பேச்சு:தமிழீழ விடுதலைப் புலிகள்
இக்கட்டுரை கூடுதல் பயனர்களால் பார்க்கப்படும் கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே இக்கட்டுரையை விரைந்து மேம்படுத்த பங்களிப்புகள் வரவேற்கப்படுகிறது. |
பொருண்மிய மதியுரைகம்
தொகுபொருண்மிய மதியுரைகம் has no connection with the LTTE it is a NGO registered with GOSL. i went to the website - suren
LTTE is a NGO!! They are closly linked with or work with the LTTE !!!--Natkeeran 12:34, 24 பெப்ரவரி 2006 (UTC)
- ltte is a ngo since when??, பொருண்மிய மதியுரைகம் is not part of the ltte! since the government agent also works closely with the ltte, is he a part of the ltte?
I did not mean seriously about LTTE being a NGO :-]. Seriously, பொருண்மிய மதியுரைகம் is a front organization. It is a common knowledge among Tamils. But, I admit you have a strong case here. If you want, you can remove it and just make a note in the talk pages, I will not object to it. --Natkeeran 16:43, 24 பெப்ரவரி 2006 (UTC)
இந்தக் கட்டுரை ஒரு பக்கச் சார்பானது. புலிகளுக்கு எதிரானவர்களால் எழுதப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிரானவர்களுக்கு இங்கு தேவையற்ற விளம்பரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான கட்டுரைகள் ஆங்கில விக்கியில் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள்.(உ+ம்: Irish Republican Army).
- TWpedia strictly adheres to NPOV or neutral point of view. That involves finding ways to include opposing view points. Please be specific in regards to your concerns. --Natkeeran 15:05, 13 ஏப்ரல் 2006 (UTC)
Notes
தொகு- http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17439 SeaSea Tigers launch Deep-Sea Ops training to Auxiliary Flotilla
- http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17398 Rural Volunteers Brigade passing out parade held in Eachchilampathu
தேர்தல் அரசியல் என்பதை ஜனநாயக அரசியல் என்று மாற்றியிருக்கிறர்கள். இது பெரிய கருத்து வித்தியாசத்தினை ஏற்படுத்துகிறது. எனவே அதனை தேர்தலில் பங்குபற்றுவதில்லை என்றவாறு மாற்றுகிறேன். விடுதலைப்புலிகளிடம் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சி ஒன்று உள்ளது. --மு.மயூரன் 06:29, 28 ஜூன் 2006 (UTC)
- please point out atleast one instance where the ltte was engaged in democratic politics? just have a non-functional party does not in any way impley they engage in democratic politics.
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.eelamjudicial.org/
- In தமிழீழ விடுதலைப் புலிகள் on 2007-05-06 10:50:42, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In தமிழீழ விடுதலைப் புலிகள் on 2007-05-14 01:31:38, Socket Error: (11001, 'getaddrinfo failed')
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.teedor.org/
- In Portal:சூழலியல் on 2007-05-06 10:07:16, 404 Object Not Found
- In Portal:சூழலியல் on 2007-05-06 11:24:33, 404 Object Not Found
- In Portal:சூழலியல் on 2007-05-14 00:40:43, 404 Object Not Found
--TrengarasuBOT 01:32, 14 மே 2007 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.tamilnet.com/img/publish/2006/02/Building_the_state_1.pdf
- In தமிழீழ விடுதலைப் புலிகள் on 2007-05-06 10:51:02, 404 Not Found
- In தமிழீழ விடுதலைப் புலிகள் on 2007-05-14 01:32:00, 404 Not Found
நடுநிலைமையோடு, மேலதிக தகவல்கள் சேர்க்கப்பட்டு எழுதப்படவேண்டும்
தொகு--Natkeeran 01:29, 9 நவம்பர் 2007 (UTC)
இணைக்கப்பட வேண்டிய பகுதிகள்
தொகுபுலிகளின் வரலாறு
தொகு- தோற்றத்தின் பின்னணி
- புதிய தமிழ் புலிகள் TNT
- பெயர் மாற்றம்
- உமா மகேஸ்வரன் பிரிவு
- இந்தியப் பயிற்சிப் பாசறைகள்
- தமிழ்நாட்டு ஆதரவு (எம்.ஜி. இராமச்சந்திரன்......)
