பேச்சு:கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
ஆங்கிலத்தில் உள்ள கொங்குநாடு முன்னேற்ற கழகம் பற்றிய கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் நீண்ட விவாதத்திற்கு பிறகு அனைவராலும் ஏற்று கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ளவாறே தமிழிலும் கருத்துக்களை அமைப்பதே சிறந்தது. வார்த்தைகளை மாற்றி விளையாட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. AruvaVettu 04:43, 26 பெப்ரவரி 2011 (UTC)
ஒலிக்கோப்பு
தொகுபடிமம்:Ta-Kongunadu munetra kazhagam.ogg - கட்டுரையில் இணைத்துள்ள இக்கோப்பில் உள்ள ஒலி மற்றவர்களுக்குத் தெளிவாகக் கேட்கிறதா? நான் கேட்டுப் பார்த்ததில் என்ன மொழியென்றே தெரியவில்லை. -- சுந்தர் \பேச்சு 15:03, 26 சனவரி 2012 (UTC)
- File:Ta-Manmalai_paambu.ogg - இப்போது இந்த இணைப்பும் மண் மலைப்பாம்பு கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது. கேட்டுப் பார்த்ததில் ஏதோ தானியங்கி மென்பொருள் மூலம் உருவாக்கியது போலத் தெரிகிறது. ஆனால் ஓரிரு சொற்களைத் தவிர எதுவே புரியவில்லை. இவ்வாறு பதிவேற்றுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 15:32, 26 சனவரி 2012 (UTC)
- சில வாரங்களுக்கு முன் ஆலமரத்தடியில் உரையாடி நீக்குவதென முடிவு எடுக்கப்பட்டது. (இப்போது காப்பகத்தில் போய் விட்டது). ஏற்றுபவர் thirdeyegroup என்னும் ngo. அவர் பல மாறும் ஐபிகளில் இருந்து (மாணவத் தன்னார்வலர்களால் என்று நினைக்கிறேன்) ஏற்றுவதால் செய்தி சொல்ல முடியவில்லை. முன்னிநிலையாக்கி விடுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 15:35, 26 சனவரி 2012 (UTC)
- நன்றி சோடாபாட்டில். -- சுந்தர் \பேச்சு 10:12, 27 சனவரி 2012 (UTC)
இவ்வாறான நூற்றுக்கணக்கான தரமற்ற ஒலிக்கோப்புகள் விக்கிமீடியாவில் தரவேற்றப்பட்டுள்ளன. அவற்றையும் நீக்கக் கோரலாமா?--Kanags \உரையாடுக 10:24, 27 சனவரி 2012 (UTC)
- நீக்கமாட்டார்கள் கனக்ஸ், அவர்களைப் பொறுத்தவரை இது ஒருவித வளமே. குறைபாடு இருப்பினும் அங்கு இருந்து விட்டுப் போகட்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 11:36, 27 சனவரி 2012 (UTC)
இக்கட்சி ஈசுவரனுக்கும் பெஸ்ட் இராமசாமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இரண்டாக பிரிந்து விட்டதாகவும் இருவரும் இக்கட்சிக்கு உரிமை கோருவதாகவும் கேள்விப்பட்டேன், இப்போ யார் இதன் தலைவர்? --குறும்பன் (பேச்சு) 01:33, 19 மே 2013 (UTC)
மீளமை
தொகுஈசுவரன் தலைமையிலான கட்சிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்று பெயரிட்டுள்ளதாக தெரிகிறது. இக்கட்டுரையில் நிறைய இடங்களில் மாற்றம் செய்துள்ளனர். இக்கட்டுரையை மீளமைத்து விடவும் என்னால் முடியவில்லை :( --குறும்பன் (பேச்சு) 01:51, 19 மே 2013 (UTC)
- கட்டுரையின் தலைப்பு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்று இருக்கிறது. உள்ளே உள்ள தகவல்கள் அனைத்தும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியாக மாற்றப்பட்டுள்ளது. குறும்பன் குறிப்பிட்டது போல் பழைய நிலைக்கு இதை மீளமைத்துக் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற பெயரிலேயே வைத்துக் கொள்ளலாம். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி குறித்து தனிக்கட்டுரை தொடங்கலாம். இந்தப் பணியை இரு அமைப்புகளைப் பற்றியும் ஓரளவாவது தெரிந்தவர்கள் (அல்லது கோவை மண்டலத்தில் தற்போது இருப்பவர்கள்) மட்டுமே செய்ய முடியும். தெரிந்தவர்கள் செய்து உதவலாமே...?--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:35, 2 சூலை 2013 (UTC)