பேச்சு:பரலி சு. நெல்லையப்பர்
Untitled
தொகு- சிறந்த, வரலாற்றுத் தொகுப்பு --Sengai Podhuvan (பேச்சு) 19:49, 22 செப்டெம்பர் 2012 (UTC)
திருமறைக்காடு?
தொகுநாகபட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு அருகில் உள்ள மான்கள் நிறைந்த காட்டை மரைக்காடு (மரை = மான்) என்பர். அதனை மறைக்காடு என மாற்றி, பின்னர் வேதம்+ஆரண்யம் என சமசுகிருதப்படுத்தினர். எனவே, திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் என்பதனை மரைக்காடு என்னும் வேதாரண்யம் என மாற்றியிருக்கிறேன்.(திருமறைக்கும் காட்டிற்கும் என்ன தொடர்பு?)--அரிஅரவேலன் (பேச்சு) 09:03, 24 செப்டெம்பர் 2012 (UTC)
- திருமறைக்காடு என்றே தேவரத்தில் குறிப்புகள் உள்ளன.மேலும் வேதவனம் என்றும் திருவிராகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- (திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகம். மூன்றாம் திருமுறை 76வது திருப்பதிகம்)
- ஐந்தாம் திருமுறை, திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரம், திருக்குறுந்தொகை [1]
//நாகபட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு அருகில் உள்ள மான்கள் நிறைந்த காட்டை மரைக்காடு (மரை = மான்) என்பர்.// இதற்கான சான்று தேவை.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 08:28, 25 செப்டெம்பர் 2012 (UTC)
- தேவநேயப் பாவாணர் தன்னுடைய நூல்கள் சிலவற்றில் இச்செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். அவற்றுள் ஒன்றைச் சான்றாகத் தருகிறேன்.
- "மரையென்னும் மான்வகை மிக்க காடு மரைக்காடு எனப்பட்டது. அப் பெயரை மறைக்காடு என மாற்றி, ஆரிய மறைகளான வேதங்கள் வழிபட்ட இடம் என்று கதை கட்டப்பட்டுள்ளது. வேதங்கள் பண்டை நாளில் எழுதப்படவில்லை. எழுதப் பட்ட பொத்தகங்களும் அஃறிணையாதலால், ஓதுவாரன்றித் தாமாக வழிபடா. சிவன் வேதத் தெய்வமு மல்லன்" (மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை, தேவநேயப் பாவாணர்)[2]
- "வேதாரண்யம் எனப்படும் திருமரைக்காடு. மரை என்றால் சதுப்பு நிலங்களில் வாழும் ஒருவகை மான். Marshdeer என்று இது ஆங்கிலத்தில் வழங்கப்படும். காவிரியின் கயவாயை அடுத்திருக்கும் இக்காடுகளில் இம்மான்கள் மிகுந்திருந்ததால் அதனை மரைக்காடு என்றனர் நம் முன்னோர். ரகரத்துக்கும் றகரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் மரை என்பதை மறை என்று கருதி திருமறைக் காடாக்கி அதனை வேதாரண்யம் என மொழி பெயர்த்தனர் சங்கதக்காரர்கள். வேதங்கள் மரங்களாக நின்றதால் அப்பெயர் வந்தது என்ற கதையையும் கட்டிவிட்டனர்"[3] என்கிறார் குமரிமைந்தன். (குமரிமைந்தன், சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 13. மொழி)
- 'இதன் தமிழ் பெயர் மரைக் காடு என்பதாகும்' என்கிறது வேதாரண்யம் என்னும் தலைப்பிலான் தமிழ்விக்கிப்பீடியா கட்டுரை.--அரிஅரவேலன் (பேச்சு) 15:25, 28 செப்டெம்பர் 2012 (UTC)
மேற்கோள்
தொகுமேற்கோளா? சான்றா?
தொகுகட்டுரையில் கூறப்படும் செய்தியை உறுதிப்படுத்துவதற்காகக் சுட்டப்படும் சான்றை மேற்கோள் என குறிக்கப்படுகிறது. மேற்கோள் என்னும் தமிழ்ச் சொல் Quotation என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானது. அதாவது ஒரு கூற்றை எவ்வித மாற்றமும் இன்றி கட்டுரைக்குள் கையாள்வதே மேற்கோள் ஆகும். மாறாக, கட்டுரையில் கூறப்படும் கருத்தானது கற்பனையாகக் கூறப்படவில்லை; சான்றோடுதான் கூறப்படுகிறது என்பதனை சுட்டும் குறிப்பே சான்றாகும். எடுத்துக்காட்டாக, 'பரலி சு. நெல்லையப்பர் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18ஆம் நாள் பிறந்தார்' என்கிறார் வெ. சாமிநாத சர்மா என கட்டுரையில் எழுதினால் அது மேற்கோள். மாறாக 'பரலி சு. நெல்லையப்பர் 1889ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18ஆம் நாள் பிறந்தார்' எனக் கட்டுரையாளர் தன்கூற்றாக எழுதிவிட்டு அச்செய்தியை உறுதிப்படுத்த வெ. சாமிநாத சர்மா தன்னுடைய நான் நால்வர் நூலில் 84ஆம் பக்கத்தில் கூறியிருக்கிறார் என அடிக்குறிப்பில் தகவல் கொடுத்தால், அது சான்று. எனவே, தற்பொழுது தமிழ்விக்கிப்பீடியா கட்டுரைகளில் சான்றை மேற்கோள் எனத் தவறாகக் குறித்துக்கொண்டிருக்கிறோம்; திருத்திக்கொண்டிருக்கிறோம்.--அரிஅரவேலன் (பேச்சு) 15:45, 28 செப்டெம்பர் 2012 (UTC)