இவை பற்றி பின்வரும் கட்டுரையில் தகவல்கள் கிட்டலாம்.Pirapaharan By: T. Sabaratnam
--டெரன்ஸ் \பேச்சு 02:55, 9 நவம்பர் 2007 (UTC)
புலிகளின் கொள்கைகள்
தொகு- தமீழீழக் கோரிக்கை
- தமிழீழத் தேசியம்
- சுயநிர்ணய உரிமை
- இயக்க ஒழுக்கமும் கட்டுப்பாடும்
- தனிமனித, மனித உரிமைகள்
- பொருளாதாரக் கொள்கைகைள்
- சாதிய எதிர்ப்பு
- பெண் விடுதலை, சம உரிமை
- சமய சார்பு இன்மை
- உலகமயமாதல் பார்வை
- அரச முறை
- முஸ்லீம்கள் தொடர்பான பார்வை
- மலையகத் தமிழர் தொடர்பான பார்வை
--Natkeeran 03:07, 9 நவம்பர் 2007 (UTC)--டெரன்ஸ் \பேச்சு 03:09, 9 நவம்பர் 2007 (UTC)
நுண்ணிய, பன்முக, நடுநிலைமைப் பார்வை முக்கியம்
தொகுத.வி.புலிகள் பற்றிய கட்டுரையை விரிவாக்கம் ஒரு நல்ல முயற்சி. ஆனால் அது மிகவும் ஒரு வெளிப் பார்வை என்றே சொல்ல வேண்டும். கொலைகளும், அவர்களின் குற்றங்களும், முக்கியப்படுத்தப் பட்டது போல அதற்கு ஈடான மறுபர்க்க பார்வை தகுந்தவாறு தரப்படவில்லை. நேரம் இருக்கும் பொழுது ஈடுசெய்ய முயற்சிக்கிறேன். சில முக்கிய விடயங்களில் நாம் தகுந்த balance தருவதை அக்கறையுடன் கவனித்து கொள்தல் வேண்டும், அதுவே த.வி பொறுப்பான நம்பிக்கையான வளர்ச்சிக்கு உதவும். நன்றி. --Natkeeran 01:43, 9 நவம்பர் 2007 (UTC)
- ஆதாரங்களே இல்லாமல் பல கட்டுரைகள் தவியில் உள்ளப் போது ஆதாரங்களுடன் உள்ள இந்தக் கட்டுரைப் பகுதியை இப்படி நகர்த்துவது பொருதமாகாது. கட்டுரை மேம்பபடுத்தப்பட வேண்டுமாயின் அதை குறிக்கும் வகையில் கட்டுரைத்தலைப்பில் வார்ப்புருக்களை இட்டுக் காட்டலாம். ஆதாரங்களில் சந்தேகம் இருப்பின் கட்டுரையில் தலைப்பில் இக்கட்டுரை ஆதாரம் சரிபார்க்கப்பட வேண்டும் அல்லது இது நடுவுநிலை அற்ற கட்டுரை என்ற வார்ப்புருவை இடலாம். நகர்த்துவது தவியின் நிலைப்பாட்டக் கேள்விக் குறியாக்கும்.--டெரன்ஸ் \பேச்சு 02:01, 9 நவம்பர் 2007 (UTC)
- இந்தக் கட்டுரையின் தற்போதைய சேர்ப்புகள் புலிகள் செய்த கொலைகளை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துள்ளது. புலிகள் ஏன் தோன்றினார்கள், அவர்களின் கொள்கைகள் என்ன, ஏன் அவர்கள் ஆயுதப் போராட்ட வழிமுறைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை தகுந்த முறையில் ஆயவில்லை. இந்தியாவுடனான 2 வருட யுத்ததை ஆய்ந்த அளவு அதன் பின்னரான 10 வருட கால யுத்த நிலைமைகள் விளக்கப்படவில்லை. சுய நிர்ணய கோரிக்கை பற்றி எந்த தகவலும் சேர்க்கப்படாமல் உள் நாட்டு போர் என்று மட்டும் தருவது நடுநிலைமை அல்ல. புலிகள் கொலை செய்தார்கள் என்று சுட்டினாலும், ஏன் செய்தார்கள் என்பது விளக்கப்படவில்லை. இப்படி இக்கட்டுரை புலிகளின் குறைகளையே கோடிட்டு காட்டும் முகமாக பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கின்றது. தமிழில் பல முக்கிய மூலங்கள் உள்ள இத்தலைப்புக்கு தரப்பட்ட அனேக மூல ஆதாரங்கள் வெளிப் பார்வைக்கே முக்கியத்துவம் தந்தும், மேற்கோள் காட்டியும் அமைந்துள்ளமையும் நடுநிலைமையை கேள்விக்குறியாக்கியுள்ளன. --Natkeeran 02:17, 9 நவம்பர் 2007 (UTC)
நற்கீரன் ஆங்கில விக்கிபீடியாக் கட்டுரை இவ்வாறுதான் இருக்கிறது. புலிகளைப் பயங்கரவாதிகளாகக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டு நான்கைந்து சிங்களப் பயனர்கள் இயங்கி வருகின்றனர். தமிழீழம் தொடர்பான சகல கட்டுரைகளும் அவர்களது தொடர்ச்சியான கண்காணிப்பில் உள்ளன. தமிழ்ச்செல்வன் கட்டுரையில்கூட அதிகம் திருத்தம் செய்தது அவர்களே. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு சொல்லையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். கோபி 02:25, 9 நவம்பர் 2007 (UTC)
- எனது தனிப்பட்ட முக்கிய கவனம் த.வி வும் அதன் நடுநிலைமையும். இதில் நான் புலிகள் சார்பு, எதிர்ப்பு என்ற வாதம் செய்ய முற்படவில்லை. நடுநிலைமை இல்லை. இப்படித்தான் எனக்கு படுகின்றது.--Natkeeran 02:29, 9 நவம்பர் 2007 (UTC)
//எனது தனிப்பட்ட முக்கிய கவனம் த.வி வும் அதன் நடுநிலைமையும்// ஆம். அதனை விளங்கிக் கொள்கிறேன். அத்துடன் கட்டுரையின் சில பகுதிகள் நடுநிலைமை இல்லை என்பதுவும் உண்மையே. ஆனால் டெரன்ஸ் செய்யும் மொழிமாற்றங்களைப் பயன்படுத்தித் திருத்தங்கள் செய்யலாம் என நான் எண்ணுகிறேன். பகுதிபகுதியாக கவனஞ் செலுத்தலாம். நான் ஆ.வி.யைச் சுட்டிக் காட்டக் காரணம் டெரன்ஸ் அங்கிருந்து மொழிபெயர்ப்பதனாலேயே ஆகும். நன்றி.கோபி 02:32, 9 நவம்பர் 2007 (UTC)
- இந்தக் கட்டுரை (மற்றும் இதனோடு சேர்ந்த கட்டுரைகள்) எங்கோ திசை மாறிச் சென்று கொண்டிருப்பதாக உணருகிறேன்.--Kanags 21:49, 10 நவம்பர் 2007 (UTC)
- கனக்ஸ், மேலும் உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்தால் நன்று. அரசியலை விட அறிவியலுக்கே த.வி ஏற்ற களமாக எனக்கும் படுகின்றது. தப்பான ஊகிப்போ தெரியாது. --Natkeeran 23:10, 10 நவம்பர் 2007 (UTC)
எல்லா விக்கிபீடியாக்களும் அரசியலை விட அறிவியலுக்கே பொருத்தமானவையாக உள்ளன. காரணம் நமக்குத் தெரிந்தது தான். அரசியல் மட்டுமல்ல வரலாறு, சமூக விடயங்களிலும் விக்கிபீடியாக்களில் நிறையக் குறைகள். அது தவிர்க்க முடியாததும்கூட.
