பேச்சு:இலங்கைத் தமிழர்
இலங்கைத் தமிழர்கள் தாய்வழி மரபைப் பின்பற்றுபவர்கள் என்று யார் சொன்னது? முதலாவதாக இது தொடர்பில் இலங்கைத் தமிழரின் பல்வேறு பிரிவினரிடையே வேறுபாடுகள் உள்ளனவாயினும், மிகப் பெரும்பாலான இலங்கைத் தமிழர் ஆண் வழி மரபுக்கு உட்பட்டவர்களே. திருமணமான பின்னர் ஆண்கள் பெண்கள் வீட்டுக்குச் சென்று வசிப்பதென்பது, தற்காலத்துச் சீதனச் சமூகச் சீர்கேட்டால் ஏற்பட்ட நிலையேயொழிய வேறல்ல. தற்காலத்துச் சீதன வழக்கத்தின்படி, பெண்ணின் பெற்றோர் கட்டாயமாக வீடொன்றைச் சீதனமாகக் கொடுக்கவேண்டியுள்ளது. இதனால் அவர்களுடைய கடைசிப் பெண்பிள்ளைக்குத் தாங்கள் வசிக்கும் வீட்டையே கொடுத்துவிட்டு அவர்களும் அங்கேயே வாழ்வது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையிலும் கூட வீடு ஆணுக்கும் பெண்ணுக்கும் கூட்டாகவே உரிமையாக உள்ளது. உண்மையில் பெண்ணின் பெற்றோர் தங்கள் மருமகனுடன் (Son-in-Law) வாழ்கிறார்களேயொழிய ஆண் தனது மனைவி குடும்பத்தினர் தயவில் வாழ்வது இல்லை. இலங்கைத் தமிழர் என்றுமே பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக் கருதுவது இல்லை. யாழ்ப்பாணத்துத் தேச வழமைப்படி, பெண்களுக்குள்ள சகல சட்டரீதியான உரிமைகளையும் தங்கள் கணவன்மாரின் சம்மதத்துடனேயே அனுபவிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். குடும்பத்தின் சொத்துரிமை முழுதும் பெண்களுக்கே என்பது பிழையான கூற்று. இங்கும், இலங்கைத் தமிழர் மத்தியில் வேறுபாடுகள் இருக்கலாம் ஆனாலும் மிகப் பெரும்பான்மையினரைப் பொறுத்தவரை சொத்து இரு வழியிலும் பிரிக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் மரபுப்படி, பெண்வழிச் சொத்து பெண்ணுக்கும், ஆண்வழிச் சொத்து ஆணுக்கும் ஆகும். இதில் முதல் வகை பெண்ணின் சீதனம் எனவும், இரண்டாம் வகை ஆணின் முதுசொம் எனவும் அழைக்கப்படும். இதைவிட விவாகம் செய்து குடும்பம் நடத்திய காலத்தில் உழைத்த பொருள்கள் தேடிய தேட்டம் எனப்படுகின்றது. இது பெற்றோருக்குப் பின் ஆண், பெண் பிள்ளைகளுக்குச் சம பங்காகப் பிரிக்கப்படும். மட்டக்களப்பில் மட்டும் ஒரு பிரிவினர் தாய்வழி மரபு முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கை உடையவர்களே. Mayooranathan 09:43, 15 செப்டெம்பர் 2005 (UTC)
தமிழர்கள் சொத்து
தொகுகடைசியாக செய்த உத்தியோகபுர்வ கணக்கெடுப்பின் படி யாழ்ப்பாணத்தின் 80% சொத்துக்கள் பெண்கள் கையிலேயே உள்ளன, மற்றய பகுதிகளிலும் இதே நிலை. நான் எழுதிய அணைத்துக்கும் முழு ஆதாரம் உண்டு, பல கலாசார சட்ட புத்தகங்களை வாசித்த பின்பே இதை எழுதினேன். தேசவழமை சட்டம் பெண்களுக்கே முழு உரிமையும் கொடுக்கின்றது, அதை வாசித்து புரிந்து கொள்ளவும் - சுரேன்
தேசவழமை சட்டம் சில பகுதிகள் கீழே - சுரேன்
- தேசவழமைச் சட்டத்தின்கீழ், ?சீதனம்? என்பது, ஒரு பெண்ணுக்குத் திருமணத்திற்கு முன்னரும், திருமணத்தின் போதும், பெண்ணின் குடும்பத்தாரால் கொடுக்கப்படுவதாகும்.
