பேச்சு:எண் கோட்பாடு
வணக்கம். எண் கொள்கை என்ற இன்னொரு கட்டுரையையும் பார்த்தேன். அது வேறு இது வேறு. எண் கோட்பாடு என்பது கணிதத்தின் ஓர் உயர்ந்த விசாலமான பிரிவு. இது முழு எண்களைப்பற்றி பெரிய பெரிய தத்துவங்களையும் தேற்றங்களையும் எடுத்தாள்கிற ஓர் ஆழமான பிரிவு. இத்துடன்கூட ஒரு மேல்நோக்கு விஷயமான என்னின்ன வித விதமான எண்கள் கணிதத்தில் பேசப்படுகின்றன என்ற கட்டுரையை இணைக்கக்கூடாது.--Profvk 03:45, 9 செப்டெம்பர் 2011 (UTC)
- தெளிவு படுத்தியமைக்கு நன்றி ஐயா, இணைத்தல் பரிந்துரையை நீக்கிவிட்டேன். பெயர் ஒற்றுமையால் குழப்பம் வராதிருக்க அக்கட்டுரையை எண்களின் வகைகள் என்ற தலைப்புக்கு மாற்றிவிட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 04:54, 9 செப்டெம்பர் 2011 (UTC)
- நல்லதே செய்தீர்கள். நன்றி.--Profvk 06:01, 9 செப்டெம்பர் 2011 (UTC)
@மணி.கணேசன் and Kalaiarasy:
- ரேனே டேகார்ட் என்ற கணிதவியலாளரின் பங்களிப்பு பகுமுறை வடிவியலில் என்றே கருதுகிறேன். அவர் எண்கோட்பாட்டுப் பிரிவில் பங்களித்துள்ளாரா என்பதற்கான ஆதாரங்கள் உள்ளனவா? அதற்கான தகுந்த ஆதாரம் இணைக்கப்படாவிட்டால் அதனை நீக்க வேண்டும்.
- தமிழ்நாட்டு பள்ளிப்பாடப் புத்தகங்களை மேற்கோளாகக் காட்டும்போது வகுப்பு, பாடம், பக்கம் மட்டுமல்லாது அப்புத்தகம் எந்தப் பருவத்துக்கானது என்பதையும் குறிப்பிடுங்கள். மேலதிக வாசிப்புக்கோ, சரிபார்த்தலுக்கோ எளிதாக இருக்கும்.
- ஒரு கணிதவியளாளர் பற்றிய குறிப்புகள் எண் கோட்பாட்டின் வரலாற்றின் கீழ் பொருந்தவில்லை என்பதால், ’வரலாறு’ என்ற துணை தலைப்பில் நீங்கள் தந்திருந்த டயோஃபாண்டஸ் குறித்த விவரங்களை ”தலைசிறந்த பெயர்கள் சில” என்ற துணை தலைப்பின் கீழ் மாற்றியிருக்கிறேன்.
--Booradleyp1 (பேச்சு) 07:00, 24 சூலை 2017 (UTC)
- Booradleyp1! ரேனே டேகார்ட் தொடர்பான உங்கள் கேள்விக்கு மணி.கணேசன் அவர்கள் கணிதம் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி இரண்டு. பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6.. 2017. பக். 102. என்பதை மேற்கோளாகக் கொடுத்திருக்கிறார். அதனைச் சரிபார்த்துச் சொல்ல முடியுமா?--கலை (பேச்சு) 00:13, 26 சூலை 2017 (UTC)
@Kalaiarasy:, மணி கணேசன் குறிப்பிட்டுள்ள மேற்கோள் பக்கத்தில் ரேனே டேகார்ட்டின் பகுமுறை வடிவவியல் பங்களிப்புகள் மட்டுமே தரப்பட்டுள்ளன. அவரது எண் கோட்பாட்டுப் பங்களிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. ([1] இதிலுள்ள கணிதம்-தமிழ்-முதல்பருவம்-பக்கம் 110).--Booradleyp1 (பேச்சு) 04:37, 26 சூலை 2017 (UTC)
- மணி.கணேசன்! உங்களுக்கு ரேனே டேகார்ட்டின் பங்களிப்பு எண்கோட்பாட்டுப் பிரிவில் இருப்பதற்கான ஆதாரம் கிடைக்காவிடின், அந்தப் பகுதியை நீக்கிவிடுங்கள்.--கலை (பேச்சு) 10:53, 26 சூலை 2017 (UTC)