பேச்சு:கட்டடக்கலை
கட்டடக்கலை ஒரு சிறப்புக் கட்டுரையாகும். இது விக்கிபீடியா பயனர்களால் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது. இதன் தற்போதைய தரம் குறையாத வண்ணம் இதை மேலும் மேம்படுத்த உங்களை வரவேற்கிறோம். |
கட்டடக்கலை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று. |
உள்ளடக்கம்
கட்டிடம், கட்டடம்-இரண்டில் எது சரி?--ரவி 11:06, 26 டிசம்பர் 2005 (UTC)
- கட்டப்பட்ட இடமாதலாம் கட்டிடம் என்றிருக்குமோ? -- Sundar \பேச்சு 11:56, 26 டிசம்பர் 2005 (UTC)
- ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கட்டடம் என்பதை முதன்மைப் படுத்தியும் கட்டிடம் என்பதை கால்நடைத்துறை அகரமுதலியில் மட்டும் குறிப்பிட்டுள்ளது வியப்பளிக்கிறது. -- Sundar \பேச்சு 12:08, 26 டிசம்பர் 2005 (UTC)
- என்னை பொறுத்த வரை, கட்டிடம் என்பதே சரி. ஆயினும், கட்டடம் என்பது வழக்கில் உள்ளமையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம். Kartheeque
- ஆனால், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கட்டடம் என்பதை முதன்மைப் படுத்தியும் கட்டிடம் என்பதை கால்நடைத்துறை அகரமுதலியில் மட்டும் குறிப்பிட்டுள்ளது வியப்பளிக்கிறது. -- Sundar \பேச்சு 12:08, 26 டிசம்பர் 2005 (UTC)
"கட்டிடம்", "கட்டடம் இரண்டுமே பயன்பாட்டில் இருந்து வருகிறது. கட்டிடம் என்பது கட்டு + இடம் என்பதுபோல, கட்டடம் என்பது கட்டு + அடம் என்று வரும். அடம் என்பது அடுக்கு என்னும் பொருள் தருவது என்றும் அதனால் கட்டடம் என்பது அடுக்கிக் கட்டப்படுவது என்று பொருள்படும் எனவும் சிலர் கூறுவதுடன், கட்டடம் என்பதே சரி என்கின்றனர். கட்டிடம் என்பது கட்டப்படுவதற்குரிய இடத்தைக் குறிக்கும் என்பது அவர்களுடைய வாதம். Mayooranathan 18:58, 5 ஜூன் 2006 (UTC)
கட்டிடம் என்பது கட்டப்படும் இடத்தைக் குறிக்கும் என்பது சரியாகத் தோன்றினாலும், அது கட்டப்படுபவையையே குறிப்பிடப் பயன்படுத்தப் படுகின்றன. என்றுமே இடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவதில்லை. 203.99.195.1
கட்டப்பட்ட இடம் கட்டிடம் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா.--Natkeeran 18:21, 8 ஜூன் 2006 (UTC)
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.ukans.edu/history/index/europe/ancient_rome/E/Roman/Texts/Vitruvius/home.html
- In கட்டிடக்கலை on 2007-05-06 10:30:38, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In கட்டிடக்கலை on 2007-05-06 11:35:54, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In கட்டிடக்கலை on 2007-05-14 01:09:24, Socket Error: (11001, 'getaddrinfo failed')
--TrengarasuBOT 01:10, 14 மே 2007 (UTC)Reply
தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.cnu.org/about/index.cfm
- In கட்டிடக்கலை on 2007-05-06 10:30:50, 404 Not Found
- In கட்டிடக்கலை on 2007-05-06 11:36:01, 404 Not Found
- In கட்டிடக்கலை on 2007-05-14 01:09:24, 404 Not Found
--TrengarasuBOT 01:10, 14 மே 2007 (UTC)Reply
@பாஸ்கர் துரை: உங்கள் கருத்தை இங்குத் தெரிவிக்கவும்.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 16:14, 23 சூலை 2021 (UTC)Reply
கட்டடம் என்ற சொல் கட்டிடம் என்ற சொல்லில் இருந்து வேறுபட்ட ஒன்றாகும். இரண்டுமே பொருள் தரும் விதத்தில் வேறுபடுகிறன . கட்டு+இடம்= கட்டிடம். அதாவது, கட்டுவதற்குத் தகுதிப் படுத்தப்பட்ட இடம் அல்லது கட்டுவதற்கு உகந்த இடம் – building site. அதன்மீது அடுக்கடுக்காகக் கட்டி எழுப்பப்படும் building தான் கட்டடம். எனவே இரு சொற்களையும் அதன் பொருளை நோக்கிப் பயன்படுத்துவதே சாலச் சிறந்ததாகும். கட்டடக்கலை என்பது நிலத்தின் மிசை கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களின் வெளிப்பாடு மற்றும் மனிதர்களின் கவனத்தை ஈர்க்கும் கலை நுட்பங்களின் வெளிப்பாடு ஆகும்.
கட்டிடக்கலை என்பது கட்டடம் கட்டுவதற்கு முன்பு நிலத்தைத் தகுதிப் படுத்திய நுட்பங்களின் வெளிப்பாடு. மணற்பாங்கான காவிரி ஆற்றிடை பகுதியில் அமைந்துள்ள மிக உயரமான என்றென்றும் நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்த திருவரங்கக் கோயில் பெரிய கோபுரம் அமைப்பதற்கு நிலத்தைத் தகுதிப்படுத்திய நுட்பத்தையும் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பு நிலத்தைத் தகுதிப்படுத்திய நுட்பத்தையும் கட்டிடக்கலை என்று கூறலாம். சீனப் பெருஞ்சுவர் கட்டுவதற்கு நிலத்தைத் தகுதிப்படுத்திய பாங்கினையும் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு நிலத்தைத் தகுதிப்படுத்திய பாங்கினையும் கட்டிடக்கலை என்று கூறலாம். இவற்றோடு கரிகால் பெருவளத்தான் கல்லணை கட்டுவதற்குப் பயன்படுத்திய கட்டிடக்கலை (நிலத்தைத் தகுதித் படுத்திய நுட்பங்கள்)நுட்பங்கள்தான் இன்றளவும் கல்லணை நின்று நிலைத்திருப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளது எனலாம். பாஸ்கர் துரை (பேச்சு) 17:17, 23 சூலை 2021 (UTC)Reply
- @பாஸ்கர் துரை: இந்தக் கருத்தைப் பலரும் எடுத்துக் கூறியுள்ளனர். கட்டடக்கலை என்பதே இங்கே பொருந்தும் என நினைக்கிறேன். பெயர் மாற்றப் பரிந்துரைத்துள்ளேன். -நீச்சல்காரன் (பேச்சு) 09:52, 29 பெப்பிரவரி 2024 (UTC)Reply
- மாற்றப்பட்டு விட்டது. நன்றி. Rasnaboy (பேச்சு) 14:33, 29 பெப்பிரவரி 2024 (UTC)Reply