பேச்சு:குசராத்து

Latest comment: 5 ஆண்டுகளுக்கு முன் by கி.மூர்த்தி in topic தலைப்பு
குசராத்து என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


குறிப்புகள்: குஜராத் மக்கள்

தொகு

--Natkeeran 19:01, 5 ஆகஸ்ட் 2007 (UTC)

தலைப்பு

தொகு

தமிழ் வழக்கத்தின் படி குசராத் என தலைப்பை மாற்றியுள்ளேன். இன்னும் சொல்லப்போனால் குசராத்து மாநிலம் என்று கூறுதல் முறையாகும். ஆனாலும் குசராத்து என்பதற்கு மாறாக குசராத் என்றே எழுதியுள்ளேன். இரண்டும் எனக்கு ஒப்புதலே. இது ஏற்கனவே நடந்த பல உரையாடல்களின் அடிப்படையில் மாற்றியுள்ளேன். --செல்வா 21:31, 9 மார்ச் 2009 (UTC) இந்தப் பெயருக்கான தமிழ் பாடநூல் ஆதாரம்? எதுவும் இல்லை!! எந்த அடிப்படையில் இந்திய அரசாங்கத்தில் உள்ள மாநிலத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது? குஜராத் மக்களவைத் தொகுதி என்றிருக்கும் போது இது தமிழக மாணவர்களால் குஜராத் என்று அறியப்படும் போது, தேர்வில் எல்லா மாணவர்களும் குஜராத் என்று எழுதும் போது, இதை எந்த அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது? மாற்றியவர்கள் இதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்கவும்! அரசாங்க ஆவணம்! அல்லது அதற்கு சமமான அரசுக் குறிப்பேட்டை சமர்ப்பிக்கலாம்.--செல்வம் தமிழ் (பேச்சு) 15:24, 15 மார்ச் 2013 (UTC)

செல்வம் தமிழ், உங்களை மீண்டும் இங்கு காண்பதில் மகிழ்ச்சி. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் 34 பெரும் தொகுதிகளில் (ஒவ்வொன்றும் ஏறத்தாழ 1000 பக்கங்கள் கொண்டது) அறிவியல்-வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள் வெளியிட்டுள்ளனர். பல இடங்களில் சீர்மை பேணாமை (கலைச்சொற்கள் முதலியன)) போன்ற குறைபாடுகள் இருந்தாலும், பெரும்பாலும் நன்றாகவும் விரிவாகவும் எழுதப்பட்டுள்ள பல்தொகுதி கலைக்களஞ்சியம். இதில் குசராத்தி, குசராத்து என்பன தலைச்சொற்களாக ஆளப்பட்டுள்ளன. தமிழறிந்து ஒழுக்கத்துடன் எழுதும் பற்பல எழுத்தாளர்களும் குசராத்து, குசராத்தி என்னும் சொற்களை ஆளுகின்றனர். தமிழ் உலகத்தில் பல வகையான சீர்குலைவுகள் சீர்மை பேணாமைகள் நிலவுகின்றன. இதனால் நாமும் எந்தச் சீர்மையும் பேணவேண்டாம் என்று கொள்ளாமல், கூடிய மட்டிலும் ஓர் ஒழுங்கில் செல்ல முற்படுவது நல்லது. அருள்கூர்ந்து வாழ்வியல் களஞ்சியம் ஏழாவது தொகுதியைப் பாருங்கள் (பக்கங்கள் 521-524). நன்றி.--செல்வா (பேச்சு) 15:45, 19 சூன் 2013 (UTC)Reply
பெயர்ச் சொற்களில் உள்ள வடமொழி எழுத்துக்களைத் தவிர்த்து தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி எழுதுவதில் தவறில்லை. இதற்கு சான்றுகள் அளிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கவும் வேண்டாம் என நினைக்கின்றேன். குசராத்து என்று எழுதுவது குஜராத் என்றும் மகாராட்டிரம் என்று எழுதுவது மகாராஷ்டிரா என்றும் யாவராலும் புரிந்துகொள்ளப்படுகிறது. புரிந்து கொள்ளத்தான் நாம் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத் தலைப்பை (Gujarath, Maharastra) அளிக்கின்றோமே! புரிந்து கொள்வதில் எவருக்கும் ஐயம் ஏற்படுவதில்லை. எனவே வடமொழி எழுத்துக்களை தவிர்க்க நினைப்பதில் எந்தவிதமான தவறுமில்லை.--கி.மூர்த்தி (பேச்சு) 01:47, 30 சனவரி 2019 (UTC)Reply

பெயர் மாற்றம்

தொகு

முதல்வரின் பெயர் பூபேந்திர படேல். எனவே தயவுசெய்து மாற்றவும். 2023Panjagam (பேச்சு) 01:27, 18 ஏப்ரல் 2023 (UTC)

 Y ஆயிற்று --சத்திரத்தான் (பேச்சு) 01:40, 18 ஏப்ரல் 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குசராத்து&oldid=3747871" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குசராத்து" page.