பேச்சு:இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி

Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani


இக்கட்டுரையின் தலைப்பு இந்திய ராணுவத் துப்பாக்கியின் உண்மைப் பெயர் எதுவோ, அந்தப் பெயரில் இருப்பின் நல்லது. பலுப்பு சிறுமி என்கிற தலைப்பை வழிமாற்று செய்து விடலாம். மேலும் பலுப்பு சிறுமி என்பதை விட பழுப்பு சிறுமி என்பதே சரியானதென நினைக்கிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:57, 7 ஆகத்து 2011 (UTC)Reply

தேனி.எம்.சுப்பிரமணி,INSAS - ஆங்கிலப் பெயர்.பலுப்பு சிறுமி - தமிழ்ப் பெயர் .அதனாலே அவ்வாறு செய்தேன். வழிமாற்று எவ்வாறு செய்ய வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் 09:17, 7 ஆகத்து 2011 (UTC)Reply

INSAS என்ற இந்தத் துப்பாக்கி வகைகளுக்கு brown girl என்ற பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. இணையத்தில் தேடிப் பார்த்த போது அப்படி ஏதும் அகப்படவில்லை.--Kanags \உரையாடுக 09:37, 7 ஆகத்து 2011 (UTC)Reply

இது இந்திய இராணுவத்தின் (INSAS rifle) துப்பாக்கியின் சங்கேத வாரத்தை. இணையத்தில் கிடையாது. அதனால் பலுப்பு சிறுமி என்கிற தலைப்பை இன்சாசு என்று வழிமாற்று செய்து விடலாம். வழிமாற்று எவ்வாறு செய்ய வேண்டுm--தென்காசி சுப்பிரமணியன் 09:50, 7 ஆகத்து 2011 (UTC)Reply

தலைப்பை மாற்றுவது எளிது. மேலே drop down menu இல் நகர்த்தவும் என்பதைத் தெரிவு செய்து சரியான தலைப்பை எழுதி சேமியுங்கள். மேலும் பலுப்பு என்பது தவறு, பழுப்பு என்றிருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 10:33, 7 ஆகத்து 2011 (UTC)Reply

Kanags, for brown girl see this. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:INSAS_rifle_(Browngirl06).jpg

இக்கட்டுரை “இந்திய சிறு படைக்கல அமைப்பின் நீள் துப்பாக்கி” என்கிற தலைப்புக்கு என்னால் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:10, 7 ஆகத்து 2011 (UTC)Reply

@Anton:! {{தலைப்பை மாற்றுக}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தலாம் அல்லது மாற்றத்திற்கான விளக்கத்தை இந்த உரையாடற்பகுதியில் தரலாம். அந்த அறிவிப்பு தந்து, ஓரிரு நாட்களோ அல்லது ஒரு வாரமோ தள்ளி செய்யலாம். இந்த கால இடைவெளி எந்த இழப்பையும் நம் விக்கிக்கு தந்து விடாது என்றே எண்ணுகிறேன். எதற்காக ஒரு இலக்குச் செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்தால், இந்த நடைமுறையை பலரும் கற்க வழிவகுக்கும். நல்ல புரிந்துணர்வு சூழலை உருவாக்குங்கள். இல்லையெனில், பல உயர்வான / மேம்பாட்டு பணிகளை, தனித்தே செய்ய வேண்டி இருக்கும். ஒவ்வொருவரும் குறைந்த நேரத்தில் சிறப்பாக செயற்பட, நமது அனுபவங்களை் பகிரப்பட வேண்டும்.உழவன் (உரை) 04:50, 9 செப்டம்பர் 2016 (UTC)

