பேச்சு:இலங்கை, ஈழம் (சொல்விளக்கம்)
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
செங்கை பொதுவன் ஐயா, நான் இங்கே தொகுத்து வைத்துள்ளவற்றையும் பார்க்கவும். பயனர்:HK Arun/இலங்கை --HK Arun (பேச்சு) 11:39, 6 சனவரி 2013 (UTC)
- படித்தேன். நன்றாக உள்ளது. வளர்க. அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 01:36, 9 சனவரி 2013 (UTC)
- அன்புடன் ஐயா, "இலங்கை" எனும் சொல்லுக்கான பொருள் தீவு என வரலாற்றாசிரியர் கா. இந்திரபாலா குறிப்பிடுகிறார் என்பதை சுட்டவே இணைப்பை வழங்கியிருந்தேன். நீங்கள் கட்டுரையில் குறிப்பிடும் பொருள் வேறாக இருக்கிறது. எனவே இதுதான் பொருள் என ஒரு சொல்விளக்கத்தை உறுதிப்பட கூறமுடியாது; பல்வேறு சொல்விளக்கங்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளதை தெளிவாக குறிப்பிடல் நல்லது என நினைக்கிறேன். --HK Arun (பேச்சு) 18:14, 10 சனவரி 2013 (UTC)
- இலங்கை தீவு என்னும் சொல்லால் வழங்கப்பட்டு வந்ததாக இந்திரபாலா குறிப்பிடுகிறார். சான்றுகள் அயலக அயன்மொழிச் சான்றுகளாக உள்ளன. அவற்றைப்பற்றி நான் ஒன்றும் கூறுவதறகு இல்லை. எனது செய்திகள் தமிழ்நூல்களில் உள்ள அகச்சான்றுகள். --Sengai Podhuvan (பேச்சு) 20:11, 10 சனவரி 2013 (UTC)