பேச்சு:கச்சாய்
நீக்கல் வார்ப்புரு இணைப்பவர் அதற்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும். அல்லது நீக்குபவர் இக்கட்டுரை நீக்கப்படலாமா என்பது குறித்து இரண்டாம் தடவை யோசித்துச் செய்ய வேண்டும். யாரும் நீக்கக் கேட்டால் கட்டாயம் அதனை நீக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.--Kanags \உரையாடுக 08:57, 29 ஆகத்து 2012 (UTC)
- இக்கட்டுரையில் விக்கிக்கு ஏற்ற பல தகவல்கள் உள்ளன. ஒரே ஒரு குறை விக்கி நடையில் எழுதப்படவில்லை என்பது மட்டும் தான்.--Kanags \உரையாடுக 08:58, 29 ஆகத்து 2012 (UTC)
- +1, அவர் புதுப்பயனர் என்பதால் நேற்று இக்கட்டுரையை வேறொரு இடத்தில் இட்டிருந்தார், பார்க்க பயனர் பேச்சு:Sivam29--சண்முகம்ப7 (பேச்சு) 09:46, 29 ஆகத்து 2012 (UTC)
- ஓரளவிற்கு எழுத்துப்பிழை திருத்தி, உரை திருத்தியுள்ளேன். இன்னும் கொஞ்சம் கடுமையான உரை திருத்தம் செய்தால் நல்ல குறுங்கட்டுரையாகிவிடும்--சண்முகம்ப7 (பேச்சு) 10:10, 29 ஆகத்து 2012 (UTC)
- +1, அவர் புதுப்பயனர் என்பதால் நேற்று இக்கட்டுரையை வேறொரு இடத்தில் இட்டிருந்தார், பார்க்க பயனர் பேச்சு:Sivam29--சண்முகம்ப7 (பேச்சு) 09:46, 29 ஆகத்து 2012 (UTC)
இதனை கச்சாய் என்று பெயர் மாற்றலாமா? அல்லது கச்சாய் தெற்கு என்றுதான் இருக்க வேண்டுமா? --Anton (பேச்சு) 09:32, 29 ஆகத்து 2012 (UTC)
- நன்றி அன்ரன், சண்முகம். அழகாகத் திருத்தியிருக்கிறீர்கள். கச்சாய் என்பதே சரியான தலைப்பு.--Kanags \உரையாடுக 11:14, 29 ஆகத்து 2012 (UTC)
சில கருத்துகள்
தொகு//16 முதல் 25 வயதிக்கிடையிலேயே திருமணம் செய்வது வழக்கமாக உள்ளது. அதேவேளை இந்த கிராமத்தில் காதல் திருமணமும், பேச்சு திருமணமும் சம அளவிலேயே இருக்கின்றன// //இந்த கிராமத்தில் மாமியார், மருமகள் பிரச்சனை என்பது அரிதாகத்தான் காண படுகிறது. மாமியார், மாமனார் என்றால் தனி மரியாதை குடுக்கும் அளவுக்கு இந்த கிராமத்தின் வாழ்க்கை முறை உள்ளது// //இருந்தாலும் பண்டைய கிராம வழக்கு மாறி சற்று வித்தியாசமாக, மாற்று திருமணம், குடும்ப பிரிவினை, குடும்பங்களில் ஒற்றுமை இன்மை, போன்ற பிரச்சனைகள் இப்போது தலை தூக்கி உள்ளது என்றுதான் சொல்ல முடியும், அதே வேளை சிறு வயதினர் மதுபானம் பாவிப்பதும் இன்றைய காலத்தில் அதிகமாக உள்ளன என்ன்று சொல்லலாம். இருபது வருஷத்துக்கு முன்னர் பெற்றோரை பார்த்து பயப்பிடும் பிள்ளைகள் இன்று பெற்றோரை எதிர்த்து பேசும் அளவுக்கு இந்த கிராமத்தின் நிலைமை மாறி உள்ளது. இதற்கான காரணம் கிராமத்தின் நாகரீக வளர்ச்சி என்றுதான் கூற முடியும். இந்த கிராமத்து இளைஞர்கள் யுவதிகள் திருமணத்துக்கு முன் சம்பாதிக்கும் பணத்தை தங்கள் சொந்த சேமிப்பிலையே வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது. அதாவது தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை பெற்றோரிடம் குடுப்பது இல்லை என்றுதான் சொல்ல முடியும், ஆனால் பெற்றோருகோ அல்லது உடன் பிறந்தவர்களுக்கோ உதவி தேவை படும் பட்சத்தில் இவர்கள் கண்டிப்பாக உதவி செய்கிறார்கள். இதனால்த்தான் இன்றும் இந்த கிராமம் செழிப்பாக இருக்கிறது என்று கூறலாம்.//
