பேச்சு:பழந்தமிழ் இசை

பழந்தமிழ் இசை எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழிசைக்கும், இக்கட்டுரைக்கும் உள்ள வேறுபாடு என்ன?தலைப்பு எப்படி இருப்பினும், வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய இசைத்தமிழ் என்ற நூலில் பல அருமையானக் குறிப்புகள் உள்ளன. தமிழிசையின் தொன்மையையும், மேன்மையையும், பிற ஒப்பிட்டு செய்திகளையும் அருமையாக குறிப்பிடுகிறார். தனித்தமிழ் பற்றியும், பொது அரங்கில் அதன் முக்கியத்துவம் பற்றியும் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறார். அதனையே நம் விக்கிப்பீடியாவின் கொள்கைகளிலும் சேர்த்துக் கொள்ளலாம்.அதனை மின்னூலாக மாற்றலாமா? என்பது தெரியவில்லை. அவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப் பட்டதா? -- உழவன் +உரை.. 13:47, 9 அக்டோபர் 2012 (UTC)Reply

ஒன்றிணைக்கலாமா?

தொகு

தமிழிசை கட்டுரையையும் (பழந்தமிழிசை) இக்கட்டுரையையும் ஒன்றிணைக்கலாமா? கருத்துகள் தேவை....-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 15:51, 9 அக்டோபர் 2012 (UTC)Reply

  • ஒன்றிணைக்குமாறு கோருகிறேன். யாதொரு கருத்துவேறுபாடும் இல்லையெனில், இக்கட்டுரையல்ல எக்கட்டுரையையும் அறிவிப்பு இட்ட சிறிது நாட்களுக்குபிறகு மாற்றலாமென்றே எண்ணுகிறேன்.இதிலிருந்து பல கட்டுரைகள் உருவாகும். ஏனெனில், இது மிகப்பெரிய கட்டுரையாக வடிவம் பெறும்.நானும் தொடர்ந்து உங்களுடன் மேம்பாட்டு பணிகளில் ஈடுபடுவேன். -- உழவன் +உரை.. 04:21, 10 அக்டோபர் 2012 (UTC)Reply
    • முதற்படியாக நாமக்கல் கவிஞரின், இசைத்தமிழ் நூலின் முதற்பகுதியான தமிழிசை என்ற கவியை விக்கிமூலத்தில் பதிவேற்றுகிறேன்.பிற அவ்வப்போது; ஏனெனில், திட்டமிட்டபடி செயற்பட இயலவில்லை. மின்தடை பகலிலேயே ஒரு நாளைக்கு 7-8 மணிகள் இருப்பதால் சிரமப் படுகிறேன். எனினும், தொடர்ந்து முடிப்பேன். வணக்கம்.-- உழவன் +உரை.. 17:05, 11 அக்டோபர் 2012 (UTC)Reply
மலைக்க வைக்கும் ஒரு கட்டுரை/நூல். நன்றிகள்.
தயந்து ஒன்றிணைக்க வேண்டாம். தமிழிசை என்பது பழந்தமிழிசை மட்டுமன்று. தமிழிசை மீட்டெடுக்கப்பட்ட இசை. அதன் வரலாறு, இன்றைய நிலை, வளர்ச்சி பழந்தமிழிசையோடு நின்றுவிடும் ஓன்றல்ல. எனவே இணைக்க வேண்டாம். --Natkeeran (பேச்சு) 20:17, 11 அக்டோபர் 2012 (UTC)Reply
  • ஒன்றிணைக்க வேண்டாம் என்பதே என் கருத்தும். நூறு நூல்களுக்கும் மேலே எழுதிய திரு. மு. அருணாசலம் அவர்கள் தமிழ் இசை வரலாறு பற்றி இரண்டு பெரிய நூல்கள் எழுதியுள்ளார்: தமிழ் இசை இலக்கண வரலாறு (நூல்), தமிழ் இசை இலக்கிய வரலாறு (நூல்). தமிழிசை என்பதைப் பழந்தமிழிசை என்று கூறுவது தமிழ் இசையைப் புறந்தள்ளுவது போன்றது!! இன்று கருநாடக இசை என்பதே தமிழிசையின் வளர்ச்சி என்று கூறுவோறும் அதன மறுப்போரும் இருந்தாலும், தமிழிசை என்பது முறையான ஓர் இசைமரபு. அதில் தேவார இசை (கி.பி. 6-8 ஆம் நூற்றாண்டு) என்பதும், அதற்கும் முன்பாக சிலப்பதிகார இசை என்பதும் (கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு), அதற்கும் முன்பாக சங்க இலக்கிய காலம் இசை (கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை) என்பதும் பகுத்துக்கூறத்தக்கன எனினும். அவை அனைத்தும் தமிழ் இசையே. இன்றைய கருநாடக இசையானது தமிழிசையில் இருந்து வளர்ந்ததல்ல என்று கூறுவோருங்கூட, சங்கீத இரத்தினாகரம் (கி.பி. 13 ஆம் நூற்றாண்டு), பிரகதேசி (கி.பி. 8-9 ஆம் நூற்றாண்டு), அதற்கும் முன் பரதமுனிவரின் நாட்டிய சாத்திரம் (~ கி.பி. 400) என்று வரலாறு காட்டுவது போல வரலாறு காட்டலாமேயன்றி தமிழ் இசையைப் பழந்தமிழ் இசை என்று கூறுதல் வேண்டாம் (முறையாகாது). தமிழ் இசை என்பது பாடல்கள் தமிழில் இருப்பது என்று பொருள் அன்று, இசை முறைமை (சுரம், தாளம், பண், இசைக்கும் முறை) தமிழ் முறை என்று பொருள். முனைவர் வீ.ப.கா சுந்தரம், அண்மையின் மம்மது போன்றவர்கள் ஆய்வின் பயனாகவும் நிறைய தமிழ் இசையைப் பற்றி அறிய முடியும். --செல்வா (பேச்சு) 04:46, 12

