பேச்சு:ஜெ. ஜெயலலிதா
ஜெ. ஜெயலலிதா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
ஜெ. ஜெயலலிதா என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
ஜெ. ஜெயலலிதா என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
உள்ளடக்கம்
'ஜெ. ஜெயலலிதா'வை 'ஜ.ஜெயலலிதா' ஆக மாற்றுமாறு பரிவு. அவர் பெயர் ஜயராமன் ஜயலலிதா. ஆங்கில பேச்சை தமிழில் புகுத்தக் கூடாது.--விஜயராகவன் 11:52, 14 பெப்ரவரி 2007 (UTC)
ஜெ. ஜெயலலிதா வை செ. செயலலிதா என மாற்றவேண்டும் தமிழ் விக்கிப்பீடியா வட எழுத்துக்களை பாவிக்கும் விதம் நகைப்புக்குரியாதாய் உள்ளது. ஹமீத் என்பதை அமீத் என்று எழுதும் கட்டுரையாளர் சிலர் கிருஷ்ணன் ஐ கிருட்டிணன் என்று எழுதுவதில்லை.
ஜெயலலிதா, ஜானகி, ஜக் மோகன் டால்மியா, அஸ்வின், ரஜினிகாந்த், விஜயகாந்த், ஜவஹர்லால் நேரு, போன்ற இன்னும் ஆயிரக்கணக்கான பெயர்களை வடமொழி கிரந்த எழுத்துக்களையே பாவிக்கும் பிராமண எழுத்தாளர்கள் முஸ்லிம் இஸ்லாமிய பெயர்களை எழுதும்போது மட்டும் தமிழ் பற்று பீறிட திருத்தம் செய்ய ஓடி வருகிறார்கள். ஏன் இந்த பாகுபாடு? இதுதான் தமிழ்மொழி நமக்கு கற்றுத்தந்த ஒழுக்கமா? தமிழ் மொழி இந்துக்களுக்கு கட்டுமான மொழியா? தவறிருப்பின் மன்னியுங்கள்
jayalalitha, தமிழில் கையெழுத்து இடும்போது ஜெ. ஜெயலலிதா என்று தான் எழுதுகிறார். எனவே வக்கிபீடியாவிலும் அப்படி இருப்பதே கட்டுரைப் பெயரிடல் மரபு--Ravidreams 13:36, 14 பெப்ரவரி 2007 (UTC)
ஜெயலலிதாவே அப்படி கையெழுத்திட்டால், ஜெ. இருந்துவிட்டுப் போகட்டும். தமிழ்பற்று மிளிர்கிரது.. இப்படித்தான் எம். பக்தவத்சலம் பற்றி தேடினேன். இப்பக்கத்தில் [1] கடைசியாக "அவர்களின் தமிழ்த் தொண்டும், சைவத் தொண்டும் பன்னெடுங் காலம் வாழ வேண்டும் " எம்.பக்தவத்சலம் என்று கையெழுத்துள்ளது. அவருக்கு விபரீதலட்சணை கொஞ்சம் கூட இல்லை. தமிழ்நாட்டில்தான் தமிழ்தொண்டு என பேசிவிட்டு, தமிழ் பெயரை எழுதாத வேடிக்கை நடக்கும்.--விஜயராகவன் 14:34, 14 பெப்ரவரி 2007 (UTC)
- விபரீதலட்சணை என்றால் என்ன? --Ravidreams 16:35, 14 பெப்ரவரி 2007 (UTC)
// தமிழ்பற்று மிளிர்கிரது.. // //அவருக்கு விபரீதலட்சணை கொஞ்சம் கூட இல்லை. // போன்ற தனிநபர் விமர்சனங்களை தவிர்ப்பது தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு நல்லது என வேண்டுகிறேன். நன்றி--Ravidreams 16:46, 14 பெப்ரவரி 2007 (UTC).
விபரீதலட்சணை என்றால் sense of Irony, முரண்பாடாக பொருள்தரும் சொல்லாட்சி.
