பேச்சு:ஊழியர் வருங்கால வைப்பு நிதி, இந்தியா

மாதாந்த இலங்கை வழக்கா? மாதாந்திர என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 08:47, 15 சூன் 2012 (UTC)Reply

இலங்கையில் பொதுவாக மாதாந்த, வாராந்த, நாளாந்த முதலியன பயன்படுத்தப்படுகின்றன. மாதம்+ அந்தம் என விரியும். மாதாந்திர எனவும் பயன்படுத்துவர்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 08:58, 15 சூன் 2012 (UTC)Reply

பொதுவாக இலங்கையில் மாதாந்த, வாராந்த என்றுதான் பயன்படுத்துவார்கள். நான் வாசிக்கும் போது மாதாந்திர என்று இருந்தது. அது நான்தான் தவறாக மாதாந்திர என எழுதிவிட்டேன் என்று நினைத்து, மாற்றினேன். மன்னிக்கவும். மாதாந்திர என்பது சரியாக இருந்தால் தயவுசெய்து மாற்றி விடுங்கள்.--dj fa (பேச்சு) 09:12, 15 சூன் 2012 (UTC)Reply

விளக்கத்திற்கு நன்றி சஞ்சீவி சிவகுமார்.. மாதாந்த என்பது இலங்கை வழக்கு என தெரியாது Fasly, அதனாலேயே மாற்றினேன். இலங்கை வழக்கில் உள்ள சொல் எனில் மாற்றத் தேவையில்லை :)--சண்முகம்ப7 (பேச்சு) 11:21, 15 சூன் 2012 (UTC)Reply
இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள 12%, 8% போன்ற தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டது? இது இலங்கைத் தரவுகள் என்றால் கட்டுரைத் தலைப்பை ஊழியர் சேமலாப நிதி (இலங்கை) என மாற்றுவது நல்லது.--Kanags \உரையாடுக 12:17, 9 சூலை 2012 (UTC)Reply
ஊழியர் சேமலாப நிதி (இலங்கை) என்பதே சரி. ஏனென்றால் மலேசியாவிலும் ஊழியர் சேமலாப நிதி எனும் பதம் பாவனையிலுள்ளது. en:Employees Provident Fund (Malaysia)--Anton (பேச்சு) 09:06, 10 சூலை 2012 (UTC)Reply

தகவலுக்காக தொகு

ஊழியர் சேமலாப நிதி --Anton (பேச்சு) 09:01, 10 சூலை 2012 (UTC)Reply

இணைப்பு தொகு

இக்கட்டுரையுடன் ஆங்கில விக்கிக்குen:Employees' Provident Fund Organisation of India என்ற கட்டுரை இணைக்கப்பட வேண்டும் ஆனால் இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் - 1952 என்ற கட்டுரைக்கு இணைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி இக்கட்டுரைக்கு இணைப்பு தரப்பட வேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:45, 10 சூலை 2012 (UTC)Reply

அக்கட்டுரைக்கு இணைப்பு கொடுத்தது சரி என்று எண்ணுகிறேன். இக்கட்டுரையில் உள்ள தகுந்த தகவல்களை அக்கட்டுரையில் இணைக்க வேண்டும்.--குறும்பன் (பேச்சு) 18:31, 10 சூலை 2012 (UTC)Reply

தலைப்பு தொகு

ஊழியர் சேமலாப நிதி (இந்தியா) என மாற்றலாமா? ஏனென்றால், ஊழியர் சேமலாப நிதி இலங்கையிலும் மலேசியாவிலும் காணப்படுகின்றது. --Anton (பேச்சு) 16:41, 10 சூலை 2012 (UTC)Reply

தமிழகத்தில் ஊழியர் சேமலாப நிதி என்ற சொற்பதத்தை பயன்படுத்துவதில்லை அதை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி என்றே அழைக்கின்றனர். --குறும்பன் (பேச்சு) 17:03, 10 சூலை 2012 (UTC)Reply

அவ்வாறென்றால் இந்தக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள் மாற்றப்பட வேண்டும். காரணம் இது இந்தியா சார்பானதாகவே இருக்கின்றது.--Fasly (பேச்சு) 04:04, 11 சூலை 2012 (UTC)Reply

Return to "ஊழியர் வருங்கால வைப்பு நிதி, இந்தியா" page.