அக்டோபர் 2012 (UTC)

    • இயல்பு மொழியிலானது தமிழக நாட்டுப்புற கலைகள். அந்த இயல்பறிவு, இயல்மொழியில், தமிழிசை ஆனது. அதன் வரலாறும், வளர்ச்சியும் தொல்லியது. தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் இருக்கும் கட்டுரைகள் போதாதென்றே எண்ணுகிறேன்.இதன் மேன்மை பாமரருக்கும் புரியும் படி பலர் எழுதியுள்ளனர். அவற்றை ஒரே கட்டுரையில் அடக்குதல் இயலாது. என்னால் இயன்றவரை மேற்கூறியவற்றினை, ஊடகங்களோடு உருவாக்குவேன். தமிழ்,பைந்தமிழ்,முத்தமிழ்,.. என்ற எப்படி கூறினாலும், தமிழ் தானே? அதுபோல, இசைத்தமிழ்,தமிழிசை, தமிழ்பாட்டு, பழந்தமிழிசை போன்றவை, பொதுச்சொற்களாகவே எனக்குப் படுகின்றன. நீங்களும் ஓரிரு சிறப்புக் கட்டுரைகள் உருவாக்கினால், தமிழின் பெரும்பிரிவான இசையின் உயர்வை பலர் அறிய வாய்ப்புண்டு. கட்டுரை உருவாக்குவதில் உங்களுக்கும் இசைவு வரும் என்றெண்ணி முடிக்கிறேன்.மீண்டும் பிறிதொரு உரையாடலில் சந்திப்போம். வணக்கம்.-- உழவன் +உரை.. 19:01, 12 அக்டோபர் 2012 (UTC)Reply

பதிப்புரிமை

தொகு

இங்குள்ள தமிழ் இசைக் கருவிகள் எனும் கோப்பு இங்கு காணப்படுகின்றது. இப்படங்களின் பதிப்புரிமை என்ன? --Anton (பேச்சு) 23:50, 9 அக்டோபர் 2012 (UTC)Reply

© 2010-15 TamilKalanjiyam.com Tamil Data Warehouse Website--Natkeeran (பேச்சு) 20:15, 11 அக்டோபர் 2012 (UTC)Reply
விக்கப்பொதுவக விதிகள் விரைவில் அதில் செயல்படும். எனது பலக்கோப்புகள் அதுபோல, நீக்கப்பட்டுள்ளன. கோப்பை உருவாக்கியவருக்கு தேவையானக் குறிப்புகளைத் தந்துள்ளேன்.-- உழவன் +உரை.. 19:04, 12 அக்டோபர் 2012 (UTC)Reply

இக் கட்டுரையின் பகுதிகள்

தொகு

பார்வதிஸ்ரீ ஒரு சிறு நூலுக்கு தகுந்த தகவல்களைத் தொகுத்து கட்டுரையாகத் தந்துள்ளார். நன்றிகள். இக் கட்டுரையின் பல பகுதிகள் தனிக் கட்டுரைகளாக ஆறுதலாக விரிவுபடுத்தப்படலாம். பழந்தமிழ் இசை வரலாறு, பழந்தமிழ் இசைக் கோட்பாடு, பழந்தமிழ் இசை நூல்கள்/ஆதாரங்கள், பழந்தமிழ் இசைக்கருவிகள், ஒப்பீடுகள் போன்று. இவற்றில் சில தமிழிசை என்ற பொதுத் தலைப்போடு இணைத்த கட்டுரையாக உருப்பெறலாம். பழந்தமிழ் இசை என்பதை காலத்தைக் கொண்டு வரையறை செய்கிறோமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். நன்றி. --Natkeeran (பேச்சு) 20:22, 11 அக்டோபர் 2012 (UTC)Reply