இங்கு எல்லா தலைப்புக்களும் {{தலைப்பை மாற்றுக}} என்ற இவார்ப்புருவை பயன்படுத்திவிட்டு மாற்றப்படுவதில்லை அல்லது உரையாடிவிட்டு மாற்றப்படுவதில்லை (நகர்த்தல் பதிவைப் பார்க்கலாம்). அப்படியிருக்க எனக்கு மட்டும் அறிவிப்பது எதனால்? தலைப்பை மாற்றுக என்ற வார்ப்புருவை பயன்படுத்திவிட்டு மாற்றப்படுடாதற்கான காரணங்களை விக்கிப்பீடியா:பக்கத்தை நகர்த்துதல் என்பதில் காணலாம். கூடுதல் தகவலுக்கு en:Wikipedia:Moving a page, en:Wikipedia:Requested moves என்பவற்றைக் காணலாம். கட்டாயம் {{தலைப்பை மாற்றுக}} என்ற வார்ப்புருவை பயன்படுத்தி, உரையாடிவிட்டு மாற்ற வேண்டுமென்றால் அதை விக்கிக் கொள்கையாக்குங்கள். எல்லோரும் கடைப்பிடிப்போம். இவ்வாறான பொருத்தமற்ற இடங்களில் வார்ப்புருவை பயன்படுத்தி, உரையாடிவிட்டு, ஓரிரு நாட்களோ அல்லது ஒரு வாரமோ தள்ளி மாற்ற வேண்டியிருக்கும். ஆனால் இங்கு உரையாடுவதில் பொருத்தமுள்ளது என்பதும் எனக்குத் தெரிந்ததே. //நல்ல புரிந்துணர்வு சூழலை உருவாக்குங்கள். இல்லையெனில், பல உயர்வான / மேம்பாட்டு பணிகளை, தனித்தே செய்ய வேண்டி இருக்கும்.// என்பது மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது விளக்கமற்றுள்ளது. இதுவும் தலைப்பு மாற்றம் குறித்ததா? மேலும், இத்தலைப்பு மாற்றத்தில் ஆட்சேபனை என்றால் தெரிவிக்கவும். அல்லது இக்கருத்தை என் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்திருக்கலாம். நிற்க, தலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள் பல ஆண்டுக்கணக்காக அப்படியே உள்ளதையும் நினைவூட்டுகிறேன். --AntanO 05:45, 9 செப்டம்பர் 2016 (UTC)
விரிவான பதிலுரையால், மேற்கூறிய வார்ப்புரு குறித்த புரிந்துணர்வை ஏற்படுத்தியமைக்கு மிக்கநன்றி. எனது விருப்பப்பட்டியலில் இக்கட்டுரை இருக்கிறது. எனவே, மாற்றத்தை ஏற்படுத்திய உங்களிடம் வினவினேன். விக்கியில் ஓரளவே எனக்குத் தெரியும். தெரியாததை புரிந்து கொள்ளவே வினவினேன். மரைகுழல் என்ற சொல், மாற்றுச்சொல்லாக தலைப்பிற்கு எப்படி பொருந்தும் என்று அறிய முற்பட்டேன். நான் முடிந்தவரை அறிவிப்பை பேச்சுப்பக்கத்தில் கொடுத்து விட்டே செய்கிறேன். இதனால் பலவற்றை பிறரிடமிருந்து கற்கிறேன்.// தலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள் பல ஆண்டுக்கணக்காக அப்படியே உள்ளதையும் // சுட்டியமைக்கு நன்றி. பொதுவாகத் தலைப்பிட்டு எவ்வளவு நாட்கள் காத்திருக்கலாம்? என்னை பொருத்தவரை இருவாரங்கள் காத்திருக்கலாம். ஏனெனில், பெரும்பாலும் வாரவிடுமுறையையே பங்களிப்பாளர் பயன்படுத்துகின்றனர். இரு வாரவிடுமுறை போதுமானாது. துப்புரவு பணிகள் குறித்த உங்கள் அனுபவத்தை பகிர்ந்தால் நானும் விரைந்து செயற்பட ஊக்குவிப்பாக இருக்கும். வழிகாட்டுக. ஆவலுடன்..உழவன் (உரை) 01:44, 12 செப்டம்பர் 2016 (UTC)
Return to "இந்திய சிறு படைக்கல அமைப்பின் மரைகுழல் துப்பாக்கி" page.