மேலுள்ள வரிகளை நீக்கியிருக்கிறேன். இவை பொதுவாக யாழ்ப்பாணத்து வழக்குமுறையே. இக்கிராமத்துக்கு சிறப்பானதாக ஆதாரம் எதுவும் இல்லை. இவற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 00:19, 1 செப்டெம்பர் 2012 (UTC)
//வேற்று பிரதேசத்து மக்களின் குடியேற்றம்தான் இந்த கிராமத்தின் சீர்கேட்டுக்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.// இதனைப் பிரதேசவாதம் எனலாமா?--Kanags \உரையாடுக 00:19, 1 செப்டெம்பர் 2012 (UTC)
நான் எழுதிய முக்கியமான பல தகவல்களை நீக்கி உள்ளீர்கள், ஆனால் இந்த கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வழக்குமுறை, மற்றைய யாழ்பாணத்து கிராமங்களில் அல்லது, நகரங்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் எடுக்கவும்!! யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்துக்கும் தனி வழக்கு முறை இருக்கிறது, அதனால் நீங்கள் யாழ்பாணம் என்று ஒரு பொருளை வைத்து கொண்டு முக்கிய தகவல்களை நீக்குவது எமக்கு பிடித்தமான விஷயம் இல்லை!!! உதாரணமாக மீசாலையில் உள்ள மக்கள் பெரும்பாலும் கூட்டு குடும்பகளை சேந்தவர்கள், ஆனால் அது கச்சையில் இல்லை!!! மீசாலை மக்கள் சம்பாதிக்கும் பணத்தை தனது பெற்றோரிடம்தான் குடுத்து சேமிப்பார்கள், ஆனால் அது கச்சையில் இல்லை. இது பொதுவான யாழ்ப்பாண வழக்கும் இல்லை\!!! நன்றி வணக்கம்!!!--Sivam29 (பேச்சு) 02:01, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- நடைக் கையேடு, கொள்கைகளும் வழிகாட்டல்களும் ஆகியவற்றை வாசித்து விக்கியின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் எழுதிய முறை மற்றும் உள்ளடக்கம் என்பன கலைக்களஞ்சிய தன்மையிலிருந்து விலகியுள்ளன. எனவே அவற்றை தவிர்த்து எழுதுங்கள். மேலும், நமக்கு பிடித்த விடயங்களை எழுதலாம், ஆனால் அது மாற்றுதலுக்கு, நீக்கலுக்கு உள்ளாக வாய்ப்புக்கள் உள்ளன. நீங்கப்பட்ட பகுதி உட்பட பலவற்றிற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதையும் கருத்திற் கொண்டு, சிறந்த கட்டுரைகளை உருவாக்க உதவி செய்யுங்கள்.--Anton (பேச்சு) 02:43, 2 செப்டெம்பர் 2012 (UTC)
வரலாறு
தொகுபூதத்தம்பி என்ற ஒரு அரசன் ஆட்சி செய்ததாகவும், அவன் தனது மகாராணிக்காக ஒரு கோட்டை கட்டினான் என்றும்..... இவ்வாறு கட்டுரை குறிப்பிட பூதத்தம்பி நூல் அவரை ஓர் தலைவராக குறிப்பிடுகிறது. மற்றும் கட்டுரையில் சில இடங்களில் வாய்மொழி கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. வாய்மொழி கருத்துக்களை விக்கி ஏற்பதாக நான் அறியவில்லை. எனவே சரியான தகவலை கட்டுரையில் இணைப்பது கட்டுரையின் நம்பகத்தன்மைக்கு உகந்தது. --Anton (பேச்சு) 09:29, 24 அக்டோபர் 2012 (UTC)
