பிக்கை. தகவலல்ல. இன்னார் இன்னதை நம்புகிறார்கள் என்றே குறிப்பிட முடியும். மாற்று கருத்துடைய விசயங்களை. முன்வந்த தூதர்கள் இசுலாத்தை போதித்னர் என்ற இசுலாமியர்களின் நம்பிக்கையை முன்வந்த தூதர்களைப் பின்பற்றும் சமயத்தினர் ஏற்றுக் கொள்வதில்லை. யூதர்களும், கிறித்தவர்களும் முகமதுக்கு முற்பட்ட தூதர்கள் போதித்தது இசுலாம் என்று ஏற்றுக் கொள்வதில்லை. எனவே நபி காலத்துக்கு முன்னிருந்ததும் இசுலாம் தான் என்பது இசுலாமியரின் நம்பிக்கை என்பதைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். சமயக் கட்டுரைகளில் குறிப்பாக நம்பிக்கையைத் தகவலாகச் சொல்ல இயலாது. ஏனெனில் அனைத்து சமயங்களின் நம்பிக்கைகளும் பிறிதொரு சமயத்தால் மறுக்கப்படுபவை. இதனால் நம்பிக்கை என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய நிலை உருவாகுகிறது. இதே விசயம் குறித்து ஆங்கில விக்கி இசுலாம் கட்டுரையில் ஒரு நீண்ட உரையாடல் முன்பு நிகழ்ந்தது. அந்த உரையாடலின் பலனாக உருவாகிய வரிகள் பின்வருமாறு:
Muslims also believe that Islam is the complete and universal version of a primordial faith that was revealed at many times and places before, including through the prophets Abraham, Moses and Jesus.[4] Muslims maintain that previous messages and revelations have been partially changed or corrupted over time,[5] but consider the Qur'an to be both the unaltered and the final revelation from God—Final Testament.
muslims ”believe" “maintain", "consider" என்று தெளிவுறக் கூறப்பட்டுள்ளன. இங்கும் ”ஏழாம் நூற்றாண்டில் சவுதி அரேபியாவில் தோன்றிய சமயமாகும்” என்பதை நீக்கி விட்டு இது போன்ற வரிகள் அமைக்கப்படுதல் பொருத்தமாக இருக்கும். முன்பு ஆங்கில விக்கியிலும் இது போன்ற வரிகள் இருந்தன. மேற்சொன்ன உரையாடலுக்குப் பின் நீக்கப்பட்டு மேலுள்ள வரிகள் சேர்க்கப்பட்டன. இதனை நீக்க முன்பு எதிர்ப்பு இருந்ததால் நான் உடனடியாக இதை செய்ய விரும்பவில்லை. பிறரது கருத்தறிந்து மாற்றுகிறேன்.
>> ஒரே சமயத்தினைப் பின்பற்றுகிறவர்களின் பார்வையிலிருந்துதான் இதுபோன்ற கட்டுரைகளைத் தொகுக்கப்பட வேண்டும்
பொதுப் பார்வையிலிருந்து தான் எழுதப்படுவதே நல்லது. நம்பிக்கையாளர்களின் நம்பிக்கை எவை எவை என்பது முழுதும் சொல்லப்பட வேண்டும். ஆனால் அவை நம்பிக்கைகள் என்பதும் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும். விமர்சனங்களை முன்வைப்பதானால், பொதுக்கட்டுரையில் வைக்கக்கூடாது (எனவே இசுலாத்தின் மீதான விமர்சனங்கள் தனிக்கட்டுரைக்கு நகர்த்தப்பட்டுள்ளாது). அதிலும் யார் விமர்சிக்கிறார், எந்தப் பின்னணியில் விமர்சனம் எழுந்தது, அவற்றுக்கு நம்பிக்கையாளர்கள் அளிக்கும் மறுமொழிகள் ஆகியவையும் சொல்லப்பட வேண்டும். வெறுமனே விமர்சனங்கள் இடம் பெறக்கூடாது.
>>ஆதாரமாக அல்-குர்ஆனையே கொள்ளாலாம்
தொன்ம வரலாறுகளுக்கு மட்டுமே சமய புனித நூல்களை ஆதாரமாகக் கொள்ள முடியும். பொது வரலாற்றுத் தகவல்களுக்காக அல்ல. எ.கா. X நிகழ்வு நடந்தது என்று குரானில் சொல்லப்பட்டுள்ளதெனில், அதைக் குறிப்பிடும் போது “X நிகழ்ந்தது” என்று சொல்ல முடியாது "X நிகழ்ந்தது என்று குரானில் சொல்லப்பட்டுள்ளது” என்றே குறிப்பிட முடியும்.--சோடாபாட்டில்உரையாடுக 11:47, 28 மே 2011 (UTC)Reply

நடுநிலை குறித்து சில கேள்விகள் தொகு

நடுநிலை இல்லாதது தொகு

மலக்குகள் இறைவனின் குழந்தைகள் அல்லர் என்று விக்கி தெளிவாக ஏதோ குரானைப் போல சொல்லுவதா நடுநிலை.

