பேச்சு:புதுச்சேரி
இணைக்க வேண்டும்
தொகுதமிழில் பாண்டிச்சேரி கட்டுரை ஏற்கெனவேயுள்ளது. இக்கட்டுரையைத் தமிழாக்கி அதனுடன் இணைக்கவேண்டும். Mayooranathan 15:47, 22 ஏப்ரல் 2006 (UTC)
இக்கட்டுரைத் தலைப்பும் உள்ளடக்கமும் ஆங்கிலத்தில் உள்ளன. மேலும் இக்கட்டுரைத் தலைப்பில் ஒரு கட்டுரை தமிழில் உள்ளது. ஆகவே இதனை நீக்கி விடலாமே? --கோபி 15:37, 5 மே 2006 (UTC)
கட்டுரை உள்ளடக்கக் குழப்பம்
தொகுஇந்தக் கட்டுரை ஏனாம், மாஹே போன்ற பிற மாநிலப் பகுதிகளிலும் உள்ள புதுச்சேரி ஒன்றியப் பகுதியைக் குறித்தானது. ஆனால் உள்ளிடப்படும் பல விடயங்கள் புதுச்சேரி நகருக்கு உரித்தானவைகளாக உள்ளன. இவற்றை இனம் கண்டு சரியான க்கட்டுரைகளில் சேர்க்க வேண்டும்.--மணியன் (பேச்சு) 09:03, 13 மார்ச் 2013 (UTC)
தென்னிந்தியாவின் தமிழகத்தின் தலைநகராம்???? கட்டுரையில் தகவல்கள் தவறாக ???? இக்கட்டுரையில் மாவட்டங்களாக குறிப்பிடுபவைகள் மாவட்டங்கள் அல்ல பிராந்தியங்கள்??? அரசுத் தளம் பார்க்கவும்--123.236.90.235 08:09, 19 மே 2009 (UTC)
- நீங்கள் கூறுவது சரி. உங்கள் திருத்தத்துக்கு நன்றி.--செல்வா 05:22, 20 மே 2009 (UTC)
தேவையற்ற உள்ளடக்கம்
தொகுபுதுச்சேரியில் கிறித்தவம் என்கிற பகுதி இக்கட்டுரையில் தொடர்பில்லாமல் புகுத்தப்பட்டுள்ளது?. தனி கட்டுரையாக நகர்த்தி இனங்கள்/மக்கள் என்கிற பகுதியை உருவாக்கி தொடுப்பு கொடுக்கலாம். நன்றி -- மாகிர் (பேச்சு) 12:24, 13 மார்ச் 2013 (UTC)
புதுச்சேரியில் கிறித்தவம் பரவிய வரலாறை புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம் வெட்டி ஒட்டியுள்ளேன். புதுச்சேரியில் கிறித்தவம் என்ற தலைப்பு தவறாகும், அதற்கு பதில் சமயங்கள் என்ற பகுப்பும் அதற்கு கீழ் கிறித்தவம் என்று இருக்கலாம்.--குறும்பன் (பேச்சு) 02:12, 15 மார்ச் 2013 (UTC)
புதுச்சேரியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் பட்டியல்
தொகுவெளி இணைப்புகள் கொடுத்துள்ளேன் அது சரி இல்லை என்றல் தவறுக்கு வருந்து கிறேன் மேற்கொண்டு எப்படி இதை மேம்படுத்தலாம் என்று கூறுங்கள் புதுவைபிரபு 12:49, 30 சனவரி 2017 (UTC)