- வணக்கம் அன்டன். நீங்கள் கூறுவது சரிதான், ஆனால் அதில் ஓரு சிக்கல் இருக்கின்றன. அது எப்படி என்றால் பூதத்தம்பி கச்சாயில் இருந்த ஒரு சிற்றரசன் (தலைவன்)(இராசவாசல் முதலியார்) , அவனின் சிறிய கோட்டையும் கச்சாயில் இருந்தன, அவன் திருமணம் செய்த மனைவியும் கச்சையை பிறப்பிடமாக கொண்டவள். ஆனால் ஆரம்பத்தில் யாழ் கோட்டையில் இருந்த ஒல்லாந்தருடன் இணைந்து பணியாற்றினான் காரணம் கச்சாய் துறைமுகம் பூத்தத்தம்பியின் கட்டுப்பாட்டில் அப்போது இருந்தது. பின் காலத்தில் அதே யாழ் கோட்டையில் இருந்த ஒல்லாந்தருக்கு எதிராக சண்டையும் போட்டான். மற்றும் வாய் மொழித் தகவல்களும் இணைந்திருக்கின்றன அது உண்மைதான். உதாரணம், மஞ்சள் தடவி என்றது போன்ற சில தகவல்கள். மற்றும் கச்சாய் மன்னன் பூதத்தம்பி என்ற ஒரு நூலும் இருக்கின்றன ஆனால் இப்போது அது என்னிடம் இல்லை, நான் இலங்கை செல்லும் போத்துதான் அதை என்னால் எடுக்க முடியும். அதனால் இக் கட்டுரையை நீங்கள் விரும்புவது போல் எப்படி மாற்றி அமைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களால் முடிந்தால் உதவுங்கள் நன்றி.--சிவம் 09:53, 24 அக்டோபர் 2012 (UTC)
- பூதத்தம்பி நூலை உசாத்துணையாகக் கொண்டு மாற்றி முடியுமானவற்றை மாற்றுங்கள். நானும் முடிந்தளவிற்குத் தொகுக்க முயல்கிறேன். கச்சாய் மன்னன் பூதத்தம்பி நூல் கிடைத்ததும் ஏனைய பகுதிகளைச் சேர்க்கலாம். யாழ்ப்பாண அரசின் கடைசி அரசன் இரண்டாம் சங்கிலி என்பது தெளிவான வரலாற்று ஆதாரம். எனவே பூதத்தம்பி போன்ற தலைவர்களை அல்லது சிற்றரசர்கள் பற்றி எழுதும்போது வரலாற்று ஆதாரம் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் இவ்வாறானவர்கள் பற்றி எதிர்க்கருத்துக்களும் உள என்பது நோக்கத்தக்கது. --Anton (பேச்சு) 13:20, 24 அக்டோபர் 2012 (UTC)
- சிவம், அப்பகுதியை நீக்கத் தேவையில்லை. தேவையான ஆதாரங்களுடன் தான் எழுதப்பட்டுள்ளது. ஆனாலும் விக்கி நடையில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நூலை ஆதாரமாகக் கொண்டு மேலும் சில தகவல்கள் சேர்க்கலாம். நேரம் கிடைக்கும் போது நானும் திருத்துகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 20:22, 24 அக்டோபர் 2012 (UTC)
வணக்கம் கனக்ஸ். அப்படியானால் சரி, உங்கள் உதவிக்கு நன்றி, மற்றும் பூதத்தம்பியின் மேலதிகமான தகவலில் எதை எதையெல்லாம் சேர்க்கலாம் என்று எனக்கு தெரியவில்லை. அதேவேளை புதத்தம்பிக்கு புதிய கட்டுரை எழுதலாமா என்றும் தெரியவில்லை. நன்றி.--சிவம் 05:27, 25 அக்டோபர் 2012 (UTC)
கனகஸ் மாவீரர் பட்டியலை மீண்டும் இப் பக்கத்தில் இணைக்கவும்...
- நம்பத்தகுந்த மேற்கோள்கள் தந்து எழுதுங்கள்.--Kanags \உரையாடுக 21:27, 5 நவம்பர் 2014 (UTC)
நம்பத் தகுந்த மேற்கோள் கூகிளில் உண்டு அப்படி என்றால் மாவீரர் பட்டியல் உள்ள இணையத்தை இணைக்கலாமா??
ஏற்கனவே இருந்த தரவுகளுக்கு மேற்கோள் கெட்டு இருக்கலாம் நீங்கள்.. ஆனால் இப்போ அனைத்தையும் அளித்துவிட்டீர்கள்.. நன்றி!! இனி என் நேரத்தை மேலதிகமாக ஒதுக்க எனக்கு நேரம் இல்லை!! நீங்களே ராசா நீங்களே மந்திரி...
http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=8131 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=104&cid=2119 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=107&cid=17127 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=1220 http://www.veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=103&cid=2629 http://veeravengaikal.com/maaveerar/index.php/maaveerarlist?view=maaveerarlistdetails&Itemid=118&cid=1037