ஆனால் த.வி.பு பற்றிய விரிவான கட்டுரை தொகுக்கப்படுவது மிகவும் பயனுள்ளதாகும். அத்துடன் அவர்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது குறைந்தது இணையமூடான தகவற் பரிமாற்றல் களங்களிலாவது பல விடயங்களைத் தெளிவூட்டும்.
எடுத்துக்காட்டாக அவர்களுக்கு குறைநிறைகளை எழுதுவதற்கான மின்னஞ்சல் முகவரிகள் இருக்கக் கூடும். மேலும் அவர்களது சட்ட அமைப்பில் தனிமனித உரிமைகள் தொடர்பாக உள்ள பகுதிகள் என்ன போன்ற தகவல்கள் வெளித்தெரிய வருவதுடன் ஏகபிரதிநிதிகளாகப் பேச்சுவார்த்தையில் பங்குபற்ற வேண்டியதன் அரசியற் தேவை, சிறுவர் சேர்க்கப்படுவது, பண்பாட்டுக் கட்டுப்பாடுகள் போன்றன தொடர்பான உண்மைத்தன்மையும் தெரியவரும். அவ்வகையில் இம்முயற்சி பயன்சேர்ப்பதாக முன்னெடுக்கப்படலாம் என்றே நம்புகிறேன். கோபி 23:26, 10 நவம்பர் 2007 (UTC)
இந்தக் கட்டுரை நடுநிலமை அற்றதாகவே காணப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கொள்கைகளை அதிகமாக வெளிக் காட்டுவதுடன் விடுதலைப்ப புலிகள் பக்கம் சாய்வானதாக இருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதப்படுகின்றது. பல சொற்களும் இங்கு மாற்றப்பட வேண்டி உள்ளது.--Fasly (பேச்சு) 11:18, 4 ஆகத்து 2016 (UTC)
//இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. //
பயனர்:Fasly கட்டுரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:02, 4 ஆகத்து 2016 (UTC)
பயங்கரவாத அமைப்பு என்று கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டிருந்தாலும், கட்டுரையை முழுமையாக வாசிக்கும் போது அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சொற்பிரயோகங்கள், வாக்கிய அமைப்புக்கள் அதனை பயங்கரவாத அமைப்பில் இருந்து நியாயப்படுத்துவதாக இருக்கின்றது. பயங்கரவாத அமைப்பில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று கூற முடியாது. அவர்கள் பயங்கரவாதிகள். அதேபோல் அவர்களின் மரணத்தையும் வீரச்சாவு என்று கூற முடியாது. இந்த சொற்பிரயோகங்கள் விடுதலைப் புலிகள் பக்கமாக பார்க்கும் போது அவர்களுக்கு சரியாக தோன்றினாலும் அது நடுநிலமையானதல்ல. ஆகவே இவ்வாறான பல சொற்பிரயோகங்கள் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை தவிர்க்கப்பட வேண்டும்.--Fasly (பேச்சு) 05:45, 9 ஆகத்து 2016 (UTC)
//பயங்கரவாத அமைப்பில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று கூற முடியாது.//
இது யாருடைய கருத்து?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:10, 9 ஆகத்து 2016 (UTC)
பயங்கரவாதத்தில் ஈடுபடக் கூடியவர்கள் பயங்கரவாதிகள். இது பொதுவான சொல். அனைத்து ஊடகங்களிலும் பயன்படுத்தக் கூடியது. விடுதலைப் புலிகளை போராளிகள் என்று கூறினால் ஐஎஸ் அமைப்பினரையும் போராளிகள் என்று கூறலாமா? போராளி என்பதற்கும் பயங்கரவாதி என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றது. ஒவ்வொரு பிற மொழி சொற்களுக்கும் சரியான பொருளை தேடி எழுதும் விக்கியில், இந்த சொற்களும் கட்டுரைகளுக்கு பொருத்தமானதாகவே அமைய வேண்டும். வளரும் இளம் சமூகத்திற்கு விக்கியில் சந்தேகம் இருக்காதவாறு கட்டுரைகள் அமைய வேண்டும். --Fasly (பேச்சு) 16:12, 9 ஆகத்து 2016 (UTC)
நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. அதனால் மீண்டும் கேட்கிறேன்.
//பயங்கரவாத அமைப்பில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களை போராளிகள் என்று கூற முடியாது.//
இது யாருடைய கருத்து?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:34, 10 ஆகத்து 2016 (UTC)
பகுப்பு:தீவிரவாதி என்று குறிப்பிட்ட அமைப்புகள் பகுப்பின் பெயரே தீவிரவாத அமைப்புகள் என்றில்லாமல் தீவிரவாதி என்று குறிப்பிட்ட அமைப்புகள் என்று தான் உள்ளது. வேணும்னா நீங்க ஐஎஸ் அமைப்பினை அந்த பகுப்பில் இல்லைனா சேத்துவிடுங்க.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:39, 10 ஆகத்து 2016 (UTC)
ஐ.எஸ். அமைப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன வித்தியாசம். இரண்டுமே பயங்கரவாத அமைப்புக்கள் தான். அப்படியானால் ஐ.எஸ் பயங்கரவாதிகள் உள்ளிட்ட ஏனைய அனைத்து பயங்கரவாத அமைப்பினரையும் போராளிகள் என விக்கியில் கூறலாமா?--Fasly (பேச்சு) 12:15, 10 ஆகத்து 2016 (UTC)
- ஆம் அப்படித்தான் நாம் அனைவரையும் குறிப்பிடுகிறோம். இது குறித்து முன்னரே உரையாடி ஒப்புதல் பெறப்பட்டது.--Kanags \உரையாடுக 12:20, 10 ஆகத்து 2016 (UTC)
போராளின்னா போராடுறவன்(ள்). நல்லதுக்கா கெட்டதுக்கானு காட்ட அந்த சொல்லில் ஏதும் ஒட்டில்லை. அதனால் அது ஒரு நடுநிலை சொல்லாகிவிடுகிறது. இதில் ஏதும் சிக்கல் இருப்பதா எனக்குத்தெரியலை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:28, 10 ஆகத்து 2016 (UTC)
ஆயுதமேந்தி மனித படுகொலையில் ஈடுபட்டவர்களை எவ்வாறு போராளிகள் என்று கூறுவது? அவ்வாறானால் மகாத்மா காந்தியையும் பிரபாகரனையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?
