பேச்சு:சோதிடம்
பட்டியல்
தொகு- ஆவிகளுடன் பேசுவது
- நாடி
- கைரேகை பார்ப்பது
- பரிகாரங்கள்
- பேய்யடிப்பது
- கவர்த்துண்டுகள்
- ஜோசியம்
- கிளி ஜோசியம்
- ராசிபலன்
- வாஸ்து
- வாரபலன்
- எண் சோதிடம்
- இத்யாதிகள்
- சனீப்ரீதி
- UFO
நற்கீரன், சோதிடம் பற்றிய கட்டுரை தொடர்பில் உங்களுக்கு அதிருப்தி இருப்பது போல் தெரிகிறது. சோதிடம் சரியாக இருக்கலாம், பிழையாக இருக்கலாம் அல்லது அயோக்கியத்தனமாகக் கூட இருக்கலாம். ஆனால் பல்லாண்டுகளாகப் பயிலப்பட்டு வருகின்ற ஒரு விடயம் தொடர்பான விபரங்களை விக்கிபீடியாவில் தருவது பிழையல்ல. மேலும் சோதிடத்தின் வரலாறு, உலக சமூகத்தின் சரியானதும் தவறானதுமான பல்வேறு கருத்துக்களின் வரலாறு. இதன்காரணமாக இது ஒட்டுமொத்த சமுதாய வரலாற்றின் ஒரு பகுதி. தன்னுடைய பிழையான நோக்கங்களை அடைவதற்காகவே ராக்கெட் தொழில் நுட்பத்தை ஹிட்லர் வளர்த்தெடுத்தான், ஆனால் இதே தொழில் நுட்பம் உலக நன்மைக்குப் பயன்படும் வகையில் மற்றவர்களால் வளர்க்கப்படவில்லையா? எகிப்தின் பிரமிட்டுக்களை எடுத்துக் கொள்ளுங்கள். இறந்தவர்கள் திரும்புவார்கள் என்ற மூட நம்பிக்கையின் அடிப்படையிலும், அடக்குமுறையின் நிதர்சனத்திலும் எழுந்ததுதான் அந்த உலக அதிசயமாகப் போற்றப்படும் பிரமிட்டுகள். இவையெல்லாம் மானிடவியலின் பிரிக்கமுடியாத பகுதிகள், நவீன கட்டிடக்கலையின் முன்னோடிகள். மூட நம்பிக்கைகளின் சின்னங்கள் என்று இவற்றை 500 ஆண்டுகளுக்குமுன் யாராவது இடித்துத் தள்ளி விட்டிருந்தால் இன்று கூடிய அறிவியல் வலுவோடு அவற்றை ஆய்வு செய்யும் வாய்ப்பு இன்றைய ஆய்வாளர்களுக்குக் கிடைத்திராது. சரியோ தவறோ சோதிடம் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளும் உரிமை இன்றுள்ளவர்களுக்கும் இனி வருகின்ற பரம்பரையினருக்கும் உண்டு. அதனை நடுநிலை நின்று சேமித்துவைக்கும் பொறுப்பும் விக்கிபீடியா போன்றவற்றுக்கு உண்டு என நான் நம்புகிறேன். "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு". எனவே எவற்றிலிருந்தும் உண்மைகளைக் கறந்து எடுத்துக்கொள்ளக் கூடியவர்களுக்காக இருக்கும் சகல விபரங்களையும் பாதுகாப்போம். Mayooranathan 16:06, 22 ஆகஸ்ட் 2005 (UTC)
எனக்கு எந்த வித ஆட்சோபனையும் இல்லை. "சோதிட புரட்டு" எழுதியது நான் அல்ல. அது வேறு ஒரு "நக்கீரன்". எனக்கு சோதிடம் பற்றி அறிய ஆவல். குறிப்பாக, அதில் எதாவது உண்மை இருக்குமா என்று. நான் சோதிடம் பற்றி படித்தது கிடையாது, அதனால் அதை பற்றி ஒரு தீவர நிலைப்பாடு கிடையாது. ஆதாரங்கள், செயல் திட்டங்கள் எதுவும் தராமல் முடிவுகள் மாத்திரம் தரும் ஒரு துறையிடம் எனக்கு பயம் மட்டுமே உண்டு, அதனால் அதில் இருந்து விலகியே இருக்கின்றேன். நீங்கள் அதை பற்றி எழுதுவை வரவேற்க்கின்றேன். மேலே உள்ள பட்டியலில் உள்ளவை சோதிடத்துடன் தொடர்புடையவை என்று நினைத்தனால் மாத்திரமே குறித்தேன். இதைபற்றி விரிவான பதில் பின்னர். --Natkeeran 18:23, 22 ஆகஸ்ட் 2005 (UTC)