முஸ்லிகள் அடிமைகளை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதை குறிப்பிடவில்லை. சிறிது இணைத்துள்ளேன்.

பிரிவுகளில் சோனகர்,, யவனர், துலுக்கர், மரைக்காயர்,ராவுத்தர், லெப்பை மற்றும் அகமதியார்கள் பற்றிய தகவல்களை இணைக்கவில்லை. இணைத்துள்ளேன்.

கலிமாவின் இறுதியில் இந்த நம்பிக்கை கொண்ட ஒருவனே இசுலாமியன் ஆகிறான் என்று முடித்துள்ளீர்கள். இவ்வாறான நம்பிக்கை கொண்டவனையே இசுலாம் என குரான் சொல்லுகிறது என்றல்லாவா குறிப்பிட வேண்டும்.

"திருக்குர்ஆன் என்பது முகம்மது நபிக்கு இறைவனால் அருளப்பட்ட வேதம் ஆகும்."

நடுநிலை தன்மை என்பது இதுதானா. இறைவன் இருக்கிறான் என்பதை விக்கி ஏற்றுக் கொண்டுள்ளதா.

இது போன்ற பல இடர் பாடுகள் உள்ளன. எனவே விக்கியின் இந்த கட்டுரை தன்மையை நடுநிலையாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

Sivane (பேச்சு) 10:11, 20 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் சிவனே. விக்கியில் தமிழ் கட்டுரைகளில் பாரிய பிழைகள் இருப்பதை நான் அறிந்தேன். ஆனால் நடு நேர்மை என்பதை இங்கு கட்டுரை வரையும் அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நானும் உணர்கிறேன். ஆனால் இங்கும் சில அரசியல் செயல்பாடுகளை போல தன்னலம் கருதி செயல்படுவதையும், செயல்பாட்டில் சில மூத்த விக்கி நண்பர்கர் செயல்படுவதையும் நான் அறிவேன். ஆனால் அவற்றை தட்டி கேக்கும் உரிமை எமக்கு இல்லை. என்ன செய்வது?? முடிந்தவரை எமது தமிழையும் தமிழ் ஆக்கத்தையும் விக்கியில் செயல்பட வைப்போம்.. இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பதை வாசகர்கள்தான் சொல்லவேண்டும். விக்கிப்பீடியா சொல்ல முடியாது..! நன்றி--சிவம் 11:01, 20 செப்டெம்பர் 2012 (UTC)

மதங்கள் குறித்தான இடுகையில் உண்மைக்கு புறம்பாக எழுதுவதை எதிர்த்து தாங்களும் குரலை பதிவு செய்தமைக்கு நன்றி. இக்கட்டுரை ஏதோ இசுலாமிய தளத்தின் கட்டுரை போலவே இருக்கிறது. குரானில் உள்ள தவறுகள் மறைக்கப்பட்டுள்ளன. இசுலாத்தில் உள்ள பிரிவுகள் மறைக்கப்பட்டுள்லன. அல்லாஹ் எழுதியே குரான் என்று தீர்க்கமாக சொல்லுகின்றன. பரிணாமவியல் பற்றியே எழுதாமல் இருக்கிறார்கள். முகமது நபி திருக் குரான், இசுலாம் போன்ற கட்டுரைகளில் இந்த தன்மையே காணப்படுகிறது.,

இந்த நடுநிலையற்ற தன்மையை போக்க உதவுங்கள்,

Sivane (பேச்சு) 11:11, 20 செப்டெம்பர் 2012 (UTC)

