பேச்சு:சங்க காலப் புலவர்கள்
விக்கித் திட்டம் பக்கவழி நெறிப்படுத்தல் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
விக்கி விளையாட்டு
தொகுகட்டுரையின் அடியில் மேற்கோள் நூல்கள்கள் எனக் காட்டப்பட்டிருக்கிறதே. --Sengai Podhuvan (பேச்சு) 05:46, 11 மே 2013 (UTC)
- விக்கிப்பீடியாவில் மேற்கோள்களை சுட்டிக்காட்டும்ப்பொழுது, கட்டுரையில் எங்கே அது பொருந்துமோ அங்கே < ref > மற்றும் < /ref > இடையில் அந்த ஆதாரத்தை பொருத்தலாம். கட்டுரையின் முடிவில் மேற்கோள்கள் எனும் தலைப்பை உருவாக்கி { {reflist} } என்று அங்கே இடவும். இவ்வாறே விக்கிப்பீடியாவில் மேற்கோள்கள் இடப்படுகின்றன. நான் இக்கட்டுரைக்கு அவ்வாறு செய்துவிட்டேன். நன்றி! - Vatsan34 (பேச்சு) 06:10, 11 மே 2013 (UTC)
- மீண்டும் செப்பம் செய்யவேண்டயதாயிற்று. என்ன செய்யலாம்! விளையாட்டுதானே. --Sengai Podhuvan (பேச்சு) 07:07, 11 மே 2013 (UTC)
உதவிகள்
தொகுஇந்தக் கட்டுரை பைட்ஸ் எல்லையை மீறுவதாகக் குறிப்பு வந்தது. பகுக்க வேண்டும். அகர வரிசையில் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனிப் பக்கங்கள் அமையின் குறையலாம். பகுத்துக் காட்டி உதவுங்கள்.--Sengai Podhuvan 06:31, 4 அக்டோபர் 2010 (UTC)
- 32 கிலோ பைட்ஸ் என்பது ஒரு பரிந்துரை மட்டுமே (கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதல்ல). வேகம் குறைவான இணைய இணைப்பு உடையவர்கள் பார்வையிடும் போது மெதுவாக இருக்கும் என்பதால் இடப்ப்ட்டது. படங்கள்/அதிகம் வார்ப்புருக்கள் இல்லாததால், இப்பக்கத்தில் அப்பிரச்சினை வராது. 60-70 கிலோ பைட்ஸ் போகும் வரை சிக்கல் இல்லை. நீங்கள் இதிலேயே தொடருங்கள். கட்டுரை 70 கிலோ பைட்ஸ் பக்கம் போனால் பிரித்துக் கொள்ளலாம்.--சோடாபாட்டில் 06:36, 4 அக்டோபர் 2010 (UTC)
நான் தற்போது கனடாவில் உள்ளேன். எனது இணையம் இப்போது கனடாவில் உள்ளது. இப்போதே மெதுவாகத்தான் நகர்கிறது. வரும் நவம்பர் முதல் சென்னையில்தான் இருப்பேன். அப்போது பெரிதும் இன்னலுறுவேன். எனது பணி தொடர உதவுங்கள்.
அ
1, 2, 3 ... 18
என்னுமாறு பிரித்தால் அகரவரிசை மாறாமல் இருக்கும்.--Sengai Podhuvan 07:03, 4 அக்டோபர் 2010 (UTC)
- சரி ஐயா, பிரித்து விடுகிறேன். தற்போது 473 புலவர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு பக்கம் பிரித்தால் நிறைய பக்கங்கள் வந்து விடும். சுமார் நூறு புலவர்கள் ஒரு கட்டுரையில் வரும்படி (அகரவரிசைப் படி) பிரித்து விடவா?:
- 1) அ-ஔ வரை (1-92)
- 2) க-கோ வரை (93-206)
- 3) ச-நோ வரை (207-304)
- 4) ப- ம வரை (305-403)
- 5) மா-வே வரை (404-473)
- ஐந்து பக்கங்களென்றால் ஒரு வார்ப்புரு போட்டு இணைத்து விடலாம். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு போக வசதியாகவும் இருக்கும். இதைவிடக் குறைவான எண்ணிக்கை ஒரு பக்கத்தில் வேண்டுமென்று நீங்கள் கருதினால். எப்படி பிரிப்பது என்று பகுத்துத் தாருங்கள் செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில் 07:39, 4 அக்டோபர் 2010 (UTC)
- சிறிது மாற்றியிருக்கிறேன். வேறு வகையில் பிரிக்க வேண்டுமானால் சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 07:50, 4 அக்டோபர் 2010 (UTC)
--- தாங்கள் காட்டியிருப்பது அகரவரிசை சிதையாமல் இருக்கச் சிறந்த வார்ப்புருக்கள். இப்போதைக்கு இதனைச் செய்து உதவுங்கள். உறுப்பால் பெயர் பெற்ற புலவர்கள், ஊரால் பெயர் பெற்ற புலவர்கள், பெண்பால் புலவர்கள் போன்ற பகுப்புகளும் தொகுத்துக் காட்டப்பட வேண்டிய நிலை உள்ளது. இத்தொகுப்பு முழுமையான பின்னர் அதனைத் தொடர்வேன். அப்போது தங்களை அணுகுகிறேன். உதவும் தெய்வங்களுக்கு வணக்கம்.--Sengai Podhuvan 09:44, 4 அக்டோபர் 2010 (UTC)
- மீண்டும் உறுதிபடுத்திகொள்வதற்காக கேட்கிறேன் - நான் சொன்னது போல ஐந்து கட்டுரைகளாக பிரித்து விடவா அல்லது கனக்ஸ் தற்போது செய்துள்ளதே போதுமா? (நாங்கள் இருவரும் வெவேறு வேலைகளைச் செய்துள்ளதால், நீங்கள் எதற்கு ஒப்புகிறீர்கள் என்பதில் எனக்கு சிறு குழப்பம்)--சோடாபாட்டில் 10:01, 4 அக்டோபர் 2010 (UTC)
- ஒரே கட்டுரையில் இருப்பது நல்லது என நினைக்கிறேன். இது அவ்வளவு பெரிய பட்டியல் இல்லை.--Kanags \உரையாடுக 10:07, 4 அக்டோபர் 2010 (UTC)
- மீண்டும் உறுதிபடுத்திகொள்வதற்காக கேட்கிறேன் - நான் சொன்னது போல ஐந்து கட்டுரைகளாக பிரித்து விடவா அல்லது கனக்ஸ் தற்போது செய்துள்ளதே போதுமா? (நாங்கள் இருவரும் வெவேறு வேலைகளைச் செய்துள்ளதால், நீங்கள் எதற்கு ஒப்புகிறீர்கள் என்பதில் எனக்கு சிறு குழப்பம்)--சோடாபாட்டில் 10:01, 4 அக்டோபர் 2010 (UTC)
தமிழிணையக் கல்விக் கழகத்தின் இப்பக்கம் உங்களுக்கு உதவலாம்.குறிப்பாக P1043 - சங்க இலக்கியம் என்ற தொடுப்பு.--த* உழவன் 01:09, 3 சனவரி 2011 (UTC)