பேச்சு:குறவன் குறத்தி ஆட்டம்

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by வேங்கையன் in topic குறவர்

குறவன் குறத்தி ஆட்டம் ஆடுவது சட்டபடி குற்றமாகும்

குறவன் என்பது எங்கள் சாதி பெயர் இந்த பெயரை பயன்படுத்தி குறவன் குறத்தி ஆட்டம் என்று ஆடுவது மிகவும் தவறு இவ்வாறு இந்த பெயரை பயன்படுத்தி நடனம் அடா கூடாது என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது. விக்கிப்பீடியாவின் இருந்து குறவன் குறத்தி ஆட்டம் என்கிற கட்டுரை மொத்தமாக நீக்க வேண்டும். வேங்கையன் (பேச்சு) 16:00, 3 மே 2019 (UTC)Reply

குறவர் தொகு

குறவன் குறத்தி என்கிற பெயரை பயன்படுத்தி காரகாட்டம் ஆடுவது சட்ட படி குற்றம் வேங்கையன் (பேச்சு) 09:52, 4 மே 2019 (UTC)Reply

@வேங்கையன் and Dineshkumar Ponnusamy: இவ்வாட்டம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதா? அல்லது வேறு பெயரில் ஆடப்படுகிறதா?--Kanags \உரையாடுக 10:07, 4 மே 2019 (UTC)Reply
இந்த ஆட்டத்தின் பெயர் குறவன் குறத்தி ஆட்டம் என்பது தான், இதில் எந்த ஒரு மாற்று கருத்தில்லை. மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கூறியிருப்பதாவது:// தமிழகத்தில் திருவிழா காலங்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் நடத்தப்படும் குறவன் - குறத்தி ஆட்டத்தில் சமீபகாலமாக ஆபாச நடனங்களும், இரட்டை அர்த்த வசனங்களும் அதிகளவு இடம் பெறுகின்றன. அந்த சமூகத்தினர் மனதை புண்படுத்தும் வகையில் இது உள்ளது. எனவே, நீதிமன்றம் தலையிட்டு இதற்கு தடை விதிக்க வேண்டும்.//

இந்த வழக்கு தொடரப்பட்டதற்கான காரணமே, இந்த பெயரை வைத்துக் கொண்டு சமீபகாலமாக ஆபாச நடனங்களும், இரட்டை அர்த்த வசனங்களுடன் ஆடல் பாடல் நடத்துகின்றனர். அதற்கு தான் தடை கேட்கப்பட்டுள்ளது. இது ஒரு சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு ஆடுவதால், இதை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடுத்திருக்கலாமே?? ஏன் அப்படி செய்யவில்லை??

காண்க காண்க

குறவன் குறத்தி ஆட்டம் என்பது குறவர் சமுதாய மக்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் இன்றோ, நேற்றோ தோன்றவில்லை. பண்டைய காலத்திலிருந்து, ஆடப்பட்டு வரும் தமிழகத்தில் உள்ள கலாச்சாரங்களில் இதுவும் ஒன்று. இந்த கட்டுரையை நீக்குவதோ அல்லது தலைப்பை மாற்றுவதோ என்பது தேவையில்லை, வேண்டுமென்றால், கட்டுரையில் இந்த ஆட்டத்திற்கு தடை வழங்கப்பட்டது என ஒரு தலைப்பை உருவாக்கி, அதில் உரையைச் சேர்க்கலாம். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:11, 4 மே 2019 (UTC)Reply

@Gowtham Sampath: தெளிவு படுத்தியமைக்கு நன்றி. வழக்குப் போடப்பட்டுள்ளதே தவிர, இதற்கு இடைக்காலத் தடை எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. அப்படியே பின்னர் வழங்கப்பட்டாலும், ஓர் ஆவணத்திற்காக இக்கட்டுரை மேம்படுத்தப்பட்டு, இதே தலைப்பில் இருக்க வேண்டும். @Dineshkumar Ponnusamy:.--Kanags \உரையாடுக 22:56, 4 மே 2019 (UTC)Reply

குறவன் குறத்தி ஆட்டம் என்கிற பெயரில் காரகாட்டம் ஆட கூடாது என்றும் இது எங்கள் சமுதாயத்தைச் இழிவு படுத்துகிறது இதனால் குறவன் குறத்தி ஆட்டம் என்கிற பெயருக்கு தான் நங்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேம். வழக்கு தொடர்ந்தது வன வேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் அவர்கள் தான் இந்த பெயரை எங்கும் பயன்படுத்த கூடாது. எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த பெயரை பயன்படுத்தி காரகாட்டம் ஆடுவது இல்லை. நன்றாக புரிந்து கொண்டு இந்த கட்டுரை நீக்கவும்.எங்கள் சாதி பெயரை இழிவுபடுத்த வேண்டாம்.மேலும் ஏதாவது தகவல் தேவைப்பட்டால் தொடர்பு வினோ மாநில கொள்கை பரப்பு தலைவர் வன வேங்கைகள் கட்சி தொலைபேசி - 8754605563