விபரீதலட்சணை (p. 3680) [ viparītalaṭcaṇai ] n viparīta-laṭcaṇai . < id. + lakṣaṇā. Irony, using language hinting at a meaning contrary to the literal sense. See எதிர்மறையிலக்கணை. செவ்வாய்க்கிழமையை மங்கள வாரமென்னுமா போலே விபரீதலட்சணை (திவ். பெரி யாழ். 5. 4, 7, வ்யா.).--விஜயராகவன் 17:08, 14 பெப்ரவரி 2007 (UTC)
விபரீதலட்சணை என்ற சொல்லை இது வரை கேள்விப்பட்டத்தில்லை. தமிழ்ச்சொல்லாகவும் தெரியவில்லை. முரண்நகை என்று ஒரு சொல் தான் தெரியும். அதுவும் இதுவும் ஒரு பொருள் தருவனவா?--Ravidreams 17:48, 14 பெப்ரவரி 2007 (UTC)
ரவி, முரண்நகை செ.ப.த. அகராதியில் இல்லை.ஆனால் இன்று பயன்படுத்தப் படுகிறது. உதாரணமாக அதற்கு ஒரு பொருள் oxymoron http://www.treasurehouseofagathiyar.net/10200/10244.htm. அது பல பொருள் சாய்வுகளில் பயன்படுத்தப் படுகிறது. அதில் ஒரு சாய்வு - Irony.
முரண்நகையை முரண் + நகை என பிரிக்கலாம். முரண் என்றால் 'எதிர்ப்பு' என பொருள். நகை என்பதற்க்கு அகராதிப் பொருள்கள்
நகை¹ (p. 2127) [ nakai¹ ] n nakai . < நகு. 1. [K. nage.] Laughter, smile; சிரிப்பு. நகைமுகங் கோட்டி நின்றாள் (சீவக. 1568). 2. [K. nage.] Cheerfulness; மகிழ்ச்சி. இன்னகை யாயமொ டிருந்தோற் குறுகி (சிறுபாண். 22). 3. [K. nage.] Delight, gratification, pleasure, joy; இன்பம். இன்னகை மேய (பதிற்றுப். 68, 14). 4. [K. nage.] Contemp tuous laughter, sneer, derision, scorn; அவ மதிப்பு. பெறுபவே . . . பலரா னகை (நாலடி, 377). 5. [K. nage.] Grinning; இளிப்பு. 6. [K. nage.] Pleasantry; பரிகாசம். நகையினும் பொய்யா வாய்மை (பதிற்றுப். 7, 12). 7. [K. nage.] Friendship; நட்பு. பகைநகை நொதும லின்றி (விநாயகபு. நைமி. 25). 8. Pleasant word; நயச்சொல். (திவா.) 9. Play, sport; விளை யாட்டு. நகையேயும் வேண்டற்பாற் றன்று (குறள், 871). 1. Flower; மலர். எரிநகை யிடையிடு பிழைத்த நறுந்தார் (பரிபா. 13, 59). 11. Blos soming of flowers; பூவின்மலர்ச்சி. நகைத்தாரான் தான்விரும்பு நாடு (பு. வெ. 9, 17). 12. Brightness; splendour; ஒளி. நகைதாழ்பு துயல்வரூஉம் (திருமுரு. 86). 13. Teeth; பல். நிரைமுத் தனைய நகையுங் காணாய் (மணி. 2, 49). 14. The gums; பல்லீறு. (W.) 15. Pearl; முத்து. அங்கதிர் மணிநகை யலமரு முலைவளர் கொங்கணி குழலவள் (சீவக. 63). 16. Garland of pearls; முத்தமாலை. செயலமை கோதை நகையொருத்தி (கலித். 92, 33). 17. [T. K. M. Tu. naga.] Jewels; ஆபரணம். Colloq. 18. Resemblance, comparison; ஒப்பு. நகை . . . பிறவும் . . . உவமச்சொல்லே (தண்டி. 33).
