பேச்சு:நா. சண்முகலிங்கன்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sodabottle in topic Untitled
Untitled
தொகுவாழும் தனி மனிதர் ஒருவரை மிகைப்படுத்தி ஒரு 'சிறப்பு மனிதராகச்' சித்தரிக்க எண்ணி எழுதப்பட்ட கட்டுரை இது. நம்பகத்தன்மை மிகவும் குறைந்தது. முழுமையாக நீக்கி விடுதல் உசிதம்.Kovaisarala (பேச்சு)
- வணக்கம் Kovaisarala, நீங்கள் இக்கட்டுரை மிகைப்படுத்தியுள்ளதாகக் கருதினால், நீங்களே இப்பக்கத்தினை உரிய ஆதாரத்துடன் நடுநிலைப்படுத்தி எழுதலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:18, 26 நவம்பர் 2012 (UTC)
- இக்கட்டுரையில் எழுதப்பட்டவற்றில் எதனை மிகை என்கிறீர்கள் என்று தெரியவில்லை. இவரது ஆய்வுகள் தொடர்பாக மேற்கோள்கள் இல்லாததால் அவற்றில் சிலவற்றை நீக்கியிருக்கிறேன். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை இங்கு தயவு செய்து காட்டாதீர்கள். இது மேலும் தொடர்ந்தால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சம்பந்தமான அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்க முடியாதவாறு பூட்டி வைக்கப்படும்.--Kanags \உரையாடுக 10:22, 26 நவம்பர் 2012 (UTC)
- கனக்ஸ் அவர்களின் கருத்து: "இது மேலும் தொடர்ந்தால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சம்பந்தமான அனைத்துக் கட்டுரைகளும் தொகுக்க முடியாதவாறு பூட்டி வைக்கப்படும்". கனக்ஸுக்கான பதில்: சரிதான்! அதையே முதல்வேலையாகச் செய்யுங்கள் கனக்ஸ் அவர்களே! எப்படியோ, உங்களது அத்துமீறிய கட்டுப்பாட்டின் காத்திரத்தை விளங்கிக்கொள்ளக் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சியே! நன்றிகள். வாழ்க வளமுடன்!T.shan56 (பேச்சு) நவம்பர் 26, 2012
- கோவை, இக்கட்டுரையில் நீங்கள் சேர்த்த பகுதியைப் பாருங்கள். யார் மிகைப்படுத்தி எழுதியது என்பது தெரிகிறது. நீங்கள் எழுதியவற்றை நீங்களே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறீர்கள்:) மிகை எனக் கருதி அதனை நீக்கியிருந்தேன். உங்கள் கருத்துக்கு நன்றி ரி.சண்56.--Kanags \உரையாடுக 10:51, 26 நவம்பர் 2012 (UTC)
- மிக்க நன்றி கனம் கட்டுப்பாட்டாளர் கனக்ஸ் அவர்களே! உங்கள் சேவை விக்கிப்பீடியாவிற்கு மிகவும் தேவை. எது மிகை எது குறை என்பதனை எந்தளவிற்கு விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான வாய்ப்பொன்றை உங்கள் கட்டுரைக் கருப்பொருளுக்குரியவர் சமூகரீதியில் செய்வதனையே, கருத்தியல் ரீதியில் எழுத்தால் செய்ய விழைந்தேன். //டிசம்பர் 28 2007 முதல் 2010/11 வரை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியபோது, கல்வி அபிவிருத்தித் தொலைநோக்குடன் மிகவும் முக்கியமான செயல்திட்டங்களை முன்னெடுத்தார். இவரது முயற்சியிலே, மறுபடியும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாநாடுகள் செயல்படுத்தப்பட்டன. கிளிநொச்சியில் பொறியியல் பீடம் உருவாகுதலுக்கான சிந்தனை மறுமலர்ச்சியும் இவரினாலேயே உருவாக்கப்பட்டது. கல்விச் சமூகத்தில் சாதகமானதும் முன்னேற்றம் தரக்கூடியதுமான நேரியல் கூர்ப்புச் செயற்பாட்டின் முன்னோடியாகவும் விளங்குகின்றார்.