- இதனை, மனைவியின் சம்மதமின்றி எந்தவித அனுபவிப்பு உரிமைகூட கணவனுக்கில்லை. மனைவியின் எழுத்திலான சம்மதமின்றி கணவன் சீதனத்தைக் கையாள முடியாது. நிலம், வீடு, காணியாயினும்சரி, பணமாயினும் சரி, நகைகள, வேறு பொருட்களாயினும் சரி, அதுதான் நிலைமை.
- பிரிந்து வாழும் கணவன், அல்லது குடும்பத்தில் முரண்பாடுகளுடன் வாழும் கணவன், மனைவி தனது சீதனமூடாகத் தனது குடும்பத்தைப் பாதுகாக்க முற்படுவதற்குத் தடையாகத் தனது எழுத்திலான சம்மதத்தைத் தெரிவிக்க மறுத்தால், மிகமிகச் சிறிய நிர்வாகச் செலவில் (சில ரூபாய்கள்), அந்தப் பெண் கணவனின் எழுத்திலான சம்மதமின்றிக் குறிப்பிட்ட காரியங்களைத் தானாகச் செய்யும் அதிகாரத்தினை நீதி மன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்!
- மேலும், சீதனம் என்பது, எமது பெண்களை ஆண்களை விட பொருளாதாராPதியிலும், செல்வந்த நிலையிலும், பாதுகாப்பான நிலையிலும் வைத்துள்ளது!
- திருமணத்தின்போது மனைவிக்குக் கட்டும் தாலி, கொடுக்கும் உடை, ஏனையவைகள் எல்லாம், பெண்ணுக்குக் கணவனால் கொடுக்கப்பட்ட பரிசில்களாகிவிடுகின்றன. இவை, பெண்ணின் சொத்துக்களாகி விடுகின்றன. கணவனுக்கு, அவற்றில் எந்தவித உரிமையும் இல்லை.
- தேச வழமைச் சட்டமானது, மனைவியின் உழைப்பினுடாகப் பெறப்பட்ட அசையாச் சொத்துக்களைப் பெண்ணின் சார்பில் பாதுகாத்துக்கொள்கிறது.
- பொதுவாகக் கூறினால், திருமணமாகிய ஒரு பெண்ணின் கணவர், எந்வொரு அசையாச் சொத்தினையும் தனது பெயரில் மாத்திரம் வாங்கிக்கொண்டாலும், அவர் அதற்கான உறுதி முடித்த உடனேயே, அந்தச் சொத்தில் அரைப் பங்கானது தேச வழமைச் சட்டத்தின்கீழ் மனைவிக்குரியதாகிவிடுகிறது!
- மேலும், தேடிய தேட்டச் சொத்தினை, கணவன் மாத்திரம் தனது விருப்புக்கேற்றவாறு கைளாளும் உரிமை அற்றவர். மனைவியது கையொப்பமில்லாது, கணவன் மாத்திரம் அச் சொத்தினை முழுமையாகக் கையாள முடியாது. அரைப் பங்கிற்கே அவர் உரித்தானவர்.
- தேசவழமைச் சட்டத்தின்கீழ் ?தேடியதேட்டம்? என்பதூடாகப் பெண்களுக்குச் சம உரிமை, பாதுகாப்பு என்பவை வழங்கப்பட்டுள்ளன. திருமணமாகிய பின்னர் ஒரு குடும்பத்தால் தேடிச் சேமிக்கப்படுபவைகளில் அரைப்பங்கானது மனைவிக்குரியது என்கிறது தேச வழமைச் சட்டம். மனைவி வீட்டில் குடும்ப வேலைகள் செய்வது, ஏனையவைகள், தேடிய தேட்டத்தின் அரைப் பங்கினை அவளது சொத்தாக்கி விடுகிறது. இங்கு, மனைவிக்குச் சமனான பங்கு கொடுக்கப்படுகிறது.