- எதுவித் குறிப்புகளும் இல்லாது நீங்கள் கொடுத்திருந்த பட்டியலைப் பார்த்தபோது, அது ஒரு மென்மையான முறையில் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி என்று நினைத்துவிட்டேன். மன்னிக்கவும். உண்மையில் எனக்கும் சோதிடத்தில் நம்பிக்கை என்று இல்லை. சோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்களை கிண்டல் செய்வதும் இல்லை. சோதிடம் நமது முன்னோர்களின் உலக நோக்கின் வெளிப்பாடு என்றவகையிலும், சோதிடநூல் பயன்படுத்துகின்ற வானியல், காலக் கணிப்பு முறைகள் போன்ற அறிவியலின் பாற்பட்ட விடயங்களிலுள்ள ஆர்வம் காரணமுமாகவே அது பற்றி நான் அறிந்து கொள்ள முயல்கிறேன். நிற்க சோதிடம் நமது மரபுவழிக் கட்டிடக்கலையின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம். இதனால் இவ்விடயம் பற்றி ஆய்வு செய்வதில் ஆர்வமுள்ள ஒரு கட்டிடக்கலைஞன் என்ற வகையிலும் சோதிடம் பற்றி அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் உண்டு. சோதிடத்துக்குத் தீவிர எதிர்ப்பைக் காட்டுபவர்கள் ஒருபுறமும், அது மனிதனுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறும் இன்னொரு குழுவினர் மறுபுறமும் இருக்க, இவர்களுக்கு இடையில் இருக்கும் பெரும்பாலானவர்கள், இவர்கள் இருபகுதியினரும் எதைப்பற்றி வாதம் புரிகிறார்கள் என அறிந்து கொள்வதற்கு உகந்தவாறு எழுதப்பட்ட கட்டுரையொன்றை விக்கிபீடியா கொண்டிருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். Mayooranathan 19:06, 22 ஆகஸ்ட் 2005 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
--TrengarasuBOT 01:28, 14 மே 2007 (UTC
கட்டுரையிலிருந்து கீழுள்ள பகுதியை இங்கே நகர்த்தியிருக்கிறேன். இது கலைக்களஞ்சியத்துக்கு உகந்த வடிவில் இல்லை. இதனை உரிய முறையில் திருத்தினால் மீண்டும் கட்டுரையில் சேர்க்கலாம். மயூரநாதன் 13:18, 7 ஏப்ரல் 2008 (UTC)
சோதிடம் அறிவியலே. வானவியலை அடிப்படையாகக் கொண்ட அறிவியல். தமிழில் 'தெய்வம்' என்ற சொல்லுக்கு 'விதி' என்ற பொருளும் உண்டு. 'விதி'யை யார் விதித்தார்கள், யாருமல்ல. நாமேதான். அதனால்தான் சங்கப் புலவன் 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று மிக உறுதியாகக் கூறினான்.