// - வஞ்சப்புகழ்சியா இது?. இது உங்களைச் சிந்திக்கத் தூண்டியிருக்கின்றதா? இன்னமும் இல்லை... என்றுதான் நினைக்கின்றேன்! சிலவற்றை நீக்கினாலும், இன்னமும் "மிகைப்படுத்தலை" தாராளமாக விட்டுவைத்துத்தான் இருக்கின்றீர்கள். எது எப்படியோ, உங்களது விக்கிப்பீடியா மூல தகவல்களின் தன்னிச்சையான கட்டுப்பாடு மூலமான சமூகப் பொறியியல் செயற்பாடுகள் மேன்மேலும் வாழையடி வாழையாகத் தழைத்து வளரவேண்டுமென்று வாழ்த்துகின்றேன். இந்தப் போக்கில் போனால், தமிழ் மூல விக்கிப்பீடியாவுக்கு "கனக்ஸ்பீடியா" என்கின்ற பெயர்வரவும் வாய்ப்புண்டு! எதற்கும் "சண்முகலிங்கன்" கட்டுரையையும் பூட்டி வைத்தல் (காலவரையறை இன்றி) மிகவும் நல்லதல்லவா? அதுதான் கட்டற்ற மட்டற்ற அனைவராலும் அணுகக்கூடிய களஞ்சியமான "கனக்ஸ்பீடியாவுக்கு" மிகவும் பொருத்தமானது!Kovaisarala (பேச்சு)
- உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் கண்ணியத்தோடு முன்வைக்கும் போது வரவேற்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் உங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போது பெயர்கூப்புடுதலையும் தனிநபர்த் தாக்குதல்களையும் தவிர்க்கவும். இது தொடர்பாக மிகத் தெளிவான வழிகாட்டல்கள் விக்கியில் உள்ளன. பார்க்க: விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல். இவ்வாறு செய்வது பிறபயனர்கள் மத்தியில் உங்கள் மதிப்பைக் குறைப்பதுடன், உங்கள் கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும் சிரமங்கள் ஏற்படுத்தும். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:18, 26 நவம்பர் 2012 (UTC)
- இதற்கு முன்னர் கருத்துப் பதிந்தவருக்கு மிக்க நன்றிகள். ஒருவரது பெயரையுமே குறிப்பிடாமல் இங்கு பதிலளிக்க முயல்கின்றேன். நான் "க...." என்கின்ற கட்டுப்பாட்டாளரைப் பற்றிக் குறை கூறவோ, தனிமனிதர் தாக்குதல் நடத்தவோ முனையவில்லை. அந்தப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியரான "ச......" என்பவர் தொடர்பான கட்டுரையை முன்னுதாரணமாய் வைத்து "க....." என்கின்ற கட்டுப்பாட்டாளரின் அணுகுமுறைகளில் சில முன்னேற்றங்கள் (பல முன்னேற்றங்கள் என்பதுதான் சாலப் பொருத்தம்) வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். இது தவறா? மேலும் - உங்கள் நிகர குறைகளின் வெளிப்பாடே இவ்விடர்ப்பாடுகளுக்குக் காரணம் என்றும் உணரப்படுகின்றது. என்றாலும் பாருங்கள் - சிலவற்றை சுட்டிக்காட்டாமல் பூடகமாகச் சொல்லுவது என்பது மேலும் மேலும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் போலவன்றோ தென்படுகின்றது?! இதனைவிட கனக்ஸ்ஸினதும் அவருக்கு சார்பாக இருக்கும் உங்களதும் சில கட்டுப்பாட்டுக் கொள்கைகளும் - விடயப்பரப்புகளின் விளக்கமும், இன்னமும் முன்னேறவேண்டும் என்று நேரடியாகச் சுட்டிக்காட்டல் சாலப்பொருத்தமானது அல்லவா? எனக்கு மதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது இங்கு மூன்றாம் அல்லது நான்காம் பட்சமே! எனினும் தாங்கள் என்னையும் ஒரு பொருட்டாக மதித்தமையால்தான் உங்கள் பக்கத்தை மிகவும் முனைப்புடன் காத்துக் கருத்துக்களை சொல்லவிழைகின்றீர்கள்! எது எப்படியாயினும் - விடயங்களின் களஞ்சியத்தை விவாதமாக்க முனைகின்றீர்கள்! நல்லதே! இதைவிடவும் தரவுகளை அலசியாராய்ந்து மெருகூட்டிக் கட்டுரைகளைத் தரமுயர்த்துவதில் 'கட்டுப்பாட்டாளர்களாகிய' பெரியவர்கள் கவனமெடுத்தல் மிகவும் தேவையானது. நலம் உண்டாகட்டும்! Kovaisarala (பேச்சு)