- இங்கு எழும் முக்கிய பிரச்சனை என்னவென்றால், தேச வழமைச் சட்டத்தினில் கூறப்பட்டுள்ள ?சீதனம்? என்பதை, இன்றைய ?பெண்கள் விடுதலை? பற்றிப் பேசுபவர்கள் மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கும் தட்சனையுடன் கலப்பதாகும்! தேசவழமைச் சட்டத்தில் வரதட்சனை என்பதற்கு இடமில்லை! இதனால், மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கப்படும் வரதட்சனையினை சட்டாPதியில் பதியமுடியாது. ஆகையால், தட்சனையினைக் கணவன் என்ன செய்தாலும், மனைவிக்கு அதில் சட்டாPதியிலான அதிகாரம் எதுவுமில்லை.
சுரேன்,
தாய்வழி மரபு என்பதையும் தற்காலத்துச் சீதன முறையினால் வந்த நிலைமைகளையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர். யாழ்ப்பாணத்தில் 80% சொத்து பெண்களிடம் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர். அது யாருடைய புள்ளிவிபரம் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தால் கூட யாழ்ப்பாணச் சமுதாயம் ஒரு தாய்வழி மரபுச் சமுதாயம் என்பதற்கு அது ஆதாரம் ஆகாது. இந்த நிலைமை பெருமளவு ஆண்கள் வெளிநாடு சென்றுவிட்ட தற்கால அசாதாரணச் சூழ்நிலைகளின் விளைவேயொழிய வேறல்ல.
இப்பொழுது நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கும் விடயம் நீர் கட்டுரையில் எழுதியிருப்பவை சரியா இல்லையா என்பதுதான். உம்முடைய கூற்றிலுள்ள பிழைகள் பின்வருமாறு:
- 1. இலங்கை தமிழர்கள் தாய்வழி மரபை பின்பற்றுபவர்கள்.
- 2. பெண்களே குடும்பத்தின் தலைவர்களாக கொள்ளப்படுகின்றனர்.
- 3. குடும்பத்தின் சொத்துரிமை அந்த குடும்பத்தின் பெண்களுக்கே உள்ளது.
உம்முடைய பதில் இவற்றில் எதற்குமே சான்று தரவில்லை.
நீர் எந்தத் தேச வழமைச் சட்டத்திலிருந்து உம்முடைய மேற்கோள்களை எடுத்திருக்கிறீர் என்று எனக்குத் தெரியாது. தேசவழமைச் சட்டம் அதிகாரம் 1, சுதந்திரங்களும் ஆதன உரிமையும் - 1. ஆதன வகைகள் என்னும் தலைப்பின் கீழ் உள்ள பகுதியிலிருந்து ஒரு மேற்கோள் இது:
- பிதாவானவன் காலஞ்சென்று போனால், விவாகம் பண்ணுகையில் அவன் கொண்டுவந்த முதுசொம்மான ஆதனங்களெல்லாம் ஆண்பிள்ளை அல்லது ஆண்பிள்ளைகள் புறமாகச் சேரும். பெண்பிள்ளை அல்லது பெண்பிள்ளைகளு முண்டானால் அவர்களைக் கலியாணம் முடித்துக் கொடுக்கும்போது, அவர்களுக்கு அவர்களுடைய மாதாவுடைய சீதனத்திலே ஒவ்வொரு பங்கு சீதனமாகக் கொடுப்பார்கள். இப்படியே ஆணுரிமை ஆணுக்கும், பெண்ணுரிமை பெண்ணுக்கும் பிசகில்லாதே சேர்ந்து வந்தன.'