நானும் இதையே சொல்ல வந்தேன். மேற்கூறிய கருத்தை வழிமொழிகிறேன். (தமிழ் விக்கிப்பீடியாவிலேயே மிகப் பெரிய கட்டுரையாக இது இருக்கும் எனக் கருதுகிறேன். ஏறத்தாழ ஒரு லட்சம் பைட்டுகள், அடேயப்பா!) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:37, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

ஆம், நானும் இதை வழிமொழிகிறேன். மலைப்பூட்டும் அளவு தகவல்களைத் தொகுத்துள்ள பார்வதியைப் பாராட்டுகிறேன். நூறாயிரம் பைட்டுகளைத் தாண்டியுள்ளதால் உலாவிகள் திணறும். குறிப்பாக செல்பேசிகளில் உள்ள உலாவிகள். தவிர படிப்பவர்களும் திகைப்பார்கள். ஆகையால் கட்டுரைச்சுருக்க நடைக்கேற்ப, பல பகுதிகளை வெட்டி எடுத்து தனித்தனிக் கட்டுரைகளாகப் பதிய வேண்டும். அவற்றின் ஒரு பத்திச் சுருக்கத்தை மட்டும் இங்கு தர வேண்டும். அதனால் பல பயன்கள் உண்டு. தனித்தனிக் கட்டுரைகளாக அவை (நாற்றங்காலில் இருந்து எடுத்து நடப்படும் பயிரைப்போல) வளர ஏதுவாகிறது. குறிப்பிட்ட கிளைக்கட்டுரையில் மட்டும் ஆர்வமுள்ளவர்கள் தொகுக்க முடியும், கண்காணிக்கவும் இயலும். மேலும் அவ்வாறு உருவாக்கப்படும் ஒவ்வொரு தனிக்கட்டுரையுமே நிறைவாகவும், பைட்டளவில் 20 கிலோபைட்டையொட்டியும் இருக்கும். இதனால் தர அளவீட்டிலும் நமக்கு ஏற்றமே (இதை நோக்கி செயல்படாவிட்டாலும் ஒரு நல்ல பக்க விளைவாக இருக்கும்). இங்கு இருக்கும் கூடுதல் சுருக்கம் மொத்த பைட்டளவையும் கூட்டும். அதைவிட மேலாகப் படிப்பவர்கள் சுருக்கமாகப் படித்து ஆழமாகச் செல்ல விரும்பும்போது இணைப்புகளை அணுக வசதியாக இருக்கும். வேளாண்மை கட்டுரை இருநூறாயிரம் பைட்டுக்களைத் தாண்டி இருந்தது. பெரும்பகுதியை வெட்டிப் பல புதிய கட்டுரைகளை உருவாக்கியும், சில குறுங்கட்டுரைகளை உருவாக்கியும் விட்டேன். இன்னும் நீளமாகவே உள்ளது! (அது நடையிலும், செறிவிலும் இக்கட்டுரையளவுக்கு சிறப்பாக இல்லை என்பது வேறு சேதி.) இன்னும் பற்பல நீளமான கட்டுரைகள் உள்ளன.-- சுந்தர் \பேச்சு 11:50, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

ஆலமரத்தடி என் கைபேசியில் பிழையுடன் வருகிறது. படிக்கவே முடியவில்லை. அதேபோன்று, இக்கட்டுரை முக்கியமானது என்பதால், விரைந்து பிரிக்க வேண்டுகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:08, 24 அக்டோபர் 2012 (UTC)Reply

தலைப்பு

தொகு

பழந்தமிழ் இசை என்றால் பழைய தமிழில் உள்ள (பண்டைத் தமிழ் நடையிலுள்ள) இசை வடிவம் என்று பொருள் படுமே. அதை விடுத்து வெறுமனே தமிழிசை என்றால் தமிழில் உள்ள அல்லது தமிழுக்குரிய இசை என்று பொருளாகும்.--பாஹிம் (பேச்சு) 09:15, 17 திசம்பர் 2012 (UTC)Reply

தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

தொகு

பழந்தமிழ் இசையை ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை என வரைவிலக்கணப்படுத்துவதன் மூல தலைப்பை மாற்ற வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க முடியும். கிருத்திகன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழந்தமிழ்_இசை&oldid=1282802" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பழந்தமிழ் இசை" page.