- சண்முகலிங்கன் என்கின்ற கட்டுரையை மேலும் மெருகூட்ட வேண்டியுள்ளது. இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி.Lalapappa (பேச்சு)
- உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் கண்ணியத்தோடு முன்வைக்கும் போது வரவேற்கப்படுகின்றன. ஆனால் நீங்கள் உங்கள் கருத்துக்களை முன்வைக்கும் போது பெயர்கூப்புடுதலையும் தனிநபர்த் தாக்குதல்களையும் தவிர்க்கவும். இது தொடர்பாக மிகத் தெளிவான வழிகாட்டல்கள் விக்கியில் உள்ளன. பார்க்க: விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல். இவ்வாறு செய்வது பிறபயனர்கள் மத்தியில் உங்கள் மதிப்பைக் குறைப்பதுடன், உங்கள் கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும் சிரமங்கள் ஏற்படுத்தும். நன்றி. --Natkeeran (பேச்சு) 14:18, 26 நவம்பர் 2012 (UTC)
- லாலாபப்பா அவர்களே, கட்டுரையை மேம்படுத்துங்கள். யாரும் இங்கு மறிக்கவில்லை. ஆனால், விசமத்தனமான தொகுப்புகளைத் தந்து கட்டுரையை மெருகூட்டாதீர்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.--Kanags \உரையாடுக 07:38, 4 சனவரி 2013 (UTC)
- நன்றிகள் கனக்ஸ் ஐயா அவர்களே. இத்தால் பொதுசனங்கள் அறியவேண்டியதாவது யாதெனில், 'லாலாபப்பா' ஆகிய எனது உள்ளீடுகள் (கனக்ஸ் அவர்களால் விசமித்தனமானவை என்று கருதப்பட்டிருந்த போதிலும் கூட) சம்பந்தப்பட்டதான 'நா. சண்முகலிங்கன்' கட்டுரையை மெருகூட்டியிருக்கின்றன என்பதனையாகும். இதன் மூலமாக நா. சண்முகலிங்கனுக்கும் விசமத்தனத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? அதனாகப்பட்டது, நா. சண்முகலிங்கன் ஒரு விசமியா? ஆகிய சந்தேகங்கள் உங்கள் மனதிலெழுந்தால், தயவு செய்து கேள்விகளை கனக்ஸ் அவர்களிடம் கனகச்சிதமாக சமர்ப்பிக்கவும். Lalapappa (பேச்சு)
- "all is fair in war and love". இதனையே "கனக்ஸ்பீடியாவிலும்" கைப்பிடிக்கின்றார்கள். வாழ்க பல்லாண்டு!Kovaisarala (பேச்சு) சனவரி 17, 2013
- நன்றிகள் கனக்ஸ் ஐயா அவர்களே. இத்தால் பொதுசனங்கள் அறியவேண்டியதாவது யாதெனில், 'லாலாபப்பா' ஆகிய எனது உள்ளீடுகள் (கனக்ஸ் அவர்களால் விசமித்தனமானவை என்று கருதப்பட்டிருந்த போதிலும் கூட) சம்பந்தப்பட்டதான 'நா. சண்முகலிங்கன்' கட்டுரையை மெருகூட்டியிருக்கின்றன என்பதனையாகும். இதன் மூலமாக நா. சண்முகலிங்கனுக்கும் விசமத்தனத்துக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா? அதனாகப்பட்டது, நா. சண்முகலிங்கன் ஒரு விசமியா? ஆகிய சந்தேகங்கள் உங்கள் மனதிலெழுந்தால், தயவு செய்து கேள்விகளை கனக்ஸ் அவர்களிடம் கனகச்சிதமாக சமர்ப்பிக்கவும். Lalapappa (பேச்சு)
தொடர்ந்து ஒற்றை விசய கணக்குகளாகவும் பிற பயனர்களைத் தாக்கியும் கிண்டலிடித்தும் செயல்பட்டு வருகின்ற Lalapappa, Kovaisarala ஆகிய இரு கணக்குகளையும் முடிவிலியாகத் தடை செய்துள்ளேன். --சோடாபாட்டில்உரையாடுக 15:08, 16 சனவரி 2013 (UTC)