அண்டப் பெருவெளி ஒரு காந்த மண்டலம். ஒரு காந்த மண்டலத்துக்குள் ஈர்க்கப்பட்ட நிலையில் இருக்கும் அத்தனையும் காந்தமாய் ஆகி விடுகின்றன என்று விஞ்ஞான விதிகள் கூறுகின்றன. கடவுள் என ஒன்றிருந்தால், அது அண்டவெளியில் தன்னை ஒரு காந்த சக்தியாய் வெளிப்படுத்துகிறது. பூமி மட்டும் அல்ல. சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் அத்தனையும் காந்தங்களே. இந்தக் காந்தங்கள் ஒன்றையொன்று ஈர்த்துக் கொள்வதால் தான் வான் வெளியில் அந்தரத்தில் நிற்கின்றன. இயங்கவும் செய்கின்றன. பூமி ஒரு காந்தம். அதில் உள்ள பொருட்கள் எல்லாம் காந்தமாகிவிடுகின்றன. எனவே அவைகளுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கின்றது. அந்த ஈர்ப்பு சக்தி நம் எல்லோரையும் கணப்பொழுது தவறாது ஈர்த்துக் கொண்டே இருக்கின்றது. இயக்கங்களுக்கு இதுவே காரணம். இதுதான் விதிக்கப்பட்டது. இதுவே விதி.
அண்ட வெளியில் பூமியால் ஈர்க்கப்பட்ட நிலையில் இருப்பதால் தெரிந்தோ தெரியாமலோ நாம் ஒரு காந்தமாகவே ஆகி விட்டோம். எனவே தான் நம் உடலில் மின் காந்த அலைகள் உண்டாகின்றன. இந்த மின் காந்த அலைகளே நம்மை இயக்குகின்றன.
ஆகவே, அண்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் நம் உடலிலும் உள்ளத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்துகின்றன. மனதில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மனிதனின் செயல்கள் மாறுகின்றன. அதனால் விளையும் விளைவுகளே ஒருவனின் எதிர்காலம்.
முன்னர் வாழ்ந்த சித்தர்கள் அண்டத்தைத் தன்னுள்ளே கண்டு அதன் விளைவுகளைக் கணித வாயிலாகப் பகுத்துப் பிண்டத்தில் ஏற்படும் மாறுதல்களை எழுதி வைத்துள்ளனர். அது எவ்விதம் பொய்யாகும்?
கர்மவினை தாங்கள் கூறியபடி, செய்யும் வினைகளுக்கு ஏற்ப வேறுபடும். நல்லவை செய்தால் நற்பலன் உடனே விளையும். நீங்கள் ஒருவருக்குத் தக்க காலத்தில் உதவினால், "நீங்கள் நல்லா இருக்கணும்" எனும் வாழ்த்து வருகிறதே! அதுவே நல்வினைப் பயன்.
ஒருவருக்குத் தீங்கு செய்துவிட்டுப் பின்னர் மன சாட்சி குத்துகிறதே அதுவும், "நீ நல்லா இருப்பியாடா! பாவி" எனும் வசைச் சொல்லும் தீவினையின் பலன்கள்.
நீங்கள் வானத்தை நோக்கி எச்சில் துப்பினீர்கள், அது உங்கள் மேல் மீண்டு வந்து விழுந்தது. உடனே வானம் என்மீது எச்சில் துப்பியது என்று அலறி என்ன பயன்? வானம் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. வானம் மிக மேலே இருக்கிறது. உங்களைப் பழிவாங்க அதற்கு நேரம் இல்லை. நீங்கள் துப்பியதை இயற்கை மீண்டும் உங்கள் மேலேயே விழுமாறு செய்தது. கைமேல் பலன்.
இங்ஙனம், நல்வினைப் பயன், தீவினைப்பயன் ஆகியவற்றை அவ்வப்பொழுதே தீர்த்து விடும்பொழுது, அவை எப்படிச் சேர்ந்து பாவ, புண்ணியமான மூட்டையாய் நிற்கின்றன?
நம் வீட்டுக்கணக்கைச் சரிபார்க்கவே நமக்கு நேரம் போதவில்லை. இத்தனை சீவராசிகளின் கணக்கைப் பார்ப்பதுதானா இறைவனின் வேலை. அப்படியே பார்த்தாலும் அவனுக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்.