18வது அர்த்தம் நமக்கு சரிகட்டும் போல உள்ளது; அதாவது எதிர்ப்பு + resemblance.
சமீபத்தில் ஒரு இலக்கிய வாதத்தில் ஜெயமோகன் இவ்வாறு 'முரண்நகை'யை பயன்படுத்துகிறார்.http://www.maraththadi.com/article.asp?id=1012. "ஏனெனில் இலக்கணம் என்பது சராசரிப் பொதுமொழியின் விதிகளால் ஆனது. தொடர்புறுத்தலை புறவயமாக ஆக்கும் நோக்கம் கொண்டது. இலக்கியம் அந்த சராசரிப்பொதுமொழியைத் தாண்டி தொடர்புறுத்த முயல்வது. ஆகவே என்றுமே அது இலக்கணத்தின் எல்லைகளை மீறிச்செல்லும் துடிப்பைக் கொண்டிருக்கும். அவ்வாறு மீறாத இலக்கியம் உயிரற்றது. 'இலக்கியம் கண்டதற்கே இலக்கணம்' என்று வகுத்துக் கூறிய ஒரு மொழியில்தான் இந்த குரல் எப்போதும் எழுகிறது என்பது ஒரு முரண்நகை". இதில் முரண்நகை என்பது Irony என்ற அர்த்தத்தில் இருக்கிரது.
அதனால் முரண்நகையும் விபரீதலட்சணையும் ஒரே அர்த்தம் தரலாம் என நினைக்கிறேன்.
(மேலும், மேலிணைப்பில் உள்ள ஜெயமோகனின் மொழிப் பற்றிய கருத்துகளை பாருங்கள்; சுவாரசியமாக உள்ளது).
நான் 'முரண்நகை'யை பயன்படுத்த தயார். அதே சமயம் விபரீதலட்சணை நிச்சயமாக தமிழ்சொல்தான். 'விபரீதம்' கம்பர் பயன்படுத்திய் சொல்.எல்லோருக்கும் தெரிந்த சொல். லட்சணை/லட்சணமும் தெரிந்த சொல். (பட்டிக்காடா, பட்டணமா பாட்டு ஞாபகம் வருதா?). வேண்டுமானால் அகராதியை பாருங்கள்.--விஜயராகவன் 20:21, 14 பெப்ரவரி 2007 (UTC)
- கம்பர் பாட்டில் விபரீதம் என்னும் சொல் இருக்கிறதா? ஆச்சர்யமான தகவல் தான். பாடலை மேற்கோள் காட்டினால் நன்றாக இருக்கும். இங்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவன எல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லை. இரண்டு சொற்கள் மக்களால் சரிசமமாக மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில், அதில் நல்ல தமிழ்ச் சொல் எது என்று பார்த்து பயன்படுத்தலாம் தானே? தற்பொழுதைய பொது ஊடகங்களில் பரவலாக ஆங்கிலம் கலக்கப்படுகிறது. 4, 5 நூற்றாண்டுகள் கழித்து வாதாடுபவர்கள் 2000ஆவது ஆண்டு வாக்கில் கம்ப்யூட்டர், பஸ் போன்றவெல்லாம் தமிழ்ச் சொற்களாக இருந்தன. அவற்றை பயன்படுத்தலாம் என்று வாதிடுதல் முறையா? அது போலவே முற்கால இலக்கியங்களிலும் ஜெயகாந்தன் போன்றோரின் தற்கால இலக்கியங்களிலும் பிற மொழிச் சொல் கலப்பு இருக்கத் தான் செய்யும். அதற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. துல்லியமான சொல் தேடும் நீங்கள் ஏன் அதை வடமொழிச் சொற்களில் இருந்தே தேடுகிறீர்கள்? பிற மொழி கலக்காத முற்சங்க காலத்து இலக்கியங்களிலிருந்து சொற்கள் தேட முயலலாம். இல்லை, சரியான சொல் இல்லாத போது வேர்ச்சொல்லில் இருந்து புதுச் சொல் ஆக்க முயலலாம். திசைச் சொற்களை ஏற்பது குறித்து தமிழில் இலக்கணமே இருக்கிறதென்றால் அது குறித்து ஒரு ஒழுங்குடன் செயல்பட வேண்டும் என்று