@வேங்கையன்: முதலில் ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள். இந்த பெயரை வைத்துக்கொண்டு, ஆடல் - பாடல் செய்யக்கூடாது என தற்போது தான் தடை கேட்கப்பட்டுள்ளது, ஆனால் இந்த பெயரை வைத்துக் கொண்டுதான் பல ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களில் ஆடல் - பாடல் நடத்தப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பெயரை பயன்படுத்தி ஆடல் - பாடல் செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?? அப்படி இந்த பெயரை பயன்படுத்தி இந்த சமூக மக்கள் ஆடல் - பாடல் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னால், அதற்கான சான்றைத் தாருங்கள். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:07, 5 மே 2019 (UTC)Reply

//. இந்த ஆட்டம், கரகாட்டத்தின் துணை ஆட்டமாகக் திகழ்கிறது. // என்ற வரியை நீக்கினால் நல்லது. கட்டுரையை நீக்கத் தேவையில்லை. @வேங்கையன்: இந்த ஆட்டம் பற்றி ஒரு நிகழ்படம்/காணெளி எடுத்த பின்பு, இங்கு அறிவிக்கவும். அதனை இங்கு இணைக்க உதவி புரிகிறேன். கட்டுரையை நீக்கக் கோரியிருக்கிறீர்கள். அதனை விட, இக்கட்டுரையை சிறப்பாக மாற்றியமைக்க உதவுங்கள். --உழவன் (உரை) 07:56, 5 மே 2019 (UTC)Reply

எங்கள் வீட்டு படிக்கிற பெண்கள் இந்த ஆட்டத்தால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். குறவன் குறத்தி ஆட்டம் என்கிற பெயரை நீக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது‌. இந்த காரகாட்டம் குழு மீது அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்கவில்லை இதன் காரணமாகவே மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களை கட்டுலும் உங்களைப் போன்றவர்கள் தான் மன உளைச்சலை அதிகமாக உருவகிறோன்கள்.--−முன்நிற்கும் கருத்து வேங்கையன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இந்தப் பேச்சுப் பக்கத்தை நீக்கப் பரிந்துரைக்கிறேன். தேவையற்ற அரசியல் கருத்துகளும் பரப்புரையும். கலைக்களஞ்சியத்துக்கு இது உதவாது.--Kanags \உரையாடுக 08:35, 7 மே 2019 (UTC)Reply

@வேங்கையன்: //எங்கள் வீட்டு படிக்கிற பெண்கள் இந்த ஆட்டத்தால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.// முதலில் விக்கிப்பீடியாவைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். விக்கிப்பீடியா என்பது ஒரு தகவல்களஞ்சியம், ஒரு வரலாற்று நிகழ்வுகளை கட்டுரையாக எழுதி, அதை சேமிப்பது தான் விக்கியின் நோக்கம். நீங்கள் நினைப்பது போல ஒரு சில சாதிகளை இழிவுபடுத்துவதற்காக விக்கிப்பீடியா உள்ளது என்று நீங்கள் கருதினால், அதற்கு விக்கிப்பீடியா பொறுப்பாகாது. இங்கு நடுநிலை மட்டுமே முக்கிய கொள்கையாக உள்ளது.

நான் மேலே கேட்டக் கேள்விக்கு தங்களிடமிருந்து, இன்னும் பதில் வரவில்லையே?? இந்த பெயரை வைத்துக் கொண்டுதான் பல ஆண்டுகளாக கோவில் திருவிழாக்களில் ஆடல் - பாடல் நடத்தப்பட்டுள்ளது. நீங்கள் இந்த பெயரை பயன்படுத்தி ஆடல் - பாடல் செய்யவில்லை என்று சொல்கிறீர்களா?? அப்படி இந்த பெயரை பயன்படுத்தி இந்த சமூக மக்கள் ஆடல் - பாடல் செய்யவில்லை என்று நீங்கள் சொன்னால், அதற்கான சான்றைத் தாருங்கள். பிறகு பேசலாம். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:37, 7 மே 2019 (UTC)Reply

குறவர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர் எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் காரகாட்டம் ஆடுவது கிடையாது. இந்த பெயரை பயன்படுத்தி காரகாட்டம் ஆட கூடாது என்று பல இடங்களில் சாதி சண்டைகள் வந்து கொண்டு இருக்கிறது.நங்கள் ஆடவில்லை என்பதுக்கு உங்களுக்கு என்ன ஆதாரம் வேண்டும் எனது அம்மா அக்கா தங்கை அத்தா மாமா என்று யாரும் இந்த தொழிலை செய்வது இல்லை பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.