"ஊழ்" என்பது கர்மவினை இல்லை. அணுவிலிருந்து பிரிந்து வந்தவன் அணுவிலே சேரவேண்டும். எந்த அணுவுடன் என்பதை கர்மவினை நிர்ணயிப்பதில்லை. மனிதனாகப் பிறந்தவன் ஆறு அறிவுடன் பிறந்தான். அவன் ஏழாம் அறிவை அடையவேண்டும். அதற்கு அவன் (ஞான)வினை செய்தாக வேண்டும். அவன் எந்தப் பக்குவத்தில் (திட, திரவ) இருக்கிறானோ அந்த அணுவுடன் சேருவான்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் திருவாசகத்தில் (சிவபுராணம், 26-32) இந்த அண்டம் ஒரு அணுக்கடல். இந்த அணுக்கடலில் ஏற்படும் சுழிகள், குமிழிகள் போன்றவை தான் நாமெல்லாம். அணுக்கடலின் அலைகள் ஓயாது. ஆனால் அந்த அலைகளின் இன்றைய தொகுப்புக்கள் அனைத்தும் அழிந்து வேறொரு புதிய தொகுப்பு தோன்றும். ஆனால் இந்த அணுக்கடல் அழியவே அழியாது. ஒரு பொருள் திடப் பொருளாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ இருப்பதற்குக் காரணம் அப்பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபட்ட வேகமே காரணம். இன்று நம் உடலை ஒளியின் வேகத்தில் செலுத்தினால் நாமும் ஒளியாகவே மாறி விடுவோம். எப்படி நாம் ஒளியின் வேகத்தில் சென்றால் ஒளியாகவே மாறி விடுவோமோ, அதைப் போன்றே நம் இயக்கத்தின் வேகத்தை நிறுத்தினால் இந்த அண்டத்தில் இருக்கும் ஒரே ஒரு பொருளாகிய பரிபூரணப் பரம்பொருளாகவே மாறி விடுவோம்.
ஒரு மேசையிலிருந்த்து ஒரு பொருள் ஒருவினையால் (கை வீசி தட்டுவதால்) கீழே விழலாம். இது ஒரு வினையென்றால் அது கீழே விழுவதற்கு முன் வேகமாக விரைந்து செயல்பட்டால் உடையாமல் காத்திடலாம். ஒரு வினையின் விளைவை மற்றொரு வினையின் மூலம் தடுக்கலாம் என்பது தெளிவாகிறது.
இது அனிச்சைச் செயல். இதற்கு அதிபதி முகுளம். இதையே திருமாலாக உருவகித்திருக்கிறார்கள். காக்கும் செயலல்லவா? விதியை மதியால் வெல்லலாம் என்பதுவும் இதுவே.
சோதிடம் ஒரு கைவிளக்கு. இரவில் செல்கிறோம். சாலையின் நடுவில் ஒரு பள்ளம் இருக்கிறது. கைவிளக்கு இருந்ததால் பள்ளம் தெரிகிறது. விலகிப்போய்விடுகிறோம். ஆனால் கைவிளக்கை எப்பொழுது, எந்த அளவுக்கு நம்பிப் பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு சோதிடத்தைப் பயன்படுத்தினால் அறிவுடையவன்.
ஆரூடம்
தொகுசோதிடமும் ஆரூடமும் ஒன்றா? -- சுந்தர் \பேச்சு 15:29, 23 பெப்ரவரி 2009 (UTC)
- இரண்டுக்கும் தொடர்பு இருப்பினும் அவற்றிடையே வேறுபாடு உண்டு. ஆங்கிலத்தில் ஆரூடத்தை Horary astrology என்பர். இது குறிப்பிட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பது தொடர்பானது. சாதகக் குறிப்பு எதையும் பார்க்காமலேயே, சந்தேகத்தோடு வருபவர் கேள்வி கேட்கும் நேரத்தை வைத்து கணிப்புச்செய்து பதில் கூறுவது ஆரூடம் ஆகும். இந்த வலைப்பதிவைப் பாருங்கள். மயூரநாதன் 16:25, 23 பெப்ரவரி 2009 (UTC)
தலைப்பு பரிந்துரை
தொகுசோதிடம் என்பது பொதுவான பதமாகையால், இதனை இரண்டாகப் பிரித்து இந்து சோதிடம் என்ற தனிப்பக்கம் வைக்கலாம் என நினைக்கிறேன்.--நீச்சல்காரன் 02:21, 7 பெப்ரவரி 2012 (UTC)