இதே அத்தியாயத்தில், பெண்பிள்ளைகளின் விவாகமும் சீதனமும் என்ற பகுதி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
- சீதனம் பெற்றுப்போன பெண்பிள்ளைகள் தாங்கள் பெற்றுப்போன சீதனத்துடன் நின்றுவிடுகிறதேயல்லாமல், பிதாமாதா காலஞ்சென்றதன் பின் தங்களுக்கு இன்னும் அவர்களுடைய ஆதனத்தில் உரிமைப் பங்கு உண்டென்று வழக்குச் சொல்லவொண்ணாது.
மேற்படி மேற்கோள்களில், குடும்பத்தின் சொத்துரிமை பெண்களுக்கு மட்டுமே உள்ளது என்ற உமது கருத்து அடிபட்டுப் போகிறது.
தேசவழமைச் சட்டம், அதிகாரம் 4, நன்கொடை என்ற தலைப்பின் கீழ் உள்ள பகுதியிலிருந்து ஒரு மேற்கோள்:
- இருபேருஞ் சமாதானத்துடனே இருக்கிற காலத்திலேயானால், அவளுடைய சீதனத்தில் ஒரு பகுதியை அவன் கொடுக்கலாம். ஆனால் தன் புருஷன் தன் முதுசொம்மான ஆதனத்திலே தானாய்க் கொடுக்கவேண்டுமானால் பெண்சாதி பிள்ளைகளுடைய சம்மதமில்லாமல் அதிலே பத்திலோரு பங்கு மாத்திரம் கொடுக்கலாம். ஆனால் பெண்சாதி புருஷனுக்குக் கீழ் அமைந்தவளானபடியால் தன் புருஷனுடைய சம்மதமில்லாமல் யாதொன்றும் கொடுக்கப்படாது.
மேலே தரப்பட்ட மேற்கோள், உமது பெண்களே குடும்பத்தின் தலைவர்களாக கொள்ளப்படுகின்றனர் என்ற கருத்தைப் பிழையெனக் காட்டப் போதுமானது.
நீதி மன்றத்தில் பெண்கள் ஆண்களுக்கெதிராகச் சில நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும், தேசவழமைச் சட்டத்தில் பெண்களின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பு உள்ளது என்றும், திருமணத்தின் போது மனைவிக்குக் கொடுக்கும் உடை, நகைகள் போன்றவை பெண்ணுக்குச் சொந்தம் என்றும் நீர் எடுத்துக் காட்டியிருப்பவை எந்த நவீன சமுதாயங்களுக்கும் பொருத்தமானவைதான், தாய்வழி மரபுச் சமுதாயங்களுக்கு மட்டும் பொருந்துவன அல்ல.
தேடிய தேட்டத்தினை முழுமையாகக் கணவன் கையாள முடியாது என்றும், அரைப்பங்கு பெண்ணுக்குரியது என்றும் எடுத்துக்காட்டியிருக்கிறீர். அரைப் பங்கு பெண்ணுக்குப் போகும்போவதால் அது தாய்வழி மரபுச் சமுதாயமானால் மற்ற அரைப்பங்கு ஆணுக்குச் செல்கிறதே? அரைப்பங்கு தந்தைவழி மரபுச் சமுதாயம் எனலாமா?
சீதனம் என்பது, எமது பெண்களை ஆண்களை விட பொருளாதார ரீதியில், செல்வந்த நிலையிலும், பாதுகாப்பான நிலையிலும் வைத்துள்ளது என்று கூறுகிறீர். எப்படி? சீதனம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் சேர்த்துத் தான் எழுதப்படுகிறது. கணவன் சம்மதமில்லாமல் மனைவி எதுவும் செய்யமுடியாது. நீரே எடுத்துக்காட்டியபடி:
- பிரிந்து வாழும் கணவன், அல்லது குடும்பத்தில் முரண்பாடுகளுடன் வாழும் கணவன், மனைவி தனது சீதனமூடாகத் தனது குடும்பத்தைப் பாதுகாக்க முற்படுவதற்குத் தடையாகத் தனது எழுத்திலான சம்மதத்தைத் தெரிவிக்க மறுத்தால், மிகமிகச் சிறிய நிர்வாகச் செலவில் (சில ரூபாய்கள்), அந்தப் பெண் கணவனின் எழுத்திலான சம்மதமின்றிக் குறிப்பிட்ட காரியங்களைத் தானாகச் செய்யும் அதிகாரத்தினை நீதி மன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்!