பொருள் தானே? ஆங்கிலம் போல் எங்கிருந்து வேண்டுமானாலும் சொற்களை எடுத்துக் கொள்ளலாம் என்றால் பிறகு இலக்கணம் எதற்கு? கலைக்களஞ்சியம் இன்றுள்ளவர் தவிர நூற்றாண்டுகள் கழித்தும் வாசிக்கப்படும் வாய்ப்பு உண்டு. அனைவருக்கும் எக்காலத்திலும் புரியும் நற்றமிழில் எழுதுவது தான் நன்றாக இருக்கும். இன்றைய ஊடகப் போக்குக்கு எழுதுவது எல்லா இடங்களிலும் சரியாக இருக்காது.. --Ravidreams 03:29, 15 பெப்ரவரி 2007 (UTC)
ரவி, விபரீதம் தமிழில் எழுதப்பட்ட கம்பராமாயணம், பிங்களம், திருவாய்மொழி, அகவல், வேதாந்த சூத்திரம் போன்ற இலக்கியங்களில் வருகிரது [2]. அதனால்தான் தமிழ் கூகிளில் போட்டால், 1000 பக்கங்கள் வரலாம். பழந்தமிழில் அது 'முரண்' என்ற பொருளில் வருகிரது, தற்கால செய்திகளில் வேண்டாத சம்பவம், traffic accident போன்ற பொருளில்.
விபரீதம் (p. 3680) [ viparītam ] n viparītam . < vi-parīta. 1. Discordance; contrariety; perversity; மாறுபாடு. (பிங்.) விபரீதம் புணர்த்துவிட்டீர். (கம்பரா. மாயாசன. 2). 2. Unfavourableness; பிரதிகூலம். நின் செய்ய வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள் (திவ். திருவாய். 6, 2, 3). (இலக். அக.) 3. Strangeness, uncommonness; அதிசயம். (திவா.). 4. See விபரீதஞானம். சீவபாவமுண்டெனல் விபரீதமாம் (வேதா. சூ. 129). 5. cf. a-parimita. Excessiveness; மிகுதி. (அரு. நி.).
"இரண்டு சொற்கள் மக்களால் சரிசமமாக மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில், அதில் நல்ல தமிழ்ச் சொல் எது என்று பார்த்து பயன்படுத்தலாம் தானே?"
இதற்கு நான்கு ஆட்சேபணைகள் . ஒன்று "நல்ல தமிழ்ச் சொல் எது" என்பது கண்டுபிடிப்பது. பரவான சொல்லாட்சி நல்ல தமிழா? தமிழிலக்கியத்தில் இருப்பது நல்ல தமிழா? பி.பி.சி.யில் பயனாகும் தமிழ் நல்லதா?அல்லது தினத்தந்தி தமிழா? அல்லது கூகிளில் அதிகமாக பலன் கொடுப்பதா? திண்ணையில் இருக்கும் தமிழா? இலங்கை அரசு உபயோகிக்கும் தமிழா? காலேஜ் மாணவர்கள் தமிழா? சென்னை தமிழா? அல்லது அகராதிகளில் வரும் தமிழா?அகராதிகளில் இல்லாத தமிழை நாம் முழுக்க புறக்கணிப்பது உசிதமா? இரண்டாவது ஆட்சேபணை இதனால் நாம் கட்டுரை சம்பந்தமான ஆராய்ச்சிகளையும், முயற்சிகளையும் விட்டு, மொழி சம்பந்தமான ஆராய்ச்சிகளிளும், வேண்டாத சர்ச்சைகளிலும் நேரத்தை வீண்படுத்துவோம். அதனால் சராசரி கட்டுரை ஆசிரியன் குறுகிய காலத்தில் புரியும் சொற்களையும், நடைமுறையையும் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுத வேண்டும். அதற்கு மொழி சர்ச்சைகளை தவிற்க வேண்டும். நான்காவது, நீங்களே "மக்களால் புரிந்து கொள்ளப்படும் பட்சத்தில்" என்று சொல்லுகிறீர்களே, அதற்கு மேல் என்ன விவாதம் வேண்டியிருக்கு? படிப்பவர் புரிந்து கொள்வதுதான் கடைசி அளவுகோல், ultimate arbiter.