அனைவரையும் அப்படி அழைப்பதாக குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஏனைய கட்டுரைகளை பாருங்கள். ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்று. தமிழ் விக்கியில் மட்டுமே அதுவும் விடுதலைப் புலிகளை மட்டுமே இவ்வாறு கூறுகின்றார்கள். மற்ற விடயம், போராளிகள் என்பது மட்டுமல்ல தவறு. விடுதலைப் புலிகள் தொடர்பான அனைத்து கட்டுரைகளிலும் இதுபோன்ற தவறான சொற்பிரயோகங்கள் பல உள்ளன. போராளிகள், தமிழீழ விடுதலை, போராடினார்கள், ஈழப்போராட்டம், வீரச்சாவு, தமிழர் தாயகம், சிங்களப் படை இவ்வாறு தொடர்கின்றன. இதுபோன்ற பிழையான சொற்களை தங்களது சொந்த வலைத்தளங்களில் தாராளமாக பயன்படுத்தலாம். விக்கிப்பீடியாவில் குறித்த கட்டுரைகளில் புலிகளை நியாயப்படுத்தும் விதமாக எழுத முடியாது. ஏனைய கட்டுரைகளில் எதிர்பார்க்கும் உண்மை, நடுநிலமை இந்தக் கட்டுரைகளிலும் இருக்க வேண்டும்.--Fasly (பேச்சு) 12:45, 10 ஆகத்து 2016 (UTC)
//ஆயுதமேந்தி மனித படுகொலையில் ஈடுபட்டவர்களை//
மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை என்னால் கேட்டுக்கொண்டிருக்க இயலாது. முதலில் யார் பார்வையில் யார் தீவிரவாதி எனத்தெளிவாக குறிப்பிடவும். (கீழுள்ள உங்கள் கருத்து) என் கேள்விக்கு பதில் வந்த பின்னர் நான் தொடர்கிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:29, 10 ஆகத்து 2016 (UTC)
நீங்கள் எதிர்பார்க்கும் பதில் எதுவென்று எனக்குப் புரியவில்லை. எனினும் நான் என்ன கூறுகின்றேன் என்பது இங்கு மிகத் தௌிவாகவே இருக்கின்றது. எவராலும் இலகுவாக புரிந்து கொள்ள முடியும். பயங்கரவாதத்தின் பக்கம் இருந்து நோக்காமல் நடுநிலையாக (அதாவது சரியான பக்கத்தில்) உத்தியோகபூர்வ தகவல்களுடன் ஒப்பிட்டு நோக்கினால் யார் பயங்கரவாதி என்பது தௌிவாக இருக்கின்றது. ஆகவே ஒரே விடயத்தை என்னாலும் மீண்டும் மீண்டும் கூறுவது இயலாது. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் போராளிகள் என்று கூற முற்பட்டால் அதற்கான ஆதாரங்களை முன் வைத்து நிரூபிக்கலாம்.--Fasly (பேச்சு) 17:00, 10 ஆகத்து 2016 (UTC)
இந்தக் கட்டுரையில், //இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது// என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற தலைப்பிலான கட்டுரையில், //இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்// என்று உள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பு, பயங்கரவாத அமைப்பாகவும், பிரபாகரன் பயங்கரவாதி என்றும் கூறப்பட்ட பின்னர் எவ்வாறு அது போராட்ட அமைப்பாகவும், பிரபாகரன் உள்ளிட்ட புலி உறுப்பினர்கள் போராளிகளாகவும் மாறினார்கள். அவர்கள் போராளிகளாக இருந்தால் ஏன் ஐநா சபை உள்ளிட்ட மேற்கூறப்பட்ட நாடுகள் அவரை போராளி என்ற சொல் கொண்டு அழைக்கவில்லை?
இந்தக் கட்டுரைகளில் //இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம்,போன்ற 31 நாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது// என்ற ஒரு வசனத்தை மட்டும் கூறிவிட்டு கட்டுரையின் ஏனைய எந்தவொரு இடத்திலும் இது பயங்கரவாத அமைப்பாகவோ அவர்கள் பயங்கரவாதிகளாகவோ குறிப்பிடப்படாமல், அவர்கள் நிரபராதிகள் போன்று வாசிப்போரை ஏமாற்றும் விதமாக கட்டுரை இருக்கின்றது. ஆகவே இதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் விரைந்து திருத்தியமைக்கப்பட வேண்டும்.--Fasly (பேச்சு) 09:25, 11 ஆகத்து 2016 (UTC)
கரன் பார்க்கர் பற்றி என்ன நினைக்கிறீங்க?