இது எதைக் காட்டுகிறது? பிரிந்து வாழும் சூழ்நிலையிலும் மனைவி நீதிமன்றம் சென்றுதான் குறிப்பிட்ட சில காரியங்களைச் செய்ய அதிகாரம் பெற வேண்டியிருக்கிறது. இதற்கு மேலும் உமக்கு விளக்கம் சொல்ல வேண்டியிருக்காது என எண்ணுகிறேன். Mayooranathan 14:27, 15 செப்டெம்பர் 2005 (UTC)
விடைகள்
தொகு- நீங்கள் சீதனத்தையும் வரதட்சனையையும் ஒன்றாக நினைத்து குழப்புகிறிர்கள்.
- தேசவழமைபடி முதுசொமிலிருந்தும் பெண்களுக்கு பங்கு உண்டு.
- ""இந்த நிலைமை பெருமளவு ஆண்கள் வெளிநாடு சென்றுவிட்ட தற்கால அசாதாரணச் சூழ்நிலைகளின் விளைவேயொழிய வேறல்ல.""
- இது பிழையான தகவல், வெளிநாடு சென்றுவிட்டால் என் சொத்தை பெண் மேல் எழுத வேண்டும் ???. யுத்துக்கு முன்பு கூட இதுதான் நிலை. வேண்மானால் கச்சேரியில் விசாரித்து பாரும்.
நான் பின்வருவனவற்றை ஆதாரமாக வைத்தே இதை எழுதினேன்;
- நான் வாசித்த சட்ட மற்றும் கலைகலாச்சார புத்தகங்கள்
- எனது பெற்றோர் எனக்கு கூறிய தகவல்கள்
- எனது அனுபவங்கள், (எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம், மானிப்பாய்)
- நான் பழகிய தமிழ் மக்கள் பழக்கவழக்கங்கள், (உறவினர், நண்பர், மற்றும் பலர்)
- நான் கண்டவை கேட்டவை
நன்றி - சுரேன்
ஆ.வி. கட்டுரை
தொகுஇத்தலைப்பின் இணைக்கட்டுரை ஆங்கில விக்கியில் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதை ஒருமுறை நோட்டம் விடவும். (நோடு என்ற சொல் கன்னடத்தில் பார் என்பதற்குப் பயன்படுகிறது. தமிழிலக்கியங்களில் இதன் பயன்பாடு அறியப்பட்டுள்ளதா?) -- சுந்தர் \பேச்சு 13:58, 7 ஏப்ரல் 2008 (UTC)
- நான் மேலே உள்ள எல்லாவற்றையும் படிக்கவில்லை. தமிழில் நோ என்பது ஒரு வினை (எல்லா வினைகளைப்போலவும் ஏவல் வினை வடிவம்). நோ என்றால் (குறிப்பாய்) பார், துன்பம் உறு (வலி, நோவு, நோய் கொள்). தமிழில் நோக்கம், நோட்டம் ஆகிய சொர்கள்தான் மிகப்பெரும்பாலும் பார் என்னும் பொருளில் வழங்குகின்றது. நோவுதல், நோன்பு முதலிய சொற்களில் துன்பமுறுதல் கருத்து உள்ளது. அடிப்படையான கருத்து போதிய ஆய்வு செய்யாமல் கூறுதல் இயலாது, ஆனால், முதற்கணிப்பில் "இழுத்தல்" என்னும் பொருள் இருப்பதுபோல் தெரிகின்றது. விருப்பமுடன் (ஈர்ப்புடன்), குறிப்பாக பார்ப்பதற்கு நோக்கு என்று பெயர். இங்கே மனம் ஈர்க்கபடுதல், இழுக்கப்படுதல் பொருள் அடிக்கருத்தாக இருக்கலாம். வலி, துன்பம் என்பதில் இழுத்தல் தெளிவாக உள்ளது. நோண்டுதல் என்பதும் குறிப்பாக தோண்டுதல் (வேண்டியவற்றை கிண்டி நம்பால் இழுத்தல்). ஆனால் நோண்டு என்பது நோ என்பதின் விரிவா என்று துல்லியமாய்த் தெரியவில்லை. நோடு என்னும் சொல் தமிழில் ஒரு சில இடங்களில் ஆளப்பட்டுள்ளது. திருவருட்பயன் ஆறாம் பத்தில் அறியும் நெறி என்னும் பகுதியில் 57 ஆவது பாட்டு (பார்க்கவும்):
