பேச்சு:பித்தேகோரசு தேற்றம்


Πυθαγόρας பித்தகோரசு அல்லது பித்தெகோரசு என்று தானே வரும்?--Kanags \பேச்சு 10:03, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

Πυθαγόρας என்பது பித்த'கோர˘ச் என்றுதான் ஒலிக்கும் என்று நினைக்கிறேன், ஆனால், இங்கு மேற்குலகில் பித்தே'கோர˘ச் அல்லது பித்தே'கொர˘ச் என்று ஒலிக்கிறார்கள். பித்தகோரசு, பித்தகொரசு, பித்தாகொரசு என்பது போல எப்படி இருந்தாலும் எனக்கு உடன்பாடே. கேரளாவின் தமிழ்வழி கணிதப்பாடத்தில் (10ஆம் வகுப்பு, அத்தியாயம் 8இல் பக்கம் 118இல் பித்தகோரஸ் என்று எழுதி இருக்கிறார்கள். தமிழ்நாட்டு பாடங்களில் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்க்கவில்லை. பித்தகோரசு என்பது சரியான எழுத்துப்பெயர்ப்பாக இருக்கும் எனில் அப்படியே மாற்றிவிடலாம். மேற்குலகில் ஒலிக்கும்படியாகத்தான் நாமும் ஒலிக்கவேண்டும் என்னும் விதி கிடையாது. மூல மொழியுடன் ஒட்டிய ஒலிப்பு இருப்பதே மேல். ஆனால் பொது வழக்குடன் ஒட்டி, இணக்கமாக போகக் கருதியும் ஒரு சில இடங்களில் விதி விலக்காகவும் இருக்கலாம். நான் படிக்கும் காலங்களில் பித்தகோரசு என்றுதான் படித்தேன் என்று நினைவு. --செல்வா 12:26, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
நன்றி செல்வா, இலங்கைப் பாடப்புத்தங்களில் பைதகரஸ் என்றவாறே படித்தாக ஞாபகம். எனவேதான் வழிமாற்றுப் பக்கங்களை உருவாக்கியுள்ளேன். --உமாபதி \பேச்சு 15:22, 13 ஆகஸ்ட் 2008 (UTC)
தமிழ்நாட்டுப் பாடநூல்களில் பிதாகரஸ் என்று எழுதியுள்ளார்கள் (9 ஆம் வகுப்புக் கணிதப் பாடத்தில், முக்கோணவியல் பற்றிய 8 ஆவது அத்தியாயத்தில் பக். 188-189 ஐப் பார்க்கவும்). இது பித்தாகரஸ் என்றாவது இருந்திருக்க வேண்டும். நாம் பித்தாகரசின் தேற்றம் என்றும் அழைக்கலாம். நன்றி உமாபதி. தமிழ்பேசுவோர்கள், தமிழ் நூல் எழுதுவோர்கள் பொதுவாக சரியான ஒலிப்பு என்னெவென்றே அறியாமல் செய்கிறார்கள். நான் இந்தியாவில் படித்த பொழுது மட்டுமல்லாமல், இன்றும் கூட solder என்பதை சோல்டர் என்று ஒலிக்கிறார்கள். அதனை சாடர் என்பது போல ஒலிக்க வேண்டும் (அமெரிக்க ஒலிப்பில்). இதேபோல சாமன் என்பதை சால்மன் (salmon) என்றும் பற்பல சொற்களைத் தவறாக ஒலிக்கிறார்கள். குறிப்பாக ஆங்கிலத்தில் சொல்லின் சில பகுதிகள் அழுத்தம் தந்து ஒலிப்பார்கள். ஆங்கிலத்தில் குறில் நெடில் போன்ற வேறுபாடுகள் அவர்களின் அகரவரிசையில் இல்லாததாலும், அவர்களின் மொழி ஒலிப்பொழுக்கம் பெரும்பாலும் இல்லாத மொழியாதலாலும், பல குழப்பங்கள் வருகின்றன (எடுத்தாளும் நமக்கு). ஆங்கிலத்தில் ஒற்றை எழுத்தாக வந்தாலும் k,t,p முதலானவற்றை நாம் க்க, ட்ட, ப்ப போன்று வல்லின ஒற்றாய் முன்னே இட்டுத்தான் ஒலித்தல் வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் தமிழ்மொழியின் ஒலிப்பாங்கு சின்னா பின்னம் அடையும் (ஆங்கிலம் போன்று ஒலிப்பாங்கற்ற மொழியாக மாறிவிடும்). பிதாகரஸ் என்று எழுதினால் pidhaagaras என்றுதான் ஒலித்தல் வேண்டும். ஆனால் ஒலிக்கும் பொழுது பித்தாகரஸ் என்று ஒலித்தால் ஒலிப்பாங்கு கெடும், சிதறும். ஒலிப்பாங்கை நாம் அக்கறையுடன் காக்கவேண்டும். தமிழ் மொழியின் நல்லியல்புகளில் ஒன்று எளிதாகப் பின்பற்றக்கூடியது. --செல்வா 16:01, 13 ஆகஸ்ட் 2008 (UTC)

போதையனார் பாட்டு

தொகு

கட்டுரையின் கடைசியில் சேர்க்கப்பட்ட போதையனார் பாடல் கூறும் செய்தி துல்லியமானதல்ல. இதனை மயன் விதி என்றும் கூறுகின்றார்கள். அருள்கூர்ந்து பேச்சு:மயன் என்னும் பக்கத்தில் இட்டுள்ள கருத்துகளைப் பார்க்கவும்.--செல்வா 23:30, 26 சனவரி 2012 (UTC)Reply

உண்மை, சில எண்களுக்கு சரியான கர்ணம் கிடைத்தாலும், பெரும்பாலான எண்களுக்குத் தோராயமான எண்ணிக்கையே கிடைக்கிறது. இது தோராயமான கணக்கு துல்லியம் அல்ல என்பது குறித்து இங்கு போதையனார் பாடலை இடலாம் எனக் கருதுகிறேன் (கர்ணம் குறித்து இப்பாடல் சொல்வதால்). --குறும்பன் 02:42, 27 சனவரி 2012 (UTC)Reply
நன்றி. ஆம் அப்படித்தான் செய்திருக்கின்றேன். கருத்துக்கு நன்றி.--செல்வா 02:45, 27 சனவரி 2012 (UTC)Reply

சரியான முறை எது என்று எப்படி முடிவெடுத்தீர்கள். இன்றைய கால்குலேட்டர்கள் எல்லாம் 'பிதகார்சின்'படி அமைக்கப்பட்டது. உண்மையில் அளந்து பார்த்தால் தான் தெரியும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:10, 3 செப்டம்பர் 2013 (UTC)

ஆங்கிலக் கட்டுரையில் போதையனார் பாடலைப் பற்றிய சில வரிகளில் தகுந்த முறையில் இடலாம். இது தோராயக் கணக்கென்பதையும் மறவாது குறிப்பிடுக. மொழிபெயர்த்து சேர்த்து உதவுக. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:26, 12 ஆகத்து 2014 (UTC)Reply

கட்டுரை முழுவதும் ஒரேமாதிரி இருப்பதற்காக, ’பித்தகோரசு’ என மாற்றப்பட்டுள்ளது. --Booradleyp1 (பேச்சு) 14:31, 19 அக்டோபர் 2014 (UTC)Reply

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:24, 20 அக்டோபர் 2014 (UTC)Reply
Return to "பித்தேகோரசு தேற்றம்" page.