en:Liberation_Tigers_of_Tamil_Eelam#Proscription as a terrorist group
மேலுள்ள பகுதியில் பார்த்தீங்கனா புலிகள் பற்றி இருவேறு கருத்துக்கள் இருப்பது தெரியும். அதனால் யார் பயங்கரவாதினு கூறுறாங்க யார் கூறலைனு கட்டுரையில் எழுதுவது தான் சரியாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:03, 11 ஆகத்து 2016 (UTC)
போராளி என்ற சொல் நீங்க ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் நடுநிலை சொல் தான். பயங்கரவாதி என்பது சார்பு நிலை சொல். அதே போல் அகிம்சாவாதி என்று சொல்வதும் சார்பு நிலைச்சொல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:06, 11 ஆகத்து 2016 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா திசை மாறி பயணிப்பதாக உணர்கிறேன். விடுதலைப் புலிகளுடன் சம்பந்தமப்பட்ட கட்டுரைகள் அனைத்துமே தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. பல பயங்கரவாதிகளை போராளிகள் என்றும், தேசியம் தமழீழம் என்றும், சிங்களப் படை என்றும், இராணுவம் மீட்ட பகுதிகள் என்று வரவேண்டிய சொற்கள் இராணுவம் கைப்பற்றியது என்றும் இவ்வாறு நிறைய தவறுகள் பிழைகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் விரைந்து திருத்தப்பட வேண்டியவை. நான் இலங்கையன் என்ற வகையில் இவை அனைத்தையும் தாய் நாட்டிற்கு எதிரான எண்ணத்தை விதைக்கக் கூடியதாக நாட்டிற்கு அவப் பெயரை ஏற்படுத்தக்கூடியதாகவே பார்க்கிறேன். இதனால் பாதிக்ப்பட போவது மற்றொரு சந்ததியினரே. இது விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான வலைத்தளம் அல்ல. இதில் நடுநிலைமை, உண்மைகள் எடுதப்பட வேண்டும். இந்திய சகோதரர்களிடம் கேட்கிறேன். கஷ்மீர் மோதலில் ஈடுபடக் கூடியவர்கள் போராளிகளா? அவர்களை எந்தவொரு இந்தியர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா? தமிழகத்தின் எந்தவொரு ஊடகத்திலாவது அவர்களை போராளிகள் என்று கூறுகிறார்கள? பயங்கரவாதத்தை யார் மேற்கொண்டாலும் எஅது பயங்கரவாதம் தான். ஆகவே மயூரநாதன்,அ. ரவிசங்கர், சுந்தர் உங்களிடம் இது தொடர்பில் விரைந்து நடுநிலையை எதிர்பார்க்கின்றேன்.--Fasly (பேச்சு) 11:21, 11 ஆகத்து 2016 (UTC)
- பசுலி, உங்கள் பயங்கரவாதி என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. உங்கள் சிறீலங்காவில் வெளியிடப்படும் அனைத்து தமிழ் ஊடகங்களும் (தென்னிலங்கை ஊடகங்கள், ஏன் அரசுப் பத்திரிகையான தினகரனும்) முன்னாள் போராளிகள் என்றுதான் விளிக்கின்றன. எப்போவாவது புலிகளைப் பயங்கரவாதிகள் என்று விளித்ததில்லை. சிங்கள ஊடகங்கள் மட்டுமே நூற்றுக்கு நூறு பயங்கரவாதிகள் என அழைக்கின்றன. ஆங்கில ஊடகங்களில் எழுதும் தமிழர்கள், மற்றும் நடுநிலையாளர்கள் (இசெத் உசைன் உட்பட) Militants என்று தான் எழுதுகின்றனர். ஆங்கில ஊடகங்களில் எழுதும் பெரும்பாலான (துவேசம் பிடித்த) சிங்களவர்கள் பயங்கரவாதிகள் என எழுதுகின்றனர். முசுலிம்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தேவைக்கேற்ப அவர்களின் நிலைப்பாடு மாறுபடும். முகா தலைவர் போராளிகள் என்று தான் பெரும்பாலான நேரங்களில் விளிக்கிறார். தமிழ் பிபிசியைக் கேட்டிருக்கிறீர்களா? ஆங்கில பிபிசி எவ்வாறு அழைக்கிறது? மேலும், சந்திரிக்கா பண்டாரநாயக்கா அண்மையில் ஒரு கூட்டத்தில் பிரபாகரனை திரு. பிரபாகரன் என அழைத்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அப்படி இலங்கையில் நிலைமை இருக்க நீங்கள் புதிதாக தமிழ் விக்கிப்பீடியாவில் புலிகளைப் பயங்கரவாதிகள் எனக் கூறவேண்டும் என்கிறீர்கள். இலங்கையில் இவ்வாறு நீங்கள் பரப்புரை செய்வீர்களா? (இலங்கையில் புலிகள் தடை செய்யப்படவில்லை என நீங்கள் அறிவீர்களா?) இந்த மாதிரியான விவாதங்களில் உங்கள் நேரத்தை செலவழிப்பதை விடுத்து தமிழ் விக்கிப்பீடியாவில் ஆக்கபூர்வமாக ஏதாவது பங்களியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:56, 11 ஆகத்து 2016 (UTC)
- விருப்பம்--500eMc2 (பேச்சு) 12:06, 11 ஆகத்து 2016 (UTC)
- விருப்பம்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:40, 11 ஆகத்து 2016 (UTC)
ஆம். Militants - ஆயுதப்போராளி - நடுநிலைச்சொல்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:40, 11 ஆகத்து 2016 (UTC)
1) எனது பெயரைக் கூட தமிழில் பசுலி என்று தமிழில் எழுதும் நீங்கள், (எனது பெயர் பசுலி அல்ல பஸ்லி. இங்கு தவறை சுட்டிக் காட்டவில்லை உங்கள் தமிழ் பற்றை சுட்டிக்காட்டுகிறேன்) ஏன் இந்தக் கட்டுரைகளில் தமிழ்பற்றை மறுக்கிறீர்கள்? பிழையான சொல்லை உட்புகுத்த முற்படுகின்றீர். இதற்கு நிறைய உதாரணங்கள் உங்களுக்கு கூறலாம். வேண்டுமானால் விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு விக்கிப்பீடியா கொள்கைகள் இவற்றையும் பாருங்கள்.
