பேச்சு:தமிழ்நாடு காவல்துறை

போக்குவரத்துக் காவல்துறை? -- Sundar \பேச்சு 09:40, 10 மே 2007 (UTC)Reply

இது ஏன் நீக்கப்பட்டது?

பொதுவாக பின்னணி விளக்கம், புள்ளிவிவரம் ஏதுமின்றி ஒரு யூடியூப் காணொளியினைக் கொண்டு பொதுப்படையான கருத்துகளைப் பதிய இயலாது. ”விமர்சனம்” என்றொரு பகுதியினை தற்போது இணைத்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 16:09, 8 மே 2011 (UTC)Reply
காணொளி என்றால் visible light என்றே பொருள்படும். வீடியோவை படம் என்றோ நிகழ்படம் என்றோ சொல்லலாம். -- சுந்தர் \பேச்சு 02:10, 11 மே 2011 (UTC)Reply

பதவிகளும் ஆங்கில சுருக்கங்களும் தொகு

  • காவல்துறை இணைக் கண்காணிப்பாளர்
  • காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர்
  • காவல்துறை உதவிக் கண்காணிப்பாளர்
  • காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்

ஆகியோருக்கு ஆங்கிலத்தில் என்ன வரும். DSP மற்றும் ASP போன்ற பதவிச்சுருக்கங்களை இவற்றுள் எங்கு சேர்ப்பது என்பது குழப்பமாக இருக்கிறது. --எஸ்ஸார் (பேச்சு) 13:10, 26 ஏப்ரல் 2012 (UTC)

கட்டுரையில் பதவிக்குறியீடுகள் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டு விட்டன. தங்கள் குழப்பம் தீர்க்கப்பட்டு விட்டது.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:04, 27 ஏப்ரல் 2012 (UTC)

ஓர் அறிதலுக்காக, தமிழ்க் கதைகளிலும் திரைப்படங்களிலும் வருகின்ற ஏட்டு என்பவர் யார் ? உதவியாளரா (A-2) அல்லது ஹெட் கான்ஸ்டபிளா ?--மணியன் (பேச்சு) 03:56, 27 ஏப்ரல் 2012 (UTC)

கதைகளில் மட்டுமில்லை, சென்னை போன்ற பெரு நகரங்கள் தவிர்த்து அனைத்து ஊரிலும், அங்குள்ள காவல் நிலையங்களிலும் ஏட்டு எனும் சொல் இன்னும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இது தலைமைக் காவலரைக் குறிக்கும் ஹெட்கான்ஸ்டபிளைத் தான் குறிக்கிறது. ஹெட்கான்ஸ்டபிள் முன்பு ஹெட் என்று அழைக்கப்பட்டு பின்னர் ஏட்டு என மருவியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 10:20, 27 ஏப்ரல் 2012 (UTC)
தேனி.எம்.சுப்பிரமணி, நன்றிகள். சுருக்கங்களை விரிவாக்கி அருகில் இடலாமா?. --எஸ்ஸார் (பேச்சு) 12:28, 27 ஏப்ரல் 2012 (UTC)
வேண்டாம். இப்படியே ஒவ்வொன்றாக விரிவாக்கி ஆங்கிலக் கட்டுரை போல் ஆகிவிடப் போகிறது. தமிழில் இருப்பதை புரிந்து கொள்ளட்டும். இங்கு ஆங்கிலத் திணிப்பு எதற்கு?--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 16:39, 27 ஏப்ரல் 2012 (UTC)
Return to "தமிழ்நாடு காவல்துறை" page.