நீங்கள் தேவையில்லாத பிரச்சினைகளைப் போட்டு மனதை குடைகின்றீர்.
நீங்கள் பலரின் தமிழ் உரைநடைகளை இயற்கையாக எடுத்துக் கொண்டு, பழக்கப் பட வேண்டும்.--விஜயராகவன் 10:03, 15 பெப்ரவரி 2007 (UTC)
ஜெ - ஆங்கிலம்; அதை தவிர்த்து தமிழை ஆங்கிலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் சாதிக்குப் பதில் ஜாதி சரி என்கிறீர்கள்? ஏன், அகராதிகளில் உள்ள பிறமொழிச்சொற்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்கள்? J என்பது எளிதாக அறியக் கூடிய ஆங்கில எழுத்து; அதனால் அதை தவிர்க்கலாம் என்கிறீர்களா? அப்ப, அறிய கடினமாக இருக்கும் சொற்களை ஆராயாமல் ஏற்றுக் கொள்வது நம் சோம்பல் தானே? கடந்த இரண்டு ஆண்டு அனுபவத்தில், தமிழ் விக்கிபீடியாவின் மொழிக் கொள்கை என்றுமே கட்டுரை ஆசிரியருக்கு ஊக்கத்துக்கு தடை போட்டதாக இல்லை. நற்றமிழில் எழுது என்று யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. அவரவருக்கு எவ்வளவு இயலுமோ அவ்வளவே எழுதச் சொல்கிறோம். அதே வேளை உங்கள் கட்டுரைகளில் பிறர் நற்றமிழ் மாற்றங்களை புகுத்துவார்கள் எனில் அதில் அவர்கள் ஆர்வம், முனைப்பு. அதை கொள்கை ரீதியாக தடை செய்வதற்கு ஒன்றுமில்லை. இருக்கிற தமிழ்ச் சொல்லை எல்லாம் நீக்கி விட்டு பிற மொழிச்சொல்லை புகுத்துவது தான் மறுப்புக்குரியது. சொற்களை குறித்து அறிவது என்றுமே எனக்கு மனதை குடையவில்லை. எழுத்துப் பிழைகளுடன் உள்ள உங்கள் தமிழை புரிந்து கொள்வதும் அதற்கும் பொறுமையாக பதில் சொல்ல வேண்டி இருக்கிற விக்கி நடைமுறையும் தான் மண்டையை குடைகிறது. தமிழை பிழையின்றி எழுதத் தெரியாத உங்களின் மொழியியல் கருத்துக்களுக்கு எந்த வித மதிப்பும் என்னால் தர இயலவில்லை. மன்னிக்கவும்.--Ravidreams 10:43, 15 பெப்ரவரி 2007 (UTC)
- ரவி, நீங்கள் ஆங்கிலத்தில் உயர் படிப்பு படித்து விட்டு, ஆங்கிலத்தில் வேலை செய்து, ஆங்கில அறிவினால்தான் ஊதியம் வாங்குகிறீர்கள். உங்கள் இலக்கிய ஆக்கங்கள் ஒன்றுமில்லை என நினைக்கிரேன். நீங்கள் எத்தனை கதைகளையும், கவிதைகளையும் பிரசுரத்துள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா? உங்களுக்கு தமிழ் விஞ்ஞான ஊடகங்களில் என்ன பங்களிப்பு என்ன சொல்ல முடியுமா? உங்களுக்கு மற்றவர்கள் தமிழை 'புறமொழி' என்று சொல்லுவதற்கு ஒரு தகுதியும் இல்லை. இலக்கியத்தில் பயனாகும் தமிழை புறமொழி என தமிழில் வேலை செய்து ஊதியம் வாங்காதவர்கள் சொல்வது ஆகாது. உங்கள் குறிப்பெயர் Ravidreams. இது சமஸ்கிருதம்-ஆங்கிலம் கலந்து ஆங்கிலத்தில் எழுதப்படுவது. ஊருக்கு உபதேசம் செய்வது எளிது.--விஜயராகவன் 11:07, 16 பெப்ரவரி 2007 (UTC)