2) விடுதலைப் புலிகளுக்கு சார்பாக எழுதும் வடக்கில் உள்ள துவேஷ ஊடகங்கள் தான் உங்களுக்கு நடுநிலை ஊடகமா? பயங்கரவாதிகளை போராளிகள் என்பதுதான் உங்கள் நடுநிலையா? விடுதலைப் புலிகளை (உலகத்தின் உயர் நிலை நிறுவனங்கள் உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்ட) பயங்கரவாதிகள் என்றால் அது துவேஷ ஊடகமா? இங்கு நீங்கள் கூறமுற்படும் நடுநிலை நடுநிலையானதா?
3) முஸ்லிம்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை என்று இங்கு வீண் வம்பை இழுத்துப் போடுகின்றீர். அதற்குறிய பதில்களும் உங்களுக்கு சில இடங்களில் கூறியிருக்கின்றேன். பயங்கரவாதத்திற்கும் புலிகளுக்கும் எதிராக முஸ்லிம்கள் செயற்பட்டால் அவர்கள் காட்டிக் கொடுப்பவர்களா? சந்தர்ப்பவாதிய? அவ்வாறானால் புலிகளை காட்டிக் கொடுத்த கருணா யார்? காட்டிக் கொடுப்பாளனா? இதனால் ஒட்டுமொத் தமிழர்களையும் காட்டிக் கொடுப்பாளர்கள் என்று கூறுவது சரியா?
4) இங்கு வீண் வாதம் புரியவில்லை. எதிர்கால சந்ததியினரின் நலன் நோக்கியே இது. மீண்டும் ஒரு பயங்கரவாதம் வேண்டாம். இவற்றை வாசிக்கும் இளம் பிஞ்சுகளின் மீது பயங்கரவாதத்தையும் துவேஷத்தையும் விதைக்க வேண்டாம் என்பதற்காகவே இது.
சரியான சொல் பயங்கரவாதி என்று இருக்கும் போது ஏன் போராளி? பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஏனைய அனைத்து கட்டுரைகளையும் சரியாக வாசித்துப் பாருங்கள். எவ்வாறு சொற்பிரயோகங்கள் இருக்கின்றதென்று. இறுதியாக, போராளிகள் மட்டுமல்ல ஏனைய நான் கூறியுள்ள அனைத்து சொற்களும் சரி என்று முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள். (இங்கு பொருத்தமற்ற கருத்துக்களை தயவு செய்து முன்வைக்காதீர். அது நீண்ட வாதமாக அமையும்)--Fasly (பேச்சு) 12:24, 11 ஆகத்து 2016 (UTC)
IS அச்சுறுத்தல் உள்ளதென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குறிப்பிடுகின்றன. முஸ்லிம்கள் சிலரும் இணைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஜிகாத் குழு செய்படுவதாகவும் கருத்துள்ளது. செய்திகளும் உள. மதிப்புக்குரிய பௌத்த துறவிகள் சிலரும் முஸ்லிம் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட்டதால், இலங்கையிலுள்ள அணைத்து முஸ்லிம்களையும் பயங்காவாதிகள் என்பதா? அவ்வாறே 32 நாடுகள்தான் புலிகளை அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். மற்றவர்களை குறிப்பிடவில்லையே 2/3 பெரும்பான்மையாவது வேணாமா? 32 நாடுகளிக் கருத்தைக் தூக்கிப்பிடிப்பதைவிடுத்து யதார்த்தம் பற்றிய எழுத வேண்டும். தமிழ் மக்களிடத்தில் அவர்கள் பயங்கரவாதிகளாக காட்டப்பட்டுள்ளார்களா? Kanags கருத்தை கவனிக்காத பதிலாக உள்ளது. --500eMc2 (பேச்சு) 13:05, 11 ஆகத்து 2016 (UTC)
- தொடர்புபட்ட செய்தி பேச்சு:ஹமாஸ் இஸ்ரேலிய இராணுவத்தினர் மீதும் பொதுமக்கள் மீதும் பல தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும், பல சமூக வேலைத்திட்டங்களை இவ்வியக்கம் முன்னெடுத்து நடத்திச் செல்லுகின்றனர். இதனால் இது பாலஸ்தீனர்களிடையே மிகுந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது. ஆக அவர்கள் நல்லவர்கள்? 500eMc2 (பேச்சு) 13:18, 11 ஆகத்து 2016 (UTC)
- இன்னும் கொஞ்சம்: பேச்சு:ஹிஸ்புல்லா, பேச்சு:பலத்தீன விடுதலை இயக்கம், பேச்சு:முசுலிம் சகோதரத்துவம் இவர்களையும் தமிழ் விக்கிப்பீடியா பயங்கரவாதிகள் என்று அழைக்கவில்லை. என்ன அந்தப்பக்கம் சார்பா? பயங்கரவாதத்திற்கெதிரான போருக்கும் எதிராக இருக்கிறதே? எதிர்கால சந்ததியினரின் நலன் நோக்கியே இவர்களை பங்கரவாதிகள் என்று கூறுங்கள். உலக பயங்கரவாதம் வேண்டாம். இவற்றை வாசிக்கும் இளம் பிஞ்சுகளின் மீது பயங்கரவாதத்தையும் நல்லதாக விதைக்க வேண்டாம். 500eMc2 (பேச்சு) 13:28, 11 ஆகத்து 2016 (UTC)
- பேச்சு:யாசிர் அரஃபாத் இங்கும் கருத்திட்டுள்ளேன். யார் யாரைப் பயங்கரவாதி என்பது. புலிகளுக்கு பயிற்சி கொடுத்த இயக்கத்தலைவர் யாசிர் அரஃபாத் போராளி ஆனால் பயிற்சி பெற்ற இயக்கத்தின் தலைவர் பயங்கரவாதி. இவர் எறிந்தால் குண்டு, அவர் எரிந்தால் மலர்? நல்ல நியாயமடா சாமி! 500eMc2 (பேச்சு) 13:36, 11 ஆகத்து 2016 (UTC)