@Sivane!!! //மலக்குகள் இறைவனின் குழந்தைகள் அல்லர் என்று விக்கி தெளிவாக ஏதோ குரானைப் போல சொல்லுவதா நடுநிலை//. மலக்குகளை இறைவனின் குழந்தைகளெனத் திருக்குர்ஆனோ நபிமொழிகளோ எங்காவது குறிப்பிடுகின்றனவா? உங்களுடைய கற்பனையைப் புகுத்த முனைகிறீர்கள். நடுநிலைமை தவறியிருப்பது நீங்கள் தான். //பிரிவுகளில் சோனகர்,, யவனர், துலுக்கர், மரைக்காயர்,ராவுத்தர், லெப்பை மற்றும் அகமதியார்கள் பற்றிய தகவல்களை இணைக்கவில்லை. இணைத்துள்ளேன்.// //இசுலாத்தில் உள்ள பிரிவுகள் மறைக்கப்பட்டுள்லன.// இஸ்லாம் எங்கேயாவது இத்தகைய பிரிவுகளை ஏற்படுத்தியிருக்கிறதா? என்ன ஆதாரம்? திருக்குர்ஆனோ நபிமொழிகளோ இத்தகைய பிரிவுகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனவா? ஏன் பொய்யுரைக்கிறீர்கள்? //பரிணாமவியல் பற்றியே எழுதாமல் இருக்கிறார்கள்.// பரிணாமவியல் என்னும் மூடக்கொள்கையைப் பற்றி என்ன எழுதப்பட வேண்டும்? தங்களது மூதாதையர் குரங்குகளும் பன்றிகளும் நாய்களும் நரிகளுமேயென நம்பிக்கை கொள்வோர் பரிணாமவியலை நம்புகின்றனர். அதைப் பற்றி முஸ்லிம்களும் ஏதேனும் கூற வேண்டுமென எதிர்பார்ப்பதாயின் நீங்கள் கார்பன் கூட்டாளி, எதிர்க்குரல் போன்ற வலைத்தளங்களைப் பார்த்தாற் தெரியும்.--பாஹிம் (பேச்சு) 08:38, 21 செப்டெம்பர் 2012 (UTC)

நண்பரே, நீங்கள் கூறியுள்ளவற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்தி பாருங்களேன். குரானோ, நபியோ சொன்னதை மட்டுமே ஏற்பேன் என்பது மதக் கொள்கையாக இருக்கலாம். விக்கியிலும் அதே கொள்கை இருக்காதென நம்புகிறேன். இந்த கட்டுரையில் இணைக்க வேண்டியவை குறித்தான எனது கருத்தினை நான் கூறியுள்ளேன். குரான் கூறுவதை மட்டுமே ஏற்க வேண்டுமென்றால் இசுலாம் கட்டுரையில் இறை நம்பிக்கை மட்டுமே இருக்கும். அது இசுலாமியர்களுக்கு மட்டுமே ஏற்புடைய கட்டுரையாகவும் இருக்கும் என்பதே என் கருத்து. நன்றி.

Sivane (பேச்சு) 18:42, 21 செப்டெம்பர் 2012 (UTC)


நண்பர் Sivane அறிய, மாம்பழத்திற்கு விளக்கம் கொடுக்கும் போது விக்கியின் ஸ்டைல் என பலாப்பழதிற்கான விளக்கத்தை கொடுப்பது மூடத்தனம். பொதுவாக கொள்கைகளை விளக்கும் போது அதில் தெளிவு இல்லாவிட்டால் விளக்கம் கொடுக்காமல் இருப்பதே அழகு. விக்கியின் அனைத்து கட்டுரைகளும் உண்மையானதாக இருக்க இந்த நடைமுறை உதவியிருக்கும். மார்க்ஸிசத்தை விளக்கும் போது கார்ல்மார்க்ஸ் கூறியதை மட்டும்தான் கொள்கையாக கூறவேண்டும். லெனினிசம் என்ற கொள்கை லெனின் கூறியது அவர் வரையறுத்தது மட்டுமே. நமது சொந்த சரக்குகளையும் சேர்த்துக் கூற முற்படுவது நமது அறிவில் உள்ள குளறுபடியாகவே கொள்ள வேண்டும். மாறாக கம்யூனிஸ்டுக்கள் என்ற தலைப்பில் நீங்கள் கண்டதையும் எழுதலாம் அதில் தா.பாண்டியனின் கருத்தையும் கூட சேர்த்துக்கொள்ளலாம். ஏன் உங்கள் முன் வீட்டில் உள்ள கம்யூனிஸ்ட் பையனது கூற்றையும் கூட மேற்கோளாக காட்டலாம். அது போலவே இஸ்லாம் என்றால் என்ன என்பதை அதை உலகிற்கு நிறைவு செய்த தூதர் முஹம்மத் (ஸல்) கூறிவிட்டார்.வேறு எந்த கொள்கைகளுக்கும் இல்லாதவாறு தெளிவான முற்றுப்புள்ளியையும் வைத்து சென்றுவிட்டார். “இன்று நான் உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கிவிட்டேன்" ( குரான் 5:3) ஆக குர்ஆனிலும் அவரது பேச்சிலும் மட்டும்தான் இஸ்லாத்தை தேட வேண்டும். அதன் பின்னர் உள்ள கொள்கைகளை முஸ்லிம்கள் என்ற தலைப்பில் வரி வரியாக நீங்கள் எழுதலாம். இஸ்லாம் என்ற தலைப்பில் "யவனர், துலுக்கர், மரைக்காயர்,ராவுத்தர்" என எழுதி கொண்டிருப்பீர்களானால் உங்கள் அறிவின் எல்லையை நாம் அறிந்து கொள்வோம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசுலாம்/தொகுப்பு2&oldid=1408678" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "இசுலாம்/தொகுப்பு2" page.