பேச்சு:தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்

நல்லதொரு புதுப்பக்கம், தேனி சுப்பிரமணி! பாராட்டுகள்.--செல்வா 20:52, 26 பெப்ரவரி 2009 (UTC)

தமிழ்ச் சொற்கள் தேவை: ஐ.ஏ.எஸ்., வார்டு, மேயர்.

நகராட்சிகளைப் பட்டியலிட்டது போல, மாநகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளையும் பட்டியலிட வேண்டும். நீளமான பட்டியல் என்றால் ஒவ்வொன்றுக்கும் தனிப் பக்கங்களை உருவாக்கலாம்.--Kanags \பேச்சு 23:30, 26 பெப்ரவரி 2009 (UTC)

IAS - இந்திய ஆணைப் பணி(க்குழு?), மேயர் - நகரத்தந்தை (பெண் மேயர்?), வார்டு - ? -- சுந்தர் \பேச்சு 06:25, 27 பெப்ரவரி 2009 (UTC)
mayor = மாநகரத் தலைவர் என்றே அழைக்கலாம். ward = வட்டம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. --ரவி 01:59, 29 மார்ச் 2009 (UTC)

சில கேள்விகள் தொகு

  • மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நான்கு ஆட்சிப் பிரிவுகள் என்பது தெளிவாக தெரிகிறது.
  • மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகியவை ஊராட்சி பிரிவின் கூட்டமைப்புகள் ஆகவே தெரிகிறது. அல்லது அவையும் ஆட்சிப் பிரிவுகளா???
  • தமிழ்நாடு மாவடங்களாகவும் பிரிக்கப்பட்டுளது. இதுவா மாவட்ட ஊராட்சி ??
  • மாவட்டத்தின் உட்பிரிவாக (வட்டார அளவில்) ஊர் ஒன்றியங்கள் உள்ளன. இவை ஊராட்சிகளின் கூடமைப்புத் தானே?
  • எப்படி நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. எ.கா நாடு->மாகாணம்->மாவட்டம்->நகரங்கள் + ஊர்கள் (கனடா)
  • தமிழ்நாடு -> மாவட்ட ஊராட்சி ? -> மாநராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ?? --Natkeeran 22:33, 28 மார்ச் 2009 (UTC)

ஊராட்சி மட்டும் தனிப் பிரிவாக... தொகு

  • மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என்கிற பிரிவுகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவை தனியாக இயங்குகின்றன. ஆனால் ஊராட்சி அமைப்பு மட்டும் மாவட்ட ஊராட்சியின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக இருக்கிறது. எனவேதான் ஊராட்சி அமைப்புப் பகுதியில் இருக்கும் மக்கள் மட்டும் ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சிமன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கான வாக்குகள் அளிக்கிறார்கள்.தமிழ்நாட்டில்
  1. மாநகராட்சி-> மிகப் பெரிய நகரங்களுக்கான அமைப்பு
  2. நகராட்சி-> மிகப் பெரிய ஊர்களுக்கான அமைப்பு ( இவை இரண்டும் மாநில நகராட்சி நிர்வாக ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.)
  3. பேரூராட்சி-> பெரிய ஊர்களுக்கான அமைப்பு ( இவை இரண்டும் மாநில பேரூராட்சி நிர்வாக ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.)
  4. ஊராட்சி- கிராமங்களுக்கான அமைப்பு ( இவை மாநில ஊரக வளர்ச்சித்துறை-> மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை-> ஊராட்சி ஒன்றியங்கள்-> ஊராட்சி என்பதன் வழியாக இயங்குகின்றன.)

-தேனி எம்.சுப்பிரமணி பயனர்:Theni.M.Subramani

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், இந்த பக்கத்தின் ஆங்கில இணைப்பை சற்றுமுன் சேர்த்துள்ளேன். எனவே, ஆங்கில பக்கத்தை ஒருமுறை படித்து உங்கள் யோசனைகளைத் தெரிவிக்கவும். --வெல்க தமிழ்! ( பேச்சு) 17:29, 10 திசம்பர் 2011 (UTC)Reply

தமிழ்நாடு எதிர் தமிழ்நாட்டு தொகு

இது போன்ற தலைப்புகளில் தமிழ்நாட்டு என்று வர வேண்டும். எடுத்துக்காட்டு: தமிழ்நாட்டு ஆறுகள், தமிழ்நாட்டு ஊராட்சிகள்--ரவி 02:05, 29 மார்ச் 2009 (UTC)

ஊராட்சி தொகு

மேலே குறிப்பிடப்பட்ட சொல் தமிழில் 'சிற்றூராட்சி' என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது வழங்கப்பட்டது. இங்கு அதை காணலாம். அன்பர்களே, மாற்றலாமா? --வெல்க தமிழ்! ( பேச்சு) 17:24, 10 திசம்பர் 2011 (UTC)Reply

மாற்ற வேண்டாம். ஊராட்சி மன்ற அலுவலகங்களின் பெயர்ப்பலகை, கடிதங்கள் மற்றும் அனைத்துத் தொடர்புகளிலும் ஊராட்சி என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது. செய்திக்காக அளிக்கப்பட்ட தகவலை ஆதாரமாகக் கொண்டு மாற்ற வேண்டாம். குழப்பங்கள் உருவாகும்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:57, 10 திசம்பர் 2011 (UTC)Reply

சிவகாசி மாநகராட்சி தொகு

@Gwtmknp: வணக்கம். சிவகாசியை மாநகராட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 06:44, 13 சூன் 2020 (UTC)Reply

Return to "தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்" page.