1 - நான் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்திருக்கின்றேன் என்பதை முழுமையாக வாசிக்காமல் இடையில் வந்து கொண்டு தயவு செய்து கருத்திட வேண்டாம். இங்கு இடையில் வந்ததை தவறெனவில்லை. இடையில் வந்து கொண்டு முழுமையாக வாசிக்காததை தவறென்கிறென். மீண்டும் மீண்டும் எனக்கு ஒரே விளக்கத்தை தந்து கொண்டு இருக்க முடியாது. அதனால் சுருக்கமாக கூறுகின்றேன் பயங்கரவாதத்தில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் (நான் எங்கும் புலிகள் மட்டும் கூறவில்லை) பயங்கரவாதி தான். ஆகவே என்னுடைய கருத்துக்களை முழுமையாக வாசியுங்கள். 2- //இலங்கையிலுள்ள அணைத்து முஸ்லிம்களையும் பயங்காவாதிகள் என்பதா?// இவ்வாறு நீங்கள் கூறியிருப்பது, //புலிகளை காட்டிக் கொடுத்த கருணா யார்? காட்டிக் கொடுப்பாளனா? இதனால் ஒட்டுமொத்த தமிழர்களையும் காட்டிக் கொடுப்பாளர்கள் என்று கூறுவது சரியா?// என்ற என்னுடைய இந்தக் கேள்விக்கு என்று நினைக்கின்றேன். இந்தக் கேள்வியை நான் ஏன் இங்கு கேட்டிருக்கின்றேன் என்று பாருங்கள். -Kanags கூறியிருக்கும் விடயத்துக்கு பதிலாகவே. அடுத்தது வடக்கில் இருந்து வௌியெற்றப்பட்ட முஸ்லிம்கள் என்ற கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் இதற்கான பதில் உண்டு. ஆகவே மீண்டும் கூறுகின்றேன் முழுமையாக வாசித்துவிட்டு கருத்திடுங்கள். வீணாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தமிழர் சமூகத்தையும் இங்கு இழுத்தெடுத்து நியாயத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம். நீங்கள் வீணாக பிரச்சினைக்கு இழுக்கின்றீர். 3 - தொடர்புபட்ட செய்தி என்று ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற சிலவற்றை உதாரணமாக கூறியிருக்கின்றீர்கள். //யாசிர் அரஃபாத் போராளி ஆனால் பயிற்சி பெற்ற இயக்கத்தின் தலைவர் பயங்கரவாதி// என்கிறீர். யாசிர் அரஃபாத் பயங்கரவாதி என்றால் அதற்கான ஆதாரங்களுடன் நிரூபித்து பயங்கரவாதி என்று எழுதுங்கள். நான் வேண்டாம் என்று கூறவில்லையே. நான் இங்கு இல்லாத ஒன்றையும் புதிதாக புகுத்த வரவில்லையே. பிழை என்றால் எங்கு இருந்தாலும் பிழை. ஆனால் பிரபாகரன் பயங்கரவாதி என்று எத்தனை ஆதாரங்கள் வேண்டுமானாலும் இருக்கின்றன. ஆகவே அவரை போராளி என்று கூறுவது சரியா? ஒரு வரியில் மட்டும் பயங்கரவாதி எனக் கூறிவிட்டு ஏனைய இடங்களில் போராளி என்று கூறுவது விக்கி கொள்கைக்கு முரணானதாக இல்லையா? எதிர்மாறான பொருளை வௌிக்காட்டுவதாக இல்லையா? அவ்வாறு போராளி என்றால் ஆதாரத்துடன் நிரூபித்து அவர் போராளி என்று கட்டுரையில் முதல் பந்தியையே மாற்றியமையுங்கள். 4 - பிழை என்று தெரிந்தும் கூட, தகுந்த ஆதாரங்கள் இருந்தும் கூட, கொள்கைகளை விட்டுக் கொடுக்க முடியாமையின் காரணமாக நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள கட்டுரைகள் மிகவும் பாரிய பொய்களை உள்ளடக்கி இருப்பதை தவறு என்று சுட்டிக்காட்டுவதையே தவறு என்றால், இவ்வாறு பிழையான கட்டுரைகள் விக்கியில் இருக்குமென்றால், எழுத முடியுமென்றால், - எனக்குள் சில நியயமான கேள்விகள். தமிழ் விக்கியில் 87,947 கட்டுரைகள் உள்ளன. ஏனைய கட்டுரைகளைில் காணப்படும் சிறு சிறு தவறுகள் ஏன் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட வேண்டும்? ஏன் அவற்றுக்கு மாத்திரம் ஆதாரங்கள் தேடி எழுத வேண்டும்? ஏன் ஒழுக்க விதிகள்? ஏன் கருத்தாடல்கள்? ஏன் துப்பரவு பணிகள்? அப்படியே இருக்க விடலாமே - யார் வேண்டுமானாலும் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா?--Fasly (பேச்சு) 14:49, 11 ஆகத்து 2016 (UTC)