புன்செயலி நோடு புலன்செயல்போல் நின்செயலை
மன்செயலது ஆக மதி
- என்று வருகின்றது (நன்றி கூகுள் தேடல்). நோட்டம் என்பதன் அடிச்சொல் நோடு என்னும் வினைவடிவம்தான். நோக்கு--> நோக்கம் என்பதுபோல நோடு -->நோட்டம்; பாடு --> பாட்டம் (இங்கே அந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் வைத்துக்கொள்ளாதீர்கள். ஆட்டமும் பாட்டமுமா இதென்ன இங்கே கூத்து என்னும் பேச்சு வழக்குகளைப்பாருங்கள்)தேடு --> தேட்டம்; வாடு-->வாட்டம். எனவே நோடு என்பது தூயத் தமிழ்ச்சொல்தான். ஆனால் அதிகம் வழக்கில் இல்லாதது (மிகமிகச்சிறு வழக்கில் பதிவாகி உள்ளது).--செல்வா 15:01, 7 ஏப்ரல் 2008 (UTC)
ஆதாரம் தேவை
தொகுபரம்பரை அலகு ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள் இலங்கை தமிழர் பெரும்பான்மை சிங்களவர்களுடன் 55வீதம் பொதுவான பரம்பரை அலகுகளை கொண்டுள்ளனர் ,அதாவது இலங்கை தமிழரும் சிங்களவரும் மிக நெறுங்கிய உறவினர்கள் என கூறியுள்ளனர் . இலங்கை தமிழருக்கும் இந்திய தமிழருக்கும் 15 வீதம் தான் பொதுவான பரம்பரை அலகுகள் உள்ளன.--Natkeeran 01:26, 25 ஜூலை 2009 (UTC)
நக்கீரன், இலங்கை தமிழ் சிங்கள மக்களின் வாழ்வியல் தன்மைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது வெளிப்படுகின்றது தான். ஆனால் இவ்விரண்டு இனங்கள் தொடர்பான ஒருமைப்பாட்டை இதுவரை எடுத்துக்காட்டிய எந்த ஆவணமும் இல்லை. ஆனால் உங்கள் கூற்று (55%) ஆச்சரியமாக உள்ளது. இந்த தகவலை ஒரு ஊகத்தின் அடிப்படையில் சொல்கிறீர்களா? அல்லது ஏதாவது ஆவணங்கள் ஊடாக சொல்கிறீர்களா என்பது விளங்கவில்லை. பரம்பரை அலகு ஆராய்ச்சி மூலம் விஞ்ஞானிகள்... இதனை சற்று விரிவாகக் கூறுவீர்களா? இந்த ஆய்வு எப்போது நடைப்பெற்றது? யாரால்? --HK Arun 06:03, 29 ஏப்ரல் 2011 (UTC)
- நானும் இதைப் பற்றி படித்திருக்கிறேன். இலங்கைத் தமிழரும் சிங்களவரும் இனவழியில் நெருங்கியவர்கள் ஆவர். மேற்கூறிய கூற்று இதையே கூறுகிறது. அதாவது இலங்கைத் தமிழரும் சிங்களவரும் பூர்விகக் குடிமக்கள் என்பது உண்மை என்றும், அவர்கள் தமிழ் அரசர்கள் மற்றும் புத்த சமயத் துறவிகளால் வெவ்வேறு மொழிகளைப் பின்பற்றலாயினர் என்பது உண்மை என்றும், சிங்களவர் இந்திய ஆரிய வம்சத்தினர், தமிழர் திராவிடர்கள் என்பது பொய் என்றும் இக்கூற்று கூறுகிறது. இருவரும் ஒரே இனத்தவர் என்பது போல இக்கூற்றின் போக்கு அமைந்துள்ளது. ஆ. வி. இலங்கைத் தமிழர் டயஸ்போரா கட்டுரையும், மரபியற் கற்கை கட்டுரையும் உங்களுக்கு இது பற்றி அறிய உதவலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:05, 1 சனவரி 2013 (UTC)