- விஜய், தயவுசெய்து தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். பேச்சுக்களை விட்டுவிட்டு நீங்கள் கட்டுரையாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டுகிறேன். ரவியின் பங்களிப்பு உங்களுக்குத் தெரியாமலிருந்தால் நாம் என்ன செய்வது? உங்களது தமிழில் பெருமளவு எழுத்துப் பிழைகளுக்ம் வடமொழிச் சொற்களும் இருப்பதே உங்களை விளங்கிக் கொள்வதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி நிற்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். --கோபி 11:25, 16 பெப்ரவரி 2007 (UTC)
சரி, கோபி, அப்படியே. நிச்சயமாக ஒரு 'பிழைகளுக்ம்' இல்லமால் எழுத முயல்கிரேன்--விஜயராகவன் 11:42, 16 பெப்ரவரி 2007 (UTC)
விஜய், என்னைப் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை. என் தகுதி குறித்து நான் அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் ;) தனிப்பட்ட விமர்சனங்களை நாம் விக்கியில் வைப்பதில்லை. எனவே இந்த தனிப்பட்ட உரையாடலை தொடர வேண்டாம் என நினைக்கிறேன். --Ravidreams 13:02, 16 பெப்ரவரி 2007 (UTC)
"ஜெ - ஆங்கிலம்; அதை தவிர்த்து தமிழை ஆங்கிலப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் ஏன் சாதிக்குப் பதில் ஜாதி சரி என்கிறீர்கள்?" ரவி, இந்த இரண்டு பிரச்சினைகளும் தனி. ஜெ.ஜயலலிதா, எம்.ஜி.ஆர், சி.வி.ராமன், சி.என். அண்ணாதுரை இவற்றில் நாம் ஆங்கில எழுத்தை அப்படியே தமிழில் எழுதுகிறோம். மக்கள் அப்ப்படி சொல்லிவந்தாலும், அது அவர்கள் பெயர் அல்ல. சி.என். அண்ணாதுரையின் அதிகாரபூர்வமான பெயர் காஞ்சி நடராஜன் அண்ணாதுரை. அதனால் தலைப்பில் அவர் பெயர் க.ந.அண்ணாதுரை என்றிருக்க வேண்டும். தமிழில் சி.என். என படிப்பது பொருளற்றது. எம்.ஜி.ஆர்.உம், தமிழ் கட்டுரை தலைப்பில் ம.கோ.இராமச்சந்திரன். 'ஜெ.ஜயலலிதா' ஆங்கில Jவை குறிக்கிரது. சி.வி.ராமன் ச.வெ.இராமன் என்றிருக்கவேண்டும் எனெனில் அவர் பெயரை தமிழில் எழுதினால் சந்திரசேகர வெங்கட ராமன் ஆகும். ஆங்கில பதங்களை, பெயரில் முன்னால் போடுவது ஆங்கில மோகமே.
ஜெ.ஜயலலிதாவைப் பற்றி சிந்திக்கும் போது, என் எண்ணம் மாறுகிரது. ஏனெனில் ஜெ.ஜெயலலிதாவை ஜெயராமன் ஜயலலிதா என்று எடுத்துக் கொள்ளலாம். அதனால் ஜயலலிதா பற்றி எழுதியதை வாபஸ் வாங்குகிரேன். நீங்கள் இப்படிப்பட்ட படிப்பை சொல்லியிருந்தால், நான் எப்போதோ திருப்தி அடைந்திருப்பேன்.