- கருத்திட வேண்டாம் என்று குறிப்பிட அதிகாரம் உள்ளதா? Kanags கூறியிருக்கும் விடயத்தை விளங்கிக் கொள்ளாமல் திரும்பவும் கருத்துக் கூறுவது ஏன்? //வீணாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தமிழர் சமூகத்தையும் இங்கு இழுத்தெடுத்து நியாயத்தை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம். நீங்கள் வீணாக பிரச்சினைக்கு இழுக்கின்றீர்.// வீணாக பழி சுமத்த வேண்டாம். இந்த விடயத்தை விக்கி நிர்வாகம் கவனத்தில் எடுக்குமாறு கேட்கிறேன். //யாசிர் அரஃபாத் பயங்கரவாதி என்றால் அதற்கான ஆதாரங்களுடன் நிரூபித்து பயங்கரவாதி என்று எழுதுங்கள்.// இதிலுள்ள கருத்தைக் கவனியுங்கள். ஏன் யாசிர் அரஃபாத் பயங்கரவாதி என்று குறிப்பிடப்படவில்லை என்ற உண்மையை விளங்கிக் கொள்ளவும். //பிரபாகரன் பயங்கரவாதி என்று எத்தனை ஆதாரங்கள் வேண்டுமானாலும் இருக்கின்றன.// பிரபாகரன் போராளி என்றும் ஆதாரங்கள் இருக்கின்றன. //யார் வேண்டுமானாலும் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா?// நீங்கள் சொல்வது மடடும் உண்மையா? நீங்கள் எவ்வாறான பொய்களை வேண்டுமானாலும் எழுதிவிட்டுச் செல்லும் தளமா தமிழ் விக்கிப்பீடியா? 500eMc2 (பேச்சு) 15:07, 11 ஆகத்து 2016 (UTC)
திட்டுமிட்டு வாதம் திசை திருப்பப்படுகின்றதாக நான் கருதுகின்றேன்--Fasly (பேச்சு) 15:12, 11 ஆகத்து 2016 (UTC)
ஓ! நீங்கள் திட்டம் போட்டுத்தான் வந்திருக்கிறீர்களா? 500eMc2 (பேச்சு) 15:18, 11 ஆகத்து 2016 (UTC)
- @500eMc2:, @Fasly: தாங்கள் இருவரும் தயவு செய்து பேச்சுப் பக்க உரையாடல்களில் கவனத்தினை செலுத்தாமல், விக்கிப்பீடியா கட்டுரைகளை மேம்படுத்துதல் கவனம் செலுத்துங்கள். விக்கிப்பீடியா இவ்வாறான வாதங்களை வரவேற்பதில்லை. தொடர்ந்த சொற்போர்களும், தனிநபர் தாக்குதல்களும் இதனால் உண்டாகக் கூடும். அதனால் இத்துடன் உரையாடல்களை நிறுத்திவிட்டு பங்களிப்பினைத் தொடருங்கள். முடிந்தமட்டும் ஆதாரங்களோடு கட்டுரையை மேம்படுத்துங்கள். அதில் குறைகள் ஏற்பட்டால் பிற விக்கிப்பீடியார்கள் திருத்தம் செய்து மேம்படுத்த உதவுவார்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:30, 11 ஆகத்து 2016 (UTC)
[1] அமாசையும் புலிகளையும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்போதுங்கோ.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:39, 23 செப்டம்பர் 2016 (UTC)
தொடக்க ஆண்டு?
தொகுகட்டுரையில் அமைப்பின் தொடக்க ஆண்டு 1975, 1976 என்று இரு வேறு தகவல்கள் இருக்கின்றன. இங்கு உள்ள படத்தில் 1972 என்கிறது. இது குறித்து கட்டுரையில் தெளிவு படுத்தலாம்--ரவி 17:52, 20 நவம்பர் 2007 (UTC)
குமரன் பத்மநாதன்?
தொகு//மே 24, 2009 இல் கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய பேட்டியில் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் குமரன் பத்மநாதன் புலிகள் வன்முறையைக் கைவிட்டு விட்டதாகவும், இனி ஜனநாய வழியில் செயற்படப் போவதாகவும் தெரிவித்தார்.// குமரன் பத்மநாதன் இன்னும் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக தொடர்கிறாரா? சமீப காலமாக பெரும்பான்மை புலி ஆதரவாளர்கள் இவருக்கு எதிரான நிலையையே எடுப்பதாக அறிகிறேன். --அராபத்* عرفات 12:05, 16 செப்டெம்பர் 2010 (UTC)
இந்தக் புலிகளுக்கு எதிரானவர்களால் எழுதப்பட்டுள்ளது. புலிகளுக்கு எதிரானவர்களுக்கு இங்கு தேவையற்ற முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது. புலிகள் ஏன் புலிகளானார்கள் ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்ட பிண்ணனி அனைத்தும் தெளிவாக எழுதப்பட வேண்டும்.
இந்திய அமைதிப்படை செய்த அட்டகாசங்கள், அயோக்கியத்தனங்கள் அனைத்துலகமும் அறிந்ததே. அதை நேர்மையான முறையில் எழுதவில்லை. சிங்கள இராணுவ வீரன் துப்பாக்கிக் கட்டையால் இராசீவைத் தாக்கியது மறைக்கப்பட்டுவிட்டது.
இப்படி இந்தக் கட்டுரை மிகவும் ஒருபக்கச் சார்புக் கட்டுரையாகவே உள்ளது. --இளங்குமரன் 04:56, 22 செப்டெம்பர் 2010 (UTC)இளங்குமரன்--இளங்குமரன் 04:56, 22 செப்டெம்பர் 2010 (UTC)
- இளங்குமரன், தேவையான தகவல்கள் விடுபட்டிருந்தால் தக்க சான்றுகளுடன் நீங்களே கட்டுரையில் சேருங்கள். -- சுந்தர் \பேச்சு 05:06, 22 செப்டெம்பர் 2010 (UTC)
ஈழப்போரில் இந்தியாவின் பங்கு இந்தக்கட்டுரை தேவைப்படலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:00, 4 ஆகத்து 2016 (UTC)