பேச்சு:பதகளிப்பு
இக்கட்டுரை ஒரு வரித் தகவலைக் கொண்டதாக உள்ளது. இது போன்ற உளவியல் சார்ந்த கட்டுரைகளை உளவியல் சார்ந்தவர்களே விரிவாக்கம் செய்ய முடியும். இதுபோன்ற கட்டுரைகள் இடம் பெற வேண்டியது அவசியமெனினும், கட்டுரை ஓரிரு வரிகளில் இருப்பது சரியானதல்ல. கட்டுரை உள்ளடக்கம் போதாது என்கிற காரணத்துடன் நீக்கப்பட்டால் கட்டுரை தொடங்குபவருக்கு குறைந்தது மூன்று வரிகளாவது இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக அமையும். மேலும் ஓரிரு வரிகளில் அமையும் கட்டுரைகளும் குறையும். எனவே நீக்கம் செய்திட பரிந்துரைக்கிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:28, 20 மே 2012 (UTC)
தலைப்பு குறித்து
தொகுஇதுவும் (மனக்)கலக்கமும் ஒன்றுதானா? இந்தப் பெயரைக் கேள்விப்பட்டதில்லை. இது இலங்கை வழக்கா? -- சுந்தர் \பேச்சு 07:38, 24 சூலை 2012 (UTC)
- இல்லை. இது ஒரு சரியான உளவியல் பதம். மனக்கலக்கம் என்ற சொல்லே பொதுவாகப் பாவிக்கப்படுகின்றது. பதகளிப்பு, பதட்டம், மனக்கலக்கம் போன்ற சொற்கள் ஒன்றுபோல் காணப்பட்டாலும் வித்தியாசங்கள் கொண்டவை. --Anton (பேச்சு) 08:23, 24 சூலை 2012 (UTC)
- கழக அகரமுதலியில் இருந்த பெற்ற வரிசையில் உளவியல் பதமாக மனக்கலக்கமே உள்ளது. (பார்க்க wikt:anxiety.) பதகளிப்பு என்ற சொல்லை சான்றுடன் பகுத்து விளக்கினால் புரிந்து கொள்ள உதவும். களிப்பு என வருவதால் ஒருவேளை euphoria என்ற சொல்லைக் குறிக்குமோ எனத் தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 08:51, 24 சூலை 2012 (UTC)
- பதகளிப்பு என்ற சொல்லின் தமிழ் அர்த்தத்தினை விளக்க முடியுமா என்பது என் நிலையில் கடினம். வேண்டுமானால் உதாரணத்துடன் முயல்கிறேன். பதகளிப்பு மனக்கலக்கத்திலும் சற்று மேம்பட்ட நிலை. கேம்பிரிச் அகராதியில் உள்ளபடி "Psychiatry a nervous disorder marked by excessive uneasiness." மனக்கலக்கம் நரம்பு சம்பந்தப்பட்ட ஒழுங்கின்மை பொதுவாக உருவாக்குவதில்லை. பதகளிப்பு அதிகரித்தால் பதகளிப்பு கோளாறு (en:Anxiety disorder) எனும் உளவியல் தாக்கத்தை உருவாக்கும். தமிழ் உளவியல் நூல்கள் anxiety என்பதை பதகளிப்பு எனும் சொல்லினால் குறிப்பிட்டதை பார்த்திருக்கிறேன். எதுவென நினைவில்லை :) --Anton (பேச்சு) 09:22, 24 சூலை 2012 (UTC)
- விளக்கத்துக்கு நன்றி ஆண்டன். இங்கும் பதகளிப்பைப் பற்றி எதுவும் தரப்படவில்லை. சான்று கிடைத்தால் இணைத்துவிடுங்கள். நானும் தேடிப் பார்க்கிறேன். -- சுந்தர் \பேச்சு 09:33, 24 சூலை 2012 (UTC)
- பதகளிப்பு என்பது இலங்கை வழக்கு என்றே நினைக்கிறேன். பதகளிப்பு என்பது அடிக்கடி ஈழத்தவர்கள் "அதிர்ச்சியில் என்ன செய்வதென்றறியாத மனக்கலக்கம்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்துவார்கள். அப்படித்தான் நான் விளங்கிக்கொண்டேன். பேச்சு வழக்காகவும் அது இருக்கலாம். மனக்கலக்கம் என்ற பொதுச்சொல்லை முதன்மைப்படுத்தலாம், ஈழத்தவர்களுக்கும் அது தெரிந்த சொல்லே.--Kanags \உரையாடுக 10:42, 24 சூலை 2012 (UTC)
- தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி, சிறீதரன். -- சுந்தர் \பேச்சு 08:19, 29 சூலை 2012 (UTC)
- யாருக்கும் மறுப்பில்லையெனில் தலைப்பை மாற்றலாம். இல்லாவிட்டால் கலக்கம், மனக்கலக்கம் ஆகியவற்றில் இருந்து மாற்றுவழியாவது தர வேண்டும். -- சுந்தர் \பேச்சு 06:06, 14 ஆகத்து 2012 (UTC)
- தகவலுக்கும் கருத்துக்கும் நன்றி, சிறீதரன். -- சுந்தர் \பேச்சு 08:19, 29 சூலை 2012 (UTC)
- en:Mental confusion இதனையும் கவனிக்கவும். நான் தேடியதில்... பதகளிப்பு எனும் சொல் நான் (இலங்கை) எனும் உளவியல் சஞ்சிகையில் காணப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக உளவியல் கற்கையிலும் பதகளிப்பு எனும் சொல் உள்ளது. இந்தியாவில் உளவியல் துறை பற்றிய நன்கு அறிந்தவரிடம் விசாரிப்பது நன்று. துறைசார் சொற்களை பொதுவழக்கில் மாற்றுவது நன்றல்ல. இலங்கையில் இச்சொல் anxiety என்பதற்கே பயன்படுத்தப்படுகின்றது. (எ.கா.) இங்கு உளவியல் கற்பவர்கள் பதகளிப்பு எனும் சொல்லையே அறிந்துள்ளனர். --Anton (பேச்சு) 07:43, 14 ஆகத்து 2012 (UTC)
- இப்போதைக்கு மரு.புருணோவிடம் கேட்டுள்ளேன். நம் உள்ளிருப்பு மருத்துவர்கள் செந்தி, கார்த்தி போன்றவர்களின் கருத்தையும் அறியலாம். தேவைப்பட்டால் மரு.உருத்திரன் போன்ற ஒருவரைக் கேட்கலாம். மாற்ற வேண்டுமென்ற கட்டாயமில்லை. உறுதிப்படுத்திக் கொண்டு தேவைப்பட்டால் மாற்றலாம். -- சுந்தர் \பேச்சு 09:23, 14 ஆகத்து 2012 (UTC)
- ஒருநிலையில் இருப்புக்கொள்ளாத மனக்கலக்கமும் அங்கலாய்ப்பும் கொண்ட நிலையே பதகளிப்பு என நினைக்கின்றேன். பேச்சுவழக்கு அல்லாமல் பல்வேறு எழுத்தாவணங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. மனக்கலக்கம்=confusion இது தெளிவான முடிவெடுக்க முடியாத நிலைப்பாடு மட்டுமே அல்லவா?
ஆனால் பதகளிப்பில் பயங்கலந்த மனநிலை காணப்படும்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:09, 14 ஆகத்து 2012 (UTC)
- Anxiety என்ற ஆங்கில சொல்லிற்கு தமிழில் கலக்கம் என்பது முழுவதும் பொருந்தாது. உதாரணமாக. Anxiety என்பது கலக்கம் இல்லாவிட்டால் கூட வரலாம். புருனோ மஸ்கரனாஸ் (பேச்சு) 02:23, 16 ஆகத்து 2012 (UTC)
- அண்டன், சஞ்சீவி, மரு.புருனோ: உங்கள் கருத்துக்களுக்கும் தகவலுக்கும் நன்றி. தலைப்பை மாற்ற வேண்டியதில்லை. மனக்கலக்கத்தை இந்நோயின்/இந்நிலையின் ஓர் அறிகுறியாகச் சேர்த்து விடலாம். -- சுந்தர் \பேச்சு 17:44, 16 ஆகத்து 2012 (UTC)
ஆதங்கம்
தொகுஆதங்கம் என்ற சொல்லுக்கும் இதற்கும் தொடர்பு உண்டா? கன்னடத்தில் ಆತಂಕ (ஆதங்க) என வழங்கியிருக்கிறார்கள். எனவே தான் கேட்கிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:57, 20 சூலை 2013 (UTC)