- மேலே இணைப்புத் தரப்பட்டுள்ள கட்டுரைகளில் தரப்பட்டுள்ள தகவல்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாகக் காணப்படுகின்றன. இலங்கைத் தமிழர் பற்றிய மரபியற் கற்கை கட்டுரை சிங்களவர்களுக்கும் தென்னிந்தியத் தமிழர்களுக்கும் மிகையான தொடர்புகள் இருப்பதாகக் காட்டும் அதே வேளை சிங்களவர் பற்றிய மரபியற் கற்கை கட்டுரை, தற்கால ஆய்வுகள் அதனை மறுதலிப்பதாகக் காட்டுகிறது. அப்படியாயின் இலங்கைத் தமிழர் மரபு தொடர்பான கட்டுரையில் உள்ள தகவல்கள் காலங்கடந்தவையா? மேற்சொன்ன தற்கால ஆய்வுகள் இலங்கைத் தமிழர், தென்னிந்தியத் தமிழர் தொடர்பு குறித்து என்ன கூறுகின்றன? மேலும், தமிழர் மரபு தொடர்பான கட்டுரை, சிங்களவர்களுக்கும் தென்னிந்தியத் தமிழருக்கும் ஏறத்தாழ 70% பொதுமையும், சிங்களவருக்கும், இலங்கைத் தமிழருக்கும் 55% பொதுமையும் இருப்பதாகக் காட்டும் அதேவேளை இலங்கைத் தமிழருக்கும் இந்தியத் தமிழருக்கும் 17% பொதுமை இருப்பதாகக் கூறுகிறது. இது எப்படிச் சாத்தியமாகிறது என்று தெரியவில்லை. இத்தகைய புள்ளிவிபரங்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்று தெரியவில்லை. அத்தோடு பெருமளவுக்கு முரண்படுகின்ற முடிவுகளுடன் இவ்வாறான பல ஆய்வுகள் வெளிவருவதையும் பார்க்கிறோம். சிங்களவர் மரபு தொடர்பான கட்டுரையில்,
- "பழைய கற்கை பெருமளவு தமிழ் மூல தொடர்பும், வடமேற்கு இந்தியத் தொடர்பற்று குறிப்பிட்டளவு வங்காளியினருடன் தொடர்பும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றது. அதேவேளை தற்காலக் கற்கைகள் பெருமளவு வங்காளத் தொடர்பும் சிறியளவு தமிழ் மற்றும் வடமேற்கு இந்தியத் தொடர்பும் உள்ளதாகக் குறிப்பிடுகின்றது."
- என்று குறிப்பிடப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, இத்தகைய ஆய்வுகளில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகங்கள் எழுவதையும் தவிர்க்க முடியாது. எனவே, இத்தகையை ஆய்வுகளில் ஒன்றை மட்டுமே சான்றாகக் கொண்டு கட்டுரை எழுதுவதில் கவனம் தேவை. அது வாசிப்பவர்களை பிழையாக வழி நடத்தாமலிருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். "தமிழ் விக்கிப்பீடியாவிலேயே இப்படித்தான் இருக்கிறது" என்று சான்று காட்ட முயல்வார்கள். ---மயூரநாதன் (பேச்சு) 06:45, 19 சூலை 2013 (UTC)
ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தமிழர் எண்ணிக்கைக்கு (53,000) ஆதாரமில்லை.