நீக்கல் பரிந்துரை தொகு

@AntanO, Kanags, and Ravidreams: இக்கட்டுரையை நீக்க பரிந்துரை செய்கிறேன். வேங்கையன் என்னும் பயனர் //எங்கள் வீட்டு படிக்கிற பெண்கள் இந்த ஆட்டத்தால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.// என்று மேலே தெரிவித்து உள்ளார், அதனால் அவருடைய கருத்தை ஏற்றுக் கொண்டு, இந்த பரிந்துரையை செய்கிறேன். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 13:39, 30 மே 2020 (UTC)Reply

Negro, Harijan போன்றவை இன்று தடை செய்யப்பட்ட சொற்கள். ஆனால், அந்தச் சொற்கள் ஏன் பயன்படுத்தப்பட்டன, அதன் வரலாற்றுப் பின்னணி என்ன, தற்போதை நிலை என்ன என்பதை எல்லாம் கலைக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்தவே செய்கிறோம். எனவே, கலை வரலாறு நோக்கில் இத்தலைப்போ பேசுபொருளோ முக்கியம் எனில் நீக்க வேண்டாம். ஆனால், தற்போது இக்கட்டுரை எழுதப்பட்டுள்ள விதம் ஒரு சமூக மக்களை உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையிலேயே உள்ளது. கட்டுரை கண்டிப்பாக அதன் வரலாற்றுப் பார்வையை, இன்றைய நிலையை விளக்கி ஆவணப்படுத்தல் நோக்கில் திருத்தி எழுதப்பட வேண்டும். இது போன்ற சிக்கல்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுப் பக்கங்களில் உரையாடும் போது இயன்ற அளவு கனிவுடன் உரையாட வேண்டும். மேலும் குறிப்புகளை @Sundar and Mayooranathan: வழங்கலாம் என்று கேட்டுக் கொள்கிறேன். --இரவி (பேச்சு) 21:43, 30 மே 2020 (UTC)Reply
@Ravidreams: ஆம், கட்டுரையைத் திருத்தி இது வரலாற்றில் என்னவாக இருந்தது என்ற அடிப்படையில் எழுதவேண்டும். தவிர, அந்தப்பெயரைத்தவறாகப் பயன்படுத்திச் சில இடங்களில் பெண்களை இழிவுசெய்யும் நோக்கில் நடந்திருக்கிறது என்பதையும் அதனால் அந்தச்சமூகத்தினர் வருந்தி வழக்குப் பதிந்தார்கள் என்பதையும் சான்றுடன் குறிப்பிடவேண்டும். தற்போதைய சூழலில் அது இவ் ஆட்டம் அன்று என்றும் விளக்கலாம். இரவி, குறிப்பிட்டதுபோல இதனால் வருந்துபவரிடம் அக்கறையுடனும் கனிவுடனும் அணுகவேண்டும்.
அதேபோல எல்லா இடங்களிலும் கரகாட்டத்தை இந்தப்பெயரில் அழைப்பதாகத் தெரியவில்லை. எங்கள் ஊரில் கரகாட்டம் என்றே சொல்வார்கள். கரகாட்டக்கலைஞர்கள் இன்று அந்தக்கலை வேறுமாதிரி கேளிக்கையாவதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 03:42, 31 மே 2020 (UTC)Reply
en:WP:CENSOR --AntanO (பேச்சு) 07:01, 31 மே 2020 (UTC)Reply

இந்த கட்டுரை முற்றிலும் தவறானது பழங்குடி குறவன் சமூகத்தைச் சேர்ந்த எவரும் கரகாட்டம் ஆடுவது இல்லை... இந்த ஆபாச நடனத்துக்கு பழங்குடி குறவர் சமூகத்தின் பெயரை வைத்து ஆடுவதற்கு பதிலாக உங்கள் சாதியின் பெயரை வைத்து ஆடுங்கள் அந்த தலைப்பில் கட்டுரை எழுதுங்கள் நானே வரவேற்கிறேன்... வேங்கையன் (பேச்சு) 03:48, 18 சூலை 2021 (UTC)Reply

இந்த கட்டுரை முழுமையாக நீக்குகள் இது குறவர் சமூக மக்களை‌ அவதூறு படுத்தும் விதமாக உள்ளது. வேங்கையன் (பேச்சு) 15:15, 8 ஆகத்து 2022 (UTC)Reply

Return to "குறவன் குறத்தி ஆட்டம்" page.