ஜாதி என்பது தமிழ்சொல். தமிழ் அகராதிகளில் போட்டு பாருங்கள்.[3] . தற்கால தமிழிலக்கியமும் 'ஜாதி'யை பயன்படுத்துகிரது. [4]--விஜயராகவன் 11:26, 15 பெப்ரவரி 2007 (UTC)
டான்சி வழக்கின் காரணமாக 2001இல் பதவி விலகிவிட்டு 2003 தேர்தலில் ஆண்டிப்பட்டியில் வென்றார். ஓ பன்னீர் அப்போ இடைப்பட்ட காலத்தில் முதல்வராக இருந்தார். அச்செய்தி விபரம் தேர்தலின் கீழ் இல்லையே?--குறும்பன் (பேச்சு) 22:56, 27 செப்டம்பர் 2014 (UTC)
- செய்தி விடுபட்டிருந்தால் இணைத்துவிடலாம் நண்பரே,. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:52, 7 அக்டோபர் 2014 (UTC)Reply
//இவருக்கு திருமணம் ஆகாததால், செல்வி ஜெ. ஜெயலலிதா என அழைக்கப்படுகிறார்.// திருமணம் ஆகாத அனைத்துப் பெண்களுமே செல்வி என்றே அழைக்கப்படுகையில் இவ்வாறு குறிப்பிடுதல் அவசியமா? என அறிய விழைகிறேன். நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:55, 7 அக்டோபர் 2014 (UTC)Reply
@Arulghsr: தாங்கள் முன்னிலையாக்கிய தொகுப்பைத் தொடுதிரையில் தவறுதலாக முன்னிலையாக்கிவிட்டேன். தற்போது சரிசெய்துள்ளேன். தவற்றுக்கு வருந்துகிறேன். --மதனாகரன் (பேச்சு) 05:24, 7 திசம்பர் 2015 (UTC)Reply
உறுதிசெய்யப்பட்ட பயனர்கள் மட்டும் தொகுக்கும் வண்ணம், காரணமற்று காலவறையற்ற காப்புச் செய்தது தேவையற்றது. --AntanO 00:08, 6 திசம்பர் 2016 (UTC)Reply
குறுங்கட்டுரயாக இருப்பதைவிட, பிரதான கட்டுரையில் இணைப்பது ஏற்றது. --~AntanO4task (பேச்சு) 23:58, 5 திசம்பர் 2016 (UTC)Reply
@Kanags:,@AntanO:,@Nan:,@Arularasan. G: ஜெயலலிதாவின் இயற்பெயர் 'கோமலவள்ளி இல்லை என அமமுக பொதுச் செயலாளர் டி. டி. வி. தினகரன் குறிப்பிட்டுள்ளார். டி. டி. வி தினகரன் என்பவர் ஜெயலலிதாவிடம் நெருக்கமாக இருந்தவர், அவர் சொல்லும் போதே சிறுது ஐயம் ஏற்படுகிறது. கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் பெயரே அல்ல ! :சர்கார் குறித்து டிடிவி தினகரன் கருத்து
- இதெல்லாம் அரசியல் பேச்சு. இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டியதில்லை. அவரது இயற்பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஜெ உயிரோடு இருக்கும் போதே இப்பெயர் ஊடகங்களில் வந்துள்ளது. அப்படியிருக்க அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ எதுவும் கூறவில்லை.--Kanags (பேச்சு) 03:19, 9 நவம்பர் 2018 (UTC)Reply
@Kanags:,@AntanO:,@Nan: இப்பக்கத்தை நிருவாகிகள் மட்டும் தொகுப்புவதற்கு மற்றும் நகர்த்துவதற்கு அனுமதியுங்கள். (சில மாதங்களுக்கு)