தொகுகடந்த 2011 மக்கள்த்தொகை கணக்கெடுப்புப்படி ஆஸ்திரேலியாவில் மொத்த தமிழரின் எண்ணிக்கையே 50,151 மட்டும்தான். இதில் 39.6% மட்டும்தான் இலங்கையில் பிறந்தவர்கள். பார்க்க: SBS census explorer for Tamil. எண்ணிக்கையில் 19,854 மட்டுமே இலங்கையில் பிறந்த ஆஸ்திரேலியத் தமிழர்கள். மக்கள் தொகைகணக்கெடுப்பு இவ்வாறு இருக்கையில் ஆஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தமிழர் எண்ணிக்கைக்கு 53,000 என்பது ஆதாரமில்லாத தவறாக கணக்காகவே நான் கருதுகிறேன். --Mugunth (பேச்சு) 23:56, 18 சூலை 2013 (UTC)
- நாம் ஆதாரம் உள்ள கணக்கைத் தருவதே சரி. எனினும் பல நாடுகளில் கணக்கீடுகளில் பல சிக்கல்கள் உள்ளன. எ.கா கனடாவில் வீட்டில் தமிழ் பேசி, அவ்வாறு தாம் அறிவித்துக் கொண்டால் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். --Natkeeran (பேச்சு) 04:19, 19 சூலை 2013 (UTC)
- இலங்கைத் தமிழர்களின் ஆஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகள் இக்கணக்கில் இல்லை. --Anton (பேச்சு) 04:52, 19 சூலை 2013 (UTC)
- முகுந்த், 53,000 என்பது அதிகமானதோ தெரியாது. ஆனாலும் இப்போது தந்துள்ள 19,000 கணக்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அன்ரன் கூறுவது போல, இலங்கையில் பிறந்தவர்களுக்கு ஆத்திரேலியாவில் பிறந்த பிள்ளைகள் (இப்போது மூன்றாம் தலைமுறையும் உள்ளது) இக்கணக்கெடுப்பில் காட்டப்படவில்லை என்பதே உண்மை. அவர்களும் இலங்கைத் தமிழர் எனக் கட்டுரையில் அடையாளம் காட்டப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 08:13, 19 சூலை 2013 (UTC)
"The Jaffna Tamil dialect and the Indian Tamil dialects are not mutually intelligible." - ஆங்கிலக் கட்டுரை
தொகுஆங்கிலக் கட்டுரையில் யாழ்ப்பாணத் தமிழுக்கும் இந்தியத் தமிழும் ஒன்றை ஒன்றை புரிந்து கொள்ள முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது தவறான கூற்றாகவே எனக்குப் படுகிறது. சொற், உச்சரிப்பு வேறுபாடுகள் உண்டு. ஆனால் பேசும் பொழுது புரிந்து கொள்ள முடியும். --Natkeeran (பேச்சு) 13:30, 23 சூலை 2013 (UTC)
- ஆம், நற்கீரன் சொல்வது சரியே! எனக்கும் கூட இலங்கைத் தமிழ் வழக்கை முதன்முதலில் புரிந்துகொள்ளுதல் கடினமாயிருந்தது! (கடினமாய் தான் இருந்தது, புரியாமல் இல்லை). சில சொற்களும், உச்சரிப்புகளுமே வேறுபடுகின்றன. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:03, 23 சூலை 2013 (UTC)
- என்னால் பெரும்பாலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. தமிழ்நாட்டின் சில ஊர்களின் உச்சரிப்புக்களைப் புரிந்து கொள்வதில் சற்றுக் கடினம். ஆனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று இல்லை. --Natkeeran (பேச்சு) 14:14, 23 சூலை 2013 (UTC)
- வழக்கமான வட்டார வேறுபாடுகளைத்தான் காண முடிகிறது. மற்றபடி புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொன்னால் முற்றிலும் தவறு. -- சுந்தர் \பேச்சு 14:47, 23 சூலை 2013 (UTC)